ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்


அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரைகூறியுள்ளான்: “மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும்இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக்கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டைவீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர்,வழிப்போக்கர், மற்றும் உங்கள்கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்.திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை”(4:36).அண்டை வீட்டாருக்குத் தொல்லைத் தருவது விலக்கப்பட்ட காரியமாகும். காரணம்அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய உரிமைகள் கடமைகள் மகத்தானவை.அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அவன் முஃமினாக மாட்டான்,அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? என்றுகேட்கப்பட்டது. அதற்கு,எவனுடைய தொல்லைகளை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் நிம்மதியாக இல்லையோஅவனே!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி)ஒருவர் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொள்கிறார் என்பதற்கு,அவரைப் பற்றி அண்டை வீட்டார் புகழ்ந்துரைப்பதை அல்லது இகழ்ந்துரைப்பதைஅளவுகோலாக நபி (ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள்.இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒருவர் நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோநடந்து கொண்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது? எனக் கேட்டார். அதற்குநபி (ஸல்) அவர்கள், நீ நல்ல முறையில் நடந்து கொண்டாய் என உன்னுடைய அண்டைவீட்டார் கூறுவதை நீ செவியேற்றால் நீ நல்ல முறையில் நடந்து கொண்டவனாவாய்.நீ தீய முறையி நடந்துகொண்டாய் என உனது அண்டை வீட்டார் சொல்வதை நீ கேள்விப்பட்டால் நீ தீயமுறையில் நடந்து கொண்டவனாவாய்’ என்று கூறினார்கள். (அஹ்மத்)அண்டை வீட்டாருக்கு தொல்லை தருதல் என்பதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றுள்சில: அண்டை வீட்டாருடன் இணைந்த பொதுச் சுவரில் ஒரு கட்டையை நடுவதைத்தடுத்தல், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் அவருக்குத் தடுக்கும்வண்ணம் அவரின் அனுமதியின்றி கட்டிடத்தை உயர்த்திக் கட்டுதல், அவர்வீட்டுக்கு நேராக ஜன்னலைத் திறந்து வைத்து அதன் வழியாக அவருடைய வீட்டின்தனிப்பட்டவிஷயங்களை – நிகழ்ச்சிகளை எட்டிப் பார்த்தல், தட்டுதல், கத்துதல் போன்றஇடையூறு தரும் சப்தங்களால் அவருக்குத் தொல்லை தருதல் – குறிப்பாகதூங்கக்கூடிய மற்றும் ஓய்வெடுக்கக்கூடிய நேரங்களில், அல்லது அவருடையகுழந்தையை அடித்தல், அவருடைய வாசலில் குப்பையை வீசுதல் போன்றவற்றால்அவருக்குத் தொல்லைகள் தருதல்.அண்டை வீட்டார் விஷயத்தில் செய்யும் பாவம் மிகப் பெரிய பாவமாகும்.அவ்வாறு செய்பவனுக்கு அதன் பாவம் பன்மடங்காகின்றது. ஒருவன் பத்துபெண்களுடன் விபச்சாரம் செய்வது தனது அண்டை வீட்டாரின் மனைவியிடம்விபச்சாரம் செய்வதை விட குறைந்த குற்றமாகும்…. அது போல ஒருவன் பத்துவீடுகளில் திருடுவது அவனுடைய அண்டை வீட்டில் திருடுவதை விட குறைந்தகுற்றமாகும் என்பது நபிமொழி.(அதபுல் முஃப்ராத்).ஒரு சில துரோகிகள் இரவில் தமது அண்டை வீட்டார் இல்லாத சமயத்தை சாதகமாகப்பயன்படுத்திக் கொண்டு அவருடைய வீட்டில் நுழைந்து மோசம் பண்ணிவிடுகின்றனர். துன்பம் மிகுந்த வேதனையுடைய நாளில் இத்தகையோருக்கு அழிவுஇருக்கிறது.

நன்றி: அப்துல் ரசாக் (துபாய்)

ஜும்ஆ உரை நிகழ்த்தும் போது சுன்னத் தொழலாமா?


கேள்வி : வெள்ளிக்கிழமை தாமதமாக பள்ளிவாசலுக்கு வரநேர்ந்தால் ஜும்ஆ
குத்பா உரை நிகழும் போது சுன்னத் தொழுகை தொழலாமா? அல்லது குத்பா உரைக்கு
முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா? விளக்கம்
தாருங்கள். (ஹமீது யாகூ டாட் காம் மெயில் மூலமாக)

முதலில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பை அறிந்து விட்டு
உங்கள் கேள்விக்கு வருவோம்.

ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை
அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு
பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.

'பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து
விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி
கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக்
குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர்
கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம்
நேரத்தில் செல்பவர் ஒரு
கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர்
முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து
விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை
செவியேற்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 881)

ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான
தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை
ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

'ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை
நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த
வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே
நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து
கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து
விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச்
சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம்
(உள்ளே) வருவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 3211)

ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக
வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு
வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த
ஹதீஸ்கள் விளக்குகின்றன.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல்
இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன
செய்வது என்பதை இப்போது நாம் பார்ப்போம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்)
அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு
மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள்,
'இன்னாரே! தொழுது விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை'
என்றார். 'எழுந்து தொழுவீராக!' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(நூல்: புஹாரி 930)

இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.

தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது
விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.

தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.

அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு
ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து
கொள்ளலாம்.

இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல்
விபரங்களோடு விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல்
கத்ஃபானி (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம்,
'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்று கேட்க, அவர்
'இல்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியாயின் நீர் இரண்டு
ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக' என்றார்கள் என ஜாபிர் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:
இப்னுமாஜா 1114)

'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்ற வாசகம்
பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்.

இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை
முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே
முக்கியத்துவம் பெறும்.

இன்னும் சில ஐயங்களுக்கு விடை காண்போம்.

1. லுஹர் தொழுகையின் நேரம் தான் ஜும்ஆவின் நேரமா?

ஜும்ஆவின் நேரம் லுஹரின் நேரத்திற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது.
லுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரம் ஆகும். அதற்கான
ஆதாரம்.

'நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுவார்கள். அதன் பின்னர் நாங்கள்
சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று
அதற்கு ஓய்வளிப்போம்'. (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1870,
அஹ்மத், நஸயீ 1392)

2. ஜும்ஆவின் முன் சுன்னத் எப்போது?

மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ
வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே
ஆரம்பித்து விடுகின்றது. அதற்கான ஆதாரம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால்
இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை
நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு
தொழுதிருப்பதாகவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஉ (ரலி), நூல்கள்:
அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)

நன்றி: துபாய் அப்துல் ரசாக்
Abdul Razak

வியாழன், 1 ஏப்ரல், 2010

இந்தியா வில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ்

டெல்லி: இந்தியா வில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு ​(என்.சி.ஏ.இ.ஆர்)​ நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்,​​ மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரம்:10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.​ 550க்கும் குறைவாகவே உள்ளது.2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ​முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.​ தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.​ முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்