அவனுக்கு வயது 22. மாநிறம். . அதிர்ந்து பேசமாட்டான். மிக அமைதியானவன்.
சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால் வசிப்பது வறுமைக்கோட்டுக்கு கீழே. அவனுடைய தந்தை. தேர்ந்த நெசவாளி. அவருக்கு உதவியாய் அவனது அம்மா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தங்கை.
அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்தான். ஆனால் அவன் பணிந்துபோக தயாராகயிருந்தான். வறுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் இந்த கோட்டிலிருந்து விலகி தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற வெறி.
பெரும் முயற்சிக்குப் பின்னர், துபாயில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் ரூ.10000.
பிறந்தது முதல், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தன் பெற்றோரை பிரிந்ததில்லை அவன். பணியில் சேர்ந்த பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக முடிந்தது. இந்த பிரிவு அவனை வருத்தமடையச் செய்தாலும், தன் குடும்பம் நல்ல பொருளாதார நிலைமைக்கு உயர இது அவசியம் என்று கருதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
பணம்..பணம்..பணம்..இது ஒன்றே முக்கியம். குடும்பத்தின் வறுமை ஒழிய தன் கவனம் முழுதும் பணம் சம்பாதிப்பதிலேயே இருக்க வேண்டும் என்பது அவனுடைய லட்சியம், வெறி, சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 மணிக்கு அவனுடைய ஷிஃப்ட் துவங்கும். ஆறு மணிக்கு முன்னே அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்கள் கிழமை. பனி விலகாத காலை நேரம். ஆறாவது தளத்தில் உள்ளது அலுவலகம். தரைத் தளத்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் தளம் சென்றடைந்தவுடன் லிஃப்ட் கதவு திறந்தபோது கீழே விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்!
அங்கிருந்த செக்யூரிட்டிகள் அவனுடைய டீமுக்கு தகவல் அளித்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் மறுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவல்' என்று ரிப்போர்ட்டில் பதிவு செய்தார்.
பின்னர் அவனுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தபோது தெரியவந்தது. அவனுக்கு புகை, குடி என்று எந்த பழக்கமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் அவனுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தன் குடும்பத்துக்கு அனுப்பிவிடுவான். அந்த 3500ல் போக்குவரத்து, அலைபேசி, உணவு ஆகியவற்றிற்கான செலவுகள் அடங்கும். செலவைக் கட்டுப்படுத்த அவன் மேற்கொண்ட ஒரு முடிவு..தினமும் காலை உணவைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்ணுவது.
இந்த பழக்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி அது இதயத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வயதில் மாரடைப்பு! இது ஏதோ கற்பனையாக எழுதப்பட்ட வரி அல்ல. அவனுடைய உணவு பழக்கத்தை அவன் நண்பர்கள் கூறக்கேட்டு அறிந்த பின் மருத்துவர் சொன்னது.
பணம் ஒன்றையே பிராதனமாகக் கருதி பரபரவென பறந்துகொண்டிருக்கும் இந்த யுகத்தில், நம்மில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் காரணம்.."டைம் இல்ல". சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்?
இதற்கு மேல் இதைப்பற்றி நீங்களே சொல்லுங்கள்!
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
(இத் தகவலை மின்னஞ்சல் வழியாக என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சோழபுரம் ஹாசிக் மைதீன் அவர்களுக்கு நன்றி.)