ஞாயிறு, 10 ஜூலை, 2011

தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்


கடந்த 03.07.2011 ஞாயிறு மாலை தம்மாம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள பேரா.அ.மார்க்ஸ் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.


வாரம் சவுதிக்கு வருகை தந்த அ.மார்க்ஸ் கடந்த வெள்ளி (01.07.2011) அன்று தலைநகர் ரியாத் மாநகரில் உரையாற்றியிருந்தார்.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தம்மாம் கருத்தரங்கில் பேரா.அ.மார்க்ஸ் 'தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்' எனும் தலைப்பில் சுமார் ஒன்னரை மணி நேரம் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்.

'தமிழ் சமூகம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் ஒரே சமூகமாக எக்காலத்திலும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. எனவே தமிழ் சமூகம் என்பதை விட தமிழ் சமூகங்கள் எனக் குறிப்பிடுவதே சிறந்தது. ஆனால் பன்மைத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மற்றவர்களோடு இணைந்து வாழ்வது தான் அடிப்படை அரசியல்.

உதாரணமாக, தமிழகத்தின் முன்னாள் ஆளுனர் திரு.ராம் மனோகர் ராவ் ஐபிஎஸ், ஒருமுறை தமிழகத்தில் ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது, 'அருமையான கலைநயமுள்ள பள்ளியைக் கட்டிய நீங்கள் ஏன் நபி (ஸல்) அவர்களின் படத்தை ஏன் மாட்டவில்லை' என்று கேள்வி எழுப்பினாராம். உயர் அதிகாரத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி சமூகத்தின் பிற சமய கோட்பாடுகளை புரிந்து வைத்துள்ளதில் உள்ள குறைபாடு தான் இது.

நபியாகவே இருந்தாலும் உருவ வழிபாடு கிடையாது என்பதில் உறுதியானவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படையை புரிந்து கொண்டிருந்தால் ராம் மனோகர் ராவ் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்.

எனவே தான் காந்தியடிகள் செக்யூலரிஸம் கொள்கையை அரசியல் கொள்கையாக மாற்றி அமைக்க பெரும்பாடுபட்டார். அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு எனும் கொள்கையை உறுதியாக நம்பினார். இதனால் தான் இந்துத்துவ பயங்கரவாதிகள் காந்தியை கொலை செய்ய ஏழு முறை முயற்சித்தனர்.

முதல் சுதந்திர போராட்டமான கிலாஃத் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தவர் காந்தி. அதேபோல் தமிழகத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு போராட்டத்தில் பங்கு கொண்டவர் காந்தியடிகள். இதன் காரணத்தால், காஞ்சி மட அன்றய பீடாதிபதி மகா பெரியவாள் என மரியாதையாக அழைக்கப்பட்ட சங்கராச்சாரியாரின் ஆரிய தர்மம் எனும் பத்திரிக்கையில் கடுமையாக சாடி எழுதப்பட்டார். பிற சமூகங்களைப் பொறுத்தவரை TOLERANCE ஓ COMPROMISE ஓ தேவையில்லை. ACCEPTENCE தான் தேவை என்பதை ஆணித்தரமாக காந்தி வலியுறுத்தி வந்தார். அதன் காரணமாகவே கொல்லப்பட்டார்.

எனவே முதலில் எந்த சமூகமும் பன்மை சமூகம் தான் என்பதனையும், அவற்றை அவரவர் நம்பிக்கைப்படி உள் வாங்கி அங்கீகரித்து அனைவருக்கும் ஒரே நீதி என்ற இலக்கை நோக்கி பயணிப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

தமிழ் சமூகம் பண்டைய காலந்தொட்டே பல சமூகங்களாக பிரிந்து வாழ்ந்துள்ளது என்பது வரலாறு. செந்தமிழ், கொடுந்தமிழ், இழிசனர் தமிழ், சமண தமிழ், சைவத் தமிழ் என பல சமூகங்களாக வாழ்ந்துள்ளனர்.

இன்றும் கூட சமூக காரணங்களால் மட்டுமல்ல, மாறாக அரசியல் காரணங்களால் கூட தமிழ் கமூகம் பல்வேறு கூறுகளாகவே பிரிந்துள்ளது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்று சமச்சீர் கல்வி படும்பாடு. கடந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட காரணத்தால் இன்றய அரசால் சமச்சீர் கல்வி உதாசீனப்படுத்தப்படுகிறது.
நான்கு ஆண்டு கால ஆய்வின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இன்று அற்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனையானது. அவசியம் என அரசு கருதினால் சில மாற்றங்களோடு அல்லது சில நீக்கங்களோடு உடனே அமுல்படுத்த முனைய வேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்ட பின் பாடத்திட்டத்தில் சில அம்சங்கள் நீக்கப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் உண்டு.
உதாரணமாக நண்பர் கவிஞர் இன்குலாப், ராஜராஜ சோழன் காலத்தில் நடைமுறையில் இருந்த பெண்ணடிமைத் தனத்தை - தாசித்தனத்தை சாடி எழுதிய கவிதை நீக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அதுபோல் இப்பொழுதும் நாங்கள் அளித்த வரைவு பாடத்திட்டத்தில் கடந்த கலைஞர் அரசு செய்த இடைச்சொருகல்களை நீக்கி அமுல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

அரசியல் ரீதியான தமிழ் சமூக பிளவு என்றால், சமூக ரீதியான பிளவுகளுக்கு சிறந்த உதாரணம் இரட்டை குவளை நிலை, காலணி அணிய அனுமதி மறுப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். சில இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள தடையையும் கூட இவ்வகையில் சேர்க்கலாம்.

பாண்டிச்சேரியில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற ஒரு தடை சமீபத்தில் தமுமுகவின் தீவிர முயற்சிக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக முன்னேற்றத்திற்கான வழிகளாக நான் குறிப்பிடுவது இத்தகைய வேறுபாடுகள் களைப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்கள் அணு உலை அமைப்பது தான் நமது முன்னேற்றத்திற்கான பாதை என வலியுறுத்தி வருகின்றனர்.

அணு உலை விபத்திற்கு பின் அனேக நாடுகள் அணு உலையை மூடிவிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஏனெனில் அணு உலையின் பயன்பாடு ஏறத்தாழ 25 வருடங்கள் தான். ஆனால் அணு கழிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்து சுமார் 30,000 வருடங்களாகும். எனவே அபுல்கலாம் குறிப்பிடுவது போல் மேலிருந்து கீழாக வளர்ச்சியோ முன்னேற்றமோ அடைய முடியாது. மாறாக நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் குறிப்பிடுவது போல் வளர்ச்சியோ, முன்னேற்றமோ கீழ் மட்டத்திலிருந்து அமைய வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும். அதனை நோக்கியே நாம் பயணப்பட வேண்டும்.

அதாவது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் கமிட்டியில் இடம் பெற்ற அபூஸாலிஹ் குறிப்பிடுவது போல் சமூகங்களிடையேயான சம வாய்ப்புகள் உருவாக வேண்டும். அதுவே பன்மைத்துவ குறியீடாக அமையும்.

இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றிய பேரா. அ. மார்க்ஸ் இறுதியாக அங்கு கூடியிருந்த பெரும்பாலான முஸ்லிம்களுக்கான சிறப்பு கவன ஈர்ப்பு உரையாக சில நிமிடங்கள் பேசினார்.

ராஜேந்திர சச்சாரின் அறிக்கையின்படி முஸ்லிம் இயக்கங்கள் இதுவரை முயற்சிக்காத ஆனால் உடனே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. இவற்றை தனித்தனியாக குறிப்பிட்டு ஒற்றுமையாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டும்.

முதலாவதாக, சமூகங்களுக்கான சம வாய்ப்பு. இதன்படி முஸ்லிம்களுக்கு மாத்திரம் தனியாக 10 சதவிகித இட ஒதுக்கீடு அனைத்து அம்சங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சச்சார் அறிக்கை வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, சட்டமன்ற, பாராளுமன்ற அவைகளிலே இட ஒதுக்கீடு பெறத் தாமதமானாலும், அந்தந்த மாநில அதிகாரத்திலுள்ள நகரசபை, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பெற குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற இட ஒதுக்கீடு ஆந்திர மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது அறிந்ததே.

அடுத்ததாக சிறைக் கொட்டடிகளில் வாடி வரும் முஸ்லிம் கைதிகள் எதிர்வரும் ஜுலை 15 அண்ணா நினைவு நாளில் விடுதலை செய்யப்பட அரசை வலியுறுத்த வேண்டும்.
சச்சார் கமிட்டியின் பரிந்துரைப்படி தேர்வு குழுக்களில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற அரசை நிர்பந்திக்க வேண்டும்.

இந்தியாவிற்கு ஏற்பட்ட களங்கமான பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் அரசு உடனடியாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்தபடி மஸ்ஜித் கட்டித்தர கோரி வலியுறுத்த வேண்டும். அயோத்தியிலுள்ள இந்து தீவிரவாதியான சுவாமி ராம் விலாஸ் வேதாந்தியின் மிரட்டலுக்கு பயந்து இடிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டாமல் காலம் தாழ்த்துவதை கைவிட்டு, உடனடியாக பள்ளி கட்டி தந்து சமூக நீதியை பாதுகாக்க அரசை நிர்பந்திக்க வேண்டும்.

முக்கியமாக, பல காலமாக வரைவு நிலையிலுள்ள 'இனக்கலவர தடுப்பு சட்ட மசோதா' வை (COMMUNAL RIOTS PREVENTION ACT) உடனடியாக நிறைவேற்றுவதுடன் சாட்சிகளுக்கான பாதுகாப்பையும், உயிர் உத்திரவாதத்தையும் தர அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.

சுமார் ஒன்னரை மணி நேர மேற்கண்ட உரைக்குப் பின் சபையோரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சகோ.கபீர், அப்துல் சத்தார் மற்றும் சிவக்குமார் செம்மையாக செய்திருந்தனர்.

சிறப்புச் செய்தியாளர்.





--

ஞாயிறு, 12 ஜூன், 2011

இராமநாதபுரம் எம்.எல்.ஏ. பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள்

முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே மீனவர்களுடைய நலனைப் பேணுவதிலே அக்கரை கொண்டு பல்வேறு அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. அந்த அப்படையில் 1974ல் தமிழகத்தில் திமுக அரசும், மத்தியிலே காங்கிரஸ் அரசும் ஆட்சியிலே இருந்தபோது காலங்காலமாக இராமநாபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான இருந்து விடுதலைப் பெற்று பிறகு நமது நாட்டின் சொத்தாக மாறிய கச்சச் தீவை தாரை வார்த்துவிட்டார்கள். எனக்கு முன்னர் இங்கே உரையாற்றிய மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதைப்போல, கச்சத்தீவுவை தாரை வார்த்து நம்முடைய தமிழக மீனவர்களுக்கு குறிப்பாக இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக...


முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அன்றாடம் நம்முடைய மீனவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடிய ஒரு பிரச்சினை, கச்சத் தீவை தாரைவார்க்கும் பிரச்சினையாக அமைந்திருக்கின்றது இதில் மிக முக்கியமாக ஒரு விஷயத்தை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கச்சத் தீவு தொடர்பான சட்டத்திலே கச்சத் தீவுக்கு செல்வதற்கும், அந்த பகுதியிலே மீன் பிடிப்பதற்கும் ஏன் அந்தத் தீவிலே மீன் வலைகளை காய வைப்பதற்கும்கூட தாரை வார்த்தச் சட்டத்திலே உரிமை இருந்தாலும் கூட, இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடைபெற்றிருந்த காலத்திலே 1983ல் தமிழ்நாடு என்ற ஒரு சட்டத்தின் வாயிலாக நம்முடைய மாற்றுப்பட்டு கச்சத் தீவுக்கு நாம் செல்லக்கூடிய உரிமை தடுக்கப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இப்போது போர் முடிவுற்ற நிலையிலே இந்தச் சட்டத்தையும் திருத்தி நம்முடைய மீனவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்லி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை மனதார ஆதரித்து விடைபெறுகிறேன். நன்றி (மேசையைத் தட்டும் ஒலி)

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகின்றேன். ஊழல் மலிந்த, அராஜகம் நிறைந்த, சுயநல ஆட்சியை வீழ்த்த அனைத்துத் தரப்பினரையும், ஒருங்கிணைத்து மக்கள் விரும்பிய கூட்டணியை அமைத்து மக்களின் மௌனப் புரட்சிக்கு வித்திட்டு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று தற்போது 3&வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் அன்பு சகோதரிக்கும் (மேசை தட்டும் ஒலி) அவரது தலைமையின் கீழ் செயல்படும் இலட்சோபலட்ச அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழகத்தில், ஜனநாயத்தைக் காப்பாற்றும் இந்த அறப்பணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம் பெற்ற எங்கள¢கூட்டணிக் கட்சிகளான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவற்றின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் நலனுக்கெதிரான கூட்டணியை தோல்வியுறச் செய்யவேண்டுமென்று வீறுகொண்டு எழுந்து செயல்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சகோதரர் சீமானுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மிரட்டல்கள், இழிசொற்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட்டு தமிழகத்தின் ஜனநாயகம், பணநாயகமாக மாறாமல் தடுத்து நிறுத்தி அதைத் தடுத்து நிறுத்துவதையே ஒரு சவாலாகவே கருதி மனஉறுதியுடன் செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையாளர் குரேஷி அவர்களுக்கும், திரு.பிரவின்குமார் தலைமையிலான தமிழக தேர்தல் ஆணையத்தின் அத்துணை அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து வகையான கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி சுயநலனை விட நாட்டு நலனே மேல் என்பதை நெஞ்சில் சுமந்து தங்கள் கையில் உள்ள எனும் வாக்குச்சீட்டு களாக மாற்றி சமீபத்தில் எகிப்தில் நடைபெற்றுதுபோல ஒரு அமைதிப் புரட்சியை தமிழகத்திலும் ஏற்படுத்தி நல்லாட்சி ஏற்ற்ட வழிவகை செய்த தமிழக வாக்காளப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு மேலாக தன்னலம் பாராமல் அளப்பரிய தியாகங்களுடன் மனிதநேய சேவைகளைச் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கண்மணிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற அயராது உழைத்த என் கட்சியின் சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் போட்டியிட்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளிலே வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஈழ மண்ணில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷே என் நண்பர் என்று தன்னைச் சொல்வதிலே பெருமை கொள்ளும் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக எனக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டார். அவர் மட்டும் அல்ல, காங்கிரஸ் கட்சியும் கூட ராஜபக்ஷேயின் நண்பராகத்தான் இருந்து வருகிறது. இதனால் தான் டெல்லியில் நடைபெற்ற ஊழல் மலிந்து போட்டிகளின் நிறைவு விழாவிற்கு ராஜபக்ஷேவிற்கு சிவப்புக் கம்பன வரவேற்பு அளித்தார்கள். அந்த சிவப்புக் கம்பளம் என் தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் அடையாளமாகத்தான் எனக்குக் காட்சியளித்தது.

காங்கிரஸ் கட்சியின் ராஜபக்ஷே ஆதரவை நிராகரித்து அவரது நண்பரான காங்கிரஸ் வேட்பாளருக்கு சரியான பாடம் கற்பித்து என்னைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற வைத்த இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்காக அரும்பாடுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றி, நடந்து முடிந்த இந்த 14 வது சட்டப் பேரவைக்கான இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிடம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் துடிப்புடனும், கோபத்துடனும், விவேகத்துடனும் இந்த புதிய அரசின் ஆரம்பக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

அருமையான 6 மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்த ஆட்சி தொடங்கியுள்ளது. அனைவரையும் அரவணைக்கும் வகையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு ஆளுநர் உரையும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகை ஆளுநர் உரையிலே இடம்பெற்றுள்ளது. அதை மனிதநேய மக்கள் மனமார வரவேற்கிறது.

கடந்த அரசு அவசரக் கோலத்தில் நடைமுறைப்படுத்திய சமச்சீர் கல்விக் கொள்கையை மேல் ஆய்வுக்காக இந்த அரசு நிறுத்தி வைத்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. சிறுபான்மை மக்களின் மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை அந்த மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து 10 வது மற்றும் ப்ளஸ்2விலே தேர்வு எழுதும் வாய்ப்பை திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையிலே மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக பழுத்த கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை புறந்தள்ளப்பட்டது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறை மேல் ஆய்வு செய்யப்படும்போது அரசியல் சாசன சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறுபான்மை மக்கள் தமிழுடன் சேர்த்து தாய் மொழியை கற்பதற்கும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் சிறுபான்மை மக்களின் நலனின் அக்கறை கொண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்சி, வேலூர், பரமக்குடி என்று பல்வேறு ஊர்களிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திலே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். சிறுபான்மை முஸ்லிம்களின் இந்த உள்ளக்கிடக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முறையில் உள்ள சிக்கல்களினால் அதன் பலனை சில துறைகளில் குறிப்பாக உயர் மருத்துவ படிப்பு சேர்க்கை, பல்ககலைக்கழகங்களிலே பேராசிரியர் நியமனம் முதலியவற்றில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த குளறுபடிகள் நீக்கப்படுவதற்கும், நவிந்தோர் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார்கள். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த திமுக அரசு 2009 லே தமிழ்நாடு திருமணங்கள் புதிவுச் சட்டம் என்ற பெயரில் கட்டாயமாக திருமணங்கள் அனைவரும் புதிவு செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது. காலம் காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் எழுத்துபூர்வமாக அதனை நடத்தும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக அரசு இந்தத் திருமணங்களைப் பதிவு செய்ய கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்தில் கொண்டு வந்து விதிமுறைகள், முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு முரணாக இருந்தன, தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

சென்ற 2010, மார் 6ம் தேதி நாள் உள்பட அனைத்து முஸ்லிம்கள் அமைப்புகளின் பிரதிநிகள் சட்ட அமைச்சரைச் சந்தித்து, கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள ஆட்சேபணைகளை வெளிப்படுத்தினோம். ஆனால், அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை சென்ற திமுக அரசு நிராகரித்தது. தேர்தலிலே படுதோல்வி அடைந்தது.

அரசினால் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. மாறாக, இந்தப் பதிவிற்காக முந்தைய திமுக அரசு கொண்டுவந்த விதிமுறைகளைத்தான் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். ஜமாத்துகள், காஜிகள் பதிவு செய்யும் திருமணம் தொடர்பான பதிவுச் சான்றினை அப்படியே ஏற்றுக்கொண்டு வேறு எவ்வித குறிப்பாவணங்களும் இல்லாமல் பதிவு துறை பதிவு செய்து, சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கையாகும். அதாவது தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009 விதிமுறைகளிலே பிரிவு5, உட்பிரிவு4லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கை, இந்தக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, இதை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றித் தருவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். இந்தக் கோரிக்கையை அவர்கள் விரைவில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு (குறுக்கீடு)

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் : மிக்க நன்றி, அமைச்சர் அவர்களே, இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு 10400 பேர் விண்ணப்பித்தார்கள், இவர்களில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 3400 பேர்களுக்கு மட்டுமே குலுக்கல்மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வாய்ப்பு இழந்த சுமார் 7000 பேரில் பாதி பேருக்காவது வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யவேண்டுமென்று கேட்க்கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது, குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலே பட்டா நிலங்களிலே சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு இருக்ககூடிய சிக்கலை இந்த அரசு, அதிமுக அரசு நிவர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டார்கள். அதையும் நி¬வேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ள இராமநாதபுரம் தொகுதி மீனவர்கள் நிறைந்த தொகுதி, மீனவர்களின் நலனின் இந்த அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தொடக்கமாக இந்த அரசு தேர்தலிலே வாக்குறுதி அளித்தபடி மீன்பிடி டைக் காலத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகையை மாதம் ஒன்றுக்கு ரூ.2000/& ஆக உயர்த்தியதை மணமார வரவேற்கிறேன்.

கச்சத்தீவு தொடர்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் மீனவர்களின் நலனின் இந்த அரசுக்குள்ள அக்கறைந வெளிப்படுத்துகிறது. இதே போல, பருவகாத்தால் நான்கு மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழலில் இருக்கும் மீனவக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4000 ரூபாயாக வழங்கப்படும் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

பாரம்பரிய மீனவர்கள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி நோக்கோடு நடுக்கடலில் மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஏற்றுமதிக் கப்பல் பூங்கா அமைக்கப்படும் என்று அஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா இராமநாதபுரம் தொகுதியில் விரைவில் அமைய ஆவண செய்ய வேண்டுமெனப் பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீன் பூங்காக்களில் குறைந்தது ஐந்து தொழில் வளர்ச்சயில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அடுத்து தொடர்ந்து நம்முடைய தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும். அந்த வகையிலேதான் அஇஅதிமுக&வினுடைய தேர்தல் அறிக்கையிலே மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதை ஏற்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சூழலில் தேர்தல் நேரத்திலே நான்கு மீனவர்கள் இ£ரமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள், விக்டஸ், அந்தோனிராஜ், ஜான்பால் மற்றும் மாரிமுத்து என்ற இந்த நான்கு மீனவர்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உலகக் கோப்பை கிரிப்கெட் போட்டி நடைபெற்ற அந்த தினத்திலே மீன் பிடிப்பதந்காக TN-10-WFB-626 என்ற படகிலே சென்றிருக்கின்றார்கள். கிரிக்கெட் போட்டியிலே இலங்கை தோல்வியடைந்தது. இலங்கை தோல்வி அடைந்ததற்குப் பழிவாங்ழுவதற்காக வேண்டி, நம்முடைய இந்த நான்கு மீனவர்களும் சித்திரவதை வெய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதிலே, மிகப்பெரிய கவலை மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், இந்த செய்தி, 2 ஆம் தேதியே அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், அவர்களுடைய சடலத்தையும் இலங்கை கடற்படையினர் தூக்கிச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து இந்த செய்தியை அன்றை தமிழக அரசு மறைத்து இந்த நான்கு மீனவர்களும் காணாமல் போய்விட்டார்கள் என்று சொல்லி சில நாட்களாகத் தேடி, பிறகு இலங்கையிலுள்ள ஒரு பத்திரிகையிலே இரண்டு சடலங்கள் & விக்டஸினுடைய சடலமும், இன்னொருவருடைய சடலமும் ஒதுங்கியிருக்கின்றது என்று செய்திகளெல்லாம் வந்தபிறகு மீனவக் குழுக்கள் 6 பேர் கொண்ட குழு இலங்கைக்குச் செல்கின்றது.

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் : அந்த குழுவும் கப்பலிலேயே சுடும் வெயிலிலே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதற்குப் பிறகு விக்டஸினுடைய உடல் யாழ்ப்பாணத்திலேயே கண்டெடுககப்படுகின்றது. அதிலே பல காயங்கள், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த மறு தினம், அந்தோனிராஜினுடைய உடல் தமிழகத்திலே தொண்டிக்கு அருகே கரை ஒதுங்குகிறது. தேர்தல் முடிந்த மறுநாள் 14 ஆம் தேதி ஜான் பாலினுடைய உடல் கரை ஒதுங்குகிறது. 16 ஆம் தேதி மாரிமுத்துவினுடைய உடல் தலை இல்லாமல் கரை ஒதுங்குகிறது. இதிலே மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மீனவர்கள் காணாமல் போனால் அவர்களுடைய உடல் கிடைத்தால் மட்டுதான் அரசாங்கம் அவர்களுடைய குடும்பத்திற்கு இழப்பீடு தரக்கூடியதொரு நிலையிலே, இந்த நான்கு மீனவர்களில் ஒருவருடைய உடல், விக்டஸினுடைய உடல் யாழ்ப்பாணத்திலே கண்டெடுக்கப்பட்ட பிறகு நான்கு குடும்பங்களுக்கும் தமிழக அரசு அன்றை தமிழக அரசு இழப்பீடு கொடுக்கின்றது. இதிலே நமக்குள்ள சந்தேகம் என்னவென்றால் தேர்தல் நேரத்திலே இந்த நான்கு மீனவர்களையும் கிங்களப் பேரினவாத இலங்கை அரசு கிரிக்கெட் உலகக் கோப்பைப்போட்டியிலே தோல்வியடைந்தற்காகச் சுட்டுக் கொன்றிருக்கிஙனறது. சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது. இந்த உண்மைய மறைத்திருக்கின்றார்கள். இதற்காக தமிழக அரசு முழமையான ஓர் விசாரணையை ஏற்படுத்தி இந்த நான்கு மீனவர்களினுடைய (குறுக்கீடு)

முனைவர் எம் ஹெச் ஜவாஹிருல்லா " இது வேறு அது வேறு இந்த 4 மீனவர்களுக்கும் அதிமுக சார்பாக ஒரு லட்சம் கொடுத்தார்கள் .ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையும் இந்த உண்மையை மறைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் .அதே போல் கடந்த 30 ஆண்டுகளாக 500 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அவாகளுடைய குடும்பத்தின் வாரிசுகளுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி இந்த 4 மீனவர்களும் சென்ற படகு என்ன ஆனது என்பதைப்பற்றிய விவரம் இது வரை தெரியவில்லை அந்த படகுக்காக வேண்டி தமிழக அரசு இழப்பீடு தரவேண்டும் . இந்த 4 குடும்பங்களினுடைய உறுப்பினர்களுக்கு அரசு வேலை தருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கொண்டு இறுதியாக சுருக்கமாக சில செய்திகளை மட்டும் சொல்லி கோரிக்கைகளை மட்டும் முன் வைத்து விடை பெறுகின்றேன் .

இராமநாதபுரம் மாவட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளாகிவிட்டது . ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற க்கழகத்தினுடைய நிறுவனர் , ஏழைகளின் பங்காளர் ,பாரத ரத்னா எம்ஜி ஆர் அவர்களுடைய காலத்திலேயே தான் இராமநாத புரம்மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகமும் இராமனாதபுரத்திலே அமைக்கப்பட்டது.(மேசையை தட்டும் ஒலி) இந்த இராமநாத புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தை எம் ஜி ஆர் அவர்கள் உயிர்பித்தார்கள்.அதற்கு சரியான மாவட்டத்தலைநகர் அந்தஸ்து கொடுத்தார்கள் இந்த ஆட்சியிலே மிகவும் பிற்படுத்தப்பட்ட தொழில் வளம் இல்லாத விவசாயமும் அதிகம் இல்லாத இந்த மாவட்டத்தை தமிழகத்தையே எப்படி இந்தியாவினுடைய முன்னோடி மாநிலமாக ஆக்கவேண்டுமேன்று அதிமுக அரசு முயற்சி செய்திருக்கிறதோ அதே போல எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தை தமிழகத்தில் மிகவும் முன்னோடியான மாவட்டமாக உருவாக்குவதற்கு இந்த அரசு.

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்: இராமநாதபுரம் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டிருக்கின்றது. இராமேஸ்வரத்திலே யாத்ரிகர்களும், சுற்றுல்லாப் பயணிகளும் ஏராளமாக வருகின்றார்கள். அதற்கு அடிப்படை கட்டமைப்பு வவசதிகள் அளிக்கப்பட வேண்டும். இராமநாதபுரத்திலே சென்ற அரசு பெயரளவிலே மருத்துவக் கல்லூரி தொடங்கியதாக அறிவிப்பு மட்டும் செய்தது. வேறு எந்த நடவடிக்கையும் இல்லை. அதுவும் தொடர வேண்டும். இராமநாதபுரத்திலே ஓடக்கூடிய போக்குவரத்துக் கழகத்தினுடைய தலைமையகம் கும்பகோணத்திலே இருக்கின்றது. அந்தக் கோட்டம் கும்பகோணத்திலிருந்து காரைக்குடிக்கு மாற்ற வேண்டுமென்று கேட்டுகொண்டு நல்ல வாய்ப்பைத் தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.

அதற்கு விளக்கமளித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எஸ் கோகுல இந்திரா உறுப்பினர் பேசும்போது இஸ்லாமியர் சில கோரிக்கைகளை திருமண பதிவு சம்பந்தமாக கூறியிருக்கின்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி விளக்கமாக சொல்லி வாக்குறுதியில் சொல்லியுள்ளதாக சொல்லியிருக்கின்றார்கள்..உறுப்பினர் அந்த கோரிக்கைகளை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் நிச்சயமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடனடியாக அதற்குரிய (மேசையை தட்டும் ஒலி)நியாயப்படுத்தப்பட்ட அவர்களுடைய கோரிக்கையை சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக சாதி பாராத நீதி மானாக இதுவரை விளங்ககூடிய முதலமைச்சர் அம்மா அவர்கள் உடனடியாக அதற்குள்ள ஆய்வுகள் செய்து நிவாரணமும் அவர்களுக்குள்ள அந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்

இலஞ்ச, ஊழல், அதிகார துஷ் பிரயோகங்களை அறவே விரும்பாத அரசர்!!!!!!

முஹம்மது மக்தூம் அப்துல் ஜப்பார் அவர்களின் Facebook  குறிப்புகளிலிருந்து....

நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)

சனி, 11 ஜூன், 2011

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.

இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.
ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.
பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.

ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர், "பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்".

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார்.

இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,

Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.
Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு.
One Reason - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு.
The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம்
Thanks: syed lalpet Facebook notes....

சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரலை எதிரொலித்த ஜவாஹிருல்லாஹ்!

சட்டமன்ற மமக கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சமுதாயத்தின் குரலை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

வியாழன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து அவர் பேசியது: பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யும் சட்டம், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

இஸ்லாமியர்களின் திருணங்கள் ஜமாத்துக்களில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த திருமணங்கள் கட்டாய பதிவு என்கிற சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதுகுறித்த கோரிக்கையை அப்போதைய திமுக அரசிடம் வைத்தோம். ஆனால் நிராகரித்து விட்டது.

திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. ஆனால், பதிவுக்கான விதிமுறைகளை எதிர்க்கிறோம். எந்தக் குறிப்பாணையும் இல்லாமல் ஜமாத்துக்களின் சான்றுகளை வைத்துக் கொண்டு திருமணங்களை பதிவு செய்திட வேண்டும் என்று பேராசிரியர் தனது பேச்சை தொடர, அமைச்சர் கோகுல இந்திரா (குறுக்கிட்டு): திருமண பதிவு சம்பந்தமாக உறுப்பினர் சில கோரிக்கைகளை வைத்தார்.

அவரது கோரிக்கையை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
முதல்அமைச்சர் ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்றார்.


தொடர்ந்து பேராசியர் பேசுகையில், ''இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 10,400 பேர் அரசிடம் விண்ணப்பித்தனர். ஆனால், இதில் 3 ஆயிரம் பேருக்குத்தான் ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. எனவே, மீதமுள்ளவர்களில் பாதி பேருக்காவது அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

 வருங்காலத்தில் இன்னும் வலுவாக சமுதாயத்தின் கருத்தை பதிவு செய்வார்.....
Thanks....Aym yusuf' facebook notes

வியாழன், 9 ஜூன், 2011

ஊழல் மற்றும் மதுபான ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் குஜராத் அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு

ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே   நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.    மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார்.

ஹசாரேயின் கருத்துக்கள் மோடி அரசின்  கொடூரத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக இருந்தது.  இருப்பினும் இனப்படு கொலை தவிர்த்து மோடியின் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெறுவதாக ஒரு குருட்டு கருத்தோட்டம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்தது.

2002ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை நிகழ்வுகளுக்கும் மோடிக்கும் எவ்விதத் தொடர்பும்  இருக்க முடியாது என பல ஊடகங்களும் மோடியை வளர்ச்சிக்கான  அரசியல் வாதியாக  வர்ணித்தன. காந்தியடிகள் பிறந்த மாநிலம் ஆதலால் அங்கு பூரண  மது விலக்கு என்றுமே நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதைக்கூட மோடியின் சாதனையாக டமாரம் அடிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது,  மோடிக்கு முன்பாக ஆட்சி செய்தவர்கள் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் அதைக்கூட மோடியால் செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் அன்னாஹசாரே வெளியிட்ட கருத்துக்கள் மாயை களை உடைத்து உண்மைகளை வெளிப்படுத்தியது. குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாக கூறப்படுவது ஒரு மாயை என்றும் மாநிலத்தில் பாலைவிட அதிகமாக மதுபானங் கள் தான் ஆறாக ஓடுகின்றன என்றும் கூறி பரபரப்பு தீயை பற்றவைத்திருக்கிறார்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக பாடுபட்டுவரும் அன்னாஹசாரே   கடந்த மாதம்  மோடி அரசை நல்லாட்சி என்று பாராட்டினார். பின்னர் அது தவறு என்று உணர்ந்து கொண்டதாக கூறி தனது மோடி ஆதரவு கருத்துக் களை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஹபீபா பாலன்

வியாழன், 12 மே, 2011

தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்

எதிர்ப்புகள் தணிந்த பின்னரும் மக்களின் சாவுகள் பற்றிய கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.
நிருபமா சுப்ரமணியன் – தி இந்து 24.11.2010

“ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான்.  அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான். ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.
புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.
”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர்.  அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.
சிறுவன் அடித்துக் கொல்லப்படவில்லை; அன்று அந்த பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் மாட்டி மிதிபட்டு செத்தான் என்று மறுத்துரைக்கிறது ஸ்ரீநகர் போலீசு.  சட்டத்தை அமல் படுத்துவோருக்கும் மக்களுக்கும் இடையிலான பிளவு கடந்த நான்கு மாதங்களாய் படுபாதாளமாகி இருக்கும் நிலையில் போலீசின் இந்தக் கூற்றைக் கொள்வாரில்லை.  ஷமீர் மரணம் தொடர்பாகப் போலீசால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுக்கிறார் அவனது தந்தை.
”அன்று அப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை.  என் மகனது மரணத்துக்குப் பின்னர்தான் எதிர்ப்புகள் கிளம்பின”  என்று விவரிக்கும் தந்தையின் கண்ணீர் வழிந்தோடுகிறது.  ”என் மகனைக் கொலை செய்த சி.ஆர்.பி.எஃப் ..காரர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது” என்கிறார் ஃபயாஸ்.
ஸ்ரீநர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் கல்லெறியும் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்ட போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் தாக்குதலால் ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன் துஃபயில் மட்டூ தொடங்கி, ஜூன் முதல் அக்டோபர், 2010 வரையிலான மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட 112 பேர்களில் ஷமீரும் ஒருவன்.  ஒவ்வொரு சாவும் பல போராட்டங்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது.  ஒவ்வொரு போராட்டமும் சாவு எண்ணிக்கையை உயர்த்துகிறது.

போலீசுத் தரப்பு மறுமொழி
“இந்த சாவுகளில் சில நியாயப்படுத்த முடியாத வகையில், தவறான நடவடிக்கைகளால் விளைந்ததாக இருப்பினும், பெரும்பாலான சம்பவங்களில் கிளர்ந்தெழும் கும்பலின் நோக்கம் வன்முறையாகவே இருந்தது. துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிற வேறு தெரிவு இல்லை” என்கிறது போலீசு தரப்பு.
அமைதிவழிப் போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு, “தீ வைப்பு எல்லாம் என்று முதல் அமைதிவழிப் போராட்டம் ஆனது?” , “ துப்பாக்கி அற்ற, காந்திய வழியில் நாங்கள் வன்முறையை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி.
போலீஸ் தரப்பு நியாயங்கள் எதுவாயினும், போராட்டம் சற்றே ஓய்ந்திருப்பினும், இந்த மரணங்கள், “இந்தியப் படைகளுக்கும்”, புது டில்லி அரசுக்கும்,  மற்றும் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசுக்கும் எதிராக நீறுபூத்ததொரு கோபக் கனலை விட்டுச் சென்றுள்ளன.  இப் படுகொலைகளை விசாரிக்க ஜூலை இறுதி நாட்களில் இரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  இதில் வெறும் 17 சாவுகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட இருப்பது மேலும் ஒரு கசப்பான முடிவு.
நிகழ்ந்த எல்லாப் படுகொலைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால்,  அதே சமயம், கடந்த கால விசாரணைக் கமிஷன்களில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், குற்றவாளிகள், அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படையினர், தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் எள்ளளவும் இல்லை.
1990 முதல் 2006 வரையிலான காலத்தில் 458 வழக்குகளில் ஆய்வு முடிவுகள் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுப்பதற்கான அனுமதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை என ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் கூட்டணியைத் தலைமையேற்று நடத்தும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ்.

மற்றொரு உதாரணம்
தங்கள் முன் வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணைக் கமிஷனில் இருந்து வந்த இரண்டு தாக்கீதுகளுக்கும் கொலையுண்ட சிறுவன் துஃபயிலினின் தந்தை அர்ஷத் மட்டூ செவிசாய்க்கவில்லை. மாறாக, தனது மகன் சாவுக்கு ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர் சொந்த முறையில் நீதிமன்றப் போராட்டம் நடத்துகிறார்.
12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில் இறக்கிறான்.  முதலில் அவன் தனது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது போலீசு.  ஆனால், தலையில் கண்ணீர்ப் புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.
தான் பெற்ற நீதிமன்ற ஆணையைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய போலீசை நிர்ப்பந்திக்கிறார் மட்டூ. ஆனால் அவ்வாறு பெறப்படும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போலீசின் முதல் தகவல் அறிக்கையோ, இரு தரப்புத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே நிகழ்ந்த மரணம் இது என்கிறது.  மட்டூ இதை மறுக்கிறார். வழக்கு இன்னமும் சி.ஜெ.எம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
வசதியான கம்பள வியாபாரியான அவர் அரசு அளித்த 5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை.  அக்கம்பக்கத்து வீட்டுச் சுவர்களில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன.   ”என் மகன் சிந்திய குருதியை விலைபேசவா நான் இருக்கிறேன். என் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இந்த அரசு உடனடியாக முனைந்திருக்குமானால் ஏனைய 111 பேர் தம் உயிரை இழக்கும்படி நேர்ந்திருக்காது”  என்கிறார் மட்டூ.
”இந்தியா என்னை ஏமாற்றிவிட்டது. செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் பல அம்சங்களை நான் மதித்து வந்தேன்… ஆனால், இனி என்றும் அதற்கு இடமில்லை” என்கிறார் அவர்.
இந்த மனநிலைதான் பரந்த அளவில் அங்கு காணப்படுகிறது. “உ.பி. போலீசு துப்பாக்கி சூட்டில் இரு விவசாயிகள் இறந்ததற்குப் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டார்களே; காஷ்மீரில் 112 பேர் செத்ததற்கு மட்டும் எதையும் காணோமே, ஏன்?” என்று கேட்கிறார்கள் மக்கள்.  ஊழல் விவகாரத்தால் மகாராட்டிர முதல்வர் இராஜினாமா செய்கிறார்;  ஊடகங்களின் கூச்சலால் ரத்தோரி சிறைக்கு அனுப்ப்ப்படுகிறார்; ஆனால், இங்கே காஷ்மீரில் ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த பின்னும் இதுபற்றி ஒரு சலசலப்பு கூட இல்லையே ஏன் என்கிறார்கள் அவர்கள்.
“இந்தியாவின் பிற பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் கூட, மக்கள் சமூகம் தனது அக்கறையை வெளிப்படுத்திய விதம் காரணமாக இந்த அரசு தன் இஷ்டம்போல் செயல்பட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் இந்தப் பாதுகாப்புப் படை சட்ட ரீதியான பாதுகாப்பை மட்டுமல்ல, இந்திய மக்கள் சமூகம் மற்றும் ஊடகத் துறையின் அரசியல் மற்றும் தார்மீக பலத்தையும் பெற்றுத்தான் எங்கள் மீது பாய்கிறது” என்கிறார் வழக்கறிஞர் இம்ரோஸ்.
காஷ்மீரின் அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை;  உணர்ச்சிபூர்வமான பலவற்றை உள்ளடக்கியதாக, ஓருநாளில் தீர்வுகாண இயலாததாக இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது; ஆயினும், அதே வேளையில் இந்த அரசு குறைந்த பட்சம் மனித உரிமை விசயங்களையாவது உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர். “நீங்கள் இதைக்கூட செய்யவில்லை என்றால், இந்திய ஜனநாயகம் தன் மூஞ்சியில் தானே கரி பூசிக்கொள்கிறது என்பதைத் தவிர வேறென்ன” என்கிறார் அவர்.
தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.
 நியாயம் இல்லை
”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.
நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறந்தோர் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் அவனது குடும்பத்தார்.
“காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அச் சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.

நன்றி: மனிதநேய மக்கள் கட்சி 


வெள்ளி, 22 ஏப்ரல், 2011

சனி, 19 பிப்ரவரி, 2011

நாவின் விபரீதம்

அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சிசை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றுதான் நாவும். நாவைக் கொண்டு சுவர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.

மனிதனின் உயர்வுக்கும்;, தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை, சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ''சிறப்பிடத்தைப்'' பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ''மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்'' பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப்பற்றி திருக்குர்ஆனும், நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.
எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப்பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும். (17:36)


ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50:18)

நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஓர் அடியான் சில வார்த்;தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்;மிதி)

அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது! ஏனெனில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.
நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி ஸல் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.


நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1. புறம் பேசுதல்
மனிதர்கள் கூட்டமாகக் கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலரும் அடுத்தவரைப்பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.

சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம் இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அத்தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? எனத் தோழர்களிடம் வினவினார்கள். அதற்குத் தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப்பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)

புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.

மேலும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். (49:12)


புறம் பேசுதலைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.


நான் நபி ஸல்  அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை, கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.


(முஃமீன்கள்) வீணானதைச் செவியுற்றால் அதைப்புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள். (28:55)

(ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். (23:3)


புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி ஸல்  அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப்பிடித்துக் கொள்ளத்தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ''எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி! பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இதுதான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி). ஆதாரம் : திர்மிதி


2. அவதூறு

நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு, கடுமையான வேதனையும் உண்டு. (24:23)


3. கோள்

''ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை'' சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப் பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது.

குறை சொல்லி புறம் பேசித்திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1)


கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தக் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள் அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. ஏன்றாலும், அது பெரும் பாவம்தான். ஆவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றொருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


4. பொய் சாட்சி

அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்லமாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம்
செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (25:72)

பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ''அல்லாஹ்விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்லுவது'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)



5. தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழாக்கி விடாதீர்கள். (2:264)

மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு, கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன், (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டை காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக்காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள். (முஸ்லிம்)



6. சபித்தல்

ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அபூதாவூத்)

ஒருவர் இன்னொருவரை ''பாவி'' என்றோ, ''காஃபிர்'' என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)



7. இறந்தவர்களை ஏசக்கூடாது

இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)



8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)



9. காலத்தைத் திட்டுதல்


காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும், பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.

சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன் பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.


எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பெற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)



அன்புள்ள சகோதர, சகோதரிகளே!


இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்தோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம்;, குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகiளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

1 . குர்ஆன் ஓதுதல்
    · நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

    குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ''அலிஃப்,லாம்,மீம் என்பது ஓர் எழுத்து'' என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)


2 . தஸ்பீஹ் செய்தல்

    இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3 . நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்

    (விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (3:110)

நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதைத் தெரிந்தோம். ஆகவே நரகம் செல்லக்கூடிய (சொல்) செயல்களிலிருந்து நம் நாவைப்பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
நன்றி: தமுமுக துபை இணையதளம்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எகிப்தில் வெற்றி ஊர்வலம்!!!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு...!

எகிப்து நாட்டினை கடந்த முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை விரட்டியடித்ததை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று வெள்ளிக் கிழமை தலைநகர் கெய்ரோவில் ஒன்று திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
சுமார் பதினெட்டு நாட்கள் நடத்திய அதிபரை வெளியேற கோரி நடத்திய போராட்டத்தின் போது சுமார் 356  பேர்கள்  கொல்லப்பட்டதாகவும்5550 பேர்கள் காயங்கள் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.

இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை விரட்டப்பட்டதை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று கெய்ரோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தியுள்ளனர். பின்னர் தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையினை  பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் யூசுப் அல்
 கர்ளாவி நடத்தினார்.  இறுதிவரை பின்வாங்காமல் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற  எகிப்தியர்களை அவர் குத்பா உரையின் போது பாராட்டினார். 
புதிய எகிப்து உருவாகும் வரை போராட்டம் ஓயாது என குத்பா உரையின் போது அறிஞர் அல் கர்ளாவி குறிப்பிட்டார்.
அதிபருக்கெதிராக போராட்டம் நடைபெற்ற வேளையில் கைது செய்யப்பட்டவர்களை ராணுவ அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான முஹம்மது வகீத் கூறியிருக்கிறார் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது.


புகைப்பிடிப்பது தொடர்பாக புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரரின் கேள்விக்கு பதிலளிக்கிறார் டாக்டர் ஜாகிர் நாயக்....!

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்


வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.


உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.


முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.

அதிலிருந்து...

மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:  தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.


சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.


அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.

பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.


ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.

சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தா­ன், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.

பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...

நன்றி : தினமலர்










புதன், 9 பிப்ரவரி, 2011

லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி எழுச்சி பொதுக்கூட்டம்

லால்பேட்டையில் நடந்த மனித நேய மக்கள் கட்சியின்காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி எழுச்சி
பொதுக்கூட்டம் மிகபெரிய எழுச்சியுடன் நடைப்பெற்றது
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
பொதுக்கூட்டம் புகைப்படங்கள்...

லால்பேட்டை 06/02/2011: லால்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் முனவ்வர் ஹுசைன் நினைவரங்கம் ஸ்கூல் தெருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு A.M.முஹம்மது அய்யூப் B.A.,M.Cஅவர்கள்
மாவட்ட பொருளாளர் த.மு.மு.க & ம.ம.க) தலைமை தாங்கினார், A.I.இர்பானுல்லாஹ் BE (நகர பொருளாளர் த.மு.மு.க&ம.ம.க.) கிராஅத் ஓதினார், S.A.முஹம்மது ஹாரிஸ் (நகர தலைவர் த.மு.மு.க &ம.ம.க) வரவேற்புரை நிகழ்த்தினார்.

A.யாசர் அரபாத் .B.B.A.,MC (மாவட்ட செயலாளர் ம.ம.க.)
N.அமானுல்லாஹ் (ஊராட்சி மன்ற தலைவர் &மாவட்ட செயலாளர் த.மு.மு.க ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மௌலவி J.S ரிபாய் அவர்கள், மாநில துணை பொது செயலாளர் த.மு.மு.க.

S.S ஹாருன் ரஷீது அவர்கள், மாநில பொருளாளர் ம.ம.க.

R.M குணங்குடி ஹனிபா அவர்கள், மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.மு.மு.க.& ம.ம.க.
S.M ஜின்னா அவர்கள் மாநில துணை செயலாளர் த.மு.மு.க.
M.H மெஹராஜுதீன் அவர்கள் மாவட்ட தலைவர் த.மு.மு.க.&ம.ம.க
கலந்து கொண்டு சிறப்பு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நன்றிவுரை V.M முஹம்மது ஆஷிக் நூர் (நகர செயலாளர் ம.ம.க) அவர்கள் வழங்கினார்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பாராட்டு சான்றிதழ்

அல்-அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் சேவையை பாராட்டி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் கடந்த வியாழனன்று (13 /01 /2011 ) அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியில் வழங்கப்பட்டது. இச்சான்றிதழை அமீரக  தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் அல்-அய்ன் மண்டல தமுமுக செயலாளர் சகோ  மண்ணை ஹாஜா மைதீன் ஆகியோர் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர்

வெள்ளி, 14 ஜனவரி, 2011

தாய், தந்தையர்

ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி “அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள்.

அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல்குர்ஆன் 31:14

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244

பெண்கள்

எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல: முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957


அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.
  அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான்.
   எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59

எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்
   நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு கொலைதான்.
   அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் “அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?” முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்” என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!
   பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ


பெற்றோரின் திருப்தி

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்
ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)

அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக!

நன்றி-  ரீட் இஸ்லாம் .நெட்

சனி, 1 ஜனவரி, 2011

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் காவல்துறை செயல்பாடுகள் த.மு.மு.க. கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

அண்மையில் வெளியிட்ட (30.12.2010) அறிக்கையொன்றில் முதல்வர் கலைஞர், முஸ்லிம் சமுதாயத்தின் மீது மிகவும் அக்கறைக் கொண்டவராகத் தன்னைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது வார்த்தைக்கு முற்றிலும் முரணாகவே தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.


சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் தீவிரவாதிகளைப் பிடிக்கும் பயிற்சி ஒத்திகையை காவல்துறை நடத்தியது. அதில் நடித்த தீவிரவாதிகளுக்கு, ஒட்டுத்தாடிகளை வைத்து முஸ்லிம்களைப் போல் தோற்றம் கொடுத்திருந்தது. அந்தப் படங்கள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

இதற்கு தமுமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளைப் போல சித்தரிப்பது சங்பரிவாரத்தின் செயல்திட்டம் ஆகும். அதைத் தமிழக அரசு தீவிரமாகப் பின்பற்றி வருகிறது போலும்.

மீண்டும் ஈரோட்டில் நடந்த தீவிரவாதிகள் வேட்டை ஒத்திகையிலும் முஸ்லிம்கள்தான் தீவிரவாதிகள் என்பது போல காவல்துறை சித்தரித்துள்ளது.

காவல்துறையைத் தனது நேரடி பொறுப்பில் வைத்துள்ள முதல்வர், இப்போக்கை ஊக்குவிக்கிறார் என இதன்மூலம் தெரிகிறது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனர்.

முஸ்-ம்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாசிசப் போக்கிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு இனி இத்தகைய தீய சித்தரிப்புகளில் ஈடுபடாமல் இருக்க அரசும் காவல்துறையும் உறுதியளிக்க வேண்டும்.

இல்லையேல், மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டங்களை இந்த அநீதிக்கு எதிராக நடத்த நேரிடும் என தமுமுக எச்சரிக்கிறது.