செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆசை!


மஸ்ஜிதுந் நபவீயில் கலீபா உமர் (ரலி)
ஒரு முறை அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீயில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது தம் தோழர்களில் சிலரை நோக்கி ‘உங்கள் ஆசை என்ன?’ என்று கேட்டார்கள்.

ஒருவர் : உஹது மலை அளவு தங்கம் கிடைத்தால் நான் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்குவேன் என்றார்.

இரண்டாமவர்: மதீனா நகரம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு ஒட்டகைகள் கிடைத்தால் அவற்றை அறுத்து உணவு வழங்குவேன் என்றார்.

மூன்றாமவர்: மதீனா நகரம் முழுவதும் எனக்கு அடிமைகள் இருந்து அவர்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடி விடுதலை வழங்குவேன் என்றார்.
இவ்வாறு அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளை வெளியிட்டார்கள். கடைசியாக கலீபாவின் முறை வந்தது.

அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் ஆசை என்னவென்று கூறுங்களேன் என இருந்தவர்கள் கேட்டார்கள். அதற்கு கலீபா அவர்கள்.. எனது ஆசை:

‘இந்த மாண்பார் பள்ளிவாசல் முழுவதும் அபூபக்கர்(ரலி) அவர்கள் போன்ற உத்தமர்களால் நிறைந்து வழிய வேண்டும்.’ என்றார்கள்.

அவர்கள் ஆசைப்பட்டவாறே, உண்மையான இறைபக்தர்களால் வழிந்தோடக் கண்டார்கள். அவர்களே தங்களின் ஈமானிய வலிமையால் புதிய வரலாற்றைப் படைத்தவர்கள்.

அந்த உத்தமர்களைக் குறித்து சூரத்துஸ்ஸுமரில் வரும் வசனம் நம் சிந்தனைக்குரியதாகும்.
நல்லடியார்களுக்கு நற்செய்தி
(நபியே!) நீர் நம்முடைய அந்த நல்லடியார்களுக்கு நற்செய்தியைக் கூறுவீராக.:

அவர்கள் (நம்முடைய) வசனங்களை செவியுற்று, அவற்றிலுள்ள நல்லவைகளைப் பின்பற்றியும் வந்தனர். நிச்சயமாக அல்லாஹ் நேரான பாதையில் செலுத்தியது இத்தகையோரைத்தான். இவர்கள் தாம் (உண்மையில்) அறிவுடையோருமாவார்கள். அல்குர்ஆன்: (39:18)

சரி இப்பொழுது உங்களின் ஆசையை சொல்லுகள் !!!


By Dr. Ahmad Baqavi Ph.D.
Reference By: http://albaqavi.com/
Thanks: http://www.facebook.com/CuddaloreMuslimFriends