சனி, 28 ஆகஸ்ட், 2010

அல்-அய்னில் எழுச்சியுடன் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி...


அருள் வளம் நிறைந்த ரமளான் மாதத்தில் இதயங்களை இணைக்கும் நிகழ்வுகள் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன.குறிப்பாக இஃப்தார் நிகழ்ச்சிகள் மூலமாக சமூக நல்லிணக்கமும்,மகிழ்சியும் இதயங்களில் விதைக்கப்படுகின்றன என்றால்.. இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

மனிதநேயமும்,சமூகநீதியும் உலகினில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டினை செயல் வடிவம் கொடுத்திட உழகை;கும் தமுமுக ஊழியர்கள் ரமளானில் செய்து வரும் எண்ணற்ற நல்லறங்களில்.. மகுடமாய் விளங்கிக் கொண்டிருக்கின்றன இந்த இஃப்தார் நிகழ்வுகள்.

அல்-அய்ன் மண்டலம் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த வியாழக்கிழமை 17 வது நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அல்-அய்ன் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிரபல உணவகம் ஒன்றின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இதைனையொட்டி மார்க்க சமுதாய விழிப்புணர்வு பிரச்சார உரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கடும் கோடை வெப்பத்தையும் பொறுட்படுத்தாது நோன்பாளிகள் 4.30 மணி தொடங்கி நிகழ்ச்சி அரங்கத்திற்கு வரத்தொடங்கினர்.


சரியாக 5 மணிக்கு மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.மௌலவி அப்துல் காதர் ஜெய்லானி கிராஅத் ஓதினார். மஸியாத் கிளின்கோ பகுதி கிளையின் ஆலோசகர் மேலப்பாளையம் மௌலவி பஷீர் ஆலிம் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார். மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி வரவேற்புரையாற்றினார்.

அமீரக முமுக செயலாளர் யாஸீன் நூருல்லாஹ்,அமீரக முமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர்,மண்டல துணைத் தலைவர் நாச்சிகுளம் அசாலி அஹமது, மண்டல செயலாளர் மன்ணை ஹாஜா மைதீன்,மண்டல பொருளாளர் பூதமங்களம் ஜாஹிர் ஹுஸைன்,மண்டல மூத்த நிர்வாகி தோப்புத்துறை சர்புதீன்,நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கீழை முஹம்மது இபுனு,ஷேக் தாவூத்,அப்துல் முத்தலிப், மற்றும் மஸியாத் கிளின்கோ பகுதி கிளை நிர்வாகிகள்,அல்-ஜிமி பகுதி நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.


தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தலைமை கழக பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தஃபா ரமளானில் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.இறுதியாக உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தமுமுக தொடங்குவதற்கு முன்னர் தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் சந்தித்த இன்னல்களையும் அது தொடங்கப்பட்டதற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எவ்வாறு மரியாதையைப் பெற்றுத் தந்தது என்பதையும் தமிழக அரசியலில் மமக வின் எழுச்சி குறித்தும் தனக்கே உரித்தான பாணியில் விளக்கினார்.

கூட்டம் அளவுக்கதிகமாக கூடியதால் ஏராளமான நோன்பாளிகள் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே உரைகளை செவிமடுத்தனர்.

இஃப்தார் நேரம் தொடங்தியவுடன் நோன்பாளிகளுக்கு பழங்களும் பழச்சாறும் வழங்கப்பட்டன. பின்னர் நோன்பாளிகள் அணைவரும் உடனடியாக அருகில் உள்ள பள்ளியில் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அந்த உணவகத்திலேயே அவர்களுக்கு உணவு விருந்து பறிமாறப்பட்டது.

மண்டல துணை செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,இணை செயலாளர்கள் களப்பால் சையது யூசுஃப்,விழுப்புரம் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சகோதரர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போது வாகன வசதி செய்து கொடுத்தால் மாத்திரமே பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலை மாறி பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாத நிலையிலும் பெரிய அளவில் மக்கள் திரண்டிருக்கின்றனர் என்றால் இது சமுதாயம் தமுமுக வின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பைக் காட்டுவதாக அமைந்திருப்பதாக மூத்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

கலந்தாய்வுக் கூட்டம்.


அல்-அய்ன் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாயகத்திலிருந்து
வருகை தந்திருக்கும் தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்
நடைபெற்றது.

அமீரக முமுக செயலாளர் யாசின் நூருலாஹ் தலைமை தாங்கினார். தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அமீரக முமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக துணை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி அல்- அய்ன் மண்டல முமுகவின் கடந்த ரமலான் முதல் இந்த ரமலான் வரை   நடந்த
பணிகள்  குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள்   வழங்கினார். பின்னர் சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..!

புதன், 25 ஆகஸ்ட், 2010

இளைஞரை டயர் டியுப் கொண்டு அடித்து சித்திரவதை..! காவல்துறை அராஜகம்...

டெல்லி. தனது சம்பளத்தை கேட்ட தொழிலாளியை அவரது முதலாளியின் ஏவலாளியாக மாறி அத்தொழிலாளியை அடித்து சித்திரவதை செய்த
காவல்துறைiயினரின் மிருகத் தனமான சம்பவமொன்று நமது தேசத்தில் இன்று பதிவாகியிருக்கிறது.

இச்சம்பவம் நடந்தது நமது தேசத்தின் தலைநகரமான டெல்லி மாநகரத்தில்...! தெற்கு டெல்லியில் கோவிந்தபுரி என்ற பகுதியில் கௌரிசங்கர்
என்பவருக்கு சொந்தமான பட்டன் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார் சுபாஷ் என்ற தொழிலாளி.சில மாதங்களுக்கு முன் அந்த
வேலையை விட்டு ராஜினாமா செய்து சென்ற அவர் கடந்த சனிக்கிழமையன்று தனது பழைய முதலாளியான கௌரிசங்கரிடம் வந்து தனது சேர
வேண்டிய சம்பள பாக்கியான ரூ 40 ஆயிரத்தை தருமாறு கேட்டிருக்கிறார்.

பணத்தை தர மனமில்லாத கௌரிசங்கர் சுபாஷை மிரட்டும் தொனியில் பேசியதுடன் தனக்கு பழக்கமான போலிஸ்காரர்களிடம் நான் இவனது கடையில்
திருட்டு பொருட்களைப் பார்த்தேன் என ஒரு பொய்யை அவிழ்த்து விட போலிஸார் 23 வயதான சுபாஷை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று
எந்த வித கேள்வியையும் கேட்காமல் தங்களுக்கே உரித்தான பாணியில் அவரை கதறக்கதற டயர் டியுப் கொண்டும் லத்தியைக் கொண்டும் அடித்திருக்கின்றனர் ;.

சட்ட ரீதியிலான உதவிகளைப் பெறுவதற்கு தடை செய்யும் வகையில் அலரது எசல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு வெளித்தொடர்புகளைத் துண்டித்துள்ளனர்.
விஷயத்தை கேள்விப்பட்ட இவரது உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்கட்டார்.

வல்லரசு நாடு என்ற இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தலை நகரில் இப்படி ஒரு சம்பவம்
நடைபெற்றிருப்பது கண்டணத்திற்குரியது.

நன்றி: என்டிடிவி இணையதளம்.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ராசல் கைமாவில் ஏகத்துவ எழுச்சி மாநாடு

ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் முன்னேற்றக் கழக ராசல் கைமா மண்டலம் கடந்த 20.08.2010 அன்று இரவு ராசல் கைமா - அல் நக்கில் வீணஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை நடத்தியது".

மாநாட்டு அரங்கத்தில் மாலை 9.30 மணிக்கு சகோ.அப்துல் ஹன்னான் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சிகள் ஆரம்பம்மானது. மாநாட்டிற்க்கு ராசல் கைமா மண்டல தலைவர் சகோ. குடந்தை ஜாப்பர், மண்டல துணை தலைவர் கடியாச்சேரி ஹாஜா முகைதீன், பொருளாலர் செங்கோட்டை அப்துல் ஹமிது, மண்டல ஆலோசகர் தோப்புத்துரை ஆதம்.ஆரிபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசல் கைமா மண்டல செயளாலர் பொதக்குடி ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் பின்னர் அமீரக தலைவர் சகோ. அப்துல் ஹாதி அவர்கள் மாநாட்டுக்கு தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர்களைத் தொடர்ந்து மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாகவும் பேச்சாளர்களாவும் நமது தாயகத்திலிருந்து வருகைத் தந்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் சகோ. மவுலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் "ஏகத்துவத்துவத்தின் அவசியம்" என்ற தலைப்பிலே தனது உரைவீச்சை நிகழ்த்தினார்.


அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் தனது சமுதாயத்தை தட்டுயெழுப்பும் பானியில் இந்தியா விடுதலைக்காக பங்காற்றிய வஹாபிக்களை(ஏகத்துவ வாதிகள்) பற்றிய வரலாற்றுச் சான்றுகளையும் தமிழக முஸ்லிம்களிடய ஏற்ப்பட்டுள்ள ஒற்றுமையின்மையும், பின்னர் தமிழக அரசியலில் மனிதநேய மக்கள் கட்சியின் பங்களிப்பையும் மிக விவரமாக விளக்கினார். தமிழக முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள சாதக, பாதக விடயங்களை விவரமாக தொகுத்து கூறினார். இறுதியாக தனது உரையின் முடிவில் நம்முடைய சகோதரர்கள் மற்றும் பொதுமக்களும் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார்.
அமீரக துணை தலைவர் சகோ.ஹூசைன் பாஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி துஆவுடன் இம்மாநாடு அல்லாஹ் பேரருளால் இனிதே நிறைவுற்றது.

மாநாட்டில் திரளானோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர், பின்னர் சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்கப்பட்டது.

இம்மாநாட்டுக்கு ராசல் கைமா மண்டல நிர்வாகிகள் சில இன்னல்களிடைய வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பு...!

அமெரிக்காவின் பிரபல தீம் பார்க் டிஷ்னிலேண்டில் உணவகம் ஒன்றில் பணிபுரியும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண் இமான் பவ்தால் (வயது 26 ) இவரை தமது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் ஹிஜாப் அணியக்கூடாது என்று அந்த உணவக நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.


கடந்த ஞாயிறன்று ஹிஜாபை அணிந்த நிலையில் தான் வேலைக்கு வரும் போது அதனை அகற்றுமாறு தான் பணிக்கப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரமளானை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்த அவரை அடுத்த நாள்களிலும் இவ்வாறே நிர்பந்திக்கப்டுள்ளார்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

    சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

    அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

    பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.

    பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்  2  வருடத்துக்கு  ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

    ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

    அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!

    அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

    பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

    இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

    ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

    இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!



    நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
    உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!

    உங்கள் கண்ணீர்,
    உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
    அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
(இத் தகவலை மின்னஞ்சல் வழியாக என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சோழபுரம் ஹாசிக் மைதீன் அவர்களுக்கு நன்றி.)

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

7 வயது மகளை கூவி, கூவி விற்ற கொடுமை ; போதைக்கு வழி தெரியாத தந்தையின் முடிவு


கடப்பா: குடி போதைக்கு தனது மகளையே விற்ற கொடுமை ஆந்திராவில் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சுற்றுப்பகுதியில் அதிர்ச்சியை தந்திருந்தாலும், குழந்தையை வாங்குவதற்கும் ஒருவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து, வர மறுத்த அந்த குழந்தையை தர, தர., வென இழுத்துச்சென்றவரை இப்பகுதி மக்கள் நையப்புடைத்தனர் என்பது கொஞ்சம் ஆறுதல்.


ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் குழந்தையை விற்கும் கொடுமை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. மலையோர மக்கள் தங்களுடைய வறுமையை போக்கிட இப்படி முடிவு எடுக்கிறார்களாம். நேற்று கடப்பா மாவட்டம் ராமாபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு: லக்கிரெட்டிபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (40 ). இவர் கூலித்தொழில் ( கட்டட பணி ) செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜம்மா இறந்து விட்டார். இதனையடுத்து மகள் பூதேவி (வயது 7 ) தந்தை (?) யுடன் இருந்து வந்தார்.
புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா : குடிப்பழக்கம் கொண்ட கிருஷ்ணய்யா அடிக்கடி தனது மகளை துன்புறுத்தி வந்துள்ளார், இதனையடுத்து இவரது தாத்தா , பாட்டி இல்லத்திற்கு கொண்டு பின்னர் ஒரு ஹாஸ்டலில் சேர்த்தனர். இந்நிலையில் கடந்த ஆக.5 ம் தேதி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள். இவளை டவுணில் ஒரு ஓப்பன் பகுதிக்கு கொண்டு சென்று புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா என கூவி , கூவி ஏலம் விட்டார் கிருஷ்ணய்யா. குழந்தை கண்ணீருடன் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றது.

ஆரம்ப விலை 300 என ஏலத்தை துவக்கினார். இந்த வியாபாரத்தில் இந்த வழியாக சென்ற காதர்பாட்சா என்பவர் விலைக்கு வாங்கி கொள்வதாக கூறி தந்தையிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இவருடன் செல்ல பூதேவி மறுக்கவே தர, தரவென இழுத்து சென்றார்.இதனை பார்த்த இப்பகுதி மக்கள் கூடி நின்று காதர்பாட்சாவையும், கிருஷ்ணய்யாவையும் நையப்புடைத்தனர். தொடர்ந்து போலீஸ் வரவே காதர் ஓடி விட்டார். கிருஷ்ணய்யாவை போலீசார் கைது செய்தனர். குழந்தை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தையை விற்க முடிவு செய்தேன் : போலீசாரிடம் குழந்தை விற்க வந்த காரணம் குறித்து கிருஷ்ணய்யா கூறியதாவது: நான் குடிப்பழக்கம் கொண்டவன். வழக்கமான ஒரு மதுக்கடையில் கடன் கேட்டேன் தர மறுத்து விட்டனர். இதனால் குழந்தையை விற்க முடிவு செய்தேன் என்றார் மது மயக்கத்தில். ஆந்திராவில் குழந்தைகள் விற்பனை பல சம்பவங்கள் மறைமுகமாக நடந்து வந்தாலும், இந்த பூதேவியின் விற்பனை மட்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Thanks. Dinamalar.com

புதன், 11 ஆகஸ்ட், 2010

கிறித்தவத்தின் சதி...

இறை வேதமாம் பைபிளை திருத்தங்கள் பல செய்து உண்மையை தங்களின் சுய நலத்திற்காக மறைப்பதையே தங்களது குலத்தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாடிகன் இன்றைய தினத்தில் செய்து வரும் ஒரு சதித் திட்டத்தினை நமது வாசகர் அப்துல்லாஹ் அனுப்பிய ஒரு முக்கியமான விஷயத்தை
இந்த இணைப்பின் வழி காணுமாறு உங்களை அழைக்கிறேன்.


http://bibleunmaikal.blogspot.com/2010/08/blog-post_04.html

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185) மேலே 2:185ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மூன்று முக்கிய அம்சங்களைக் கூறுகின்றது.
1. ரமழானின் சிறப்பு.
2. குர்ஆனின் சிறப்பு
3. நோன்பு எனும் மார்க்கக் கடமை, என்பனவே அவையாகும்.
ரமழானின் சிறப்பு:
ஒரு வருடம் 12 மாதங்களைக் கொண்டதாகும் இம் மாதங்களிற் சில மார்க்க ரீதியில் சிலாகித்து நோக்கப்படுகின்றது. அவற்றில் ரமழான் மாதம் பிரதானமானதாகும். இம்மாதம் தீய ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். இதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் செய்யப்படும் இபாதத்துக்கள் ஏனைய காலத்தில் செய்யப்படுவதை விடப் பன்மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தருகின்றன. பாவமன்னிப்புக்கான நீண்ட வாய்ப்பு இம்மாதத்தில் வழங்கப்படுகின்றது. தவறு செய்பவர்கள் திருந்தி தமது வாழ்க்கைத் திசையை நல்லவழி நோக்கித் திருப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் கொண்டுள்ளது. இம்மாதத்தின் சிறப்புக்களுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?
அல்குர்ஆன் அருளப்பட்டது:
ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது. அதுவே ரமழானின் அனைத்துச் சிறப்புக்களுக்கும் அடிப்படையாகும். அது அருளப்பட்ட மாதம் சிறப்பானது. அது அருளப்பட்ட நேரம் மகத்தானதாகும்.
“நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம். நிச்சயமாக (அதன்மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்” (44:03)
அந்த இரவு எவ்வளவு பாக்கியம் பெற்றது என்று கூறும்போது “1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்” என குர்ஆன் (பார்க்க – 97:1-3) கூறுகின்றது.
மேற்படி சூரா அல்குர்ஆன் அருளப்பட்ட இரவு 1000 இரவுகளை விட அருள் வளம் பொதிந்தது என்று கூறுகின்றது.
அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்திற்கும், இரவுக்கும் ஏன் இத்தகைய பெருமை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மனிதர்களுக்கான வழிகாட்டல்:
அது சாதாரண நூல் அல்ல. சர்வ லோகங்களின் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டது. அதனைச் சுமந்து வந்தவரும் சாதாரணமானவரல்ல. மலக்குகளின் தலைவரும், சக்தியும் நம்பிக்கை நாணயமுமுடைய ஜப்ரீல்(அலை) அவர்கள் அதனை சுமந்து வந்தார்கள். அதனைப் பெற்று மக்களுக்குப் போதித்து நடைமுறைப்படுத்தியவரும் சாதாரண மானவரல்ல. படைப்பினங்களில் சிறந்த, இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் அதனை மனித குலத்துக்குப் போதித்தார்கள். இவ்வகையில் அதன் ஏற்றம் மட்டிட முடியாததாகும்.
இந்த வேதம் ஏனைய வேதங்களைப் போன்று சுருங்கிய வட்டத்தைக் கொண்டதல்ல. இது வாழும் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது. ஏற்கனவே உள்ள வேத மொழிகள் செத்துவிட்டன. ஆனால், அரபு வாழும் மொழியாகும். இருப்பினும் இது அரபியர்களுக்குரிய வழிகாட்டியல்ல. அகிலத்தாருக்குரிய வழிகாட்டியாகும்.
ஏனைய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்கு, மூஸாவின் சமூகத்தாருக்கு, ஆதின் கூட்டத் தாருக்கு என்று இருக்கலாம். இது முஹம்மதின் சமூகத்திற்கு அருளப்பட்ட வேதம் இல்லை. முழு மனித சமூகத்திற்கும் அருளப்பட்ட வேதமாகும்.
அதேவேளை, முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்க்கை காலத்துடன் முடிவு பெறுவதும் அல்ல. அது உலகம் உள்ள அளவு வாழும் மனிதர்களுக்கான வழிகாட்டி வேதமாகும். இந்த வகையில் அல்குர்ஆனின் வருகை என்பது சாதாரண சமாச்சாரம் அல்ல.
வழிகாட்டலின் முக்கியத்துவம்:
வழிகாட்டல் என்பது மனிதனுக்குப் பிரதானமான அம்சமாகும். இன்று பல இலட்சியங்களுடன் வாழும் மக்கள் உள்ளனர். இலட்சியங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் இயல்பும் இவர்களிடம் இருக்கின்றது. ஆனால், சரியான இலட்சியத்திற்கும் அந்த இலட்சியத்தை அடைவதற்கான சரியான அணுகுமுறைக்குமான வழி காட்டல்தான் இல்லாமலுள்ளது.
வறுமையில் வாடுபவனுக்குப் பொருள் தேட வழிகாட்டல் தேவை. பொருள் தேடியவனுக்கு அதனை முதலீடு செய்யவும் செலவழிக்கவும் வழிகாட்டல் தேவை. கற்கும் ஆர்வமும் அயராத முயற்சியுமுள்ள மாணவனுக்கு எதை, எப்படி கற்பது என்ற வழிகாட்டல் தேவை. கற்பிப்பதற்கு, உண்பதற்கு, உறங்குவதற்கு அனைத்துக்குமே வழிகாட்டல் அவசியமானதாகும்.
இவ்வகையில் அல்குர்ஆன் வழிகாட்டலாக அதுவும் அகில உலக மக்கள், முஸ்லிம், காபிர் என அனைவருக்குமான வழிகாட்டலாகத் திகழ்கின்றது.
ஏனைய வேதங்கள் போன்று இது குறிப்பிட்ட காலத்திற்கோ, இடத்திற்கோ, இனத்திற்கோ, மொழியினருக்கோ சுருங்கியதாக இல்லாத, பிரபஞ்சம் தழுவியதாக உலக அழிவுவரை தொடரக் கூடியதான முழு மனித சமூகத்திற்குமுரியதாக இருப்பதால் இந்த வேதம் அருளப்பட்ட மாதம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இன்று மனித குலம் நல்ல வழிகாட்டல் இல்லாது துடுப்பு இழந்த படகு போல் தத்தளிக்கின்றது. அறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல திட்டங்களை முன்வைக்கின்றனர். ஆனால், அவை மனிதனை அதள பாதாளத்தை நோக்கித் தள்ளி விடுபவையாகத் திகழ்கின்றன.
பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக ஆண் – பெண் சரிநிகர் சமமாக ஒன்றுபோல் பேச, பழக இடமளிக்க வேண்டும் என்றனர். பாலியல் பலாத்காரத்தை நீக்க பெண்கள் மூடிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு திறந்த நிலைக்கு வரவேண்டும். அப்போது ஆண்கள் மத்தியில் இருக்கும் அறியும் ஆற்றல் குறைந்து பார்த்துப் பார்த்துப் பழகிப்பேய்விடும் என்றனர். இந்தக் கொள்கைளெல்லாம் ஐரோப்பிய உலகில் பாலியல் பலாத்காரத்தை வளர்க்கவே வகை செய்தது.
அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றனர். சீனாவில் வீட்டுக்கு ஒரு பிள்ளைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டன. இன்று சீனா பாரிய பெண்கள் பற்றாக்குறையையும் குடிமக்களிடம் தனித்து வாழ்ந்ததால் சகோதர பாசமோ குடும்ப பாசமோ அற்றுப்போய் குற்றச் செயல்களின் எண்ணிக்கை எகிறிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.
உலகம் நிம்மதியாக வாழ்வதற்கு அரசியல், ஒழுக்கவியல், பொருளியல், ஆன்மீகம் அனைத் துக்கும் நல்ல வழிகாட்டலை வேண்டி நின்கின்றது. அகில உலகம் நிம்மதியாக வாழத்தக்க வழிமுறையாக குர்ஆன் திகழ்கின்றது என்பது மகத்தான விடயமே. குர்ஆனுடன் சாதாரண பரிச்சயம் இருந்தாலே முட்டிவிட்டுக் குனியும் இந்த முட்டாள் தனமான போக்கிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.
யாருக்கு வழிகாட்டும்?:
அல்குர்ஆன் அனைத்து மக்களுக்குமான வழிகாட்டல்தான். காஃபிரான அரசு ஒன்று குர்ஆனின் சட்டப் பிரகாரம் ஆட்சி செய்தாலும் கூட அதன் பிரதிபலனான அமைதி, நீதி, நியாயம், அச்சமற்ற வாழ்வு போன்ற அருட்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் இது அனைவருக்குமான வழி காட்டல்தான். எனினும் அல்குர்ஆனிலிருந்து நேர்வழியைப் பெற்று சீர்வழியில் வாழும் பாக்கியம் கிடைக்க இறையச்ச சிந்தனை அவசியமாகும்.
“இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.” (அல்குர்ஆன் 02:02)
இங்கு பயபக்தியுடையோருக்கே இது நேர்வழியைக் காட்டும் என்று கூறப்படுகின்றது. இதனை முரண்பாடாக நாம் கொள்ளக் கூடாது. நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் நமது கண்ணிலும் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி இருக்க வேண்டும். நன்றாகப் பார்வை உள்ள ஒருவர் இருளில் உள்ள பொருளைப் பார்க்க முடியாது. ஏனெனில், அங்கு பொருளில் ஒளி இல்லை. கண்பார்வை இழந்தவர் வெளிச்சத்தில் உள்ளதையும் பார்க்க முடியாது. ஏனெனில், அவரது கண்ணில் ஒளி இருக்காது. கண் பார்வை இழந்தவருக்கு அது இருளாகத்தான் தெரியும். இது சூரியனின் குறைபாடல்ல.
அல்குர்ஆன் சூரியனைப் போன்று ஒளியுடன் திகழ்கின்றது. தக்வா எனும் இறை யச்சம் பார்வையற்றவருக்கு அது வழிகாட்டாது என்பது குர்ஆனின் குறைபாடல்ல. அதைப் பார்ப்போரின் குறைபாடாகும்.
ஆனால், ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை குர்ஆனை ஓதும்போதே தனக்கு நேர்வழி கிடைப்பதற்காக ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடி தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். ஹிதாயத்தை அல்லாஹ்விடம் வேண்ட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர் கூட சத்தியத்தைத் தேடும் நோக்கத்தில் குர்ஆனை அணுகினால் அவர் நிச்சயம் அதை அங்கே அடைந்துகொள்வார்.
தெளிவான சான்றுகள்:
இந்த மறை வசனம் தொடர்ந்து ரமழானைப் பற்றி கூறாமல் குர்ஆன் பற்றியே குறிப்பாகப் பேசுகின்றது. அதில் ரமழானில் அருளப்பட்ட அல் குர்ஆன் எனும் மனிதகுல வழிகாட்டி தெளிவான சான்றுகளைக் கொண்டது என்று வர்ணிக்கப்படுகின்றது.
குர்ஆன் வெறும் இறைவேதம் அல்ல. அது இறைவேதம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அதிலேயே தெளிவான சான்றுகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. 1500 வருடங்களுக்கு முன்னர் மனித கற்பனையில் கூட உதித்திருக்க முடியாத அறிவியல் உண்மைகளைக் குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது. தொள்பொருள் ஆய்வுகள் இன்று உறுதிப்படுத்தும் எத்தனையோ வரலாற்றுச் சான்றுகளை அது தருகின்றது. இவ்வகையில் அது தெளிவான சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது.
பிரித்தறிவிப்பது:
அடுத்து இந்த வேதம் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக் கூடியது. ஏனைய மதங்கள் போல் ஒரு கொள்கையை மட்டும் முன்வைத்துவிட்டு இது மௌனியாக இருக்காது. இறைவன் ஒருவன் என்று கூறுவதோடு ஈஸாவோ, வேறு இறைத் தூதர்களோ, மலக்குகளோ இறைமையைப் பெறமுடியாது என்று தெளிவாக அளந்து கூறும்.
நல்லோர்களின் அந்தஸ்த்தைக் கூறும் போதும் நடுநிலை தவறாது அவர்கள் மனித தன்மைக்கு மேல் உயர்த்தப்படமாட்டார். இவ்வாறு எல்லா வகையிலும் சத்தியமும் அசத்தியமும் அல்குர்ஆனால் தெளிவாகக் கூறுபோட்டுக் காட்டப்படும்.
இதனால்தான் படித்தவர்களெல்லாம் கல்லையும், மண்ணையும் வணங்கிக் கொண் டிருக்கும் போது சாதாரண ஒரு முஸ்லிம் கல்லைக் கல்லாகவும், மண்ணை மண்ணாகவும் பார்க்கின்றார். மண்ணால் செய்த சிலை எந்த சக்தி யையும் பெற்றிடாது; வழங்கிடாது என்று அதனைப் பிரித்து அறிந்து கொள்கின்றார். மாட்டை மாதா வாகப் பார்க்காது மாடாகப் பார்க்கின்றான். மனிதனை அவதாரமாகப் பார்க்காது மனிதப் பிறவியாகவே பார்க்கின்றான்.
நோன்பு பிடியுங்கள்:
இத்தகைய அருள் பொதிந்த அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை எவர் அடை கின்றாரோ அவர் அல்லாஹ் அருள்மறையை வழங்கியதற்கு நன்றி செலுத்து முகமாக அம்மாதம் முழுவதும் நோன்பிருக்கட்டும் என்று இம்மறை வசனம் கூறுகின்றது.
நோன்பு முடிந்ததும் நாம் பெருநாள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அந்நாளில் அல்லாஹ்வுக்காக தக்பீர் செய்து எமது மகிழ்ச் சியை வெளிப்படுத்துகின்றோம். இது கூட அல்குர்ஆன் அருளப்பட்டதற்கான நன்றிக்காகவே என்பதை அனேகர் அறிவதில்லை. இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில்,
“உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதையுமே (இதன் மூலம் அல்லாஹ் நாடுகின்றான்)” (2:185)
எனவே, ரமழான் என்றாலும் நோன்பு என்றாலும் அல்குர்ஆனின் மகத்துவத்தை உணர்த்துபவை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு அல்குர்ஆனுக்கு உரிய உயரிய அந்தஸ்தினை வழங்க முன்வர வேண்டும்.
நோன்பு தக்வாவுக்கான வழி:
நோன்பு ஏன் நோற்கப்பட வேண்டும் என்பதுபற்றித் திருமறை கூறும்போது,
“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183)
என்று கூறுகின்றது. நோன்பின் நோக்கம் இறையச்சமே என்று மேற்படி வசனம் கூறுகின்றது.
நோன்பு என்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் குறித்த நேரம் உணவையும், பானத்தையும் உடலுறவையும் தவிர்த்து வைத்து அல்லாஹ் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். உணவையும் தவிர்ப்பேன், உடல் உறவையும் தவிர்ப்பேன் என்று உறுதியெடுக்கும் பயிற்சியே நோன்பாகும்.
இந்தப் பயிற்சி அல்லாஹ் ஏவியவைகளை எடுத்து நடக்கவும் தடுத்தவைகளைத் தவிர்த்துக் கொள்வதற்குமான பக்குவத்தை வளர்க்கும்.
பொறுமையை, நல்ல பண்பாட்டை வீணான காரியங்களில் ஈடுபடாத பக்குவத்தை நோன்பு வழங்க வேண்டும் என்பது நோன்பின் எதிர்பார்ப்பாகும்.
நோன்பும் குர்ஆனும்:
ஹதீஸ்கள் நோன்பையும், குர்ஆனையும் பல கட்டங்களில் இனைத்துப் பேசுகின்றன. நோன்பும் குர்ஆனும் மறுமையில் அவற்றைப் பேணிய அடியார்களுக்காகப் பரிந்து பேசும் என ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் தான் நோன்பும் கடமையாக்கப் பட்டுள்ளது.
இதேவேளை, ஆரம்பத்தில் அல்குர்ஆன் தக்வாவுடையவருக்குத்தான் நேர்வழியாக அமையும் என்பதை அவதானித்தோம். இங்கே நோன்பு, தக்வா உணர்வு ஏற்படுவதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம்.
நோன்பின் நோக்கத்தைச் சரியாக அடையக்கூடிய வகையில் கட்டுப்பாடாக நோன்பு நோற்கப்பட்டால் அவர் தக்வாவைப் பெறலாம். தக்வாவைப் பெற்றால் அல்குர்ஆன் அவருக்கு நேர்வழியைக் காட்டும். அந்த நேர்வழியை அல்லாஹ் வழங்கியதற்காகத்தான் பெருநாளில் தக்பீர் கூறுகின்றோம்.
சிந்திக்க வேண்டியது:
சிலர் நோன்பு காலத்தில் குர்ஆனை ஓதுவர். அத்துடன் அதை மூடிவைத்து விடுவர். தக்வாவுடையவருக்கு குர்ஆன் நேர்வழி காட்டும் என்றால் அவர் அதில் நேர்வழியைத் தேட வேண்டும். குர்ஆனை ஓதாமல் அது என்ன கூறுகின்றது என்பதை அறியவோ, ஆராயவோ முயலாமல் அல்லது அறிந்தவர் கூறுவதைக் கேட்காமல் இருந்துவிட்டு குர்ஆன் நேர்வழி காட்டும் எனக் கருதமுடியாது. எனவே, தக்வாவுடைய உணர்வுடன் சத்தியத் தாகத்துடன் அல்குர்ஆனை உங்கள் கரங்களில் ஏந்துங்கள். உள்ளங்களில் ஒளியைப் பெறுவீர்கள்.
நன்றி:இஸ்லாம் கல்வி.காம் 

இந்த வருஷம் ரமலான் ரொம்ப சூடு...

25  ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட ரமலான் மிகவும் வெப்பம் நிறைந்ததாக இருக்குமென்று வானிலைத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வெப்ப சூழலைப் போல முன்னெப்பொழுதும் கண்டதில்லை என துபாய் பிறை கமிட்டிக்கான வானிலை துறையை சேர்ந்த அதிகாரி ஹஸ்ஸான் அல் ஹரிரி கூறியிருக்கிறார். 1998  ஆம் வருடம் இது போன்ற காலநிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரமலான் நடப்பு  கால் நூற்றாண்டு காலத்தில் மிகப்பெரிய ரமலானாக அமைந்திருப்பதாக அமீரகத்தின் பிரபல ஆங்கில நாளேடுகள் தெரிவித்துள்ளன.
கடுமையான வேலை செய்பவர்கள் தேவை பட்டால் நோன்பை முறித்துக்கொல்ள்ளலாம்,பின்னர் அந்த நோன்பை நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும் என்று சில தினங்களுக்கு முன்னர் அமீரகத்தின் இஸ்லாமிய விவகாரத் துறை மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சனி, 7 ஆகஸ்ட், 2010

இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்ட ஆட்சியர் விருது


இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்டத்திலேயே அதிகமான இரத்ததான முகாம் நடத்தியதைப் பாராட்டி இராமநா தபுர மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் விருது வழங்கினார்.

இவ்விருதினை ம.ம.க மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அன்வர் அலி, நகரச் செயலாளர் பரக்கத்துல்லாஹ், ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர். சகாய ஸ்டிபன் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

போர்க்குற்றவாளி இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்

*போர்க்குற்றவாளி இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். *

எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

*இஸ்லாமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், ஒடுக்குப்படும்
மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வருபவர் தமிழ்நாடு முஸ்லீம்
முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ். கீற்று
இணையதளத்திற்காக, இந்தியாவில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினரது பிரச்சினைகள்,
மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடுகள், ஈழப்பிரச்சினை உள்ளிட்ட செய்திகள்
தொடர்பாக நடத்திய நேர்காணலிலிருந்து...*

*கீற்று: உங்களுடைய தொடக்க கால வாழ்க்கை, பின்புலம் ஆகியன பற்றிச்
சொல்லுங்களேன். *

பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. முதலாவது வகுப்பு வரை அங்கேதான்
படித்தேன். என்னுடைய அப்பாவுக்குச் சென்னை கொத்தவால்சாவடியில் வெல்லம், புளி
மொத்த வியாபாரம் இருந்தது. அதன் காரணமாக சென்னை வந்தோம். கொத்தவால் சாவடி
‘செயின்ட் தாமஸ்’ பள்ளியில் மூன்றாவதுவகுப்பு வரையும், பின் அரண்மனைக்காரத்
தெருவில் உள்ள ‘செயின்ட் மேரீஸ்’ ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளியில் 11ஆவது
வகுப்பு வரையும் படித்தேன். புதுமுக வகுப்பையும் வணிகவியல் இளங்கலையையும்
புதுக்கல்லூரியில் முடித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறையில்
சேர்ந்து வணிக மேலாண் முதுவர் (எம்.பி.ஏ) பட்டம் பெற்றேன். வாணியம்பாடி
இஸ்லாமியக் கல்லூரியின் நிறுமச் செயலாண்மைத் துறை உதவிப் பேராசிரியராக 1985இல்
சேர்ந்தேன். ஆனால் குடும்பம் சென்னையில் இருந்தது. குடும்பத்தைப் பார்க்கவும்
அமைப்புச் சார்ந்த பணிகளுக்காகவும் வார விடுமுறைநாட்களில் சென்னை
வந்துவிடுவேன்.

*கீற்று: அரசியலில் ஈடுபாடு வந்தது எப்படி?*

இளமைக்காலத்தில் இருந்தே சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டு. கல்லூரிப் பருவத்தில்
இந்திய மாணவர் இஸ்லாமியர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி அதன் தமிழகத்
தலைவராகச் செயல்பட்டேன்; பின் அவ்வமைப்பின் அனைத்திந்திய அறிவுரைக்குழுவின்
ஒன்பது பேரில் ஒருவராகவும் இருந்தேன்.

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் என்பது முப்பது வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான
ஓர் அமைப்பு. இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் சமூக
அக்கறையுள்ளவர்களாகவும் உருவாக்கக் கூடிய பணியில் அவ்வமைப்பு ஈடுபட்டு வந்தது.
அதில் முப்பது வயது வரை தான் இருக்க முடியும் என்பதால் 1989இல் அவ்வமைப்பில்
ஓய்வு பெற்று வேறு சமூகத் தளங்களில் பணியாற்றத் தொடங்கினோம். எண்பதாம் ஆண்டுகளை
என்பது இந்திய முஸ்லீம்களின் வரலாற்றில் மிகவும் மோசமான காலம் என்று சொல்லலாம்.
1980களின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள
மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் வேண்டும் என்னும் ஒரே
நோக்கத்திற்காக இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
தலித் சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என்பது புதுமையான நிகழ்வு இல்லை.
வாழையடி வாழையாகக் காலம் காலமாகவே நடக்கின்ற ஒன்றுதான் அது! இன்னும்
சொல்லப்போனால் கன்னியாகுமரியில் இருந்து காசுமீர் வரை விவேகானந்தர் நடைப்பயணம்
பற்றி எழுதும் போது, ‘பட்டால் பாவம்! தொட்டால் தீட்டு’ என்னும் தீண்டாமையை
எதிர்த்துத் தமிழகத்திலும் கேரளத்திலும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தைத்
தழுவியது பற்றி அப்போதே எழுதியிருக்கிறார். ஆனால் மீனாட்சிபுர நிகழ்வு இந்திய
அளவில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியன் எக்சுபிரசு நாளிதழின்
திருநெல்வேலிச் செய்தியாளர் சுப்பிரமணியம் இந்நிகழ்வைப் பற்றிப் பெரிய
செய்திக்கட்டுரை எழுதினார். அது இந்தியா முழுவதும் தலைப்புச் செய்தியானது. ‘A
whole village embraces Islam’ என்பது அவர் கொடுத்த தலைப்பு.

இப்படியாக இது இந்திய அளவில் சிக்கலாக மாறி அதுவரை தமிழகத்திற்கு வராத
வாஜ்பாய், அத்வானி ஆகியோரெல்லாம் ‘மதம் மாறியவர்களைத் திரும்ப இந்துமதத்திற்கு
அழைக்கப் போகிறோம்’ என்று கூறிப் படையெடுத்து வந்தார்கள். அப்போது
தென்னாப்பிரிக்கா வெள்ளைச் சிறுபான்மையினரால் ஆளப்பட்ட நாடாக இருந்தது என்பது
உங்களுக்குத் தெரியும். நிறவெறி (Apateid) அங்குத் தலைவிரித்து ஆடியது. அப்போது
ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது.
அம்மாநாட்டில் இனவெறிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ‘காமன்வெல்த்
நாடுகள் சேர்ந்து இனவெறிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்’ என்று
மாநாட்டின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இந்திராகாந்தி கூறினார்.
‘தென்னாப்பிரிக்காவில் இனவெறி பற்றிப் பேசுகிறீர்கள். உங்கள் நாட்டில் உள்ள
இனவெறி பற்றி என்ன சொல்கிறீர்கள்? (‘You are talking about apateid in South
Africa. What is about apartheid in your own country?’) என அப்போது
செய்தியாளர் ஒருவர் கேட்டார். ‘என் நாட்டில் இனவெறி என்பதே கிடையாது. (‘There
is no apartheid in my country’) என்று இந்திரா விடை கூறினார். ‘மீனாட்சிபுரம்
பற்றி என்ன சொல்கிறீர்கள்? (‘What do you want to say about Meenatchipuram?’)
என்று விடாமல் அச்செய்தியாளர் கேட்டார்.

தீண்டத்தகாத மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் இப்படியொரு தீர்வை நோக்கில்
போனால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும் எனக் கற்பனை செய்துகொண்டு,
1949ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாளன்று பூட்டப்பட்ட பாபர் மசூதியின் பூட்டை
உடைப்பதற்கு இரத யாத்திரம் நடத்துவோம் என்று விசுவ இந்து பரிசத் அறிவிக்கிறது.
இது நடந்தது 1984இல். நேபாளத்தில் சீதை பிறந்ததாகச் சொல்லப்படும் சனக்பூரில்
இருந்து அயோத்தி நோக்கி இரதயாத்திரை என விசுவ இந்து பரிசத்து அறிவித்தது.
அதுவரைக்கும் பாபர் மசூதி என்றால் என்ன என்பது பற்றி முசிலீம் மக்களுக்கே
தெரியாது.

வேண்டுமென்றால் அந்த உள்ளூர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி இருக்கலாமே
ஒழிய வேறு யாருக்குமே தெரியாத சூழல்தான்! அதே 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாத
இறுதியில் இந்திரா தம்முடைய மெய்க்காவலர்களால் கொல்லப்பட்டதால் இந்த யாத்திரை
தடுத்து நிறுத்தப்படுகிறது. இதன் பிறகுதான் தமிழ்நாட்டில் மிக மோசமான
பரப்புரைகள் (பிரச்சாரங்கள்) நடந்தன. இது பெரியார் பிறந்த மண் என்பது
மட்டுமில்லாமல் உறவுமுறை சொல்லிப் பேசி மாமா, மச்சான், சாச்சா என்று பேசி
இணைப்பாக இருக்கக்கூடிய அளவில் மத நல்லிணக்கம் இருக்கும் பகுதியாகத் தமிழ்நாடு
இருந்தது. இராம. கோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம், எசு. வி. சிறீதரன் ஆகிய
இந்து முன்னணி ஆட்கள் பல ஊர்களில் மேடை போட்டு, முஸ்லீம்கள் தங்கள் உயிருக்கும்
மேலாக நேசித்துக் கூடிய நபிகள் நாயகத்தைப் பற்றி, அவருடைய குடும்பத்தைப் பற்றி
எல்லாம் மிக அருவருக்கத்தக்க வகையில் மேடையில் பேசினார்கள். ‘காம நெறியில்
மிஞ்சியவர் நபிகள் நாயகத்தின் மனைவி கதீசாவா? கன்னிமேரியா? மணியம்மையா?’
என்னும் தலைப்பில் பட்டிமண்டபம் நடத்துவதாக புதுப்பேட்டைப் பகுதியிலேயே
சுவரொட்டி ஒட்டக்கூடிய அளவுக்கு நிகழ்வுகள் நடந்தன.

அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக இதையெல்லாம்
ஆதரித்தார் என்றுதான் நான் குற்றம் சாட்டுவேன். அவருடைய அமைச்சரவையில் இருந்து
இன்றைக்கு எம்.ஜி.ஆர். கழகத்தலைவராக இருக்கும் இராம.வீரப்பனும் அதற்கு இசைவாகச்
செயல்பட்டார். இப்படியாகப் பரப்புரைகள் நடக்கும்போது அதைப் பொறுத்துக்கொள்ள
முடியாத இளைஞர்கள் சிலர் எதிர்ப் பரப்புரையில் ஈடுபட, ஒரு கட்டத்தில்
பரப்புரைகள் எல்லாம் வெறும் பரப்புரைகளாக மட்டும் இல்லாமல் இவர்கள் வெட்ட,
அவர்கள் வெட்ட, இங்கேயும் கொலை, அங்கேயும் கொலை என்று அமைதிப்பூங்காவாக இருந்த
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அமளி ஏற்படும் சூழல் வந்தது.

இந்திரா இறந்ததால் இரத யாத்திரையைத் தள்ளிப் போட்டவர்கள் இந்திய அளவில்
மீண்டும் செயல்படத் தொடங்குகிறார்கள். இதன் எதிரொலியாக 1986ஆம் ஆண்டு பிப்ரவரி
1ஆம் நாள் பாபர் மசூதியின் பூட்டை உடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதை நன்றாகக் கவனிக்க வேண்டும். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முதல் 1949 ஆம்
ஆண்டு திசம்பர் 22ஆம் நாள் வரை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் வழிபாடு நடத்தக் கூடிய
ஒரு தொழுகை இடமாக இருக்கிறது. வருவாய்த் துறை ஆவணங்களின்படி அது உத்தரப்பிரதேச
சுன்ன சமாத்து வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் என்று தெளிவாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திசம்பர் 22ஆம் நாள் முஸ்லீம்கள் தொழுதுவிட்டு
வீட்டுக்குச் சென்ற பிறகு நள்ளிரவில் சிலர் புகுந்து இராமன், இலட்சுமணன்,
அனுமன், சீதை ஆகியோரின் சிலைகளைப் பள்ளிவாசலின் தொழுகைத் தலைவர் (இமாம்)
மக்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய மேடையில் வைத்து விட்டு ‘இராமபெருமான்
தம்முடைய ஜென்ம பூமியில் அவதாரம் எடுத்துவிட்டார்’ என்று சொன்னார்கள்.
அப்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

இந்தச் சிலைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அன்றைய தலைமை
அமைச்சர் ஜவகர்லால்நேரு உத்தரவிடுகிறார். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. கே.
நையர், ‘சிலைகளை அப்புறப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்’ என்கிறார்.
இத்தனைக்கும் அயோத்தியின் காங்கிரசுக் கட்சித் தலைவர் அகசாய பிரம்மச்சாரி
‘இந்தச் சிலைகளை அப்புறப்படுத்தி இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும்’
என்று ஒரு தர்ணா போராட்டம் நடத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியருடைய உத்தரவுக்கு
ஏற்ப மசூதி பூட்டப்படுகிறது; பூட்டிய நிலையில் உள்ளே இருக்கக்கூடிய சிலைகளைப்
பூஜிப்பதற்கு இரண்டு பூசாரிகள் உள்ளே செல்லலாம் என்பதும் முஸ்லீம்கள் அருகில்
செல்லக்கூடாது என்பதும் நீதிமன்றத்தின் உத்தரவு.

இந்நிலையில் வழக்கு கீழ்நீதிமன்றத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் போய் அலகாபாத்து
உயர்நீதிமன்றத்தின் இலக்னோ பிரிவுக்குப் போகிறது. அங்கே வழக்கு நிலுவையில்
இருக்கும் நேரத்தில் உமேஸ்சந்திர பாண்டே என்னும் வழக்கறிஞர் முனிசிபு
நீதிமன்றத்திற்குப் போய், தான் ஒரு இராம பக்தன் என்றும் வழிபாடு நடத்தத் தனக்கு
ஒப்புதல் வேண்டும் என்றும் சொல்ல, வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும்போது
தீர்ப்பு வழங்க முடியாது என்று முனிசீபு நீதிமன்றம் புறம் தள்ளிவிடுகிறது. அதன்
பிறகு அவர் மாவட்ட நீதிமன்றத்தை அணுகுகிறார். இராசீவ் காந்தியின் முழு
ஆசியுடன்தான் இவை நடக்கின்றன. ஏனெனில் அதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் ஷாபானு
வழக்கில் கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்புக்கு எதிராக முஸ்லீம்கள் மிகப்பெரிய அளவில்
எதிர்ப்பைத் தெரிவித்தபோது அதைச் சரிசெய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம்
இயற்றப்படுகிறது.

முஸ்லீம்களை நிறைவு செய்ய அதைச் செய்த பிறகு ‘சங் பரிவார்’ அமைப்புகளை நிறைவு
செய்ய வேண்டி இது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி வழக்கு உயர்நீதிமன்றத்தில்
இருக்கும் நேரத்தில் மாவட்ட நீதிபதி கொஞ்சநேரம் தான் விசாரிக்கிறார். எதிர்த்
தரப்பு விசாரணைக்காக வருகிறார்கள். அவர்களுடைய வாதத்தைக் கேட்பதற்குக் கூட
மறுத்துவிட்டு பள்ளிவாசல் பூட்டை உடைத்து, பக்தர்கள் உள்ளே செல்லலாம் என்று
மாவட்ட நீதிபதி உத்தரவிடுகிறார். இலக்னோ தூர்தர்சனில் இருந்து அதைப் படம்
எடுத்து இந்தியா முழுவதும் காட்டுகிறார்கள். அது அரசியலுக்காகச் செய்யப்பட்ட
ஒரு வேலை.

இப்படிப்பட்ட சூழலில்தான் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கிய அத்வானியின்
இரத யாத்திரை பிகாருக்கு வரும்போது பிகாரின் அன்றைய முதல்வர் இலாலு பிரசாத்து
அதைத் தடுத்து நிறுத்துகிறார். 1989இல் பாகல்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய
படுகொலைகள் ஆகியன இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் கொதிப்படைய வைத்த
சூழ்நிலைகளாக அமைந்தன. மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வி.பி.சிங்
அவர்களின் சமூகநீதி அரசு கவிழ்க்கப்பட்ட நிகழ்வு முதலியன இந்தக் காலத்தில் தான்
நடக்கிறது. இதனுடைய உச்சக் கட்டமாக 1992இல் பாபர் மசூதி இடிக்கப்படக் கூடிய
சூழலைப் பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து 1992 திசம்பர், 1993 சனவரி ஆகிய
காலங்களில் மும்பையில் கலவரங்கள் நடக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி
ஸ்ரீகிருஷ்னா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த விசாரணை ஆணையம்,
பால் தாக்கரே ஓர் இராணுவத் தளபதி போல இக்கலவரங்களுக்குத் தலைமையேற்று
நடத்தினார் என்று சொன்ன பிறகும் கூட எந்த வித நடவடிக்கையும் அவர் மீது
எடுக்கப்படாத நிலை.

இந்நிலையில்தான் இவை போன்ற சமூகச் சிக்கல்களுக்கு என்ன தீர்வு, ஒரு
சிறுபான்மைச் சமூகம் என்ன அடிப்படையில் எப்படி அணுக வேண்டும் என்னும்
சிந்தனையின் பக்கம் நாங்கள் சென்றோம். அதன் காரணமாகத் தான் 1995இல் தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்னும் பேரமைப்பை உருவாக்கினோம். அப்படி
உருவாக்கும்போது அன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்த குணங்குடி
அனீபா அவர்கள் தலைவராகவும் நான் துணைத் தலைவராகவும் இருந்தோம். எங்களுடைய மிக
முதன்மையான நோக்கம் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அந்த
அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து சட்டத்தின் அடிப்படையில் அதைக்
களைவதற்கான வடிகாலை அமைக்க வேண்டும்; சனநாயக அடிப்படையில் மக்களை ஒன்று
திரட்டிப் போராட வேண்டும் என்பதுதான்.

இதில் ஒரு செய்தி என்னவென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறு ஆண்டு 1993
திசம்பர் 6ஆம் நாள் கோயமுத்தூரில் சில முஸ்லீம் சகோதரர்கள் இடிப்பை எதிர்த்துக்
கருப்புக் கொடி கட்டுகிறார்கள். இப்படிக் கருப்புக்கொடி கட்டியவர்களை அப்போதைய
முதல்வர் ஜெயலலிதா தடா என்னும் கொடிய சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.
இராசீவ் படுகொலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது
பயன்படுத்துவதற்காகத் தடா சட்டத்தை முதன்முதலில் தமிழகத்தில்
நடைமுறைப்படுத்தினார்கள். அந்தக் கொடிய சட்டத்தைக் கருப்புக்கொடி கட்டியவர்கள்,
பேருந்துகள் மீது கல்வீசித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் ஆகியோர் மீதும்
பாய்ச்சினார்கள். அப்போது த.மு.மு.க இல்லை. இந்தத் தடாவில் சிறைப்பட்டவர்களை
வெளியே கொண்டுவருவதற்காக நானும் சில நண்பர்களும் சேர்ந்து சில பணிகளைச்
செய்துகொண்டிருந்தோம். அந்நண்பர்களுள் ஒருவரான பாக்கரையும் 1995ஆம் ஆண்டு
ஆகஸ்ட் ஐந்தாம் நாள் ஜெயலலிதா அரசு தடா சட்டத்தில் சிறையில் அடைக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் 1995இல் த.மு.மு.க என்னும் அமைப்பைத் தொடங்கினோம்.
தொடங்கிய பின் தடாவுக்கு எதிரான பேரணி நடத்தினோம். ஒரு கண்டனச் சுவரொட்டி
ஒட்டுவதற்குக் கூட குலைநடுங்கிப் போயிருந்த ஒரு சமூகச் சூழலில் தடாவை எதிர்த்து
சென்னைத் துறைமுக நுழைவாயிலில் உள்ள அம்பேத்கர் சிலையில் தொடங்கி கோட்டை
நோக்கிப் பேரணி நடத்தினோம். இது போன்ற பணியைச் செய்வதற்கு ஒரு வெற்றிடம்
அப்போது இருந்தது; மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல
வேண்டும். சாரைசாரையாக மக்கள் அப்போராட்டத்தில் பங்கு கொண்டார்கள்.
அந்நேரத்தில் நாகூரில் காவல்துறை அத்துமீறல் நடைபெற்றது. ஒரு கலவரம், அதைத்
தொடர்ந்து நாகூர் தர்காவுக்கு வந்தவர்கள் எல்லாரும் அவர்களில் மனநலம்
பாதிக்கப்பட்டவர்களும் கூடச் சிறையில் அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. நாகூர்
காவல்நிலைய ஆய்வாளராக இருந்த இந்திரஜித் மிக மோசமாக மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டார். அதற்கெல்லாம் சேர்த்துத்தான் இந்தப் பேரணியே நடத்தினோம். அதற்குப்
பிறகு மக்களிடம் இதற்குக் கிடைத்த ஆதரவை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வைத்
தமிழகம் முழுவதும் கட்டியமைக்கக் கூடிய பணியைத் தொடர்ந்து செய்தோம்.

வெறுமனே உரிமைகளுக்கான போராட்டத் தளமாக மட்டும் இல்லாமல் எங்களுடைய பணிகளை
விரிவுபடுத்தினோம். இப்போது தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இரத்த தான
முகாம்கள் நடத்துகிறார்கள். ஆனால் ஒரு மக்கள் திரள் அமைப்பாக இரத்த தான
முகாம்களைத் தேவைகளுக்கு ஏற்பவோ குடியரசு நாள், விடுதலைத் திருநாள்
ஆகியவற்றின்போதோ நாங்கள் தாம் முதன்முதலில் தமிழகத்தில் நடத்தினோம். இப்போதும்
கூடத் தமிழகத்தில் மிக அதிகமாக இரத்தத்தான முகாம்கள் நடத்தக் கூடிய ஒரு
அமைப்பாகத் த. மு.மு.க இருக்கிறது. எங்களுடைய தொண்டர்கள் கொடுக்கும் இரத்தம்
பெரும்பகுதியாக முஸ்லீம் அல்லாத சமூக மக்களுக்குத்தான் அதிகமாகக்
கொடுக்கப்படுகிறது. இதே போல விபத்துகள் ஏற்படுகிறபோது உடனடியாக
நிகழ்விடத்திற்குச் சென்று உதவி செய்யும் பணியையும் த.மு.மு.க வில் எங்கள்
தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதால்தான் 2004ஆம் ஆண்டு திசம்பர் கடைசி வாரம்
சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தமிழகக் கடற்கரையோரம் மிகப்பெரிய அழிவை
ஏற்படுத்தியபோது பட்டினப்பாக்கத்தில் தொடங்கிக் குளச்சல் வரை முதலில்
களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்கின்ற பணியையும் த.மு.மு.க
தொண்டர்கள் செய்தார்கள்.

இப்போது எண்பத்தைந்து விரைவுச் சிகிச்சை ஊர்திகள் த.மு.மு.க சார்பில்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்துச் சமூகத்தினருக்கும் இயங்கக்கூடிய நிலை
இருக்கிறது. இவ்வாறு பலவற்றைச் செய்து வருகிறோம். இதனுடைய அடுத்தகட்டமாக
2007இல் மனிதநேய மக்கள் கட்சி என்னும் ஓர் அரசியல் கட்சியையும் தொடங்கினோம்.
அரசியல் என்பது ஒரு தொழிலாக இன்று இருக்கிறது. அரசியல் என்பது சேவைக்கான ஒரு
வழித்தடம் தான்! ஆனால் அது தொழிலாக மாறியிருக்கக் கூடிய சூழலில் ‘அரசியல்
என்பது ஒரு சேவைதான்! மக்கள் சேவையே நமது முதன்மை!’ என்னும் அடிப்படையில்
தகுந்த கொள்கைத் திட்டங்களை வகுத்து மனிதநேய மக்கள் கட்சியும் இயங்கி வருகிறது.

*கீற்று: தமிழகத்தின் மதச்சார்பற்ற அரசியலில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க
பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். பெரியார் காலம் தொட்டு திராவிட
இயக்கங்களோடு நெருக்கமான உறவு இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும்
இருந்திருக்கிறது. திராவிட இயக்கப் பாரம்பரியம் பலவீனப்பட்டு இருக்கும் இன்றைய
சூழலில் இஸ்லாமியர்களின் நலன்களை முன்னெடுத்து வலுவான இயக்கமாக
வளர்ந்திருக்கும் தமுமுக இந்த கடந்த காலத்தை எப்படிப் பார்க்கிறது?*

தமிழகத்தில் திராவிடர் கழகம் முதலியன மூலமாக பெரியார் அவர்கள் தம்முடைய
பணிகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் திராவிடக் கழகத்திற்கு முஸ்லீம்கள்
உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பது இயல்பான உண்மை. அதற்குப் பிறகு,
திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா தி. மு.க. வை
உருவாக்கியபிறகும் கூட தி. மு. க. விற்குப் பல்வேறு தளங்களில் உதவியவர்கள்,
அனைத்து வகை சக்திகளையும் அளித்தவர்கள் முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

*கீற்று: அப்போது பொதுவுடைமைக் கட்சியும் இருந்தது. அப்படியிருக்கும்போது
திராவிட இயக்கத்துடன் இஸ்லாமியர்கள் தங்களை அதிகமாகப் பிணைத்துக் கொண்டதன்
காரணம் என்ன?*

திராவிடக் கட்சிகள் பேசிய மொழி, வகுத்துக் கொண்ட கொள்கை, அவர்களுடைய
செயல்திட்டம் ஆகியனவெல்லாம் இயல்பாகவே முஸ்லீம் சமூகத்தால்
புரிந்துகொள்ளக்கூடிய, தங்களை அவற்றுடன் அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடிய
நிலையில் இருந்தது. பொதுவுடைமைக் கட்சியை இந்தியாவில் தொடங்கும்போது அதில்
ஏராளமான முஸ்லீம் முன்னோடித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு
வங்காளத்தில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இடதுசாரித்
தோழர்கள் பயன்படுத்தக்கூடிய சொல்லாடல்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள்
ஆகியவற்றை விட - அவற்றோடு தங்களை அடையாளப்படுத்துவதைவிட - திராவிடர் கழகத்தைச்
சேர்ந்தவர்கள், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள் –
முஸ்லீம்களுக்கு அணுக்கமாக இருந்தன. அதனால் அவர்களது போராட்டங்களில்
முஸ்லீம்கள் அதிகளவில் கலந்துகொண்டனர். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் பலர் முழுக்க முழுக்கத் தங்கள் ஈடுபாட்டைக்
காட்டியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1967வரை காங்கிரசுக் கட்சியின் ஆட்சித் தமிழகத்தில்
இருந்தபோது மிக முதன்மையான நிகழ்வு – இதை எல்லாம் மறந்து விடுகிறார்கள்
என்பதற்காகப் பதிவு செய்கிறேன், ஆத்திகரான இராசகோபாலாச்சாரியின் சுதந்திரா
கட்சியும் நாத்திகரான அண்ணாத்துரையின் தி.மு. கழகமும் இரு துருவங்களாக
இருக்கக்கூடிய சூழலில் இந்த இரு துருவங்களையும் இணைக்கக் கூடிய வினையூக்கியாகச்
செயல்பட்டவர் காயிதே மில்லத்து முகம்மது இசுமாயில் சாகிபு. இரண்டு பேரையும்
இணைந்து ஒரு கூட்டணி அமைத்து அக்கூட்டணியின் காரணமாக 1967இல் இங்கே ஓர் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டு காங்கிரசு ஆட்சியை இழந்தது. அன்று இழந்த ஆட்சியை இன்று வரை
காங்கிரசு பிடிக்க முடியாத அளவு ஒரு மாற்றம் ஏற்பட்டதென்றால் அது உறுதியாக
காயிதே மில்லத்து முகம்மது இசுமாயில் சாகிபுடைய முயற்சிதான்!

*கீற்று: அந்தச் சமயத்தில் பெரியார், தி.மு.க. உடன் சேர்த்து முஸ்லீம்
லீக்கையும் கண்டிக்கிறார் அல்லவா?*

தி.க., தி.மு.க., ஆகியவற்றின் பிரிவால் அவர் கண்டித்திருக்கலாம். ஆனால்
காயிதே மில்லத்துடன் பெரியாருக்கு நல்ல உறவு இருந்திருக்கிறது. இன்னும்
சொல்லப்போனால் காயிதே மில்லத்து அவர்கள் மறைந்த போது ‘தம்பி! என்னைவிட்டு
முன்னாடியே போய்விட்டாயா?’ என்று உருக்கமாகவே பெரியார் பேசிய பதிவுகள் கூட
இருக்கின்றன.

முஸ்லீம் லீக் என்பது மிகப்பெரிய நன்மை. ஆனால் அவர்களே சமூக அடிப்படையில்
மிகப்பெரிய தவற்றைச் செய்திருக்கிறார்கள். தங்களுடைய தனி அடையாளத்தை - அதாவது
கட்சி என்னும் அடிப்படையில் - கட்சியின் இரண்டாம் மட்டத் தொண்டர்கள், மூன்றாம்
மட்டத் தொண்டர்கள் ஆகியோரை இழக்கக்கூடிய அளவுக்கு அவர்களுடைய உறவுகள்
திமுகவுடன் அமைகின்றன. இதன் காரணமாக முஸ்லீம் லீகைச் சேர்ந்த பலர் திமுகவிலும்
உறுப்பினர்களாகின்றனர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காயிதே மில்லத்திற்குப்
பிறகு அப்துல் சயீது சாயிபு அவர்கள் முஸ்லீம் லீகின் தலைவராக இருந்தபோது -
திமுகவுடனான உறவைப் பிரித்து அவர் வெளியே வரும் நேரத்தில் - தலைவர்கள் தாம்
வந்தார்களே தவிர தொண்டர்கள் எல்லாம் திமுகவில் தங்கிவிட்டார்கள். சான்றாக
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த முபாரக்கு சென்ற சட்டப்பேரவையில் திமுகவின்
கொறடாவாக இருந்தார். தொடக்கத்தில் அவர் முஸ்லீம் லீகின் இளைஞரணித் தலைவராக
இருந்தவர். இப்படித் தனி அடையாளத்தை இழக்கும் அளவுக்கும் திமுகவின் சிறுபான்மை
அணி என்னும் அளவுக்கும் கட்சியே முடங்கிப் போகும் ஒரு சூழல் இருந்தது. அது
மட்டுமில்லாமல் சமூகத்திற்குத் தேவையான உருப்படியான கோரிக்கைகளை வலியுறுத்திப்
பெறவும் தவறிவிட்டார்கள்.

2007இல் வந்த சிறுபான்மை முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை -
அண்ணாவிடம் 1967இலேயே கேட்டிருந்தால் தந்திருப்பார்; 1969இல் கருணாநிதியிடம்
கேட்டிருந்தால் கிடைத்திருக்கும். அதைச் செய்யவில்லை. நீண்ட நோக்கு இல்லாமல்
தேர்தல் வரும்போது அவர்கள் கொடுக்கும் இடங்களில் போட்டியிடுவது என்ற அளவில்தான்
இந்த உறவு இருந்தது. இது ஒரு காலத்தில் எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால்
முஸ்லீம் லீக் தனிச் சின்னத்தில் ஏணி அல்லது தராசுச் சின்னத்தில் போட்டியிட்ட
நிலை மாறி எந்தப் பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்களோ அந்தக் கட்சியின்
சின்னத்திலேயே போட்டியிடக்கூடிய நிலை வந்துவிட்டது. அப்படிப் போட்டியிட்டால்
கூட, தேர்தலுக்குப் பிறகு இவர்கள் தனிக்கட்சி என்று சட்டமன்றத்திலோ
நாடாளுமன்றத்திலோ அடையாளம் காட்டப்படும் நிலை இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம்
அந்த விதியைத் திருத்திய பிறகு இவர்கள் அந்தக் கட்சி உறுப்பினராகச்
சேர்ந்தால்தான் அச்சின்னத்தில் போட்டியிட முடியும் என்னும் நிலை ஏற்பட்டது.

இன்றைக்கு முஸ்லீம் லீகிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர அவர்கள் இருவரும் திமுகவின் உறுப்பினர்கள்.
வேலூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லீம் லீக் உறுப்பினர் என்று
சொல்லிக்கொண்டாலும் கூட அவர் திமுக உறுப்பினர் என்னும் நிலைதான் இருக்கிறது.
சட்டமன்றத்திலும் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்;
நாடாளுமன்றத்திலும் இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சமூகச் சிக்கல்களை எல்லாம்
அவர்கள் உரிய முறையில் எடுத்துக் கூறத் தவறிவிட்டார்கள்; சமூக மக்களுக்கும்
அவர்களுக்குமான இடைவெளி பெரிய அளவில் ஏற்பட்டு விட்டது. ‘இது போலப் போராட்டம்
நடத்தி சிறைப்படுவது முதலியவற்றை நாங்கள் நடத்தியதே இல்லை. இந்தச் சமூகத்தில்
போராடும் மனப்பான்மையை நீங்கள் தாம் உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று அப்துல்
சயீது சாயிபு அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் என்னிடம் நேரடியாகவே சொன்னார்.
இப்படிச் சொல்லக்கூடிய அளவில் தான் முஸ்லீம் லீகின் நிலை இருந்தது.

அதனால்தான் த.மு.மு.க வைத் தொண்ணூற்று ஐந்தில் தொடங்கியபோது அதற்கு
மிகப்பெரிய ஆதரவு இருந்தது. அதனால் சிறுபான்மை மக்கள் தொடர்புடைய உரிமைகளை இந்த
இரண்டு திராவிடக் கட்சிகளும் போதுமான அளவுக்கு நிறைவேற்றவில்லை. அவர்களுக்குத்
தேவையான அழுத்தங்களை இருக்கக்கூடிய முஸ்லீம் கட்சிகள் கொடுக்காததின் காரணமாகத்
தான் த.மு.மு.க அமைப்புத் தேவைப்பட்டு உருவாகும் நிலை ஏற்படுகிறது.

*கீற்று: திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தும் விடுதலை வாங்கிய காலத்தில்
இருந்தே பல முஸ்லீம்கள் பலர் வறுமை நிலையில் உள்ளனர். அவர்களுக்கான
சார்புநிற்றல் (representation) குறைவாக இருக்கிறது. இன்று வரை அவர்களுடைய
ஏழ்மை நிலை பெருகிக்கொண்டே போகிறது. இப்படிப்பட்ட நிலைகள் இருந்தும் முஸ்லீம்
லீக் ஏன் இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சிந்திக்கவில்லை? *

பிரிவினைக்குப் பிறகு, விடுதலைக்குப் பிறகு உள்ள காலகட்டம்
இந்திய முஸ்லீம்கள் வரலாற்றில் மிக வேதனையான ஒரு காலம். முஸ்லீம் லீக் தான்
பிரிவினைக்குக் காரணம் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்தது. ஆகவே நாம் தப்புச்
செய்துவிட்டோமோ என்னும் மனநிலையில் முஸ்லீம் லீக்கில் இருந்தவர்கள்
பணியாற்றினார்கள். கிட்டத்தட்ட எழுபது வரை மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட
பார்வையைப் பார்க்கமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு
ஓரளவு இயல்பான நிலை வந்தபிறகு இதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் 2006இல் வந்த சச்சார் குழு
அறிக்கையைப் போல இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருக்கும்போது கோபால் சிங்
குழுவின் அறிக்கை வந்தது. அது சச்சார் குழு சொன்னதை இருபது ஆண்டுகளுக்கு முன்பே
சொல்லிவிட்டது. கோபால் அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில் எங்களுக்கு
உரிமைகள் வேண்டும் என்று குரல் கொடுக்கக்கூடிய நிலை இல்லாத சூழல்தான் இருந்தது.
அதனால் முஸ்லீம் தலைமை தொலை நோக்குடன் இயங்குவதற்குத் தவறிவிட்டது என்றுதான்
சொல்ல வேண்டும்.

*கீற்று: நீண்டகாலமாக திராவிட இயக்க அரசியலில்தான் இஸ்லாமியர்கள் தங்களை
இணைத்துக் கொண்டார்கள். நாற்பதாண்டுகால திராவிட இயக்கம் இஸ்லாமிய சமூகங்களிடையே
எவ்விதமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது?*

முஸ்லீம் சமூகத்தின் நலனுக்காக பலவற்றைத் திராவிட இயக்கங்கள்
செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. சமூக நல்லிணக்கம் இங்கே நிலவுகிறது என்றால்
திராவிட இயக்கங்களின் தலைவர்களுடைய பேச்சுகள், எழுத்துக்கள் அதற்குக்
காரணமாகும். ஒப்பீட்டு அளவில் அதிமுகவை விட திமுக அதிகமாகச் செய்திருக்கிறது
என்று சொல்லலாம். அதே வேளையில் தி.மு.க ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக
எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. 1997இல் கோயமுத்தூரில்
போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகள்
‘தமிழகத்தில் ஓர் ஆட்சி இருக்கிறதா?’ என்று கேள்வி எழும் அளவுக்கு மிக மோசமாக
இருந்தன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டம், பல உயிர்கள் படுகொலை ஆகியவற்றை
எல்லாம் கண்டுகொள்ளாத ஓர் ஆட்சியாக அது இருந்தது. கடைகள் இழந்தோர்,
பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்கினார்கள். ஆனால் அங்குக் கொலைகளில்
ஈடுபட்டவர்கள், கொலைகளுக்குக் காரணமான காவல்துறை அலுவலர்கள், சமூக எதிரிகள்
ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படவில்லை. அதற்குப் பிறகு தான் கோயமுத்தூரில் தொண்ணூற்று எட்டில்
குண்டுவெடிப்பு நடக்கிறது. அதனால் திராவிடக் கட்சிகள் சில தளங்களில் நன்மைகள்
செய்திருக்கிறார்கள்; ஆனால் பிற்காலத்தில் பல தளங்களில் கோளாறுகள்
செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும்.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பதினான்கு,
முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன. புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகளுக்கும்
கல்லூரிகளுக்கும் அரசு உதவிகள் வழங்குவதில்லை என 1991இல் ஜெயலலிதா முதல்வரான
பிறகு கொள்கை முடிவை எடுத்தார். அதன் பிறகு வந்த தி.மு.க. அரசும் அதே முடிவில்
தான் உள்ளது. இதனால் கல்வி வணிகமயமாவதற்கும் எட்டாக்கனியாவதற்கும் அரசே காரணம்
என்பதும் அதனால் சிறுபான்மையினர் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுமே
வருந்தத்தக்க நிலையாக உள்ளது.* *

*கீற்று: இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற நிலை நிலவுகிறதா?
தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்ல
முடியுமா?*

இரண்டு கட்சிகளையும் மதச்சார்பற்ற கட்சிகள் எனச் சொல்வது கடினம் தான்!
ஏனெனில் இரண்டு பேருமே தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும்
கடந்த காலங்களில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டவர்கள். தங்களுடைய
கொள்கை, கோட்பாடு ஆகியவற்றைவிட ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும்
என்பதற்காகத் தேர்தல் கூட்டணி வைத்து பா.ஜ.க.வின் தலைமையை ஏற்றுக்கொண்டு
ஆட்சிக்கட்டிலில் இருந்திருக்கிறார்கள். தற்போது இரண்டு பேருமே அதற்குத்
தயக்கம் காட்டக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். எனவே பொத்தாம் பொதுவாக இவர்களை
மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்ல முடியாது. அவர்களின் ஒவ்வொரு
நடவடிக்கையையும் வைத்துத்தான் அதற்கான சாயத்தைப் பூச முடியும்.

*கீற்று: இஸ்லாமிய சகோதரர்களுக்குக் குறிப்பாக ம. ம. கட்சிக்கு இணக்கமாக எந்தக்
கட்சிகளைப் பார்க்கிறீர்கள்?*

தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி,
மார்க்சிச்டு பொதுவுடைமைக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற நிலையில்
மிக உறுதியாக இருக்கிறார்கள். இந்த இரண்டைத் தவிர, பா.ம.க. வும் ம.தி.மு.க.
வும் பாரதிய சனதாவுடன் இருந்திருக்கிறார்கள். தே.மு.தி.க. இதுவரை யாருடனும்
கூட்டணி அமைக்கவில்லை. எனவே எங்களைப் பொறுத்தவரையில் பொதுவுடைமைக் கட்சிகள்
இரண்டும் தான் மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்வதற்கான தகுதியைப்
பெற்றிருக்கிறார்கள்.

*கீற்று: நீதிக்கட்சிக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பார்ப்பனிய எதிர்ப்பு
அரசியல் என்பது இருந்து வருகிறது. இன்றும் அதற்கான தேவைகள் உள்ளன.
இவ்விடயத்தில் ம.ம.க. வின் நிலைப்பாடு என்ன?*

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் தேவை என்று மனிதநேய
மக்கள் கட்சி கருதுகிறது. அதற்கான கருத்து உருவாக்கத்தையும் செய்து வருகிறது.
சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் மிகவும் இன்றியமையாதது. அதை
எதிர்க்கக்கூடிய ஆட்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான தளத்தில் தான்
ம.ம.க. நிற்கிறது.

பொதுவான மனித நியதிகளுக்கு எதிராக இருப்போரை நாங்கள் எதிர்க்கிறோம்.
தீண்டாமைக்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்போம். தீண்டாமையை ஆதரித்து
அந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்த வேண்டும்; அந்த நடைமுறை இருக்க வேண்டும் என்று
சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகத்தான் இருப்போம்.

*கீற்று: தமுமுக - வின் அரசியல் அணியாக மனித நேய மக்கள் கட்சியை
உருவாக்கியிருக்கிறீகள். மனித நேய மக்கள் கட்சி இஸ்லாமியர்களின் அரசியல்
கோரிக்கைகளை மட்டும் முன்னெடுக்கும் கட்சியாக இருக்குமா அல்லது சமூகத்தின் பிற
பிரிவினரின் நலன்களையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்னெடுக்குமா? எவ்வாறாக
இருப்பினும், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பாலான உங்கள் பார்வைகள்
அணுகுமுறைகள் என்ன? *

ஒன்றை மட்டும் இதற்கு விடையாகச் சொல்ல விரும்புகிறேன். த.மு.மு.க.
முழுக்க முழுக்க முஸ்லீம்களுக்கான ஓர் அமைப்பாக இருந்த போதிலும்கூட, நாங்கள்
தேர்தலில் போட்டியிடக்கூடிய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்பாகவே,
த.மு.மு.க. வின் பணிகளை நீங்கள் பார்த்தீர்களேயானால் அது இரத்தத் தான சேவையாக
இருந்தாலும் சரி, விபத்து முதல் உதவி, இயற்கைப் பேரிடர் உதவி ஆகிய நிகழ்வுகளாக
இருந்தாலும் சரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர், சாலை, மின்வசதி
ஆகியவற்றில் குறைபாடாகவோ இருந்தாலும் சரி அனைத்துச் சமூக மக்களுக்காகவும் குரல்
கொடுத்திருக்கிறோம்; போராடியிருக்கிறோம். ம. ம. க. வைப் பொருத்தவரை அது ஓர்
அரசியல் கட்சி. இந்த அரசியல் கட்சியில் முஸ்லீம்கள் அதிக அளவில் இடம்
பெற்றிருக்கிறார்கள். முஸ்லீம் அல்லாதோரும் நிர்வாகிகளாகப் பல்வேறு
மட்டங்களில், அளவுகளில் செயல்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூக
உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கக் கூடிய
கட்சியாகத்தான் ம. ம. க. விளங்கும். இம்மக்களுக்காகப் பல போராட்டங்களை நாங்கள்
எடுத்திருக்கிறோம்.

முஸ்லீம் மக்கள் தொடர்பான விடயங்களுக்கு மட்டும் போராடாமல் பெட்ரோல், டீசல்,
சமையல் எரிவளி, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வை எதிர்ப்பது முதலிய பல
போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தின்
தீயவிளைவை எடுத்துரைத்து அங்குள்ள டாக்டர். புகழேந்தி ஆகியோரையெல்லாம்
இணைத்துப் போராடியிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் அனைத்தும்
மூடப்பட வேண்டும்; முழு மதுவிலக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று மதுக்கடை
மறியல் போராட்டத்தை மாநில அளவில் நடத்தியிருக்கிறோம். ம. ம. க. ஒரு பொதுவான
தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தூய்மையான அரசியல் நெறிமுறைகளை
வகுப்பதற்காக இயங்கக்கூடிய ஒரு கட்சியாகும்.

*கீற்று: பா.ம.க. தொடக்கத்தில் வன்னியர் சங்கமாக இருந்தபோது வன்னியர்களுக்கான
அமைப்பாக மட்டும் அறியப்பட்டிருந்தது. பின்னர் அவர்களிடையே ஒரு மாற்றம்
ஏற்பட்டு பா. ம. க. என்னும் அரசியல் கட்சி தொடங்கப்படுகிறது. அப்போது பெரியார்,
அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகளை முன் வைத்து, தமிழ்த்தேசியம் பேசினார்கள்;
தலித் எழில்மலை முதலிய தலித்தலைவர்களையும் மற்றவர்களையும் இணைத்தார்கள். ஆனால்
படிப்படியாக மீண்டும் மாற்றம் பெற்று பா. ம. க. வன்னியர்களுக்கான கட்சியாக
விளங்கி வருகிறது. இது போன்ற ஒரு வரலாற்றுப் பாடம் நம் கண் முன்னால்
நடந்திருக்கிறது. இதை ம. ம. க. எப்படிப் பார்க்கிறது?*

பா. ம. க. வைத் தொடங்கியபோது மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல ஒரு விடயத்தை
நாங்கள் சொல்லவில்லை. த. மு. மு. க என்கிற சமூக அமைப்பு அரசியலில் ஈடுபட
வேண்டும்; தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட ஓர் அரசியல் கட்சி வேண்டும்
என்பதற்காக ஒரு பொதுவான பெயரில் ம. ம. கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். இது
முதன்மையாக முஸ்லீம்களுக்கான ஒரு கட்சியாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில்
அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் வாதாடுவோம்; போராடுவோம். இந்தக் கோட்பாட்டை
ஏற்றுக்கொண்டு, இது முஸ்லீம்கள் அதிகமாக இருக்கக்கூடிய கட்சி என்பதை
அறிந்துகொண்டு முஸ்லீம் அல்லாதோர் ஏராளாமான பேர் எங்களுடன் இணைந்து செயல்பட்டு
வருகிறார்கள். எனவே எங்களைப் பா. ம. க. உடன் ஒப்பிட வேண்டாம். அவர்கள் கூறியது
போல நாங்கள் சொல்லவில்லை. காரல் மார்க்சுப் படத்தையும் பெரியாரின் படத்தையும்
காயிதே மில்லத்தின் படத்தையும் போடக்கூடிய பா. ம. க. இதுவரை நடந்திருக்கின்ற
சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தியதில்லை என்பது
தான் கசப்பான உண்மை. நாங்கள் அவர்களைப் போலச் சொல்லவில்லை.

இது முஸ்லீம்கள் அதிகமாக உள்ள ஒரு கட்சி; முஸ்லீம்களுக்குச் சட்டமன்றத்திலும்
நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி மன்றத்திலும் ஆக்கப் பங்களிப்பு இல்லாத ஒரு
வெற்றிடம் நிலவுகிறது. அதை நிரப்புவதற்காகத் தான் இந்த அரசியல் கட்சியாகும்.
அதே நேரத்தில் எல்லாப் பிரிவு மக்களின் சிக்கல்களையும் நாங்கள்
எடுத்துக்கொள்வோம். இதைப் புரிந்து, அறிந்து நிறையப் பேர் ம. ம. ம. வில்
உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றார்கள். அவர்கள் த. மு. மு. க. என்னும்
பாரம்பரியத்தில் எங்களுடைய பணிகளைப் பார்த்திருக்கிறார்கள். அரசியல் கட்சியாக
இல்லாத போதே தன்னலமற்ற வகையில் பணியாற்றியதைப் பார்த்திருக்கிறார்கள். அதை
மனத்தில் வைத்துத் தான் இக்கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.

*கீற்று: இராசேந்திர சச்சார் குழு அறிக்கை, இரங்கநாத் மிஸ்ரா அறிக்கை தொடர்பான
விவாதங்கள் மேலெழுந்து வரும் சூழலில் ஆக்கப்பூர்வமான செயலைக் காங்கிரசுக் கட்சி
செய்யும் என எதிர்பார்க்கிறீர்களா? நடுவண் அரசுகள் சச்சார் அறிக்கை
குறிப்பிடும் சிக்கலை எந்த அளவு தீர்க்க முன்வரும் என எதிர்பார்க்கிறீர்கள்? *

இதில் இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முதலாவது
முஸ்லீம்களின் கல்வி, பொருளியல் ஆகியன பற்றிய நீதியரசர் இராசேந்திர சச்சார்
குழுவின் அறிக்கை என்பது நிலவரத்தை எடுத்துச் சொன்னது; இரண்டாவது நீதியரசர்
இரங்கநாத மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை என்பது அந்நிலவரத்திற்குரிய தீர்வைச்
சொன்னது. சச்சார் அறிக்கை முஸ்லீம்களின் சமூகம், பொருளியல், கல்வி ஆகியவற்றின்
நிலை பல தளங்களில் இந்தியாவில் வாழும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களைவிட மிக
மோசமாக இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. நடுவண் அரசு
அமைத்த குழுவின் அறிக்கை என்பதால் அது முதன்மை பெறுகிறது. அடுத்தது 2004இல்
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரசு, தி. மு. க. ஆகியவற்றின்
தேர்தல் அறிக்கைகளில் முஸ்லீம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில்
இந்திய அளவில் இட ஒதுக்கீடு தருவோம் என உறுதிமொழி அளித்தார்கள். ஆட்சிக்கு
வந்தபின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த அளவுச் செயல்திட்டத்தில் ஆறு
மாதங்களுக்குள் ஓர் ஆணையத்தை அமைத்து அவ்வாணையத்தின் பரிந்துரையைப் பெற்று
கல்வி, வேலை ஆகியவற்றில் இட ஒதுக்கீடு தருவோம் எனச் சொன்னார்கள். மிஸ்ரா ஆணையம்
அதற்காகத் தான் அமைக்கப்பட்டது.

மருத்துவ ஆய்வு என்பது ஒரு மனிதனின் நோய்களை சொல்லும்; மருத்துவர் அதற்கேற்ப
மருந்துகளைக் கொடுக்க வேண்டும். சச்சார் மருத்துவ ஆய்வு செய்பவர் போலச்
செய்திருக்கிறார்; மிஸ்ரா மருத்துவராகச் செயல்பட்டிருக்கிறார். சச்சார்
குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை நடுவண் அரசு
எடுத்திருக்கிறது. பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு
உதவித்தொகை வழங்கும் திட்டம் அப்படி வந்ததுதான்! இந்தியாவில் சிறுபான்மையினர்
அதிகமாக வாழும் தொண்ணூறு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகள் செய்ய
வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வளர்ச்சிப் பணிகள் முஸ்லீம்கள்
அல்லாதோருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆனால் இதற்கு மேல் வேறெதையும் செய்யவில்லை
என்பதுதான் உண்மை.

மிஸ்ரா அறிக்கையை வெளியிடக் கோரி நாங்கள் 2007ஆம் ஆண்டு மார்ச்சு ஏழாம்
நாள் நாடாளுமன்றத்திற்கு எதிரே பேரணி நடத்தினோம். அதன்பின் தான் 2007 ஆம் ஆண்டு
மே மாதம் அந்த அறிக்கையைத் தலைமை அமைச்சரிடம் கொடுத்தார்கள். அந்த அறிக்கையை
நடைமுறைப்படுத்த வேண்டி முதல்வர் கருணாநிதியிடமும் தலைமையமைச்சரிடமும் பலமுறை
வலியுறுத்தியிருக்கிறோம். அந்த அறிக்கையை 2009 ஆம் ஆண்டு திசம்பரில்தான்
நாடாளூமன்றத்தில் வைத்தார்கள்; ஆனால் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் எந்தவித
நடவடிக்கையையும் நடுவண் அரசு எடுக்கவில்லை. சச்சார் அறிக்கையையும் மிஸ்ரா
அறிக்கையையும் மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்களோ என்னும் ஐயம்
இதனால்தான் ஏற்படுகிறது. உருப்படியாகப் பல செயல்களை அரசு செய்ய
வேண்டியிருக்கிறது. அவற்றுள் இட ஒதுக்கீடு என்பது முதன்மையான ஒன்று. ஒரு சமூகம்
பொருளியலில் முன்னேறக் கல்வி இன்றியமையாத ஒன்று. அக்கல்வியை ஊக்குவிக்க மாணவர்
உதவித்தொகை(‘Scholarship’) வழங்குவது என்பதெல்லாம் சிறியதுதான்! அதற்கு
மாற்றாகச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள், உயர்கல்வி நிலையங்கள்
ஆகியவற்றிற்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு நடத்த வேண்டிய கல்வி
நிலையங்களைத் தனியார் நடத்துகிறார்கள்; தனியார் நடத்த வேண்டிய மது விற்பனையை
அரசு நடத்துகிறது என்னும் இழிநிலை இங்கு இருக்கிறது. இந்நிலை மாறி
எல்லோருக்கும் கல்வி கிடைக்கும் நிலை வரவேண்டும். குறிப்பாகச்
சிறுபான்மையினருக்கு அத்தகு வாய்ப்பைக் கொடுத்தால்தான் இச்சமூகம் முன்னேறும்.

*கீற்று: முதலில் தேர்தலைப் புறக்கணிப்பது, பின்னர் சிறிய அமைப்பாக உருவாகி ஒரு
சில இடங்களில் நின்று வென்று இருப்பை உனர்த்துவது, பின் ஆட்சியை நோக்கி நகர்வது
என்பதைத்தான் தி.மு.க., பா. ம. க. ஆகிய கட்சிகள் செயல்படுத்தி வந்திருக்கின்றன.
அண்ணா, கருணாநிதி ஆகிய அறிவுசார் கூட்டத்தைக் கொண்டு மக்களைக் கவர்வது,
தலித்துகளின் கோரிக்கைகளைப் பேசுவது, பெண்களின் கோரிக்கைகளைப் பேசுவது எனப்
பொதுவான கோரிக்கைகளைப் பேசித் தான் தி.மு. க. மக்கள் இயக்கமாக மாறியது
என்பதையும் பார்க்கிறோம். இவற்றில் இருந்து ம.ம. கட்சியின் படிப்பினை என்ன?
உங்களுடைய செயல்திட்டம் என்ன? அறிவுசார் கூட்டத்தின் மூலம் மக்களைக் கவர்வது
பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? குறிப்பாகத் தலித்துகள் முன்னேற்றத்திற்கு
நீங்கள் முன் வைக்கும் திட்டம் என்ன? *

ம. ம. கட்சியைத் தி.மு.க. உடனோ அ.தி.மு.க உடனோ ஒப்பிட முடியாது. நான்
முன்னரே சொன்னது போல இது சிறுபான்மை மக்களை முன்னிலைப்படுத்தும் ஒரு
கட்சியாகும். அதில் மற்றவர்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம். அதே
நேரத்தில் ம. ம. கட்சியில் நிர்வாகிகளாக இப்போது இருப்பவர்கள் திடீரென ஓர்
அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை; திரைத்துறை முதலிய வேறு பின்புலத்தில்
இருந்தும் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை. நான் மனித உரிமைகளின் பல தளங்களில்
பணியாற்றியிருக்கிறேன். ‘பியுசில்’ (‘P.U.C.L’) அமைப்பைச் சேர்ந்தவர்களுடன்
சேர்ந்து பணியாற்றியதன் வெளிப்பாடுதான் த. மு. மு. க. அமைப்பைத் தொடங்க
வேண்டும் என்னும் நினைப்பு வரக் காரணம் என்று கூடச் சொல்லலாம்.

முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அல்லாத அறிவுசார் கூட்டம் எனப் பலர் எங்களுடைய
பின்புலமாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களை அடையாளம் காட்டலாம்; பலர்
அடையாளம் காட்டாமல் இருக்கலாம். 2009ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் பல
அரசியல் கட்சிகள் தொடாத பல விடயங்களையும் கருத்துகளையும் நாங்கள் சொன்னோம்.
சான்றாகக் ‘கடலோர மேலாண்மைத் திட்டம் என்னும் பெயரில் நடுவண் அரசு கொண்டு வரும்
திட்டம் எப்படிக் கடலோர மக்களைப் பாதிக்கும்? அதற்கு மாற்றாக என்ன செய்ய
வேண்டும்?’ என்பதைச் சொன்னதைச் சொல்லலாம். இது ஒரே ஒரு சான்றுதான்! இதே போலத்
தலித்து மக்கள் எங்கள் தொப்புள் கொடி உறவு என்னும் அடிப்படையில் ஏராளமான
செயல்திட்டங்கள் மட்டுமல்லாமல் களத்தில் இறங்கியும் நாங்கள்
செயல்பட்டிருக்கிறோம். எனவே ஒரு தொலைநோக்குப் பார்வை, அதற்கான அறிவுசார்
பின்புலம் ஆகிய அனைத்தையும் கொண்டுதான் ம. ம. க. இயங்கிக் கொண்டிருக்கிறது.

*கீற்று: சிங்கள பெருந்தேசிய இன வன்முறையையும், இலங்கை அரசையும் வெறுமனே தமிழ்
மக்களுக்கு எதிரானது என்று மட்டும் பார்க்கிறீர்களா? அல்லது ஒட்டு மொத்த
சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது என்று பார்க்கிறீர்களா?*

ஆமாம். ஒட்டுமொத்தமாகச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தான் ஈழச்சூழல்
உள்ளது.

*கீற்று: கடந்த ஆண்டு ஈழப்போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள். ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தது. இது அமைதிக்கு
வழிவகுக்கும் என்று கருதுகிறீர்களா?*

இவற்றையெல்லாம் பற்றி நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். போர்
முடிந்து விட்டது; அமைதி திரும்பி விட்டது என்னும் நிலையில் மக்கள் இருந்தாலும்
கூட சர்வாதிகாரத்திற்குத் தான் இந்தப் போர் வழிவகுத்திருக்கிறது. பன்னாட்டு
அவையின் பார்வையாளர் குழுவே வரக்கூடாது எனப் பன்னாட்டு அவையின் அலுவலகத்திற்கு
முன் நின்று கொக்கரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது; பன்னாட்டு அவையின்
பொதுச் செயலர் தம்முடைய அலுவலர்களை எல்லாம் திரும்பப் பெறும் சூழல்
அமைந்திருக்கிறது. இப்படி சர்வாதிகாரத்திற்கு உரிய ஒரு முன்னோட்டமாகத் தான்
சூழல் இருக்கிறது. சிங்களவர்கள், தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று
மூன்று இனங்கள் இருந்தாலும் இந்த இரண்டு சிறுபான்மை இன மக்களின் தனித்தன்மையைப்
பாதுகாக்கும் அளவில் சூழல் மாற வேண்டும் என்கிற அழுத்தத்தை நாம் அனைவரும் ஒன்று
சேர்ந்து கொடுக்க வேண்டும். தமிழர்களின் தலைமை எப்படிச்
சிதைக்கப்பட்டிருக்கிறதோ அதே போல எம். எச். அஸ்ரப் அவர்களின் மரணத்திற்குப்
பிறகு முஸ்லீம்களின் தலைமையும் கூடப் பல கூறுகளாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது
என்னும் வருத்தமான நிலைதான் இருக்கிறது. மீள்குடியேற்றம் எதுவும் இல்லாத
சூழல்தான் நிலவுகிறது. இலங்கை அரசு முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும்
தன்னாட்சி தர வேண்டும். இந்தியாவில் நாம் பேசும் மாநிலத்தன்னாட்சியையாவது
குறைந்தது அவர்களுக்குத் தரவேண்டும் என்பது தான் இச்சிக்கலுக்குத் தீர்வாக
அமையும்.

*கீற்று: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குறுங்குழுவாதப் பிரிவினர் 1986-ல் விடுதலைப்
புலிகள் யாழ்பாண முஸ்லீம்களை வெளியேற்றதையும் கிழக்குப் பகுதியில்
தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களையும் குறிப்பிட்டு
புலிகள் இயக்கத்தை விமர்சித்து வருகிறார்கள். அத்தகைய சம்பவங்களைக்
குறிப்பிட்டு ஈழ விடுதலைக்கான நியாயத்தையே மறுத்தும் வருகிறார்கள். இலங்கை
அரசின் பக்கம் சாய்கிற போக்குகள் வளர்ந்திருக்கிறது. ஆனால், ஈழத்தில்
இஸ்லாமியர்கள் மீது மோசமான தாக்குதல்கள் நிகழத் தூண்டுதலாகவும் காரணமாகவும்
இருந்த கிழக்குப் மாகாண முதல்வராக இப்போதிருக்கும் கருணா மீது விசாரணை நடத்தக்
கோருவதில்லை. இது குறித்த உங்கள் பார்வைகள் என்ன? பொதுவில் ஈழ விடுதலைக்கு
நியாயம் இருப்பதாக நினைக்கிறீர்களா? *

ஈழவிடுதலை என்பது ஒரு தனி விடயம். நான் இந்தத் தலைப்புக்குள் போக
விரும்பவில்லை. ஆனால் அம்மக்களின் உரிமைகள் – அவர்கள் ஈழத்தமிழர்களானாலும் சரி,
முஸ்லீம்களானாலும் சரி, மலையகத் தமிழர்களானாலும் சரி, அவர்களுடைய உரிமைகளைப்
பறிக்கும் விதத்தில் இலங்கை அரசு நடந்து கொண்டிருக்கிறது. அது
கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அதே நேரத்தில் ஈழத்தின் வடகிழக்கு மாகாணத்தில்
வாழக் கூடிய முஸ்லீம்கள் பல நிகழ்வுகளில் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி
(‘Caught in cross fire’) என்பது போல இரண்டு மோதல்களுக்கு இடையில் சிக்கித்
தவித்துத் தங்கள் வாழ்வை, நிலத்தை இழந்து ஆழமாகக் காயப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் கருணாவுக்கு ஆதரவாகவெல்லாம் இல்லை. அவர்களுடன் நான் தொடர்பில்தான்
இருக்கிறேன். கருணாவை அவர்கள் நம்பவில்லை. இந்தக் காயங்களுக்கு மருந்து போடும்
வகையில் நல்லிணக்கம் மலர்வதுதான் சிறுபான்மைச் சமூகங்கள் தங்கள் உரிமைகளை
வென்றெடுப்பதற்கான ஒரு வழியை அமைக்கும்.

*கீற்று: நல்லிணக்கம் ஏற்படுத்தும் அதே நேரம் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட
வேண்டும் அல்லவா?*