வெள்ளி, 26 நவம்பர், 2010

நட்புக்கு இலக்கணம்..! உமர் ஷரீப்....

(இரத்த தானம் செய்கிறார் உமர் ஷரிப்... )
கடந்த 2008  தொடங்கி அவருடன் எனக்கு பழக்கம். அமீரகத்திற்கு வந்து சிலமாதங்கள் கழித்து அமீரக தமுமுக நிர்வாகிகளை முதன் முதலாக அமீரக செயலாளர் யாசின் நூருல்லாஹ் அவர்களது இல்லத்தில் வைத்து சந்திக்கும் போது அவர் எனக்கு அறிமுகமானார்.

அன்று தொடங்கி அவர் கடந்த தியாகத் திருநாள் வரை என்னுடன் நேரிலும் தொலைபேசியிலும் நிகழ்த்திய உரையாடல்கள் கொஞ்ச நெஞ்சமல்ல..! புதிதாக யாரையாவது அவர் ஒருமுறை சந்தித்தால் போதும் உடனடியாக அவர்களது தொலைபேசி எண்னை கேட்டு வாங்கிக் கொண்டு அவர்களுடன் நட்பை தொடர்ந்து கொண்டே இருப்பார். ஒரு விஷயத்தில் மாத்திரம் அவர் கவனமாக இருப்பார்... தான் பொதுசெயலாளர் ஹைதர் அலியின் மருமகன் என்பதை யாரிடமும் சொல்லிக் கொள்ளமாட்டார். என்னுடன் எங்கேயாவது வெளியே செல்ல நேர்ந்தால் என்னிடம் தான் யார் என்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்.ஹைதரின் மருமகன் என்பதற்காக தான் அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்ற  பிரபலத்தை விரும்பாதவராக வாழ்ந்தார்.
நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொடர்பை துண்டித்து விட்டு அவரது எண்ணிலிருந்து எண்னை அழைத்து மணிக்கணக்கில் உரையாடுவார்.ஏன் எனது அழைப்பைத் துண்டிக்கிறீர்கள்? எனக் கேட்டால்  "நீங்க கம்மி சம்பளத்துக்கு வேலை செய்றீங்க ரிபாயி பாய் உங்க பணத்தை வீணாக்காதீங்க " என்று சொல்வார்.

இறுதியாக தியாகத் திருநாளன்று எண்னை அழைத்து பெருநாள் வாழ்த்து பரிமாறிக் கொண்டது தான் அவருடன் நான்  இறுதியாக பேசிய பேச்சாக இருந்தது.

நேற்று முதல் நாள் புதனன்று அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மூலம் எனது செவியில்  கேட்ட அவரது வபாத்து செய்தி நெஞ்சில் பேரிடியாக விழுந்தது.

"யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்க பூங்காவில் அவருக்கு இருப்பிடத்தை வழங்குவாயாக" என்று பிரார்த்திக்க  நூற்றுக்கணக்கான சகோதர உள்ளங்கள் ஷார்ஜாவில் அவருக்கான ஜனாஸா தொழுகைக்காக குழுமியதை காண முடிந்தது.

அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக...!

வியாழன், 25 நவம்பர், 2010

ஷார்ஜாவில் காலமானார் சகோதரர் - உமர் சரீஃப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
                      24-11-2010 அன்று ஷார்ஜாவில் காலமான சகோதரர் - உமர் சரீஃப் அவர்களின் உடல் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை 26-11-2010 காலை சரியாக 9மணியலவில் அன்னாரின் ஜனாஸா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.
இடம் :-
மஸ்ஜிதுல் ஸஹாபா
அல் காசிமியா மருத்துவமணை அருகில்
ஷார்ஜா
மேலும் விபரங்களுக்கு : நஜீர் - 050 1736892, ஹாரிஸ் - 055 4128182.
----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
 தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர்  சரீஃப் (வயது-29) அவர்கள் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். (இவர் தமுமுகவின் பொதுச்செயலாலர் சகோ-ஹைதர் அலி அவர்களின் மருமகன் ஆவார் மற்றும் தமுமுக துபை மண்டலத்தின் நிர்வாகியுமாவார்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சகோ.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.
நன்றி! வஸ்ஸலாம்!!
தமுமுக துபை மண்டலம்
தொடர்பு எண்கள்: 00971 50 4474563 . 00917 55 291049
07-05-2010 அன்று சகோதரர். உமர்  சரீஃப் இரத்ததானம் செய்யும் பொழுது எடுத்த படம்.

செவ்வாய், 16 நவம்பர், 2010