திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தலைவரே............

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாய்... ஒலித்துக் கொண்டிருக்கும் சமுதாயப்பெரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அசைக்க முடியாத ஆல விருட்சமாக கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதென்றால்... இதன் பின்னணியில் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருந்து தம்மையே உரமாக்கி அல்லாஹ்வின் துணை கொண்டு இந்த பேரியக்கத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்குரியோர் பலர் இருக்கின்றனர்.
அத்தகையவர்களில் ஒருவர் தான் தலைவர் எஸ்.எம்.ஜின்னாஅவர்கள். 
இந்திய துணைக்கண்டத்தில் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இந்தப் பேரியக்கம் நிர்மாணிக்கப்பட்ட வேளையில் கடலூர் மாவட்டத்தில் நிர்வாகக் குழுவில் ஒருவராக இடம்பெற்றார்.சிறிது காலம் கழித்து கடலூர் மாவட்ட கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று மாவட்டம் முழுவதிலும் கிளைகளை கட்டமைக்க சூறாவளியாய் களப் பணியாற்றினார். இந்த நாள்களில் அவர் சந்தித்த துன்பங்களும் தொல்லைகளும் கொஞ்ச நெஞ்சமல்ல...

இவரது களப்பணியை  கண்டு பொறுக்காத காவல் துறை இவர்மீது பல்வேறு பொய்வழக்குகளை புனைந்து இவரை முடக்க சதி செய்தது.இவரது ஊர் ஜமாஅத் கூட இவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை 
புறக்கணித்தது.

இந்த துயரங்கள்ஒருபுறமிருக்க 2004 ஆம் ஆண்டு இந்த பேரியக்கத்தில் 
இருந்து வெளியேறி சென்று வேறொரு இயக்கத்தை உருவாக்கியவர்கள், 
ஜின்னா  தம்மோடு வருவார் என்று  எதிர்பார்த்தனர்.ஆனால் தலைவர் ஜின்னா அவர்களோ.. அவர்களது எதிர்பார்ப்பை  தவிடுபொடியாக்கி
விட்டு தாம் பாடுபட்டு உருவாக்கிய இந்த பெரியக்கத்திலேயே இன்னும் வீரியமாக களப்பணியை தொடர்ந்தார்.

இதனால் சினங்கொண்ட அந்த அமைப்பினர்,தங்கள் தமுமுகவிலிருந்து 
தூக்கி சென்ற  பத்திரிகையில் இவரைப்பற்றி எழுதிய அவதூறுகள் கொஞ்ச நெஞ்சமல்ல,இது போன்ற எத்தனையோ  தடைக்கற்கள் அனைத்தையும்
படிக் கற்களாக்கி சமுதாயப் பேரமைப்பை வீரியத்தோடு வழிநடத்தினார்.

இதனால் கழகம் எனும் எல்லையை தாண்டி சமுதாய மக்களிடத்தில்"ஒரு
மக்கள் தலைவனாக"உருவெடுத்தார். இவரை புறக்கணித்த ஊர் ஜமாஅத்தார்களும் இவரை அரவணைத்துக் கொண்டனர்.
 ( கடந்த ஜூலை 14 ஆம் தேதி லால்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.. இதுவே இவர் பங்கேற்ற கழகத்தின் கடைசி நிகழ்ச்சியாகும்.)
பின்னர் மாநில துணைச்செயலாளராக கழகத்தில் பணி உயர்வு அளிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்துக்கு வெளியேயும் சென்று கழகப் பணியாற்றினார்.இதன் மூலம் பல்வேறு தரப்பினரின் அன்பையும் பெற்றார்.குறிப்பாக புதுச்சேரியில் களமாடி வரும் மனித உரிமை போராளி கோ.சுகுமாரன் அவர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். அடிப்படையில் இவர்  ஒரு விவசாயி .., ஆதலால் விவசாய சங்கங்களுடன்   நல்லுறவை பேணி வந்தார்.

இன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் தமுமுக வடக்கு தெற்கு என்று இரண்டாக செயல்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது அல்லாஹ்வின் கிருபையால் தலைவர் ஜின்னா அவர்களின் உழைப்புதான்.

இன்றைக்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றும் சகோதரர் நெய்வேலி அபூபக்கர் சித்திக்,வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக் தாவூத்,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக வின் இன்றைய தலைவர் மானியம் ஆடூர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் போன்ற கழகத்தின் தளபதிகள் அனைவரும் தலைவர் ஜின்னாவின் பாசறையில் பயின்ற போராளிகளாவர்.

வயது வித்தியாசம் பாராமல் அணைவரிடமும் நல்ல மரியாதையோடு நடந்து கொள்வார்.இரவு 2 மணிக்கு போன் செய்தால் கூட கோபப்படாமல் பேசுவார்.
2006 ஆம் ஆண்டு நான் மலேசியாவில் இருந்த போது அங்கே இந்திய முஸ்லிம் சமூகத்தின் அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.கோலாலம்பூரில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்டு,நான் வசிக்கும் ஈப்போ நகருக்கு அன்றிரவு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அப்பொழுது இந்தியாவில் நேரம் இரவு சுமார் 1 மணி இருக்கும்.அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நான் தலைவர் ஜின்னா அவர்களுக்கு போன்  செய்து "கோலாலம்பூரில்  தலைவரை சந்தித்த" செய்தியை அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.அவரும் ஆர்வமாக என்னிடம் அந்த சமயத்திலும் கழக செயல்பாடுகள் பற்றி சளைக்காமல் கலந்துரையாடினார்.

பின்னர் 1 வருடம் கழித்து நான் தாயகம் திரும்பிய சமயத்தில் சிதம்பரம் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கழகத்தின் அப்போதைய பொதுச்செயலாளரும்,அன்றைய தமிழக வக்பு வாரியத் தலைவரும்,மூத்த தலைவருமான செ.ஹைதர் அலி அவர்களை விருந்தினர் மாளிகையில் சந்தித்து சில நிமிடங்கள் நான் பேசிக் கொண்டிருந்த போது  அங்கே வந்த தலைவர் ஜின்னா அவர்கள் என்னை பற்றி ஹைதர் அலி  அவர்களிடம்.. "இரவு 1 மணி 2 மணி ஆனாலும் என்னிடம் தொலைபேசியில் பேசக்கூடிய சகோதரர் இவர்" என்பதாக என்னைப் பற்றி சிலாகித்துக் கூறினார்.  
2007 ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றைக்கும் என்  கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கிறது.அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் கொள்ளுமேட்டில் தமுமுக சார்பாக "தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் தனி  இட ஒதுக்கீடு கூறி  ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு அன்றைய கழக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அன்றைய மாநில செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும் தேதி கொடுத்திருந்தார்கள்.

கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் கொள்ளுமேடு கிளை தமுமுக  சகோதரர்கள் இதற்காக மும்முரமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருந்தனர்.அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதிலுமுள்ள கிளைகளுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுப்பது என்று முடிவு செய்து அதன் படி மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கினோம்.

அதில் இன்றைய கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக செயலாளரும்,அப்போதைய கொள்ளுமேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவருமான சகோதரர் என்.அமானுல்லாஹ்,அன்றைக்கு கடலூர் மாவட்ட தமுமுகவின் உலமாக்கள் அணி செயலாளராக இருந்த நான்,
கொள்ளுமேடு கிளை தமுமுக செயலாளர் வஜ்ஹுல்லாஹ்  ஆகியோர் காரில் பயணத்தை தொடக்கி நேராக தலைவர் ஜின்னா அவர்களின் வீட்டுக்கு சென்று அவரையும் எங்களின் சுற்றுப்பயனத்தொடு இணைத்து கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும்   ஒவ்வொரு கிளைக்கும் சென்று பொதுக் கூட்டத்துக்காக அழைப்பு கொடுத்தோம்.
எல்லா ஊர்களையும் முடித்து விட்டு இறுதியாக லால்பேட்டையை நோக்கி நாங்கள் சென்றோம்.லால்பேட்டையை நெருங்கும் முன்பே தலைவர் ஜின்னா அவர்கள் அப்போதைய மாவட்ட துணைத் தலைவர் மர்ஹூம் முனவ்வர் ஹுசைன் அவர்களை தொடர்பு கொண்டு "நவ்வரு... நாங்க இப்போ லால்பெட்டைக்கு வந்து கொண்டிருக்கோம்.. நீ நேரா கைக்காட்டிக்கு வந்துடு"என்று என்பதாக அவரை வர சொல்லி விட்டார்.
அவரும் எங்களின் வருகைக்காக கைக்காட்ட்யில்  காத்துக் கொண்டிருந்த வேளையில்.... எங்களின் கார் கைக்காட்டியை நெருங்கும் பொது... எங்களோடு காரில் இருந்த கொள்ளுமேடு கிளை செயலாளர் வஜ்ஹுல்லாஹ் தலைவரிடம்... "தலைவரே... அங்கே  பாருங்க... நம்ம பட்டாம்பாக்கம் ரஜாக் நிக்கிறா மாதிரி தெரியிது"என்றார். 

(இந்த பட்டாம்பாக்கம் ரசாக் அவர்கள் தமுமுக 2004 ஆம் ஆண்டு பிரிவினை ஏற்படும் வரைக்கும்  தமுமுகவின் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தவர்.பின்னர் ததஜவுக்கு போய் அங்கே மாவட்ட செயலாளராக இருந்து,பின்னர் மாநில நிர்வாகியாக இருந்து கொண்டிருந்த சமயம்.)

உடனே தலைவர் வஜ்ஹுல்லாஹ்விடமும்,என்னிடமும் "நீங்க ரெண்டு பெரும் ரஜாக்'க்கு கிட்ட பேசிட்டு இருங்க... அந்த கேப்புல நான் வந்து அங்கே நுழைஞ்சிடுறேன்"என்றார்.நாங்கள் "என்ன....? என்று அவரிடம் கேட்ட பொது.. "தமுமுகவிலிருந்து  ரஜாக் வெளியில் போனதிலேர்ந்து அவரை நான் சந்திக்கவும்  இல்லை... போன்ல பேசலாம்ன்னு அவர் மொபைல்க்கு போன் செஞ்சா அப்பவும் அவர்கிட்ட பேச முடியிறது இல்ல...இன்னிக்கி நல்ல சந்தர்பம்.. ரஜாக்'கை எப்படியாவது சந்திச்சிரனும். என்றார்.
உடனே நானும் வஜ்ஹுல்லாஹ்வும் காரிலிருந்து இறங்கி... ரஜாக்'கை நோக்கி  சென்று சலாம் சொல்லி கை கொடுத்து தலைவரின் ப்ளான் படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்த சமயத்தில் தலைவர் அங்கே  நுழைந்து ரஜாக் அவர்களின் கரங்களை பிடித்து கொண்டு.."ராஜாக்கு... எப்படி இருக்கே..? என்று அவரிடம் அக்கறையோடு நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
( இங்கே இன்னொரு முக்கியமான விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.மலேசியாவுக்கு போயிருந்த  பிஜே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,அவ்வாறு அவர் வெளியேற்றப்பட்டதற்கு
 தமுமுகவும்,தமிமுன் அன்சாரியும் தான் காரணம் என்று வழக்கம் போல அண்ணன் பிஜே தமுமுகவை "காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்ததால்,
அப்பொழுது  ததஜவினர் "ரொம்பவும் தமுமுகவினர் மீது கொலைவெறியில் இருந்தனர்.இந்த சமயத்தில் தான் ஜின்னா - ரசாக்
இடையில் சந்திப்பு நடைபெறுகிறது.)

தமக்கு துரோகம் இழைத்தவர்களோடும் கூட நல்லுறவை பேண வேண்டும் என்று விரும்பிய அந்த நல்ல இதயம் இன்று நம்மை விட்டு அல்லாஹ்வின் பால் சென்று விட்டது என்ற தகவல் என் காதுகளில் எட்டியபோது எனது இதயம் சுக்கு  நூறாகிப் போனது.

கடந்த ஆண்டு சிதம்பரம் நகருக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் வருகை தந்த போது,அன்றைய தினத்தில் தான்  தலைவரை நான் கடைசியாக நேரில் சந்தித்தேன்.கடந்த ரமளானில் திடீரென நான் அமீரகத்துக்கு புறப்பட வேண்டிய கட்டாய சூழல் உருவான போது ,தலைவரை நேரில் சென்று சந்தித்து என்னால் விடைபெற முடியவில்லை.. விமான நிலையத்துக்கு காரில் பயணித்துக் கொண்டே.. தலைவரிடம் பயணம் சொன்னேன்.அப்பொழுது கூட அவர் என்னிடம்... "என்ன ரிபாயி... உன்கிட்ட நேரில் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்... முடியாமல் போயிடுச்சே..."என்று வருத்தப் பட்டார்.தொலைபேசியிலேயே நீண்ட 
நேரம் இயக்க-சமுதாய விசயங்களை என்னிடம் அப்பொழுது பேசினார். 

கடந்த வருடம் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தை அவர் செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரத்தில் தலைமையேற்று நடத்தினார்.அன்றைய தினத்தில் விடுமுறையில் தாயகம் சென்றிருந்த வேளையில்,காஞ்சி மாவட்டத்தில்  விபத்து ஒன்றில் சிக்கி பலியான அமீரகத்தில் (தமுமுக நிர்வாகியின் நிறுவனத்தில்) பணியாற்றிய ஒரு மாற்று மத பொறியாளர் சம்பந்தமாக அவரிடம் பேசினேன்.இதுவே அவரிடம் நான் கடைசியாக பேசியது.

தலைவரே...... என்று உம்மை நான் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம்... "சொல்லுங்க ரிபாய்"..... என்று சொல்வீரே.... இனி உன் குரலை கேட்க முடியாமல் போயிடுச்சே.......
இன்ஷா அல்லாஹ் உம்மை நான் மறுமையில் சந்திக்கிறேன்...

அல்லாஹ் உமது பாவங்களை மன்னித்து உமது சேவைகளை அங்கீகரித்து... ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் உம்மை சேர்ப்பானாக என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி 
அல் அய்ன்.

திங்கள், 16 ஏப்ரல், 2012

துபையில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடுஅரபுலகின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் துபையில்,கடந்த 12,13,14,ஆகிய தேதிகளில்(வியாழன்,வெள்ளி,சனி) "அமைதி வழியில் உலகை ஒருங்கிணைப்பது"என்ற கருப்பொருளில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு, துபை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.12 ந் தேதி வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்சிகள் அலுவல் ரீதியாக தொடக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக  வெள்ளிக்கிழமை, ஜுமுஆ தொழுகை இந்த மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்  குவைத்தை சேர்ந்த பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷைக் மிஷ்அரி அல் அபாஸி குத்பா உரை நிகழ்த்தி ஜுமுஆ தொழுகையை நடத்தினார்.
புகழ் பெற்ற இஸ்லாமிய வல்லுனர்களான டாக்டர் ஜாகிர் நாயக்,யூசுஃப் எஸ்டிஸ்,அப்துல் ரஹீம் கிரீன்,ஹுசைன் யீ,மற்றும் சயீத் ராகீஷ்(சோமாலியா),டாக்டர் தவ்பீக் சவுத்ரி (ஆஸ்திரேலியா), முஹம்மது சலாஹ்(அமெரிக்கா),அப்துல் பாரி யஹ்யா (அமெரிக்கா),முஹம்மது அல் ஷரீஃப் (கனடா),அஹமது ஹாமிது (ஹைதராபாத்,இந்தியா),மற்றும் மாயன் குட்டி மாதிர் (கேரளா அரசு வழக்கறிஞர்) ஆகியோர் இஸ்லாம் குறித்த பல்வேறு தலைப்புகளில் மாநாட்டு அரங்கில் உரையாற்றினர்.ஒவ்வொரு அறிஞர்களின் உரைக்கு பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அறிஞர்கள் பதிலளித்தனர்.
மாநாட்டின் இரண்டாவது நாளிலும், மற்றும் இறுதி நாளின் இறுதி நிகழ்ச்சியாக அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி விரிவாக நடைபெற்றது.முஸ்லிமகாத சகோதர சகோதரிகள் இஸ்லாம் குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இந்நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர்.அவர்களில் பலர் அல்லாஹ்வின் கிருபையால் அதே நேரத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.இந்த மாநாட்டில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி மாத்திரமே நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இம்மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக,இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாம் எவ்வாறு முன்னோடியாக விளங்குகிறது என்பதை உபகரணங்களுடன் விளக்கி நடைபெற்ற  இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி,இஸ்லாத்தின் சிறப்புக்களை முஸ்லிமாகாத சகோதரர்களுக்கு இலகுவாக விளங்க செய்ததில் முக்கிய பங்காற்றியது.இதல்லாமல் ஹலால் பொருள்களை கொண்ட சந்தை,புத்தகம்,குறுந்தகடுகள் விற்பனை மகளிர்,சிறுவர் அரங்கம் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் இடம்பெற்றிருந்தது.
பல்வேறு சர்வதேச பொருளாதார பிரகடனங்களுக்கும்,கண்காட்சிகளுக்கும் பெயர்போன துபை உலக வர்த்தக மையம்,இந்த மாநாடு நடைபெற்ற மூன்று நாள்களில் முழுக்க முழுக்க இஸ்லாமிய மயமாக மாறிப்போனது.சுருங்க சொன்னால்,நவீனத்தை
இஸ்லாமிய மயமாக்கி காட்டியதில் இம்மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்வின் கிருபையால் சாதனை புரிந்துள்ளனர்.
 
-களத்தொகுப்பு கொள்ளுமேடு ரிஃபாயி


புதன், 28 மார்ச், 2012

இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் "திருக்குர்ஆனின் மகத்துவத்தினை விளக்கும் கண்காட்சி"

இஸ்லாமிய ஒளியினை உலகெங்கிலும் பரப்பிடும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் எனும் கலா சாலையினை கொண்டிருக்கும் லால்பேட்டை நகரில் இஸ்லாத்தினை நவீன உத்திகளுடன் பரப்பிட நடைபெறும் இம்மகத்தான முயற்சி வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.கொள்ளுமேடு ரிபாயி
அல் அய்ன்.

வெள்ளி, 23 மார்ச், 2012

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச்
சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக
அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்

இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய ''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக ''காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறது. அவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்'' என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ''இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்'' என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது ''கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான்
இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம்
பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும்
ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ''முடியாது'' என்று கூறினார். முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறிய அவர், தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ''ஏன்?''

அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப்
பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான
ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.

''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்

அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே
ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய
இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த
கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்


http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=1734%3A2010-03-26-02-20-58&catid=88%3A2010-05-22-12-46-16&Itemid=825

http://www.youtube.com/watch?v=qSM1hu5gtus&feature=related

நன்றி:சகோதரர் அக்பர் அலி.
 http://www.facebook.com/profile.php?id=100000998285851 

வெள்ளி, 2 மார்ச், 2012

தவ்ஹீது vs சுன்னத் வல் ஜமாஅத்..?

தவ்ஹீது (ஏகத்துவம்)

தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்

'அஹ்லுஸ் ஸுன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!

இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்,

''அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.'' ((33:36))

திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

இறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்

அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...

கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.

பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!

அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்

அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.

மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்

o எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ,

o எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்?

ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில் செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?

இவைதான்

இப்படித்தான்

தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்...

ஆனால்,

"தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...!"

ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்

அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.

ஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.

1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.

2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

நம்பக தன்மையில் குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!

மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது. இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.

மேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.

உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு!

அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???

நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.

இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!

நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்! அல்லாஹ் நன்கு அறிந்தவன்

நன்றி:அக்பர் அலி 
http://www.facebook.com/profile.php?id=100000998285851

சனி, 25 பிப்ரவரி, 2012

அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் மாதாந்திர மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் மாதாந்திர மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இன்று (24-02-2012 வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு பின்னர்,அல் அய்ன் நகரின் தொழிலாளர் முகாம்கள் நிறைந்துள்ள பகுதியான மஜியாதில் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கழக ஊழியர் சகோதரர் ஆத்தூர் ஷேக் சபி தலைமை தாங்கினார்.இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் நாகூர் அபுதர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்.
அமீரக தமுமுக துணை செயலாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர் "பிரார்த்தனை" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாசீன் நூருல்லாஹ் அவர்கள் தமுமுக வின் இன்றைய நிலை குறித்து உரையாற்றினார்.
மஜியாத் கிளின்கோ கிளை தமுமுக தலைவர் சகோதரர் அம்பகரத்தூர் ஹபீப் ரஹ்மான் நன்றி கூறினார்.பின்னர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.மஜியாத்உள்ளிட்ட அல் அய்ன் நகரின் பல்வேறு பகுதியிலிருக்கும் ஏராளமான தமிழக சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இஷா தொழுகைக்கு பின் வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.மஜியாத் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இனியொரு விதி செய்வோம்....

இன்றைய காலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் யுகம் என்று நம்பப்படுகிறது.கணினி,இணையதளத்தின் பயன்பாடு மிக உச்சத்தில் இருப்பதன் மூலம் உலகின் ஒரு மூலையில் நடக்கும் ஒரு சம்பவத்தை வீடியோ,புகைப்படம் வடிவில் செய்தியாக,அடுத்த நொடியிலேயே உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லும் அளவுக்கு ஊடகங்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைத்துள்ளது.
அனால் இதன் மறுபக்கம் கருப்பு நிறம் கொண்டவையாக அமைந்திருக்கிறது.கல்வி,வணிகம்,சமூக மேம்பாட்டு விசயங்களுக்காக இவை பயன்படுத்தப் படுவதை விட ஆபாசம்,வன்முறை போன்றவற்றை ஒருங்கிணைக்கும் 'குற்றங்களின் ஒட்டுமொத முனையமாக'செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது.இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா.இந்தியாவைப் பொறுத்த வரை சினிமா என்பது பொழுது போக்கு ஊடகம் என்ற நிலையை தாண்டி,வாழ்வில் அணைத்து நிலையிலும் ஊடுருவி மக்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிறது.
இந்த சினிமாக் கவர்ச்சி தான் இந்த தேசத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது."கோட்டைக்கு செல்லும் வழி கோடம்பாக்கம்" என்று சொல்லப்படும் அளவுக்கு பிரம்மாண்ட சக்தியாக வளர்ச்சியடைந்திருக்கும் அளவுக்கு,சமூகத்தில் நல்ல மாற்றங்களை இந்த சினிமா துறை உருவாக்கவில்லை.
இன்றைய இளைய தலைமுறை மத்தியில் நாளுக்கு நாள் நற்பண்புகள் குறைந்து வருகிறது.பெற்றோர்களை மதிக்காமை ஆசிரியர்களை அவமதிப்பது என்று தீய பண்புகளின் உறைவிடமாக நமது மாணவ சமூகம் மாறி வருவதை தான் சில நாள்களுக்கு முன்பு சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் தனது ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமும்,இளம் பெண்ணை கல்லூரி மாணவர்கள் நால்வர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த சம்பவமும் உணர்த்துகிறது.
மாணவ சமூகத்திடம் இத்தகைய கலாசார சீரழிவுகளை உருவாக்கி கொண்டிருக்கும் இந்த மாதிரியான கழிசடை சினிமாக்களை அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல்,அவற்றுக்கு வரிவிலக்கும் அளித்து வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சமூகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரவேண்டிய பொறுப்பு அரசுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.சினிமாக்காரர்களால் தீர்மானிக்கப் படுகின்ற நமது அரசாங்கங்களிடமிருந்து இத்தகைய ஆரோக்கியமான நடவடிக்கையை நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.தேர்தல் வரும் காலங்களில் கவர்சிகரமான வாக்குறுதிகளையும்,போலியான முழக்கங்களை நம்பியும்,காந்தி படம் போட்ட நோட்டுக்ககவும்,டாஸ்மாக் பாட்டலுக்காகவும் எமது பொன்னான வாக்குகளை வீணடிக்காமல்,நல்ல மனிதர்களுக்கு வாக்களித்து சமூக மாற்றத்திற்கு வித்திடும் பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை இங்கே நாம் மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆசை!


மஸ்ஜிதுந் நபவீயில் கலீபா உமர் (ரலி)
ஒரு முறை அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீயில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது தம் தோழர்களில் சிலரை நோக்கி ‘உங்கள் ஆசை என்ன?’ என்று கேட்டார்கள்.

ஒருவர் : உஹது மலை அளவு தங்கம் கிடைத்தால் நான் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்குவேன் என்றார்.

இரண்டாமவர்: மதீனா நகரம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு ஒட்டகைகள் கிடைத்தால் அவற்றை அறுத்து உணவு வழங்குவேன் என்றார்.

மூன்றாமவர்: மதீனா நகரம் முழுவதும் எனக்கு அடிமைகள் இருந்து அவர்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடி விடுதலை வழங்குவேன் என்றார்.
இவ்வாறு அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளை வெளியிட்டார்கள். கடைசியாக கலீபாவின் முறை வந்தது.

அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் ஆசை என்னவென்று கூறுங்களேன் என இருந்தவர்கள் கேட்டார்கள். அதற்கு கலீபா அவர்கள்.. எனது ஆசை:

‘இந்த மாண்பார் பள்ளிவாசல் முழுவதும் அபூபக்கர்(ரலி) அவர்கள் போன்ற உத்தமர்களால் நிறைந்து வழிய வேண்டும்.’ என்றார்கள்.

அவர்கள் ஆசைப்பட்டவாறே, உண்மையான இறைபக்தர்களால் வழிந்தோடக் கண்டார்கள். அவர்களே தங்களின் ஈமானிய வலிமையால் புதிய வரலாற்றைப் படைத்தவர்கள்.

அந்த உத்தமர்களைக் குறித்து சூரத்துஸ்ஸுமரில் வரும் வசனம் நம் சிந்தனைக்குரியதாகும்.
நல்லடியார்களுக்கு நற்செய்தி
(நபியே!) நீர் நம்முடைய அந்த நல்லடியார்களுக்கு நற்செய்தியைக் கூறுவீராக.:

அவர்கள் (நம்முடைய) வசனங்களை செவியுற்று, அவற்றிலுள்ள நல்லவைகளைப் பின்பற்றியும் வந்தனர். நிச்சயமாக அல்லாஹ் நேரான பாதையில் செலுத்தியது இத்தகையோரைத்தான். இவர்கள் தாம் (உண்மையில்) அறிவுடையோருமாவார்கள். அல்குர்ஆன்: (39:18)

சரி இப்பொழுது உங்களின் ஆசையை சொல்லுகள் !!!


By Dr. Ahmad Baqavi Ph.D.
Reference By: http://albaqavi.com/
Thanks: http://www.facebook.com/CuddaloreMuslimFriends

திங்கள், 6 பிப்ரவரி, 2012

மதச்சார்பின்மை (SECULARISM)

இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் கொள்கைப் பிரச்சினைகளுள் மதச்சார்பற்ற சிந்தனையும் ஒன்றாக இன்று தாக்கம் செலுத்துகின்றது.இஸ்லாமிய இளைஞர்களை கொள்கையிலிருந்து கடத்திச் சென்று,கொள்கையற்ற கோமாளிகளாக மாற்றுகின்ற சதினாஷ நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் கிராமங்களிலும் இடம்பெறும் இவ்வேளையில் - அது பற்றி நாம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

அறிவியலும் தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியுற்று மனித வாழ்வில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.அவை பகுத்தறிவுக்குக் சிந்தனைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

அதனால்,மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து பகுத்தறிவினைநாடி எழுந்துள்ள அறிவியல்,விஞ்ஞான தொழில்நுட்ப யுகம் தோன்றி ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் ஏற்பட்டு விட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுலதை இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது. இதன் விளைவாக மதச்சார்பின்மை (SECULARISM) என்ற சிந்தந்ததை ஆதிகளவில் பிரச்சாரப்படுத்தி,இளைஞர்களை அதிகளவில் கவர்வதொடு,இறை நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள மதங்களை கொச்சைபடுத்துவதும் ஒழுக்கப் பெறுமானங்கள்,வணக்க வழிபாடுகள்,எள்ளி நகையாக்கப்பட்டு,உயர் ஒழுக்க விழிமியங்கள் மலினப்படுத்தப்படுகின்ர காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

ஆனால் அறிவுபூர்வமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டு,காலத்தை வென்று,வளர்ச்சி அடைந்து வரும் இஸ்லாத்தையும்,சிறுமைத்தனமான சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போன சிலர் பத்தோடு பதினொன்றாக விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.நமது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் நஞ்சை விதைக்கின்றனர்.எனவே நாம் இந்த சதிவலையிலிருந்து மீள இது பற்றி தெளிவு அவசியமாகின்றது.
இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக வைக்கப்படுகிறது.எனினும் பல வளர்ச்சி கண்டதாக இருமாந்திருக்கும் நாடுகளில் கூட இந்த சிந்தனை நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபமான இந்தக்காலப்பிரிவில்அந்நாடுகளில் ஒரு கணிஷமனவர்களும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இளைஞர்கள் சிலரும் இச்சிந்தனைக்கு உட்பட்டு இதை பிரபலப்படுத்தியும் முக்கியம் கொடுத்துப் பேசியும் வருகின்றனர்.

இன்று ஷிர்க்,பிதுஅத்,மூடநம்பிக்கை போன்றவைகளைவிட மதச்சார்பின்மைச் சிந்தனை முஸ்லிம் வீடுகளில் கிராமங்களில் பாடசாலைகளில் பல்கலைக்களகங்களில் ஆகிய அனைத்திலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனவே மதச்சார்பின்மை கருத்தியலின் தோற்றம்,காரணம்,அதுபற்றி சமூக உளவியல் சார்ந்தோரின் கருத்து போன்றவை கீழ்வரும் பந்திகளில் ஆராயப்படுகிறது.

அன்று படாடோபத்தில் திளைத்திருந்த கிருஸ்தவ உலகம் ''பூமி சுழல்கிறது'' என்பது பைபிளுக்கு விரோதமானது.பூமி தட்டைப்போல் விரிக்கப்பட்டிருப்பதாக பைபிள் கூறுகிறது.''ஏசு நாதர் பிறந்த பூமி சூரியனை சுற்றுவதா? இல்லவே இல்லை.அப்படி சொல்பவர்களின் நாக்கை வெட்டி விடுவோம்'' என விஞ்ஞானிகளை மிரட்டி,சிறையில் அடைத்து,எரித்து,தூக்கில் இட்டு அவர்களின் குரலை ஒடுக்கியது அக்கால திருச்சபை.

இப்படியான காலப்பகுதியில் தான் தொலைநோக்கியின் முன்னோடியான கலிலியோ கலிலி (1564-1642) ''பூமி சூரியனை சுற்றுகிறது'' என்றார்.இது எங்கள் வேதத்துக்கு முரணானதென்று 69 வயது தளர்ந்த கலிலியோவை படாதுபாடுபடுத்தினர்.இவ்வாறன கொடூர புத்தி கொண்ட கொடியவர்கள் இஸ்லாத்தை நாகூசாமல் விமர்சனம் செய்யவும் துணிந்துள்ளனர் என்பதே ஆச்சரியமிக்க விசயமாக உள்ளது. 
15,16,17 ஆம் நூற்றாண்டுளில் அறிவியலை அடக்கி தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பா அறிவியல்,பண்பாடு,நாகரீகத் துறைகளில் பின்னடைந்து இருட்டில் மூழ்கியது.

ஐரோப்பா இத்தகைய இருளில் மூழ்கியிருந்த வேலையில் தான் முஸ்லிம்கள் ஸ்பெயினிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.ஐரோப்பிய மன்னர்கள் கையெழுத்துப் பழகும் போது நம் முஸ்லிம் விஞ்ஞானிகள் குர்துபா (Cordoba) பல்கலைக்கழகத்தில் உலகத்தை உருண்டை வடிவில் வைத்து பாடம் நடத்திகொண்டிருண்டார்கள்.அன்று அவர்கள் ஐரோப்பியாவில் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

''கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதிமூன்றாம் வரை இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களே உலகில் கலாச்சாரத்திலும்,நாகரீகத்திலும் ஒளியை ஏற்றி நின்றனர்.''என பேராசிரியர் P.K.Hitti குறிப்பிடுகிறார்.

''மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவை பெற்றுக்கொள்ள எண்ணியபோதும் புராதன சிந்தனையோடு தன் உறவை புதுப்பித்துக்கொள்ள எண்ணிய போதும் அது முதலில் அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது.''பேராசிரியர் GOERGE SARTON - HISTORY OF SCIENCE.

இதுபற்றி தெளிவட்ட்றோரும் ஆழமான அறிவற்றவர்களும் புனிதமான இஸ்லாத்தை விரும்பாதொரும் முஸ்லிம் உம்மத்துக்குள் இருந்து கொண்டே மதச்சார்பின்மையை முன்வைக்கின்றமை வேதனை மிகு விசயமாகும்

காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய கலாச்சார்ப் பன்பாடுகள் முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் விதைக்கப்பட்டன.முஸ்லிம்களில் ஒரு சாரார் அபிவிருத்திக்கு ஒரே வலி மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என நினைக்கலாயினர்.ஆனால் இவர்கள் பின்பட்ட்ரும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கணிசமானோர் இப்போக்கை மறுக்கின்றனர்.அங்குள்ள பல உளவியலாளர்கள் ''மனித குலத்தின் மாண்புக்கு மதமே சிறந்த வழி'' என்று தற்போது இஸ்லாத்துக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.
நாம் மேலே வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து எடுத்துக் காட்டிய ஐரோப்பிய உலகினதும் இஸ்லாமிய உலகினதும் நிலை,மதச்சார்பின்மை தோன்றுவதற்கு காரணம் ஐரோப்பாவில் நடந்த சில துயரமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டோம்.உலகின் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மதம் அறிவியலுக்கு தடையாக ஐரோப்பா தவிர வேறு எங்கும் இடம்பெறவில்லை.ஐரோப்பாவில் நிகழ்ந்த இந்த வரலாறு இன்று உலகின் பல பாகத்திற்கும் பரப்பப்பட்டு,எமது முஸ்லிம் சமூகத்திலும் பரவி நம் முஸ்லிம் புத்திஜீவிகளிடத்திலும் திணிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையைஇருட்டடிப்புச்செய்கிறது. 

''உலகில் உள்ள அனைத்தும் பகுத்தறிவுக்குட்பட்டதே! இயற்கையின்யதார்த்தத்தில் மனித வாழ்வை விளக்கவும் முடியும் என்ற விசயத்தில்மனிதன் உறுதியாக நம்பிக்கை கொள்கிறான்.இதனடிப்படையில் மறுமைவாழ்வு என்று ஒன்று இல்லை என்பதோடு,மறு உலக வாழ்விலிருந்தோஅல்லது இறைவன் மீதான நம்பிக்கையிளிருந்தோ பெறப்பட்ட எல்லாகருத்தியலையும் தவிர்த்தல் என்ற வகையில் உலக வாழ்வின் மனிதஇனத்தின் சுயனலனைக்குறித்த வகையில் மட்டுமே ஒழுக்கம் அடிப்படையாகஅமையவேண்டும்''என்பதே மதச்சார்பற்ற சிந்தனையின் கருப்பொருளாகும்.
உண்மையில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒரு மதத்தையோஇனத்தையோ பிரநிதிதுவப்படுத்துவதில்லை என்ற நிலை மட்டுமல்ல.நாம்முன்னர் குறிப்பிட்டது போல் ஆன்மா,கடவுள்,மறுமை வாழ்வு அனைத்தையும்மறுத்துரைக்கும் சடவாத சிந்தனைப் போக்கையே அது குறித்து நிற்கிறது இதுஉலக வாழ்வில் எல்லையட்ட்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும்தோற்றுவித்துள்ளது.இதனால் மேற்கத்தைய உலகம் மனஅமைதியின்மையால் வாடுகிறது.அங்கே பெரும் எண்ணிக்கையானோர்நரம்புத்தளர்ச்சிக்கும் மனநோய்க்கும் ஆளாகியுள்ளனர்.மதச்சார்பின்மை என்றமுட்டாள் கோட்பாடு இன்று மனித வாழ்வுக்கு பொருளையும் கருத்தையும்குறிக்கோளையும் இலட்ச்சியத்தையும் வழங்க முடியாமல்தோற்றுவிட்டது.எனவே வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மேதகுநாட்டவர்கள் ஆறுதலையும் நிம்மதியையும் தேடி இஸ்லாமிய மடியை நாடிஅடைக்கலம் புகும்போது நம்மவர்கள் அந்தக் குப்பையில் போய் விழுவதும்வீழ்ந்திருப்பதும் தான் ஆச்சரியமாக உள்ளது. 

கிருஸ்தவ பாதிரிமார்களின் கடும் போக்கு நிலை காரணமாகவே மனிதன் மதத்தை வெறுத்தான்.இதனால் அவனின் இறை நம்பிக்கையும் விசுவாசமும் ஆட்டம் கண்டது.கிருஸ்தவ மதப்பிடியிளிருந்து விடுப்படும்பொருட்டு மனிதன் அனைத்து மதகொள்கையையும் தூக்கி எறிந்துவிட்டு தனிப்பாதையில்(மதச்சார்பின்மை) தனது பயணத்தை தொடர்ந்தான்.இந்தப்பாதையில் அவன் மகத்தான வெற்றி கண்டான்.எனினும்ஆத்மீக ஒளியற்ற இவ்வளர்ச்சியினால் அவன் அவனது வாழ்வை இருட்டிலே கழிக்கிறான்.அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்ச்சிக்கும் எதிராககிருஸ்தவ திருச்சபையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார்களும் நடந்துகொண்டதால் மதத்துக் எதிரான சிந்தனைப்போக்கு ஆரம்பமானது.
கிருஸ்தவ போதனை போன்று மனித வாழ்விற்குரிய தெளிவானவரையறுத்த பகுத்தறிவுபூர்வமான அறிவியலை புறக்கணிக்காத சட்டங்களும் கொள்கைகளும் பல மதங்களில் கனப்படாமையே மதச்சார்பின்மை வளர காரணமாக அமைந்தது.இச்சிந்தனையின் கருத்தாடலில் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தையும் அதே மனப்பதிவோடு மேலோட்டமாக விமர்சிக்கின்றனர்.இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் எந்த உடுருவலும் இடம்பெற முடியாது.அது தெய்வ வழிகாட்டல்.அதன் பாதுகாப்பு இறைவன் அவன் வசம் வைத்துள்ளான்.இங்கு மனித கையாடலோ நினைத்தவுடன் பெரும்பான்மை பலத்துடன் மாற்றுவதற்கோ இடமில்லை.எனினும் அது சில விசயங்களில் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையுடன் பகுத்தரிவுபூர்வமாக காணப்படுகிறது. 

மனிதன் வெறும் சடப்பொருலன்று,அவனின் புரத்தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டிருப்பது போல் அவனது ஆத்மாவின் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

இதனைப் புறக்கணித்துவிட்டு எழுந்த சிந்தனையால் இன்று நிலைத்துநிற்க முடியாது போய்விட்டது.
அடிப்படையில் மனிதுள்ளத்தில் இறைவன் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.இறைவனைப்பற்றிய ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்று வரலாற்றில் காணவே முடியாது.இதற்கு புறம்பான(மதச்சார்பின்மை) கொள்கையுடையவர்கள் தற்போது இதற்கே மீண்டுள்ளனர்.எங்கு இந்த மதச்சார்பின்மை துளிர்விட்டு வளர்சியுற்றதோ அங்கேயே அது சாத்தியப்படாது என்று புரிந்து கொண்டு இன,மத,கலாச்சார பாரம்பரியங்களுக்கு மெல்ல மெல்ல மனித இனம் நகர்கிறது.எனவே இந்த மதச்சார்பின்மை என்ற எண்ணக்கரு தோல்வி கண்டு வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

இக்கருத்தியல் உலகில் சமாதானம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த தவறிவிட்டது.மேலை நாடுகளின் மேலாதிக்க உணர்வு,கருப்பு வெள்ளையன் என்ற நிறவெறி,பிறரை ஒழித்துக்கட்டும் வக்கிர புத்தி பலமற்றவனின் மீது அதிகார வெறியாட்டம் போன்றன மிகக்கொடுரமான நோய்களாகும்.
உலகில் சமாதனம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த ஒரு வெற்றிகரமான வழி உள்ளது அது தான் இஸ்லாம்.பதினான்கு நூற்றாண்டுகள் தாண்டியும் அது எதுவித மாற்றமும் இன்றி அப்படியே உயிரோட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.அந்த நெறியின் பால் முழு மனித சமூகமும் மீள வேண்டும்.அப்போதுதான் உண்மையான சமாதனம் சகவாழ்வு சமத்துவம் ஏற்படும்.

இஸ்லாம் காட்டிய உண்மைப்பாதையில் மனித இனம் செழித்து வளர்ந்து கிழக்கேயும் மேற்கையும் ஓர் உயிர்துடிப்புமிக்க ஆன்மீகநெறி அறிவியக்கம் செயல்படதுவங்கியுள்ளது.தீய சக்திகாளாலும் வக்கிர உணர்வாலும் கட்டவிழ்த்துவிட்ட பொய்மைகலாலும் அதன் முன்னேற்றத்தை தடுத்துநிறுத்த முடியாது.இனியும் முடியாது.

அதே வேளை,இஸ்லாமிய சிந்தனையில் கொள்கையில் வார்த்தேடுக்கப்பட்டவர்கள்,ஷிர்க்கில் மூழ்கி தர்காக்களில் தஞ்சமடைவதால்,இதுதான் இஸ்லாமிய பாரம்பரியம் என்று நினைகிறார்கள்.சில முஸ்லிம்களின் நடவடிக்கை இஸ்லாம் ஆகிவிடாது.இஸ்லாம் என்பது குரானும் சுன்னாவுமாகும். இதுவரை அதில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை அதற்கான அவசியமும் இல்லை.இஸ்லாமே ஈருலக வெற்றிக்கும் விமொசனத்திகும் ஒரே வழி.வேறு எந்த நம்பிக்கைகளுக்கும் மனிதனை இருளிலிருந்து விடுவிக்க முடியாது.

நன்றி: அபுல் அமீன். பேஸ் புக் வழியாக.....