அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் மாதாந்திர மார்க்க விளக்க
பொதுக்கூட்டம் இன்று (24-02-2012 வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு
பின்னர்,அல் அய்ன் நகரின் தொழிலாளர் முகாம்கள் நிறைந்துள்ள பகுதியான
மஜியாதில் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கழக
ஊழியர் சகோதரர் ஆத்தூர் ஷேக் சபி தலைமை தாங்கினார்.இஸ்லாமிய அழைப்பாளர்
சகோதரர் நாகூர் அபுதர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்.
அமீரக தமுமுக துணை செயலாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர் "பிரார்த்தனை" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாசீன் நூருல்லாஹ் அவர்கள் தமுமுக வின் இன்றைய நிலை குறித்து உரையாற்றினார்.
மஜியாத் கிளின்கோ கிளை தமுமுக தலைவர் சகோதரர் அம்பகரத்தூர் ஹபீப் ரஹ்மான் நன்றி கூறினார்.பின்னர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.மஜியாத்உள்ளிட்ட அல் அய்ன் நகரின் பல்வேறு பகுதியிலிருக்கும் ஏராளமான தமிழக சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இஷா தொழுகைக்கு பின் வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.மஜியாத் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.