25 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட ரமலான் மிகவும் வெப்பம் நிறைந்ததாக இருக்குமென்று வானிலைத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வெப்ப சூழலைப் போல முன்னெப்பொழுதும் கண்டதில்லை என துபாய் பிறை கமிட்டிக்கான வானிலை துறையை சேர்ந்த அதிகாரி ஹஸ்ஸான் அல் ஹரிரி கூறியிருக்கிறார். 1998 ஆம் வருடம் இது போன்ற காலநிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரமலான் நடப்பு கால் நூற்றாண்டு காலத்தில் மிகப்பெரிய ரமலானாக அமைந்திருப்பதாக அமீரகத்தின் பிரபல ஆங்கில நாளேடுகள் தெரிவித்துள்ளன.
கடுமையான வேலை செய்பவர்கள் தேவை பட்டால் நோன்பை முறித்துக்கொல்ள்ளலாம்,பின்னர் அந்த நோன்பை நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும் என்று சில தினங்களுக்கு முன்னர் அமீரகத்தின் இஸ்லாமிய விவகாரத் துறை மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.