வியாழன், 29 ஏப்ரல், 2010
தமிழகத்தில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகம்
நாம் சிறுபான்மையினரா தமிழகத்தில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகம் இதை நாம் சொல்லவில்லை அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தான் சொல்கிறது.
முதல் பெரிய சமூகம் பறையர்,
தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 504. >.
இரண்டாவது பெரிய சமூகம் வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.
மூன்றாவது பெரிய சமூகம் முஸ்லிம்கள் 34 லட்சத்து 70 ஆயிரத்து 647
கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைவிட அதிகம் இருந்தும் அவர்கள் மதரீதியான ஒற்றுமை இல்லை சாதிரீதியாகவே அவர்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அரசியல்கட்சிகளும் முன்னிலைப்படுத்துகின்றனர்.
. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கிய முக்குலத்தோர் என்று குறிக்கப்பெறுவர்.
கள்ளர்,களும், மறவர்களும் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர். அகமுடையர் மற்ற இரு பிரிவினரைவிட குறைவானவர்களே அதிகமாக கணக்கிட்டாலும் 8 லட்சத்தை தாண்டமாட்டார்கள்.
ஆக முக்குலத்தோர் மக்கள்தொகை 25 லட்சம்
அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம்
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த 109 சாதிகளுடைய மொத்த மக்கள் தொகை 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்து 987 பேர். இதிலே வன்னியர் மாத்திரம் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.
இது தவிர மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, அப்பநாடு, கொண்டயம் கோட்டை மறவர், அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரிïர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர்.
எஞ்சியுள்ள 41 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேரில் எத்தனை சாதியினர் தெரியுமா? சலவை தொழிலாளிகள் 4 லட்சத்து 45 ஆயிரத்து 637 பேர். மருத்துவர், நாவிதர், மங்களா என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர். போயர், ஒட்டர் 4 லட்சத்து 9 ஆயிரத்து 567 பேர். ஆண்டிப் பண்டாரம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 770 பேர். இசை வேளாளர் 58 ஆயிரத்து 327 பேர். குலாலா 3 லட்சத்து ஆயிரத்து 179 பேர். குரும்பர் 1 லட்சத்து 83 ஆயிரத்து 689 பேர். மீனவர் 2 லட்சத்து 71 ஆயிரத்து 164 பேர். தொட்டிய நாயக்கர் 2 லட்சத்து 71 ஆயிரத்து 318 பேர். வேட்டுவ கவுண்டர் 1 லட்சத்து 25 ஆயிரத்து 886 பேர். டொம்மாரா 4 ஆயிரத்து 436 பேர். எரவல்லர் 1,377 பேர். கொரச்சா 3,429 பேர். குருகினிசெட்டி 4,225 பேர். நோக்கர் 7,559 பேர். முக்குவர் அல்லது முகயர் 4,358 பேர்.
பண்ணையார் 9,758 பேர். தொண்டமான் 14 ஆயிரத்து 36 பேர். பட்டு துர்காஸ் 441 பேர். டோம்ஸ் 260 பேர். தொங்க போயா 238 பேர். கொங்க ஊர் கொரச்சார் 287 பேர். தேவகுடி தலையாரி 1,955 பேர். தொப்பை கொரச்சாஸ் வெறும் 51 பேர். குடு தாசரிகள் 482 பேர். மொண்ட கொறவர் 196 பேர். மொண்ட கொல்லா 64 பேர். சேலம் மேல்நாடு கொறவர் 1,839 பேர். சேலம் உப்புக் கொறவர் 2,782 பேர். சாரங்க பள்ளி கொறவர் 54 பேர். தோகமலை கொறவர் அல்லது கேப்மாரிகள் 512 பேர். வயல்பாடு அல்லது நாவல்பேடா கொரச்சாஸ் 15 பேர். வடுவார்பட்டிக் கொறவர் 381 பேர். வரகனேரி கொறவர் 313 பேர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற 109 சாதிகளின் மொத்த மக்கள் தொகை 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்து 987 பேரில், வன்னியர் மாத்திரம் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.
ஆதாரம் விகடன் தமிழ்கூடல் டட்ஸ் தமிழ் நக்கீரன்
ஹிபாயத்துல்லா
முன்னாள் தஞ்சை மாவட்ட த.மு.மு.க.செயலாளர்
A.Hibayathullah
Ex.District Secreatary T.M.M.K.
தஞ்சாவூர்
நன்றி:அப்துல் ரசாக் (துபாய்)
திங்கள், 26 ஏப்ரல், 2010
ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர்.அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள்தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்குவன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமதுகணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது.குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரசஉத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர்.இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்தவிரும்புகின்றோம்.
மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்.நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரதுமனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களைவெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க,அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (4:19)மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்;‘பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!’ எனஉபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி)
அலட்டிக்கொள்ளக் கூடாது:
பெண்களிடம் சில நாணல்-கோணல்கள் இருக்கும். அவற்றை அலட்டிக்கொள்ளக் கூடாதுஎன நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.பெண்கள் வளைந்த எலும்புகளால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரேயடியாகநிமிர்த்த முயன்றால் முறித்து விடுவீர்கள் என நபி(ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள்.நிறைகண்டு நிம்மதி பெறுங்கள்!மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;‘முஃமினான் ஆண் தனது முஃமினான மனைவியை விட்டும் பிரிந்து விடவேண்டாம்!அவளிடத்தில் ஒரு விடயத்தில் குறைகண்டால் அவளிடத்தில் காணப்படும் நல்லவிடயத்தை நினைத்துத் திருப்தி கொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள். (சுனனுல் குப்ரா)
தண்டிக்கும் அனுமதி:
நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும்வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின்நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்குமுற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதிஅளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.தண்டனை என்பது மருந்து போன்றதாகும். நோய் தீர்ந்த பின்னர் மருந்துதேவைப்படாது. எனவே உரிய பிரச்சினைக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தவேண்டும்.அடுத்தது, ‘தண்டித்தல்’ என்பது திருத்துவதற்கான ஆரம்ப விதிமுறையல்ல.திருத்துவதற்கான இறுதி வழிமுறை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மனைவிவிடயத்தில் தவறான போக்கைக் காணும் போது பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.மாற்றம் இல்லையென்றால் படுக்கையை விட்டும் பிரிந்து உளவியல் ரீதியில்அவளிடம் மாற்றத்தைக் கொண்டுவர முயலவேண்டும். அறிவு ரீதியான முயற்சியும்,உளவியல் ரீதியான வழிமுறையும் பயனளிக்காத போது இறுதிக்கட்டமாக உடல் ரீதியானஅணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.இது குறித்துக் குர்ஆன் கூறும் போது;பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும்சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமதுசெல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ளபெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும்சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக்கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ,அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தா விட்டால்) படுக்கைகளில்அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு(இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்குஎதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும்,பெரியவனுமாக இருக்கின்றான். (4:34)‘அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாகஅடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)‘முறையற்ற தண்டித்தல்’ குடும்பத்தில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யுமேதவிர குறைக்காது. மனைவியின் மனதில் கணவன் மீது வெறுப்பை விதைக்கும்.இதனால் சில பெண்கள் கணவனைப் பழிவாங்க நினைத்துக் கொலை கூடச்செய்கின்றனர். சிலர் தன் மீது அன்பில்லாதவனைத் வஞ்சம் தீர்ப்பதற்காககள்ளக் காதலர்களை நாடுகின்றனர். இதற்கும் துணியாத சில மனைவியர்எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கணவனின் நிம்மதியையும், கண்ணியத்தையும் குறைக்க முற்படுகின்றனர்.மற்றும் சிலர் தற்கொலை செய்து தாம் பிரச்சினையிலிருந்து தப்பி விடுகின்றஅதேவேளை கணவனுக்குக் கேவலத்தையும், தண்டனையையும் கொடுக்கமுற்படுகின்றனர்.எனவே, பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் வழி பிரச்சினையைத்தீர்ப்பதாக அல்லது குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர குழப்பத்தைக்கூட்டுவதாக இருக்கக் கூடாது.
ஷரீஆவின் வரையறைகள்:
அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடைவிதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்துகொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக்கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பலமனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்)அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள்(தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)எனவே, மனைவியருக்கு அடிக்கும் அதிகாரம் என்பது விருப்பத்திற்குரிய ஒன்றுஅல்ல. ‘தவிர்த்தால் நல்லது; தவிர்க்க முடியாது’ என்ற அளவுக்குத் தலைக்குமேல் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், சில வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்டஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்:
(1) முகத்தில் அறையக் கூடாது:
முகம் கண்ணியத்திற்குரிய உறுப்பு. அதன் மூலந்தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூதுசெய்யப்படுகின்றது. ‘முகத்தில் அறைய வேண்டாம்!’ என நபி(ஸல்) அவர்கள்தடுத்துள்ளார்கள். (அபூதாவூத்)
(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:
சில வக்கிரம் கொண்ட ஆண்கள் பெண்களின் மார்பகங்களில் சிகரட்டால் சுடுவது,பிறப்பு உறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களைச் செய்து வருகின்றனர்.இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது.
(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:
நாம் ஏற்கனவே குறிப்பிட்ட (4:34) வசனமும், ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸும்இதைத்தான் உணர்த்துகின்றன. இது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது,‘பாதிப்பு ஏற்படுத்தாத அடியாக இருக்க வேண்டும்!’ எனக்குறிப்பிடுகின்றார்கள்.இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘அடி ஒருஉறுப்பை முறிப்பதாகவோ, அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது!’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் மனைவியின் கண்கள்சிவக்கும் அளவுக்கோ, உதடுகள் வெடிக்கும் விதத்திலோ, பல்லு உடையும்விதத்திலோ, தோல் வீங்கும் விதத்திலோ அடிப்பவர்கள் தெளிவாக இஸ்லாத்திற்குமுரண்படுகின்றனர். இவர்கள் தமது மனைவியைத் திருத்த முன்னர் தம்மைத் திருத்திக்கொள்ளக்கடமைப்பட்டுள்ளனர்.
(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:
மனைவி மீது பிறர் முன்னிலையில் வெறுப்பை வெளிப்படுத்துவதைக் கூட இஸ்லாம்விரும்பவில்லை. ‘வீட்டைத் தவிர வேறு இடத்தில் அவள் மீது வெறுப்பைவெளிப்படுத்தாதே!’ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சில ஆண்கள்மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவளைத் தாக்கி அதன் மூலம் முழுக்குடும்பத்தையும் அவமானத்துக்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்கவிரும்புகின்றனர். இது தவறாகும்.
(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:
தவறுக்காகத் தண்டிக்கும் போது அந்தத் தவறுக்குத் தக்கவாறே தண்டிக்கவேண்டும். சின்னக் குற்றம் செய்தவளுக்குப் பெரிய தண்டனையளித்தால் அதுகுற்றவாளியைத் திருத்தாது. அவளைக் குமுறச் செய்து மீண்டும் வெறியுடன்தவறு செய்யத் தூண்டும்.(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும்.புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவை)களுக்கும்பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர்உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்புமீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! (2:194)நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கேதண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவேமிகச் சிறந்ததாகும். (16:126)மேற்படி வசனம், எமது எதிரி எம்மைத் தாக்கினால் கூட அவனைப் பதிலுக்குத்தாக்கும் போது வரம்பு மீறி நடக்கக் கூடாது. அவன் தாக்கிய அளவே பதில்தாக்குதல் கொடுக்க வேண்டும் என எமக்குக் கட்டளை இடுகின்றது. எதிரிவிடயத்திலேயே இவ்வளவு நேர்மையை இஸ்லாம் வலியுறுத்தும் போது எமதுவாழ்க்கைத் துணைவியின் தவறுக்காகக் கண்-மண் தெரியாது கொடூரமாகநடந்துகொள்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்!?மனைவியைத் தண்டிக்கும் கணவன் தனது நோக்கம் மனைவியை சீர்திருத்துவதுஎன்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிதீர்ப்பதோ, வஞ்சம் தீர்ப்பதோ தனதுஇலக்கு அல்ல என்பதில் அவன் அவதானமாக இருக்க வேண்டும்.
அதற்கு மாற்றமாகத்தனது கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்க்க முடியாது. சில கணவர்கள் தன்னைமறந்து மனைவியைத் தாக்குகின்றனர். அப்போது அவர்களது புலன்கள் அனைத்தும்மரணித்து விடுகின்றன.அவன் அடிக்கின்றான்; தனது கை அவளது உடலில் எந்த இடத்தில் விழுகின்றதுஎன்பது அவனுக்குத் தெரியாது. உதைகின்றான்; தனது கால் எங்கே படுகின்றதுஎன்பது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திட்டுகின்றான்; தனது வாய்பேசியது என்ன என்பது அவனுக்குத் தெரியாது. அடிப்பதை நிறுத்துமாறு அவள்கெஞ்சுகின்றாள்; அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுவதில்லை. அவள்பாதுகாப்புக் கோறுகிறாள்; இவன் பாதுகாப்பளிப்பதில்லை. அவள் அழுகிறாள்; கத்துகிறாள்;இவனது உள்ளம் இரங்குவதில்லை. சிலபோது அவளது ஆடைகள் களைந்து, கிழிந்து,உடல் இரத்தம் வழிந்தால் கூட இவனது கண்களுக்கு அவை புலப்படுவதில்லை.இந்த நிலையில் இல்லறத்தைத் தொடர்பவன் தனது மனைவியைத் திருத்தி விடமுடியாது. எதற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது நல்ல எதிர்வினையைஉண்டுபண்ணாது.
எனவேதான் மனைவியைத் தண்டிக்க அனுமதிக்கும் வசனத்தை அல்லாஹ் முடிக்கும்போது; ‘அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராகவேறு வழியைத் தேடாதீர்கள். அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும்இருக்கின்றான்’ (3:34) என்று முடிக்கின்றான். தான் தனது தவறுக்குவருந்துவதாகவோ அல்லது தான் தனது தவறுக்குக் கட்டுப்படுவதாகவோ வார்த்தைமூலமோ, செயல் மூலமோ மனைவி உணர்த்தினால் அதன் பின் அவளுக்கு அடிப்பது தடையாகும்.
இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது;
‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை.அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தைஅல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும்ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீதுஅத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தைஉணர்த்துகின்றது.
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை:
இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப்பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கானஅழகான முன்மாதிரியை நாம் நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம்.‘போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள்எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமதுபணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி நபி(ஸல்) அவர்கள் தமதுமனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்றமுனைய வேண்டும்.தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்துமுள்ளார்கள்.‘உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப்பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!’ எனக் கூறிநபி(ஸல்) கண்டித்தார்கள். (புகாரி)
ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும்,அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்களுடன் ஆலோசனைசெய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!’ என்று காரணம் கூறிமாற்று ஆலோசனை கூறினார்கள்.‘உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால்அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!’ (திர்மிதி) எனக் கூறிய நபி(ஸல்)அவர்கள் ‘பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்றுஅபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்கஅம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
காரணங்களைக் கண்டறிவோம்:
கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டியஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும்.குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில்ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தைஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத்தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும்குறைகளைக் களைய வேண்டும்.மனைவி தரப்பில்:மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்துவிடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களையமுனைய வேண்டும்.
(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:
இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும்.கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல்அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம்கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறியபெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம்முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள்கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:
கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல்அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தைஉண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும்இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் ‘அவர்அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!’ என்று மறுக்கவேண்டும். இவ்வாறு நடக்கும் போது ‘தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீதுமுழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும்.வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் ‘நான் செய்வேன். உன்னால் தடுக்கமுடிந்தால் தடு பார்க்கலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும்.சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சாரவிடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தைவெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போதுகணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பானபொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக்கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப்பேசித் தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும்.
(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:
பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக்கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன்தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரைஅவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவேமலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப்பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத்தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர்.இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.
(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:
மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும்.அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம்கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போதுஅவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்பவன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.
(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:
ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக்குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால்உள்ளே எடுக்க வேண்டாம்!’ என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவதுமனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால்தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவதுபோன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில்சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.
(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:
சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படிமஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள்முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்படவேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில்பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சிலஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இதுதவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.
(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:
மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்ஒருமுகப்படுத்திச் செயல்படும் திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவிதண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்டபொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும்பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும்உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்றஎண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் தாயைமுழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேதவாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர். இரண்டும் தவறானவைகளாகும்.இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டுஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும்சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாகஇருப்பதை இது உறுதி செய்கின்றது.
(3) தவறான பிள்ளைப் பாசம்:
ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால்அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத்தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும்,குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம்ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச்செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம்மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும்தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண்குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்கமுற்படுகின்றான். இது தவறாகும்.இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும்அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத்தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதைவிமர்சிக்கவோ கூடாது.பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்தஎரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாகஇருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும்,கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக்குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள்தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில்மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண்தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவதுஏற்படுத்தவும் முனையலாம்.
(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:
சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச்சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள்உண்டு.பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்றபோது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டிவிட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர்.
இவை தவறானவழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்றுஎண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும்,இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.
புதன், 21 ஏப்ரல், 2010
செய்தி சொல்லும் சேதி
எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்
பொதுமக்கள் கூறியதாவது: மழை பெய்து கொண்டிருந்த போது, ஒரு ஆட்டோ அந்த பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்த ஒரு நபர் இந்த முதியவரை அப்பகுதியில் இறக்கிவிட்டார். இருட்டாக இருந்ததால் ஆட்டோவையும், இறக்கிவிட்ட நபரையும் அடையாளம் காணமுடியவில்லை. முதியவர் அங்கேயே கிடந்தார். மறு நாள் காலையில், நாங்கள் 108 ஆம்புலன்சிற்கு போன் செய்தோம். அவர்கள் 'இந்த முதியவரை எடுத்துச் செல்ல முடியாது' என மறுத்துவிட்டனர். அவர் பலம் பெறுவதற்காக சத்துமாத்திரை மற்றும் ஊசி போட்டுச் சென்றனர். தல்லாகுளம் போலீசாரையும் தொடர்பு கொண்டோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இப்பகுதி மக்கள் இந்த முதியவருக்கு உணவு அளிக்கிறோம். குடும்ப பிரச்னை காரணமாகவே அவரது உறவினர்கள் அல்லது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம், என கருதுகிறோம்,'' என்றனர்.
அவரிடம் நாம் விசாரித்த போது, '' தண்ணீர், டீ தாருங்கள்' என கேட்டு பருகிக் கொண்ட அவர், தன்னை பற்றி கூற பேச மறுத்து விட்டார்.
உடல் நலம் குன்றி, மனஉறுதி தளர்ந்து, வயதான நிலையில் தெருவோர திண்ணைகளை தேடி அலையும், அவரது பரிதாப நிலையை உணர்ந்து உறவினர்கள் வந்து காப்பாற்ற வேண்டும், இல்லையேல் கருணை உள்ளத்துடன் செயல்படும் முதியோர் இல்லங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் இவருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
நவ நாகரிக உலகத்திலே காசு மட்டுமே வாழ்க்கை என்ற அளவில் மனித இனம் மிக வேகமாக பணத்தை சம்பாதிப்பதிலேயே குறியாக வாழ்ந்துக்கொண்டு பெற்ற தாய் தகப்பனை மறக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் முதியோர் இல்லங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நமது இந்திய தேசத்திலும் கூட இத்தகைய இல்லங்கள்
அதிகரித்து வருவதை கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தினமலர் செய்தியும் இது தொடர்பானது தான்.
இஸ்லாத்தின் அறிவுரை....
இஸ்லாம் பெற்றோரைப் பேணுவது குறித்து மிகவும் கடுமையாக நாகரீகமே வளர்ந்திராத காலத்தில் சுமார் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தி உள்ளது.
குர்ஆன் கூறுகிறது...
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான் அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால்,அவர்களை சீ என்று (எரிச்சலோடு) சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம், இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேசுவீராக!
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை (ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களுக்குக் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக. (அத்தியாயம் 17 : வசனங்கள் 23 , 24 )
இவ்விரு வசனங்களின் அறிவுறுத்தலின் படி பெற்றோரைப் பேண முயற்சிப்போம்.!
14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் நிரபராதி என விடுதலை ஆனவர்!
திருடப்பட்ட ஒரு மாருதி கார் மூலமாகக் கடந்த 21.05.1996 அன்று தெற்குடெல்லியிலுள்ள லஜ்பதி நகர் மார்கெட்டில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில்13 அப்பாவிகள் கொல்லப் பட்டனர்; 38 பேர் காயமடைந்தனர். "அந்தக்கார்குண்டு வெடிப்பில் தொடர்புடையவன்" எனக் குற்றம் சாட்டி, டெல்லிக்குஅப்போதுதான் காலடி எடுத்து வைத்திருந்த ஸய்யித் முஹம்மது மக்பூல் ஷாஎனும் பெயருடைய அந்த மாணவச் சிறுவனையும் டெல்லிக் காவல்துறை கைது செய்தது.உண்மையான காரணம் அவர் ஸ்ரீநகரின் லால் பஜாரைச் சேர்ந்த ஒரு கஷ்மீரிஎன்பது மட்டுமே.
அது, யாராவது சப்தமிட்டுத் தும்மினாலும் "ஐ எஸ்எஸ்ஸின் சதி" என்றும் "எல்லை தாண்டிய பயங்கரவாதம்" என்றும் அத்வானி கூறத்தொடங்கிய காலகட்டம்.டெல்லிக் காவல்துறை மக்பூல் ஷாவைக் கைது செய்ததாகச் சொன்ன தேதி17.6.1996. "நீதிமன்றத்துக் கொண்டு போவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னரேஎன்னைக் கைது செய்த டெல்லிக் காவல்துறை கொடுமையாகத் துன்புறுத்தியது"என்று இப்போது 29 வயதாகும் மக்பூல் ஷா நினைவு கூர்கிறார்.
மக்பூல் கைது செய்யப் பட்டதை அறிந்த அதிர்ச்சியில் முதலில் இறந்தவர்மக்பூலின் தந்தை ஸய்யித் முஹம்மது ஷா. அவருக்குப் பின்னர், "என் தம்பியைஒருமுறையாவது எனக்குப் பார்க்கணும்" என்று பிடிவாதம் பிடித்துச்சிறைச்சாலைக்குப் போய் 'ஒருமுறை' பார்த்துவிட்டு வந்தார் மக்பூலின் மீதுபாசமழை பொழிந்தவரான அக்காள் ஹதீஸா பானு. அடுத்த சில நாட்களில் தம்பியின்நினைவுடனே இளமை மாறாத தம் 24ஆவது வயதிலேயே இறந்து போனார்.
"15 ஆண்டுக்குமுன் நான் பள்ளிக்குப் புறப்படும்போது வழியனுப்பும் என்தந்தையும் அக்காளும் இன்னும் என் கண்முன்னே நிற்கிறார்கள். பள்ளிவிடுமுறையில் டெல்லிக்குப் பயணமான அந்த நாளுக்குப் பின்னர் என் தந்தையைநான் பார்க்கவே இல்லை. இப்போது, அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைதான்அடையாளம் காட்டச் சொல்லிப் பார்க்க முடிந்தது" மக்பூலின் சொற்களில்இழையோடும் ஆழ்துயரம் நெகிழ வைக்கிறது!.
பிறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாக அறிமுகப் படுத்தப்படும்தம் குடும்பத்தின் புதிய உறவுகளை, தம் அக்காள் ஹதீஸாவின் மகனான மருமகனைத்தம் மடியில் அமர வைத்துக் கொண்டு அணைத்துக் கொள்கிறார் மக்பூல்.டெல்லிக் காவல்துறையினரால் 'வெடிகுண்டு வழக்கில்' மக்பூல் ஷா கைதுசெய்யப் பட்டபோது சிறுவர் என்பதால் முதலில் திஹார் சிறை வளாகத்தில் உள்ளசிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஏறத்தாழ மூன்றாண்டு காலம் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்குப் 18ஆவது நிரம்பும்வரை காத்திருந்த சிறைத்துறையினரால் பயங்கரக் குற்றவாளிகள் அடைக்கப் பட்டிருக்கும் திஹார்மத்தியச் சிறைக்கு மாற்றல் கிடைத்தது.
விசாரணை ... விசாரணை ... விசாரணை!
பலகட்ட விசாரணைகளில், லஜ்பதி நகர் குண்டு வெடிப்பு வழக்கில் 203சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். காவல்துறையினரால் 'அள்ளப்பட்ட' 150பேர்களுள் 140 பேர் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே "அப்பாவிகள்" எனவிடுவிக்கப் பட்டனர்.மீந்த 10 பேரில் நால்வரைக் கடந்த 8.4.2010 அன்று கூடுதல் அமர்வு நீதிபதிஎஸ்.ப்பீ. கர்க் "குற்றமற்ற அப்பாவிகள்" எனத் தீர்ப்பளித்து 14ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்திருக்கிறார். அந்த நால்வருள்மக்பூல் ஷாவும் ஒருவர். மிர்ஸா இஃப்திகார் ஹுஸைன், லத்தீஃப் வஸா, அப்துல்கனி ஆகிய 14 ஆண்டுகால அப்பாவிக் கஷ்மீரிக் கைதிகளும் மக்பூல் ஷாவுடன்விடுதலை செய்யப் பட்டவர்களாவர். "கஷ்மீரியாக இருப்பதே நாங்கள் செய்த பாவம் போலும்" எனக் கூறும் மக்பூல்தொடர்ந்து கூறுகிறார்:
தீர்ப்பின் சில பகுதிகள்:
"காவல்துறை நடத்தியது ஊனத்தனமான விசாரணையாகும் (police investigation defective).
குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கு எதிரான உறுதியான எந்த ஆதாரத்தையும்காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காவல்துறை சேகரித்தஆதாரங்கள் அனைத்தும் அரைகுறையானவை (The evidence collected by the policewas also incomplete).
இத்தனைக் காலத்துக்கும் ஒருமுறைகூட அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை(at no stage had the police opted to put any of them for testidentification parade [TIP]).
அரசு வழக்கறிஞரால் இந்த அடிப்படைக் குறையை நியாயப் படுத்த முடியவில்லை(and even the prosecution had failed to justify it)"
இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரி, அரசுத் தரப்புச் சாட்சியாகநீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை (the Investigating Officer, ACP P.P.Singh, the court said that he did not appear as a witness before thiscase).என்றெல்லாம் காவல்துறையின் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி கர்க் சுமத்தியுள்ளார்.
"14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் இப்போது நிரபராதி என்றுஎன்னை விடுதலை செய்துள்ளார்கள்.
சரியான நேரத்தில் நீதி கிடைத்திருந்தால்,நான் நன்றாகப் படித்து இன்றைக்குப் பெரிய நிலைக்கு வந்திருப்பேன். என்குடும்பம் சீரழிந்திருக்காது. இப்போது, எனது எதிர்காலம் என்னவாகஇருக்கும் என்று எனக்கே தெரியவில்லை" எனக் கூறுகிறார் அநீதிஇழைக்கப்பட்டு, சட்டவிரோதமாக தண்டனை அனுபவித்த மக்பூல் ஷா.
எதிர்வரும்22.04.2010 அன்று வெளியாகவிருக்கும் இறுதித் தீர்ப்பில் மீந்தஅறுவருள் "நிரபராதிகள்" என விடுதலை ஆகக்கூடியவர் எத்தனைபேர் எனத்தெரியவில்லை. உண்மைக் குற்றவாளிகளை நீதி தண்டிக்கட்டும்; விரைந்துவிசாரித்துத் தண்டிக்கட்டும். ஆனால், அப்பாவிகளை, சிறுவர்களைக்குற்றவாளிகளாகப் புனைந்து வழக்கு ஜோடிக்கும் காவல்துறையையும் புனைவுவழக்குகளுக்கே மாமாங்கங்களைக் கடத்தும் நீதிமன்றங்களையும் யார் தண்டிப்பது?அப்பாவிகள் இழந்த ஆண்டுகளை, இளமையை, வாழ்க்கையை யார் திருப்பித் தருவது?
வெறுமனே, "தாமதமாகும் நீதி, மறுக்கப் பட்ட நீதி" என்று சொல்லிச் சொல்லியேகாலத்தை ஓட்டாமல் தாமதப் படுத்தப் படும் நீதிக்குத் தண்டனை வழங்குவதுநடைமுறையில் வந்தால்தான் நீதித்துறை சீராகும்; பல நூற்றுக் கணக்கானஅப்பாவிகள் வாழ்வு மலரும்.
நன்றி:அப்துல் ரசாக் (துபாய்
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோர் ஏப். 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தோண்ட தோண்ட ஊழல்: வெளுக்கிறது ஐ.பி.எல்., முகம்
பல்வேறு ரகமான ஊழல்கள் அலசப்பட்டாலும், கிரிக்கெட் போட்டிகளை வைத்து நடக்கும் ஊழல் பிரமாண்டமானது. தற்போது வரித் துறையினர், கம்பெனித் துறையினர் மேற்கொண்ட சோதனைகளில், ஆவணங்கள் பரிசீலனைகளில் மோடி நடத்திய ஊழல் அரைகுறையாக அம்பலமாகியிருக்கின்றன. இந்த ஐ.பி.எல்., குழுமத்தில் மோடி போக்கை சிலர் ஆதரிக்கவில்லை. அதேபோல, பல்வேறு கிளைகளை இந்த அமைப்பு ஆரம்பிக்க முயன்றதில், கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டுடன் சரியான இணக்கம் இல்லை. அது குறித்தும் விசாரணை நடக்கிறது. ஆனால், மோடி எல்லாரையும் தாண்டி முன்னணிக்கு வந்து தற்போது சிக்கியிருக்கிறார். வருமான வரித்துறையின் தலைமையகத்தில், மோடி சம்பந்தப்பட்ட கோப்புகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. வரும் 23ம் தேதி கிரிக்கெட் கன்ட்ரோல் வாரியத்தில் இருந்து பொறுப்பானவர்கள், ஆஜராக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கறுப்புப் பணம்
முதலில் ஐ.பி.எல்., துவங்கிய 2008ல் மோடி கட்டிய வரி 2.5 கோடி ரூபாய். தெற்கு ஆப்ரிக்காவுக்கு ஐ.பி.எல்., மாற்றம் செய்யப்பட்டதும் அவர் கட்டிய அட்வான்ஸ் வரி 32 லட்சம் ரூபாய். பின்பு, இந்த ஆண்டு அவர் கட்டிய வரி 11 கோடி ரூபாய். ஆனால், 2006ல் வரி கட்டாத அளவுக்கு வருமானம் இன்றி இருந்தவர் மோடி. அப்படி பார்க்கும் போது, கிரிக்கெட் விளையாட்டில் புழங்கிய கறுப்புப் பணம் மற்றும் சூதாட்டமாக ஆட்டத்தின் முடிவுகளை முடிவு செய்தது, தற்போது அதிக சந்தேகத்தை எழுப்புகிறது. அது மட்டுமின்றி, மோடியின் உறவினர்கள் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவின் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். இதன் தலைவர் சுரேஷ் செல்லாராம் என்பவர் மோடியின் மைத்துனர். இவருக்கு 44 சதவீத பங்குகள் உண்டு. தற்போது நைஜீரியாவில் இருக்கிறார். மோடி குடும்பத்திற்கு நெருக்கமான மனோஜ் படாலே மற்றொரு முக்கியப்புள்ளி. இந்த அணியில் சம்பந்தப்பட்ட பலருக்கும் கறுப்புப் பணம் சேமித்து வைக்கப்படும் பகாமாஸ் மற்றும் வெர்ஜின் ஐலண்டு ஆகிய இடங்களில் தொடர்பு இருக்கிறது. அங்கு, கம்பெனிகள் வேறு இருக்கிறது. ஏற்கனவே மொரீஷியசில் இருக்கும் சில பணக்காரர்கள் இந்த ஐ.பி.எல்.,லில் சேர்ந்தது குறித்து மோடியிடம் கேட்கப்பட்ட போது, 'சுறுசுறுப்பான பணக்காரர்கள், எனக்கு வேண்டியவர்கள்; இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு நானா பொறுப்பு' என்றார்.
சுனந்தா புஷ்கர்
அதேபோல, சசி தரூர் தோழியான சுனந்தா புஷ்கர், 'கொச்சி பிரான்சைஸ்' என்ற பெயரில் இதில் ஈடுபட்டது குறித்தும் தற்போது விசாரிக்கப்படுகிறது. வெறும் லட்சம் ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்த இவர், இக்கம்பெனி மூலம் 70 கோடி ரூபாய் லாபம் பார்த்தது தான், சசி தரூர் பதவிக்கு வேட்டு வைத்தது. இவர், தனக்கு வந்த பங்குப் பணத்தை தற்போது வேண்டாம் என்று தன் வக்கீல் மூலம் கூறுகிறார். பொதுவாக கம்பெனி சட்டப் பிரிவுகள் படி, 'வியர்வை சிந்தி பெறும் பங்குகள்' அதாவது ஸ்வெட் ஈகுவிடி என்பது கம்பெனி பங்குதாரர்கள் அல்லது பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், கம்பெனியில் நான்காண்டுகள் நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் பெற வேண்டியது. ஆனால், துபாயில் தொடர்புடைய சுனந்தா இதில் எந்த ரகத்திலும் வராதவர். தொழில் துவங்கியதும் இந்த அளவு ஆதாயம் என்றால், அதில் புதைந்திருக்கும் மர்மம் என்ன? துபாயில் தொடர்பு வைத்திருக்கும் சில பணக்காரர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஏனெனில், கிரிக்கெட்டிற்கும் அதன் பிரபலங்களுக்கும் துபாய் ஒரு சொர்க்க பூமி.
தற்போது சுனந்தா பற்றியும் விசாரணை துவங்கியிருக்கிறது. சசி தரூர் எந்த அளவு இந்த பணப் பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஐ.பி.எல்., என்றதும் மிகப்பெரும் தொழிலதிபர்கள், அவர்கள் உறவினர்கள் என்று எல்லாருமே முக்கியஸ்தர்கள். அதனால், ஐ.பி.எல்., விளையாட்டு என்ற பெயரில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் இதுவரை நடந்திராத பெரிய மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம், மத்திய விவசாயத்துறை அமைச்சர் பவார் போன்ற பல அரசியல்வாதிகள் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்டிருந்தும், எப்படி மோடி போல பெயர் கெடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
தரூரை தொடர்ந்து மோடி
ஐ.பி.எல்., போட்டி துவங்கியதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பி கொண்டு தான் இருக்கிறது. கடந்தாண்டு, பொதுத்தேர்தல் காரணமாக போட்டியை நடத்துவதா, வேண்டாமா என பிரச்னை கிளம்பியது. தேர்தலுக்கு பின் வைத்து கொள்ளுங்கள் என அரசு கேட்டுக்கொண்டும், மோடி தான் எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்தார். தென்னாப்ரிக்காவிற்கு போட்டியை மாற்றி வெற்றிகரமாக நடத்தி காட்டினர். இது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயும் குறைந்தது. தற்போது சசி தரூர் விவகாரம், மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதில் சசி தரூரை இழக்கவேண்டியதாகிவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு விஸ்வரூபம் எடுக்க துவங்கிவிட்டது, தொடர்ந்து வரும் நடவடிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது. வருமான வரித்துறையும் வரிந்து கட்டி இறங்கியுள்ளது. இதில் பல பூதங்கள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதான் சமயம், ஐ.பி.எல்.,லில் தங்களுக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்கவில்லை என கவலைப்பட்டு கொண்டிருந்த அரசியல்வாதிகளும், எதிராக காய் நகர்த்த துவங்கிவிட்டனர். இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு,'செக்' வைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி போர்டு நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில், மோடியை நீக்க ஏகமனதாக முடிவு செய்யப்படுகிறது. கிரிக்கெட் போர்டு தலைவர் ஐ.பி.எல்., சேர்மனாக நியமிக்கப்பட இருக்கிறார். ஐ.பி.எல்., போட்டி 25ம் தேதி முடிகிறது. 26ம் தேதி மோடி பதவியை துறக்கிறார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர்.காம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தமுமுகவின் உதவி
பாதிக்கப்பட்ட வியாபாரிகளான ஷேக் கிற்கு ரூ. 8500 , அப்துல்லாவிற்கு ரூ.7000 ,யூனுஸ் க்கு ரூ. 5000 , பக்கிர்சவுக்கு ரூ.3500 , ஒபி,உபைது,பாபு,அன்வர்,ஜகரியா,ஆகியோருக்கு தலா ரூ.1000 , ராஜாவுக்கு ரூ.1075 ம் வழங்கப்பட்டது. இந்நிதியை கடந்த 15 / 04 /2010 வியாழக்கிழமை ஜமாத்தார்கள் பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளுமேடு தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் வழங்கினார்கள்.
நன்றி: கொள்ளுமேடு ஜாகீர் ஹுசைன், (துபை)
வியாழன், 15 ஏப்ரல், 2010
செய்தி சொல்லும் சேதி...
மது ஒழிப்பில் முன்னோடி..!
குடி குடியைக் கெடுக்கும்... இது அரசாங்க மது பானக் கடைகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.ஆனால் அரசாங்கமே அதனை விற்றுக் கொண்டிருப்பதை தமிழகத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த 13 ம் தேதி தினமலர்.காம் தளத்தில் வந்த செய்தி ஒன்று பலரது புருவங்களையும் உயர்த்த செய்தது. அந்த செய்தி வருமாறு...
மது அருந்தினால் ரூ.1000 அபராதம்: தகவல் கொடுத்தால் ரூ. 500 பரிசு
ஏப்ரல் 13,2010,00:00 IST
பாலமேடு : கிராமத்திற்குள் யாரும் மது அருந்தக்கூடாது என்றும், ஏழை, பணக்காரர் யார் இறந்தாலும் கிராமத்தின் மூலம் அடக்கம் செய்யலாம் என்றும், மதுரை அருகே ஒரு ஊராட்சி முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி, பாறைப்பட்டி இணைந்து சரந்தாங்கி ஊராட்சி உள்ளது. இதன் தலைவராக முத்தையா என்பவர் தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்து வருகிறார். சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது பெரும் வகையில் யூனியன், மாவட்டம் நிர்வாகம் சார்பில் நிர்மல் புரஷ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்துள்ளனர். முதல் ஆண்டில், ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் யாரும் திருடக் கூடாது, மீறுபவர்களுக்கு, கிராமம் சார்பில் தண்டனை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அது கிராம கட்டுப் பாட்டிற்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டதும், ஊருக்குள் போலீஸ் நுழையக்கூடாது, எவ்வித பிரச்னையும் கிராம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கிராம ஒற்றுமை கிடைக்கும் என அறிவித்தார். இதுவும் நல்ல பலனை தந்தது. மூன்றாவது முறை தேர்வு செய்யப்பட்டதும், முத்தாலம்மன் கோயில் பூசாரி ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் முத்தையா தலைமையில் மீண்டும் கூட்டம் கூடியது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கிராமத்தில் யாரும் மது அருந்தக்கூடாது, மீறிகுடித்தால், கோயிலில் ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மது அருந்தியவர் குறித்து யாரேனும் தகவல் கொடுத்தால், அவருக்கு கிராமத்தின் சார்பில் ரூ. ஐநூறு பரிசு வழங்கப்படும். கிராமத்தை சுற்றிலும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் அள்ளுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம், மணல் அள்ளுவது குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு. ஊராட்சி பகுதிக்குள் யார் இறந்தாலும் ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் கிராமத்தின் சார்பில் இறுதி சடங்கு செய்யப்படும் என தீர்மானம் கொண்டு வந்தனர். நான்கு தினங்களுக்கு முன் முருகேசன் என்பவர் டிராக்டரில் மணல் அள்ளினார். அதை மாயன் என்பவர் தகவல் தெரிவித்தார். மணல் அள்ளியவருக்கு ஆறாயிரம் அபராதமும், தகவல் தந்தவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு அளித்தனர். ஊராட்சி முடிவுக்கு பின், கிராமத்திற்குள் மது அருந்துவதை பலரும் நிறுத்தி விட்டனர். வெளியூரில் மது அருந்தினால், உறவினர் வீட்டில் தங்கியிருந்து மறு தினம் ஊருக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது குறித்து தலைவர் முத்தையா கூறியதாவது, மது அருந்தி விட்டு ஊருக்குள் அசிங்கமான பேச்சுக்கள், இறப்பு வீட்டில் ஆடம்பரம், கோயில் திருவிழா சமயத்தில் வரி கொடுக்க முடியாமல் திணறும் குடும்பங்கள் இதையெல்லாம் மனதில் வைத்து கிராம கட்டுப்பாட்டு நிபந்தனைகள் கொண்டுவந்தோம். ஊராட்சியின் முடிவுக்கு அனைத்து தரப்பினரும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர், என்றார். (http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7205&ncat=&archive=1&showfrom=4/13/2010)
இலவசங்களை அள்ளித் தெளித்து விட்டு மக்களுக்கு நன்மை செய்து விட்டதாக அலட்டிக் கொள்ளும் இந்த திமுக அரசாங்கம்... மது ஒழிப்பு நடவடிக்கையை கொண்டு வாருங்கள் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தால்.. மதுக்கடைகளின் மூலமாகத் தான் அரசுக்கு அதிக வருமானம் வருகிறது மதுக் கடைகளை மூடினால் அரசாங்க கஜானாவிற்கு நிதி வரத்துக் குறைந்து போகும் என்ற ரீதியில் வியாக்கியானம் கொடுத்து வருகிறது.
மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்க அரசாங்கத்திற்கு கிடைக்கும் பணம் பொது ஜனங்கள் மதுக் கடைகளில் கொட்டிக் கொடுக்கும் காசுகள் தாம்.ஒரு பக்கம் மக்களுக்கு தன் சொந்த பணத்திலிருந்து நன்மை செய்வது போலக் காண்பித்துக் கொண்டு மக்களின் சட்டைப் பைகளில் கிடக்கும் அற்ப சொற்ப சில்லறைகளை மது விற்பனை வழியாக பிடுங்கிக் கொண்டு அந்த வருமானத்திலிருந்து இலவசங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் மக்களை இலவசங்களுக்கு அலைபவர்களாக மாற்ற முயற்சி செய்துக் கொண்டிருக்கின்ற இவ் வேளையில் முத்தையா போன்ற தலைவர்களின் இன் நடவடிக்கை பாராட்டுக்குரியது.இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் மது தொடர்பான கொள்கைகளை நமது நாடும் பின்பற்றினால் மட்டுமே மதுவினால் உருவாகும் தீமைகளை ஒழித்துக் கட்ட முடியும்.
அதற்கு பால்மேடு முத்தையா முன்னுரை எழுதி இருக்கிறார். அதனை நமது இந்தியா முழுவதும் கொண்டு செல்ல ஒவ்வொரு இந்தியனும் முயற்சி செய்வோம்.
புதன், 7 ஏப்ரல், 2010
காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில்சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத்திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரணப்புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்தியஅரசு இருப்பதன் காரணம், அது தன்னளவில் அதே இனப்படுகொலையைத் தன் நாட்டுமக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர்இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசுமூடி மறைத்து வந்தாலும், அங்குப் புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சடலமும் தன்கதையை இந்த உலகுக்கு அறிவிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது."தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்தராணுவ வீரனின் ஆசை. 'வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்' எனஅந்தத் தாய் ராணுவ வீரனின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார்,கதறுகிறார். 'என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை வேறு அறைக்குஅழைத்துச் செல்லுங்கள் அல்லது கொன்று விடுங்கள்' என்கிறார் அவர்.
அந்தராணுவ வீரன் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே,'உன் ஆசைப்படியே நடக்கட்டும்' என அவருடைய நெற்றியில் தானியங்கித்துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன்காரியத்தைத் தொடர்கிறான்''.இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக்குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் கொடுங்கோல் ஆட்சி நடக்கின்றதேசத்திலோ, ராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற நாட்டிலோ நடைபெறவில்லை.மாறாக, "வளர்ந்து வரும் வல்லரசு; உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு" எனச்செல்லமாய் உலக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநிகழ்வே.
இந்திய ராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரிலும் வடகிழக்கிலும்வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றே. 1989-2009 வரையிலானகாலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர்போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களைவழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான்கணக்கிடப்பட்டுள்ளது.புதையுண்ட சாட்சியங்கள்இவ்வாறு சட்ட விரோதமாகக் கொல்லப்படுபவர்களை ராணுவம், துணை ராணுவப்படைகள், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை என அனைவரும் ஒரே முறையில்தான்அப்புறப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்களின் சடலங்களைஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் உடனே புதைத்து விடுவதுஎன்பதை வழக்கமாக மாற்றிவிட்டிருக்கின்றனர். அண்மையில் காஷ்மீரில்(இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில்) பல 'கும்பல் புதைகுழி'களை 'உலக மனித உரிமைகள்மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்' கண்டுபிடித்துள்ளது.
இந்த அமைப்பைச்சேர்ந்த அங்கனா சாட்டர்ஜி, பர்வேஸ் இம்ரோஸ், கவுதம் நவ்லகா,ஜாகிர்–உத்–தீன், மீகிர் தேசாய், குர்ரம் பர்வேஸ் ஆகியோர் மேற்கொண்டமிகத் தீவிரமான ஆய்வுப் பணிகளின் விளைவாக 'புதையுண்ட சாட்சியம்' என்றுதலைப்பிடப்பட்ட அறிக்கை நவம்பர் 2009இல் வெளியிடப்பட்டது. உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கானதீர்ப்பாயத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுடன், 'காணாமல் போனவர்களின்பெற்றோர் அமைப்பும்' இந்த ஆய்வை மேற்கொள்வதில் உறுதுணையாக இருந்தது.பாந்திபூரா, பாராமுல்லா, குப்வாரா பகுதி மக்களும் இந்த ஆய்வறிக்கைமுழுவடிவம் பெற ஊக்கமளித்தனர்.காஷ்மீரின் குப்வாரா, பாராமுல்லா, பாந்திபூரா மாவட்டங்களில் மட்டும்2,700 'கும்பல் புதைகுழிகள்' அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை எல்லாம் எங்கோரகசியமாக உள்ள புதைகுழிகள் அல்ல. பள்ளிக் கூடங்கள், நகர சதுக்கங்கள்,வழிபாட்டு மைதானங்கள், காடுகள், வயல்வெளிகள் என மக்களின்வாழ்விடங்களெங்கும் இதுபோன்ற திடீர்புதைகுழிகள் அரும்பியுள்ளன.அலங்கரிக்கப்படாத, பெயரிடப்படாத, குறிக்கப்படாத மயானங்களாக இவை அங்கே முளைத்துள்ளன. இவற்றை மக்கள்தங்களின் அன்றாட பணிகளின் ஊடாகக் கவனித்து வருகின்றனர்.
அவர்களின்நினைவுகளில் இந்தப் புதைகுழிகள் அசைக்க முடியாத இடத்தை ஆக்கிரமித்துள்ளன.ஆனால், இதைப் பற்றி அங்கு யாரும் அடுத்தவர்களிடமோ, தங்கள்குடும்பத்தாரிடமோகூட பகிர்ந்து கொள்வதில்லை. உள்ளிருந்தே கொதிக்கும்நினைவுகளாக, அடக்குமுறையின் உறைந்த படிமங்களாக அவை உள்ளன.அடையாளம் காணப்பட்ட 2,700 புதைகுழிகளில் 2,943 சடலங்கள் இருந்தன. இதில்பெரும் பகுதியானவை ஆண் சடலங்கள். 154 புதைகுழிகளில் இரண்டுக்கும்மேற்பட்ட சடலங்கள் இருந்தன. இந்தச் சடலங்கள் எல்லாம் பெரும்பாலும் இரவுநேரங்களில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இங்குள்ளகிராமப் பெரியவர்களுக்கு, "மாலையில் பிணங்கள் வருகின்றன" என்ற தகவல்மட்டுமே ராணுவத்தினரிடமிருந்து வரும். இந்தச் சட்ட விரோதமான காரியத்தைச் செய்யமறுத்தால், அடுத்த நாளே அவர்கள் எங்காவது அருகில் உள்ள மாவட்டத்தில்புதைக்கப்படும் பிணங்களின் குவியலில் இடம் பெறக்கூடும்.பிறகு ஊர்ப் பெரியவர்கள் ஆட்களை தயார் செய்து, குழிகளை வெட்டிவிட்டுக்கடும் குளிரில் காத்திருக்க வேண்டும். ராணுவ வாகனம் இரவில் மரண ஊர்தியாகவந்து சேரும். "பெரும் பகுதியான சடலங்களில் வன்கொடுமைக்கான தடயங்கள்,தீக்காயங்கள், தோட்டாக்கள் துளைத்த அடையாளங்கள்தான் இருக்கும்" எனபுதைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வேலைகளில் ஈடுபடும் எவருக்கும்எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
பொதுவாக, புதைக்கப்படுபவர்களைப் பற்றிய தகவல்களைஆவணப்படுத்தும் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.இருப்பினும் ராணுவத்தின் வாய்மொழி அல்லது எழுதப்படாத ஒரே விளக்கம் இதுவே:"இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள். இவர்கள் நம் நாட்டுஎல்லைக்குள் நுழைய முயன்றனர் அல்லது வெளியே தப்பிக்க முயன்றனர்". இத்தனைஅடக்குமுறைகளையும் கடந்து மக்களிடையே இந்தச் சடலங்களைப் பற்றிச்துல்லியமான விவரணைகள் நாட்டார் வழக்காறுபோல, இந்தக் கிராமங்களில் இருளில்மிதக்கும் இரவு பனி மீது ஏறி தன் பயணத்தைத் தொடங்கும். இந்த அடையாளங்களைப்பெண்கள், ஆண்கள் தங்கள் சங்கேதக் குறியீடுகளின் மூலம் பகிர்ந்து கொள்வர்.பல நேரங்களில் மாவட்டங்களைக் கடந்தும்கூட தொலைவிலிருந்து முதியவர்கள்,பெண்கள் இங்கு வந்து இன்னும் தெளிவாகக் குறிப்புகளைக் கேட்டுச்செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களின் பிள்ளையை, கணவரை'எடுத்து'ச் சென்றுள்ளனர். மீண்டும் தோண்டி எடுத்து அடையாளத்தைத் தக்க சான்றுகள் மூலம் நிரூபித்து,தங்களின் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.பாராமுல்லா மாவட்டத்தில் மட்டும் 1,122 புதைகுழிகள் காணப்பட்டுள்ளன.குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில்125புதைகுழிகளும் இருக்கின்றன. மூன்று மாவட்டங்களில் மட்டும் 2,943 சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன. 'உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கானதீர்ப்பாய'த்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி,"இனப்படுகொலை அல்லது போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து அரசு தப்பிக்கமுடியாது. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும்விசாரணையிலிருந்தும் தண்டனயிலிருந்தும் தப்பித்துக் கொள்ளவே, இத்தகையமரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்'' என்கிறார்.
பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா கிராமத்தில் இரு மரணப்புதைகுழிகள் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டன. முதல் பகுதியில் 105 மரணக்குழிகள் இருந்தன. அதன் அருகில் 60 மரணக் குழிகள் இருந்தன. அந்தக்கிராமத்தில் உள்ள சமூகப் பெரியவர், தாங்கள் இதுவரை 230 சடலங்களை அடக்கம்செய்ததாகத் தெரிவிக்கிறார். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் நுழையமுயன்ற வெளிநாட்டுத் தீவிரவாதிகள்தான் இவர்கள் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சில மரணக்குழிகளின் மீது மண்ணைக் குவியலாக குவித்தும், கற்களைக் குவித்தும்அடையாளப் படுத்தியிருக்கிறார்கள்.அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்பொழுது, "ஒருமுறை மூன்று பேருடையஎலும்புகள் மட்டுமே இங்குக் கொண்டு வரப்பட்டன. தீவிரவாதிகளாகக்கருதப்பட்ட அந்த மூவரின் உடல்களும் முற்றாக எரிக்கப்பட்டிருந்தன.பாராமுல்லாவில் நடந்த தாக்குதல்களில் ஒரு வீட்டில் வைத்து அவர்கள்கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒரேபுதைகுழியில் அந்தமூவரின் எலும்புகளையும் புதைத்தோம். அவர்களின் உடைகளை அருகில் இருந்த மரத்தில் கட்டினோம். அந்தஉடைகளில் இருந்த லேபிள்கள் அகற்றப்பட்டிருந்தன. அவர்களின்உடைமைகளிலிருந்த தாயத்துகளையும் மரத்தில் கட்டிவிட்டோம்'' என்கிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவர் திடுக்கிடும் மற்றொரு செய்தியைத்தெரிவிக்கிறார்: "பல சமயங்களில் இந்திய ராணுவம் என்னைக் கைது செய்துசித்திரவதை செய்துள்ளது. நான் தீவிரவாதத்திற்கு உடன்படுவதாக அவர்கள்குற்றம் சாட்டினர். இங்குள்ள பல மரணப் புதைகுழிகளை நான்பாகிஸ்தானியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புதைத்ததாக அவர்கள்கூறினார்கள். அதுவும் சடலத்திற்கு 35,000 ரூபாயை நான் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். என்னைத் தொடர்ந்து எங்கள்கிராமத்தில் பலரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்று சித்திரவதைசெய்தனர். அதன் பிறகு எங்கள் கிராமத்தினர் அனைவரும் இனி, இது போல்பெயரிடப்படாத அடையாளமற்ற பிரேதங்களைப் புதைப்பதில்லை என முடிவெடுத்தோம்.ஏறக்குறைய 2002 முதல் எங்கள் கிராமத்தில் யார் இறந்தாலும் இங்குப்புதைக்காமல் அருகில் இருக்கும் சேஹால் கிராமத்தில்தான் புதைத்து வருகிறோம்" என்கிறார்.உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம் தனது அறிக்கையில்பட்டியலிட்டுள்ள 2,943 பிரேதங்களும் தங்களுள் ஒரு மிகப்பெரிய வரலாற்றைசுமக்கின்றன. அந்தச் சடலங்களின் பின்புலத்தில் தாய்மார்கள் மாரடித்துஅழும் ஓலக்குரல், கேட்கும் எவர் மனதையும் கனக்கச் செய்யும். கடந்த 30ஆண்டுகளாக இம்மக்கள் சந்தித்து வரும் அலைக்கழிப்பான வாழ்க்கை பெரும்சலிப்பையும் வாழ்வின் மீது பற்றற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எல்லாக் குடும்பங்களிலும்யாரேனும் ஒருவர்/இருவர் இல்லாத ஊனம் பெரும் மவுனமாய் உலவுகிறது.காஷ்மீரில் உள்ள ஒரே ஒரு மனநல மருத்துவமனையில் மட்டும் இதுவரை 68,000பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக, பொருளாதார, நிலைகளின்சீர்குலைவு, பதற்றம் தரும் மனஅழுத்தம் என அன்றாட வாழ்வே பெரும்துன்பம்தான். அரசுகளின் தோல்விக்கு மக்கள் மிகப்பெரும் விலையைக் கொடுத்து வருகின்றனர்.ஒடுக்குமுறை, பலாத்காரம், சித்திரவதை, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களைஒடுக்குதல், சர்வதேச அழுத்தங்களை மதிக்காத போக்கு என காஷ்மீரில்துயரத்தின் புதிய அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதில் ராணுவமும் அரசும்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எல்.கே. அத்வானி இங்கு அடிப்படைவாதசூத்திரத்தை மீண்டும் மீண்டும் ஒப்பித்து வருகிறார். அத்வானியின்புனைவுப்படி, ஜம்முவைச் சேர்ந்த பண்டிதர்கள் தேசபக்தர்கள் என்றும்,காஷ்மீர் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.அமர்நாத் யாத்திரைக்கு மெல்ல மெல்லக் காவிச் சாயம் பூசிவிட்டது இந்தகும்பல். 1989இல் 20,000 பேர் மட்டுமே அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்றனர். கடந்த ஆண்டு அது5,00,000 எட்டி நிற்கிறது. இந்தப் பயணத்தை அண்மைக்கால இந்தியாவின் பெரும்தொழில் நிறுவனங்கள் வழங்கி வருவது கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒருசெய்தி. 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் வாரியத்திற்கு வழங்கி அரசாங்கம்மீண்டும் அந்தப் பள்ளத்தாக்குச் சந்தித்திராத சூழலை உருவாக்கி மேலும்பதற்றத்தை அதிகரித்தது. இத்தனை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடினாலே அந்த லிங்கம்கரைந்து விடும் என திணையியல் அறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.அய்ந்து லட்சம் அமர்நாத் யாத்திரைப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும்முஸ்லிம்கள்தாம் செய்து வருகின்றனர்.
அங்குச் சென்று வந்த அனைவரும் அந்தஉபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களைக் கூறி வருவதை, பலசெய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும்.அய்ந்து லட்சம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள்தாம் செய்துவருகின்றனர். அங்குச் சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்துவந்த தங்கள் பயண அனுபவங்களைக் கூறி வருவதை, பல செய்திகளின் வாயிலாகவும்தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பயணிகளின் எண்ணிக்கை,அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்குப் பின்னால் பல ரகசியத் திட்டங்கள்இருப்பதை நம்மால் உறுதியாகக் கூறமுடியும். இந்த 100 ஏக்கர் நிலம் அமர்நாத் வாரியத்திற்குசுமூகமாக கைமாற்றப்பட்டு எந்த சர்ச்சையும் ஏற்படாமல் அமைதிநிலவியிருந்தால், மெல்ல மெல்ல அங்கு இஸ்ரேல் பாணியிலான குடியிருப்புகளைநிறுவும் மறைமுகத் திட்டம் ஒன்று இந்து வலதுசாரிகள் வசம் இருந்தது.இத்தகைய விஷமமான திட்டங்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்தாக்கின் அமைதியைமேலும் சீரழிக்கவே உறுதுணை புரியும். இந்த யாத்திரைகளைப் பின்புலமாகவைத்து அங்கு அமைதி நிலவி வருவதாக அரசு உலக நாடுகளுக்கு அறிவித்துவருகிறது. அண்மைக்கால அறிக்கைகளில் காஷ்மீரை விவரிக்கும் பொழுது, அதனை,"கலவரம் நடந்து முடிந்த பகுதியாக" அழைத்து வருகிறது. இது, உலகச் சுற்றுலாபயணிகளைக் கவருவதற்கான திட்டமே. இருப்பினும் உலகின் பல முக்கிய நாடுகள் தங்கள்குடிமக்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகின்றன."கலவரம் நடந்து முடிந்த பகுதி" என அரசு அழைக்க விரும்பினால், முதலில்அந்தச் சமூகத்துடன் உரையாடலைத் தொடங்கி, பதற்றங்களைத் தணித்து, மக்களின்பங்களிப்பை அதிகரித்து, அமைதியைச் சென்றடையும் வழிமுறைகளை அல்லவா கண்டறியவேண்டும்!காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றை அறிந்துகொள்வதுதான் தீர்வை அடைவதற்கான முதல் நடவடிக்கை. காஷ்மீர், வடகிழக்குஆகிய இந்தியாவின் இரு மாநிலங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாகப் பெரும்பதற்றமும், வன்முறையும் நிலவி வருகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம்பெற்றுத் தனிநாடாக உருவானதுமுதல் இன்றுவரை, அடுத்தடுத்து ஆட்சியில் உள்ளஅரசுகளின் குளறுபடியான முடிவுகள், ஆட்சியாளர்களின் குறுகிய நலன்களின் அடிப்படையிலானசெயல்திட்டங்கள், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாம்ஒருங்கிணைந்து, அந்தப் பகுதிகளின் நிரந்தர சீர்குலைவிற்குவழிவகுத்துள்ளன.
பிரிவினையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் மதவாதச்சக்திகளும் தங்களின் தீவிரப் பிரச்சாரத்தால் ஒட்டுமொத்தச் சூழலை மேலும்இறுக்கமாக்கியுள்ளன.இது அங்கு ஓர் உரையாடலுக்கான சாத்தியத்தை நிராகரித்து, மேலும் தவறான புரிதல்களுக்கேவழிவகுத்துள்ளது.காஷ்மீர் பற்றி அரசும் ஊடகங்களும் இடையறாது செய்து வரும் அவதூறானபரப்புரையால், காஷ்மீரைத் தவிர்த்த இந்தியாவிற்கு இவர்களின் புனைவுசார்ந்த சித்திரம்தான் மனதில் தங்கியுள்ளது. இது ஏதோ அப்பாவி காஷ்மீர்பண்டிதர்களுக்கும், எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நிற்கும் காஷ்மீர்முஸ்லிம்களுக்குமான பகையாகவே சித்தரிக்கப்படுகிறது. இதில் மெய் எது பொய்எது என்பதை எடுத்துக்கூற வேண்டிய ஊடகங்களும் அறிவுஜீவிகளும் தோல்வியைத் தழுவி நிற்கின்றனர்.அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருமுதல் பின்னர் அங்கு ஆளுநராகப் பதவி வகித்தஜக்மோகன்வரை, தாங்கள் ஏதோ ராஜதந்திரத்தின் மூலம் ஒரு பெரிய சாதனையைச்செய்யப் போவதாகக் கற்பனை செய்து கொண்டு, மென்மேலும் காஷ்மீர் மக்களின்வாழ்வைச் சீர்குலைத்ததுதான் மிச்சம். புவி அரசியலில் ஈடுபட்டு அந்தப்பகுதியின் 'பெரிய அண்ணனாக' உருவெடுக்க முயன்ற இந்தியாவுக்கு, இன்றுநிரந்தரத் தலைவலியான காஷ்மீர் பிரச்சனை, அந்தப் பகுதி மக்களின் வாழ்வை மட்டும்சீர்குலைக்கவில்லை; இந்திய அரசின் நிதிநிலையையும் அது ஆண்டுதோறும்கடுமையாகப் பாதிக்கிறது. இத்தனை லட்சம் கோடிகள் வீணாக்கப்பட்டபிறகும்கூட, இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் வரைபடத்தை வெளியிட அரசுஇன்றுவரை தயாராக இல்லை. காஷ்மீர் வரைபடம் என நாம் நம்பும் ஒரு வரைபடம்முற்றிலும் கற்பனையானது. அதனைக் கல்விக் கூடங்கள், ஊடகங்களின் வாயிலாக மக்களின் மனங்களில் பதிய வைத்துமொத்தச் சமூகத்தையும் மூளைச் சலவை செய்கிறது.காஷ்மீர் பண்டிதர்களை பள்ளத்தாக்கிலிருந்து அரசு வெளியேற்றியது பெரும்முட்டாள்தனம் என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஜனநாயகவழியிலான எந்தச் செயல்பாட்டுக்கும் அங்குச் சாத்தியம் இல்லை என உணர்ந்தபிறகுதான் இளைஞர்கள் வேறு வழிகளை நோக்கிச் சென்றனர். சகோதரர்களாக வரலாறுநெடுகிலும் வாழ்ந்து வந்த பண்டிதர்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்த முடிவு செய்த இந்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது.பண்டிதர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே அரசு வெளியேற்றியது.காஷ்மீர் பண்டிதர்களின் வீடுகள் அனைத்தையும் இந்திய ராணுவப் படையினர்தங்கள் அலுவலகங்களாகவும், முகாம்களாகவும் மாற்றிக் கொண்டன.
அங்கிருந்துவெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்களுக்கு, அதன்உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்து நிவாரணமும், அவர்களின் வீடுகளுக்குப் பெரும்தொகையை வாடகையாகவும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இவர்களைப்போல் இந்தியஅரசு வேறு எந்த இனக்குழுவிற்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரணம்வழங்கியதில்லை. பார்ப்பன அதிகார வர்க்கம்தான் நம்மை ஆண்டு வருகிறதுஎன்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா?உலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறலை அமெரிக்கா இராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் நிகழ்த்தி வருவது நம் காலத்து வரலாறு. பிற நாடுகளைஆக்கிரமித்துள்ள அமெரிக்கா, இராக்கில் ஒரு லட்சத்து 65 ஆயிரம்படையினரையும், ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் அமெரிக்கப் படையினரையும்நிறுத்தியுள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தனது படை பலத்தை காஷ்மீர்பள்ளத்தாக்கில் பெருக்கியுள்ள இந்திய அரசு, இன்றைய தேதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ வீரர்களைஅங்கு நிறுத்தியுள்ளது. இது நமக்குப் பல உண்மைகளை எடுத்துரைக்கிறது. உலகஅளவில் ஒரு நிலப்பரப்பில் மட்டும் இத்தனை அடர்த்தியான ராணுவ இருப்புஎப்பொழுதும் இருந்ததில்லை.காஷ்மீர் மக்களின் விருப்பமெல்லாம் அவர்களின் இனக்குழுத் தன்மையைப்பாதுகாப்பதும், இந்திய அரசின் இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின்தற்சார்பைப் பேணுவதும்தான். 2000இல் "அவுட்லுக்' ஆங்கில ஏடு நடத்தியகருத்துக் கணிப்பை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானது. அது இவ்வாறுகூறுகிறது :74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழவிரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்குக் கூடுதல்அதிகாரங்களுடன் கூடிய தற்சார்புவேண்டும் என்கின்றனர்; 2 சதவிகிதத்தினர்பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 37 சதவிகிதத்தினர் இந்திய அரசியல்அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்புகின்றனர். காஷ்மீரிகளின்உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் இந்த 2 சதவிகிதப் பிரிவினைமனநிலை உள்ளவர்களுக்காக இந்திய அரசு மொத்தப் பள்ளத்தாக்கையே ஆயுதக்கிடங்காக மாற்றி, மக்களைச் சித்திரவதை செய்வது எப்படி நியாயமாகும்?அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண்பதைத் தவிர்த்து, காஷ்மீர்மக்களைப் போருக்கு மத்தியில் வாழ நிர்பந்தித்து வருகிறது இந்திய அரசு.காஷ்மீர், இந்தியாவின் ராணுவ சோதனைக்கூடமாகவே உள்ளது என்றால் அதுமிகையல்ல.அங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைதுசெய்யலாம்;பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம்;பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டைவேண்டுமானாலும் சுமத்தலாம்; பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குஉட்படுத்தலாம்; ஆயுதத்தை சோதித்துப் பார்க்கச் சிலரை கொல்லலாம். இன்னும்,இன்னும்... எது வேண்டுமானாலும் செய்யலாம்.அங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம்,பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், பேருந்துநிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டைவேண்டுமானாலும் சுமத்தலாம், பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குஉட்படுத்தலாம், ஆயுதத்தை சோதித்துப் பார்க்கச் சிலரை கொல்லலாம். இன்னும்,இன்னும்... எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச்சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் 1978,தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002..."இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா" என தேசபக்தர்களின்முழக்கங்கள் காதில் கேட்கின்றன.உங்களுக்குத் தேவையானது எல்லாம் நீங்கள் இந்திய ராணுவத்தின் உடையைஅணிந்திருக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யப்போகும் "தேசபக்தகாரிய"ங்களுக்கு ஏற்ப இந்திய அரசியல் சாசனத்தை வளைத்து, நிமிர்த்தி,திருத்தி நாள்தோறும் ஒரு சட்டத்தை உருவாக்கி, தேசபக்தராக அறிவித்துக்கொண்டேயிருக்கும்.
தேசத்தின் பெயரால் அரசு வன்முறையை நியாயப்படுத்தும்ராணுவத்தினருக்கு, ஒவ்வொரு குடியரசுநாள் விழாவிலும் பதக்கங்கள் வழங்கிப் போற்றும்சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை, காஷ்மீரில் மாற்றம் என்பதற்குசாத்தியமில்லை.காஷ்மீரில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் ராணுவத்தால்அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் மனைவிகளுக்கு விதவைஓய்வூதியத்தை தர மறுக்கிறது அரசு. இவர்கள் "அரை விதவைகள்". இவர்களின்கணவர்கள் இறந்து விட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்கமுடியும் என்கிறது அரசு. மறுபுறம் ராணுவ வீரர்களின் தற்கொலை விகிதம்ஏறுமுகத்தில் உள்ளது. 2002-2009க்குள் மட்டுமே 169 ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.கடந்த 50 ஆண்டுகளாகக் காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலைக் கூர்ந்துகவனித்தால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியா, பாகிஸ்தான்ஆகிய இரு நாட்டு மக்களும் இணக்கமான நல்லுறவையே விரும்புகின்றனர்.இருநாட்டு எல்லை நெடுகிலும் உள்ள மக்களிடையே பண்பாட்டு ரீதியிலானஒத்திசைவும் பரிமாற்றமும் இன்றளவும் நிலவுகின்றன. ஆனால் இரு நாட்டுஅரசுகளும் இருபுறமும் பதற்றம் நிலைப்பெறவே விரும்புகின்றனர். மக்களின் கோரிக்கைகள் முன்னிலைபெறும்போதும், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்படும் பொழுதும் காஷ்மீர் பிரச்சனை இயல்பாகவே ஊடகங்களில்தலைப்புச் செய்தியாக இடம்பெறுவது, திட்டமிட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.இந்த மரணப் புதைகுழிகளை, சடலங்களை மேலும் சிதைக்காமல் பாதுகாத்து,வெளிப்படையான ஒரு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு, குற்றம் நிரூபணமாகும்தருணத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். கொடூரமான சட்டங்களைஅரசு திரும்பப் பெற்றால்தான் அங்கு மக்கள் ஜனநாயக வழியிலான தங்கள்உரிமைகளை முன்வைத்துப் போராடி, தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற இயலும்.இல்லை எனில், பாராமுல்லாவில் ஒரு கிராமப் பெரியவர் கூறியது போல்தான் எதிர்காலத்தில் நடக்கும் :“குழந்தைகள் எங்களிடம் இந்தப் புதைகுழிகளைப் பற்றி கேட்கிறார்கள்.
ஏன்இங்கே இத்தனை ராணுவத்தினர் உள்ளனர் என்பதைப் பற்றியும் மீண்டும் மீண்டும்கேட்கிறார்கள். வன்முறையில் இறப்பது இயற்கையானதுதான் என்கிற புரிதலைஅவர்கள் வளரும்போதே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்'' இந்தப் பெரியவரின்வரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த தேசமும் இந்த கணத்தில் தலைகுனிந்துதான் நின்றாக வேண்டும்.எங்கிருக்கிறது கார்கில்?கார்கில் என்றவுடன் இந்திய ராணுவம் வெற்றிக்கொடி நாட்டியதுதான் நம்மனங்களில் வந்து கம்பீரமாய் நிற்கும்! ஆனால், கார்கில் காஷ்மீரில் எங்குஉள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப்பார்த்திருக்கின்றீர்களா? பார்த்தால் பெரும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சும்.நம் மனங்களில் பதிந்துள்ள ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தின் எல்லைக் கோடுநெடுகிலும் தேடினாலும் கார்கில் எங்கும் கிடைக்காது. கார்கில், மிகச்சரியாக காஷ்மீர்வரைபடத்தின் மய்யத்தில் இருக்கிறது. மய்யத்தில் இருக்கும் கார்கிலைராணுவம் யாருடன் போரிட்டு மீட்டது?அதன் பிறகு, பல காஷ்மீர் வரைபடங்களை எடுத்துப் பார்த்த போதுதான் உண்மைவிளங்கியது. காஷ்மீரின் ஒருபகுதி சீனா வசம் உள்ளது. அதனை "அக்சாய் சீன்"என்று அழைக்கிறார்கள். அடுத்து வடக்கே உள்ள காஷ்மீரின் பெரும் பகுதிபாகிஸ்தான் வசம் உள்ளது. அதனை, "பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்"என்றும் "ஆஸாத் ஜம்மு-காஷ்மீர்" என்றும் இரு சாரரும் அவர்களதுவசதிக்கேற்ப அழைக்கிறார்கள். இது தவிர்த்து இரு தேசங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள ஒருபெரும் நிலப்பரப்பு உள்ளது, அது, "ஆஸாத் காஷ்மீர்'"(விடுதலையடைந்தகாஷ்மீர்) என்று அழைக்கப்படுகிறது.எஞ்சியுள்ள பகுதி மட்டும்தான் இந்தியா வசம் உள்ளது. அதனை நாம்"ஜம்மு-காஷ்மீர்" என்று அழைக்கிறோம்; பிறர், "இந்தியா நிர்வகிக்கும்காஷ்மீர்" என்று அழைக்கின்றனர்.இந்தப் பகுதிகளை எல்லாம் பிணைக்கும்கோடுதான் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு (Line of Control) என்றுஅழைக்கப்படுகிறது. சொந்த மக்களைக் கொன்று புதைக்கும் இந்திய இராணுவம், அதற்காகவே கஷ்மீரில்நிரந்தரப் பணியிலிருக்கும் 6,67,000 படையினருக்கு நமது வரிப்பணம்விரயமாகும் அவலம், நமது நடுவண் அரசின் கையாலாதத் தன்மையும் பொய்ப் புள்ளிவிவரங்களும், சட்டம்-நீதி-நியாயம்-மனிதம் அனைத்தையும் காலின்கீழ் போட்டுமிதித்து விட்டு, தொடர் படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் வழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் இந்திய இராணுவம்-துணை இராணுவம் ஆகியவற்றின் கொடுமைகள்அவ்வப்போது மட்டுமே உலகத்தின் முன் கொண்டுவரப் படுகின்றன.
அந்த வரிசையில் கீற்று.காம் தளத்தில் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களால்எழுதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை, ஒவ்வொரு இந்தியனும் படித்துத்தெரிய வேண்டிய, புதையுண்ட பல உண்மைகளை உள்ளடக்கியதாகும். அதை இங்குநன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.கஷ்மீர் மக்களின் அவலங்கள் குறித்த நமது பழைய (மீள்)பதிவுகள்:1. தீவிரவாதி வேட்டையின் மறுபக்கங்கள்2. கண்ணீர் வடிக்கும் கஷ்மீர் ரோஜாக்கள்3. கஷ்மீரில் நடக்கும் அரசபயங்கரவாதம்4. கஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை-15. கஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை-2"உடனடி விசாரணை தேவை" - அம்னஸ்டிசிறீநகரில் இருந்து செயல்படும் "காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பு"மார்ச் 29, 2008 அன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உரிமாவட்டத்தின் 18 கிராமங்களில் மட்டும் இதுவரை 940 சடலங்கள் பல கும்பல்புதைகுழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 2006 முதல்அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல்கள்சேகரிக்கப்பட்டன. உலக மனிதஉரிமை அமைப்பான 'அம்னஸ்டி இன்டர்நேஷனல்' இந்தத் தகவல்களின் அடிப்படையில்,இந்திய அரசு உடனே விசாரணையை நடத்த வேண்டும் எனக் கண்டிப்பான குரலில்தெரிவித்துள்ளது. பாதிக்கப் பட்டவர்களுக்கு முழு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு,சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் 'அம்னஸ்டி' கேட்டுக்கொண்டது.
Courtesy: International People’s Tribunal of Human Rights and Justicein India Administered Kashmir. ‘Buried Evidence : Unkown, Unmarked,and Mass Graves in India Adminisrered Kashmir’ by Angana P.Chatterji,Parvez Imroz, Gautam Navalakha, Zahir Parez Imron, Gauam Navlakha,Zahir Ud-Din, Mithir Desai, Khurram அர்வெழ்
நன்றி : அ.முத்துக்கிருஷ்ணன், கீற்று.காம்.
நன்றி: Umar Farook <vpuf@yahoo.co.uk> மற்றும் அப்துல் ரசாக் (துபாய்)
செவ்வாய், 6 ஏப்ரல், 2010
நீதிபதிகளுக்கு ஜீரணம் ஆகிவிட்டது!
நன்றி:Umar Farook <vpuf@yahoo.co.uk> மற்றும்
Abdul Razak
திங்கள், 5 ஏப்ரல், 2010
இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்!
நன்றி: அப்துல் ரசாக் (துபாய்)
இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், "ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே" என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால்,
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை; இறைநேச செல்வர்களின் கப்ருகளுக்கு சென்று அவர்களிடம் தானே பிரார்த்திக்கின்றோம் (துஆச் செய்கின்றோம்)! அந்த இறை நேச செல்வர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்து கண்ணியப்படுத்துகிறோம்! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம்! ஆனால் நாங்கள் அவர்களை வணங்கவில்லை" என்று கூறுகின்றனர்.
இங்கு நாம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்துக் கொள்ள வேண்டும். வணக்கம் என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்டால், உடனே அவர்கள் "தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகியவை வணக்கமாகும்" என்று பதில் கூறுவார்கள். வணக்கம் என்பது மேற் கூறியவைகள் மட்டுமன்று. பிரார்த்தனை, வேண்டுதல், நேர்ச்சை செய்தல் , அறுத்துப் பலியிடுதல், உதவி கோருதல், பாதுகாவல் தேடுதல் இவைகள் அனைத்துமே வணக்கமாகும். இவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும். (மேலதிக விபரங்களுக்கு...)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“பிராத்தனையும் (துஆவும்) வணக்கமாகும்” (அபூதாவூத்)
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கை எவ்வாறிருந்தது எனில், இவ்வுலகத்தையும் அதில் உள்ளவர்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் என்றே அறிந்து வைத்திருந்தனர். இதை இறைவனுடைய திருமறையும் பின்வருமாறு கூறுகிறது.
‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக. (அல்-குர்ஆன் 10:31)
மேலும் பார்க்கவும் அல்-குர்ஆனின் வசனங்கள் 43:87 மற்றும் 29:63.
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொணடிருந்தார்களே! பிறகு எதற்காக இறைவன் அவர்களை "முஷ்ரிக்குகள்" என்று அழைக்க வேண்டும்? காரணம் என்னவெனில் அவர்கள் முன் சென்ற நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் உருவங்களை சிலைகளாக வடித்து அந்த சிலைகளிடம் தங்களின் தேவைகளை முறையிட்டு வந்தனர். அந்த சிலைகளிடமே உதவி தேடினர். ஆபத்து காலங்களில் பாதுகாவலும் தேடி வந்தனர்.
"படைத்தவனிருக்க அவனை விட்டு விட்டு, ஏன் இந்த சிலைகளிடம் பிரார்த்திக்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதில், "எங்களுடைய தேவைகள் நிறைவேறுவதற்காக மற்றும் அவைகள் எங்களை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கிவைக்கும் என்பதற்காகத்தான் நாங்கள் அந்த சிலைகளை வணங்குகிறோம்" என்று கூறினர். இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான்.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், 'அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை' (என்கின்றனர்). (அல்-குர்ஆன் 39:3)
ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளின் செயல்களோடு தற்போது கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களின் செயல்களை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், இவைகளிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,
அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இந்த 'அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து ஆட்சி செலுத்தி வருபவன் அல்லாஹ் ஒருவனே' என்று நம்பியிருந்தார்கள்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் நபிமார்கள், இறந்த நல்லடியார்கள் ஆகியோர்களிடம் தங்களின் தேவைகளை கேட்டும், ஆபத்து காலங்களில் பாதுகாவல் தேடியும் வந்தனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்களிடமும், இறைநேசர்களிடமும் ஷெய்கு மார்களிடமும் தங்களின் கோரிக்கைகளையும் பிரார்தனைகளையும் செய்கின்றனர். ஆபத்து காலங்களில் அவர்களிடம் பாதுகாவலும் தேடுகின்றனர்.
அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இறந்து போன அந்த நல்லடியார்களின் உருவங்களைச் சிலைகளாக வடித்து, அவற்றை பூஜித்து வந்தனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர் இறந்தவுடன் அவர்களுடைய கல்லறைகளில் கட்டடங்கள் (தர்ஹா) எழுப்பி அவர்களுடைய கப்றுகளை உயரமாக எழுப்பி, அவற்றிற்கு சந்தனம் பூசி, போர்வைகள் போர்த்தி, பூமாலைகள் அணிவித்து பூஜை புணஸ்காரங்கள் செய்கின்றனர்.
அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் அந்த சிலைவடிவத்தில் உள்ள நல்லடியார்களுக்காக நேர்ச்சை செய்து அவர்களுக்காக காணிக்கை செய்து அறுத்துப் பலியிட்டனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் கப்ருகளில் அடக்கமாகியிருக்கும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர்களுக்காக நேர்ச்சைகள் செய்தும் அறுத்துப் பலியிட்டும் வருகின்றனர்.
அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள், நல்லடியார்களின் உருவத்தில் உள்ள சிலைகளை தவாபு செய்து அவர்களிடம் மன்றாட்டம் செய்து வந்தனர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் நல்லடியார்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மன்றாடுகின்றனர்.
அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகளிடம் படைத்த இறைவனை விட்டு விட்டு நீங்கள் ஏன் இந்த சிலைகளை இப்படி வழிபடுகறீர்கள் என்று கேட்டால், "நாங்கள் இந்த சிலைவடிவத்தில் இருக்கின்ற நல்லடியார்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்" என்று கூறினர்.
இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளிடம், அதே போல் கேட்டால் "நாங்கள் இந்த கப்றுகளில் அடக்கமாகியிருக்கும் இறை நேசர்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்" என்று கூறுகிறார்கள்.
என தருமை சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தனை செய்து பாருங்கள்! ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளுக்கும் இன்றைய காலக் கட்டத்தில் வாழும் கப்று வணக்க முறைகளை ஆதரிப்போருக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் செய்தவற்றையே தான் இவர்களும் செய்கின்றார்கள். அவர்கள் கூறிய காரணத்தையே இவர்களும் கூறுகின்றார்கள்.
சிலருக்கு கோபம் வரலாம். நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே! எங்களை ஏன் கப்று வணங்கி என்று திட்டுகிறீர்கள் என்று?
ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நல்லடியார்களின் வடிவத்தில் இருந்த உருவச்சிலைகளை வலம் வந்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்தி அதன் மூலம் அந்த நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் அவர்களை சிலை வணங்கிகள் என்கிறோம்.
மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள் உருவத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்ற அந்த சிலைகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அந்த தெய்வங்களை வணங்குவதால் அவர்களையும் சிலை வணங்கிகள் என்கிறோம்.
ஆனால் இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கப்ருகளை வலம் வந்து, அதற்கு பூசி, மெலுகி, போர்வை போர்த்தி, நெய் விளக்கு ஏற்றி, சந்தனம் பூசி, பத்தி கொழுத்தி, பூமாலை அணிவித்து அந்த சிலைகளை வணங்குவோர் என்னென்ன காரியங்களை அந்த சிலைகளுக்கு செய்கிறார்களோ அவையனைத்தையும் அந்த நல்லடியாரின் கப்றுகளுக்கு செய்பவரை கப்று வணங்கி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதை விட்டு விட்டு அந்த நல்லடியார்களின் சிலைகளிடம் இவர்கள் கேட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் "முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)" என்றான். அதே செயல்களையே செய்யும் தற்காலத்தவர்களை எவ்வாறு அழைப்பது? சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருந்தாலும் தான் நாடினால் மன்னித்து விடுவேன் என்று கூறுகிறான். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறுகிறான். இறைவனால் மன்னிப்பே கிடைக்காத அத்தகைய படுபயங்கரமான பாவம் என்னவெனில் "இறைவனுக்கு இணை வைத்தலாகும்". அதாவது எந்த தேவைகளையும் இறைவனிடம் நேரடியாக கேட்டுப் பெறாமல் இடைத்தரகர் (அவுலியா, இறை நேசர் போன்றவர்கள்) மூலம் கேட்டு பெறுவது இத்தகைய இணைவைப்பாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
அல்லாஹ் நம் முஸ்லிமான நம் அனைவரையும் காப்பாற்றி நமக்கு அவனுடைய நேர்வழியை காட்டுவானாகவும்.
அன்புடன்,
புர்ஹான்,
சவூதி அரேபியா
நன்றி: http://tmmkdubai.blogspot.com/2010/04/blog-post_3248.html
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
உறவுக்கு அப்பால் தாய் தந்தை
தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம்.அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயேஅவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்குப்பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன்வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், இறைவா நீ என் மீதும் என்பெற்றோர்மீதும் புரிந்த அருள் கொடைகளுக்காக நன்றி செலுத்தவும், உன்னுடையதிருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல செயல்களைச் செய்யவும் எனக்குஅருள்பாலிப்பாயாக! என்னுடைய சந்ததியையும் நல்லோர்களாகச்சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்.அன்றியும் நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும்கீழ்ப்படிந்தவனாக) இருக்கிறேன்'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 46:15)வயோதிகப் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதில் இறைவனின் திருப்திஅடங்கியிருக்கிறது என்ற உண்மையையும் இத்திருவசனம் உணர்த்துகின்றது,தங்களிடம் பரிவும் கனிவும் காட்டுகின்ற சந்ததிகளையுடைய பெற்றோருக்கு,வயோதிகம் என்பது ஒரு சுமையன்று. வாழ்வின் பல்வேறு நிலைகளுள் அதுவும்இயல்பான ஒரு நிலையேயாகும்.ஆனால் இன்று நாம் காண்பது என்ன?வயோதிகம் இறை விதிப்படி மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு இயல்பான நிலைஎன்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். வயோதிகம் என்றாலே அது வேதனைமிக்கதுதான் என்பது போன்ற ஒரு மிரட்சியை இன்றைய செய்தித்தாள்கள்,இதழ்கள், டி.வி. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியன பூதாகரமாகச்சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.ஓய்வுபெறுதல், முதுமையடைதல் போன்றவற்றைத் தாங்கமுடியாத துன்பம் தரும்பிரச்சனைகளாக, இந்த மீடியாக்கள் நீட்டி முழக்கி விஸ்தரிக்கின்றன,குடும்பத்தலைவர் ஒருவர் பணிஓய்வு பெறுதலை அதிர்ச்சிக்குரிய சம்பவமாக இவைமிகைப்படுத்திக் காட்டுகின்றன. குடும்பத்து மன நிலையிலும் சமுதாயத்து மனஅமைப்பிலும் இந்த மீடியாக்களின் தாக்கம் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.பணியிலிருந்து ஓய்வுபெறுவது என்பது ஒருவர் கடந்த காலங்களில் ஆற்றியஅரும்பெரும் உழைப்பின் பலாபலன்களை ஓய்வுடன் நிம்மதியாக இருந்துஅனுபவிப்பதற்குரிய காலமாகும் என்பதைக் குடும்பத்தினரும் சமுதாயமும்நினைத்துப் பார்ப்பதில்லை.எந்த விதமான பிக்கல் பிடுங்கலுமின்றி, குதூகலமாகக் குடும்பத்துடன் முழுநேரத்தையும் கழிப்பதற்கு வாய்ப்பளிக்கின்ற அற்புதமான காலம் முதுமைப்பருவமாகும். குடும்பப் பாரங்களையெல்லாம் இளந்தோள்களின் மீதுசுமத்திவிட்டு, முதியவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, பிறரோடுஒத்திசைந்து போகிறவர்களாகவும், நல்லிணக்கமாக நடந்து கொள்பவர்களாகவும்ஆகிவிடுதல் வேண்டும். இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணஇயலும்.ஓய்வு பெற்ற முதியோர் சிலர் ஒதுங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.சிலர் தங்களுடைய ஆக்கபூர்வமான அனுபவங்களைக் கொண்டு பொதுக்காரியங் களில்தங்களை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு, சமூக நலப்பணிகளில் அக்கறைகாட்டுகின்றனர்.குறைந்த பட்சம், பேரக்குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய்விடுதல்,திருக்குர்ஆனையும் பள்ளிப்பாடங்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல்,வீட்டுத் தேவைகளுக்காக மார்க்கெட் போய் வருதல் போன்ற சின்னச்சின்னஉதவிகளைச் செய்வதன் மூலம் முதியவர்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வழியில்செலவிட முடியும். அதே வேளையில் குடும்பத்தினரின் மன நிறைவையும் ஈட்டிக்கொள்ள முடியும்.இப்படிப்பட்ட உதவி ஒத்தாசைகளைச் செய்ய இயலாத நிலையிலுள்ள வயோதிகர்களிடம்குடும்பத்தினர் பரிவோடு நடந்து கொள்ளுதல் வேண்டும். முதியவர்களுக்குமுக்கியமாகத் தேவைப்படுவது சிறிது பொருளாதாரப் பாதுகாப்பும், அன்புபாராட்டும் குடும்பத்தினரும், சற்று பேச்சுத்துணையுமே ஆகும். இவற்றைக்குடும்பச் சூழ்நிலையில் செய்து கொடுத்து விட்டால் அதுவே அவர்களுக்குப்பெரும் பயனளிப்பதாக இருக்கும்.குடும்ப விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக வயோதிகப்பெற்றோர்களின் அறிவுரையையும் அனுபவ வழி காட்டுதல்களையும் நாடுதல்வேண்டும். இல்லையேல் தாம் புறக்கணிக்கப் படுவதாகக் கருதி அவர்கள் மனம்புழுங்குவர்.முதியோரைப் புறக்கணித்தல், கீழ்த்தரமாக நடத்துதல், அவர்களிடம் கொடுரமாகநடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களால் அவர்களுடைய வாழ்வுமட்டுமன்றி,முழுக்குடும்ப அமைதியுமே நிலை குலைகிறது.பெற்றோரைப் பார்த்து சீ' என்று கூடக் கூறலாகாது என்கிறது திருமறைகுர்ஆன்.இப்படியிருக்க அவர்களைத் திட்டுவது என்பது இறைவனை அஞ்சிஒழுகுபவர் எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு செயலாகும்.பெற்றோரை நாம் திட்டாமல் இருந்தால் மட்டும் போதுமா? பிறரிடமிருந்துபெற்றோருக்கு ஏச்சு வாங்கிக் கொடுக்காமலும் இருத்தல் வேண்டும். இதுதொடர்பாக நபி(ஸல்) அவர்கள் நல்கியுள்ள அறிவுரையை எண்ணிப் பார்த்தல்வேண்டும்.நபி(ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவங்களில்உள்ளதாகும் என்று கூறினார்கள். அப்போது (நபித்தோழர்கள்)'', அல்லாஹ்வின்தூதரே! எந்த மனிதராவது தனது பெற்றோரைத் திட்டுவாரா?'' எனக் கேட்டார்கள்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம் ஒருவர் இன்னொருவரின் தந்தையைத்திட்டுகிறார். அப்போது அவர் இவருடைய தந்தையைத் திட்டுகிறார். ஒருவர்இன்னொருவரின் தாயைத் திட்டுகிறார். அப்போது அவர் இவருடைய தாயைத்திட்டுகிறார்'' என்று விளக்க மளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்இப்னு அம்ர் இப்னுல்ஆஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்முதியோருக்கும் இளையோருக்குமிடையே உள்ள உறவுகளாயினும் சரி; கணவன், மனைவி,மக்கள், உறவினர் முதலியோருக்கிடையே உள்ள உறவு நிலைகளாயினும் சரி;இங்கெல்லாம் தேவையற்ற உரசல்களும் விரிசல்களும் எதனால் ஏற்படுகின்றன? இந்தஇடத்தில் மனிதனுடைய நாவு ஆற்றுகின்ற பங்குபணி மிக மிக முக்கியமானதாகும்.குடும்பத்தில் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகள், பிணக்குகளுக்குப் பல்வேறுகாரணங்களிருப்பினும், நாவை அத்துமீறிப் பயன்படுத்துதலே, பல நேரங்களில்வேண்டாத விபரீதங்களைத் தோற்றுவித்து விடுகின்றது.முரட்டுத்தனமாகப் பேசுதல், இடைமறித்துப் பேசுதல், இழிவாகவும் ஏளனமாகவும்பேசுதல், சிறுமைப்படுத்திப் பேசுதல், தற்பெருமை பாராட்டுதல் போன்ற நாவின்திருவிளையாடல்களால் குடும்ப அமைப்பிலும் கூட்டு அமைப்பிலும் பெருஞ்சீரழிவுகள் ஏற்பட்டு விடுகின்றன.ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுதலும்,அவதூறுகளை வாரியிறைத்தலும், தனி ஒருவரின் பண்பு நலன்களையும், இல்லம்என்னும் அன்பு மாளிகையையும் தூள் தூளாக உடைத்துச் சிதைத்து விடுகின்றன.குடும்பத்திலுள்ள அத்துணை பேரும் ஒரேமாதிரி எண்ணுவதில்லை, செயல்படுவதில்லை. ஒவ்வொருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே.கணவன் மனைவிக்கிடையேயும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும் உடன்பிறந்தவர்களுக்கு மத்தியிலும் கருத்து மாறுபாடுகள் இருக்கத்தான்செய்யும். குடும்ப அமைப்புக்குள்ளேயே இப்படிப்பட்ட வேறுபாடுகள்நிலவும்போது சமுதாய அமைப்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.இக்கருத்து மாறுபாடுகளைப் பரஸ்பரம் புரிந்து கொள்ளுவதன் வாயிலாகத்தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நல்லெண்ணம் கொள்ளுதல், நட்புக்கரம்நீட்டுதல், அமைதியான நட்புச் சூழ்நிலையில் உரையாடுதல், ஆகியவற்றால் மிகக்கடுமையான சிக்கல்களுக்கும் எளிதில் தீர்வு காண இயலும்.இதை விடுத்து குடும்பத்துக்குள்ளே ஒருவர் மீது ஒருவர் தவறான எண்ணத்தைவளர்த்துக் கொண்டு தங்களுக்கிடையே முகம் கொடுத்துப் பேசாமல் ஒருவரைஒருவர் பழித்துப் பேசிப் பகைமை பாராட்டிக் கொண்டிருப்பதால் குடும்பஅமைப்பின் அடித்தளமே செல்லரிக்கத் தொடங்கிவிடும்.எனவே கடுஞ்சொற்களின் அழிவுச் சக்தியை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. குடும்ப அமைப்பையும் சமுதாய அமைப்பையும் வெடித்துச்சிதைத்துவிடும் அணுகுண்டு போன்றவை இவை எனலாம்.குடும்ப அமைப்பில் ஒருவரின் கற்பு நெறிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம்கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவம் நாவடக்கத்திற்கும் இருக்கிறது.கற்பு நெறி பிறழ்ந்தவர்கள் சமுதாய மதிப்பீட்டில் எந்த இடத்தைப்பெறுகிறார்களோ, அது போன்ற இடத்தைத்தான் நாகாக்கத் தவறியவர்களும்பெறுவார்கள்.நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று இதனை நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகின்றது.எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் இரண்டு தொடைகளுக்குமத்தியில் உள்ளதையும் சரியாகப் பயன்படுத்தப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோஅவருக்குச் சொர்க்கத்திற்கு நான் பொறுப் பேற்று கொள்கின்றேன் என்பது நபிமொழியாகும். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்தொடைகளுக்கிடையில் உள்ளதைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து இறைவனைஅஞ்சிக் கற்பொழுக்கத்துடன் வாழ்பவர்களை மிகுதியாகக் காண்கிறோம். ஆனால்இப்படிப்பட்டவர்களுள் பெரும்பான்மையினர் தாடைகளுக் கிடையே உள்ளதைப்பேணுவதில் தடம் புரண்டு போய் விடுகின்ற காட்சியைக் குடும்பந்தோறும் கண்டுவருகின்றோம்.மனிதர்கள் போகிற போக்கில் நரம்பில்லாத நாக்கைக் கொண்டு லேசாகப் பேசிக்சென்று விடுகிறார்கள். ஆனால் இதன் விளைவாகக் குடும்பத்திற்குள்ளேயும்சமுதாயத்திற்குள்ளேயும் எவ்வளவு பெரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றனஎன்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. மறுமையின் சொர்க்கப் பேற்றிற்கேஇது தடையாக அமைந்துவிடும் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை நாம் கவனத்தில்கொண்டு காரியமாற்றக் கடமைப்பட்டுள்ளோம்.வயோதிகமடைந்த பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகள் குறித்துத் திருமறைகுர்ஆனும் நபிமொழிகளும் தெளிவான வழிகாட்டுதல்களை நல்கியுள்ளன. இவைமட்டுமின்றி, பெற்றோர் காலமான பின்னர், பிள்ளைகள் அவர்களுக்குநிறைவேற்றிட வேண்டியன யாவை என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்கள்நவின்றுள்ளார்கள்.இறைத்தூதர் அவர்களே! பெற்றோர் இறந்து விட்ட பிறகு, நான் ஆற்றவேண்டியஉதவிகள் (பிர்ரு) எதேனும் உண்டா? என்று பனூஸலி மா கூட்டத்தைச் சேர்ந்தஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்!1. பெற்றோரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்.2. அல்லாஹ்விடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருதல்.3. அவர்கள் முடிவு செய்துவிட்டுச் சென்ற உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல்.4. அவர்களின் உறவினர்களுக்கு உதவிபுரிதல்5. அவர்களின் நண்பர்களைக் கண்ணியப் படுத்துதல் ஆகியவையாகும் என விளக்கமளித்தார்கள்.அறிவிப்பவர்: உஸைது ஸாயிதீ (ரலி) நூல்: அபூதா¥த், இப்னுமாஜாஆகவே பெற்றோருக்குப் பிள்ளைகள் ஆற்ற வேண்டிய கடமைகள் பெற்றோரின்மரணத்தோடு முடிந்து விடுவன அல்ல. பெற்றோர் காலமான பின்னரும் அவைதொடர்கின்றன.பெற்றோருடைய ஜனாஸாவுக்கு யார் யாரெல்லாமோ பிரார்த்தனை செய்துகொண்டிருப்பார்கள். அதற்கு முன்னுரிமை பெற்ற பிள்ளைகள் ஜனாஸா தொழுகை யில்கலந்து கொள்ளாமல் தூரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இது போன்ற வேதனைக்குரிய காட்சிகளை நாம் பல இடங்களில்கண்டு வருகிறோம். இந்தப் போக்கினைப் பிள்ளைகள் நீக்கிக் கொள்ளுதல்வேண்டும்.பெற்றோருக்குப் பாவமன்னிப்புக் கோருவதற்காகக் கூலிக்கு ஆள் பிடித்துவந்து கத்தம் பாத்திஹா முதலியவற்றை அரங்கேற்றி, தூய இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களிலிருந்து விலகிப் போகின்றவர்களைப் பார்க்கின்றோம். ஒவ்வொருதொழுகைக்குப் பின்னரும், வாய்ப்பு கிடைக்கும் போதும் பெற்றோருக்காகப்பிள்ளைகள் மனமுவந்து இறைவனிடம் கையேந்தக் கடமைப்பட்டுள்ளனர். அந்தப்பிரார்த்தனையே உயிரோட்ட முடையதாகும்.சொத்து சுகங்களுக்கு அதிபதியான தந்தை அல்லது தாய் மரணமடைந்து விட்டால்,பல குடும்பங்களில் சொத்துப் பங்கீடு காரணமாகப் பெரும் சண்டை சச்சரவுகள்ஏற்படக் காண்கிறோம். அண்ணன் தம்பிகளே ஒருவருக்கொருவர் பகைத்துக்கொண்டும்; கோர்ட்டு, கேசு என்று எதிரிகள் போல வழக்காடிக் கொண்டும்; நீயாரோ நான் யாரோ என்று பிரிந்து போவதைக் காண்கிறோம்.ஜனாஸாவுக்காகச் செய்யப்படும் பல்வேறு பிரார்த்தனைகளுள் இறைவா (இறந்துவிட்ட) அவருக்குப் பிறகு எங்களை வழிதவறச் செய்துவிடாதே, எங்களைக்குழப்பத்தில் ஆக்கிவிடாதே!'' என்று ஒரு இறைஞ்சுதலும் இடம் பெறுகின்றது.இதனை நம்மில் பலர் உணரத் தவறி விடுகின்றனர்.பெற்றோர் உயிருடனிருக்கும்போது முடிவு செய்துவிட்டுச் சென்ற உடன்படிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.மரணசாஸனத்தைக் கேட்டபின்னர், எவரேனும் ஒருவர் அதைமாற்றினால், நிச்சயமாகஅதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும்.நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும்இருக்கின்றான். அல்குர்ஆன் 2:181எனவே இவ்விஷயத்தில் குடும்பத்தினர் கவனமாக இருத்தல் வேண்டும். அதேவேளையில் இறந்து போனவர் வேண்டுமென்றே பாரபட்சமாக மரணசாஸனம்செய்திருப்பாரானால், அதனை மாற்றிவிட்டு, நியாயமான முறையில்சீர்செய்திடவும், குடும்பத்தின் வாரிசுதாரர் அனைவரும் சமாதானமாகும்விதத்தில் அதை நேர்படுத்திடவும் வேண்டும் என்பதையும் திருமறைத்தெளிவுபடுத்தியுள்ளது.்மரணசாஸனம் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மனமுரண்டான அநீதமோஇருப்பதை அஞ்சி ஒருவர் (சம்பந்தபட்ட வர்களிடையே) சமாதானம் செய்து (அந்தமரண சாஸனத்தை) சீர்செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை.நிச்சயமாக அல்லாஹ் மன்னிப் பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாகவும்இருக்கிறான். அல் குர்ஆன் 2:182குடும்பங்களில் பகையும் பிணக்கும் ஏற்படுவதற்கு சொத்து சுகங்கள் ஒருமுக்கியக் காரணமாக இருக்கின்றன. இதனைக் குடும்பத்தினர் எப்படிநல்லிணக்கமான முறையில் பங்கிட்டுக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கு இஸ்லாம்மிக அருமையான வாரிசுரிமைச் சட்டங்களை வரையறுத்துக் கூறியுள்ளது. அதனைஇஸ்லாமியக் குடும்பங்கள் இறைவனுக்குப் பயந்து இனிது பேணுவார்களாயின்,அதன் காரணமாக எழுகின்ற மனஸ்தாபங்கள் சண்டை சச்சரவுகளிலிருந்து விடுபட்டுசாந்தி பெறவியலும்.பெற்றோரின் உறவினர்களோடு நன்முறையில் நடந்து கொள்ளுதலும் பெற்றோருக்குப்புரிகின்ற மரியாதையைச் சார்ந்ததாகும் உறவினர்கள் மற்றும் சுற்றத்தினரைத்தழுவி வாழ்ந்திடுதல் வேண்டும் என்பதைத் திருமறை குர்ஆன் பல இடங்களில்வலியுறுத்திப் பேசியுள்ளது.நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை புரியுமாறும்உறவினர்களுக்குக் கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகின்றான். அன்றியும்மானக்கேடான காரியங்கள்,பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றைவிட்டும் (உங்களை) விலக்குகிறான். நீங்கள் நினைவு கூர்ந்துச்சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். அல்குர்ஆன்16:90(அல்லாஹ்வாகிய) அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரியஉரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடையஉறவினர்களை (துண்டித்து விடுவதிலிருந்தும்) நீங்கள் அல்லாஹ்விற்காகப்பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1உறவைத் துண்டிப்பது மிகப்பெரும் தவறாகும் என்பதைத் திருக் குர் ஆன் கூறிநிற்கிறது. உறவைப் பேணுவதுவே நீதியான நன்மையான செயலாகின்றது. மானக் கேடானஅநீதியான செயல்களுள் ஒன்றாக உறவை மறுப்பதும் அமைந்து விடுகின்றது. எனவேஇவ்விஷயத்தில் அல்லாஹ்வைப் பெரிதும் அஞ்சி, உறவினர்களுடன்ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டியதுகுடும்பத்தினரின் தலையாய கடமையாகும்.கருவறையே! உன்னோடு நல்லுறவு பேணுகின்றவருடன் நானும் நல்லுறவு பேணுவேன்,உன்னைத் துண்டிப்பவருடன் நானும் துண்டித்து விடுவேன் என அல்லாஹ் கூறினான்என்பதாக நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். நூல்: புகாரியார் யார் உறவினர்களுடன் நேசம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் தான்இறைவனும் நேசம் பாராட்டுகிறான். யார் யார் குடும்ப உறவுகளைத் துண்டித்துவிடுகிறார்களோ, அத்தயை அன்பற்றவர்களுடன் இறைவனும் அன்பு பாராட்டுவதில்லை. மாறாக அவர்களுடன் உள்ள உறவை இறைவன் துண்டித்து விடுகிறான் என்றஒரு முக்கியச் செய்தியை இந்நபிமொழி நமக்கு உணர்த்தி நிற்கின்றது.இதன் முக்கியத்துவத்தை நம்மவர் உணர்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.தொட்டதற்கும் பிடித்ததற்கும் உறவுக்காரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு,பகைபாராட்டுவதால் இறைநேசத்திலிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டுவிடுகின்றனர். இதைவிட பெரிய நஷ்டம் ஒரு முஸ்லிமுக்கு வேறு என்னதான்இருக்க முடியும்?குடும்ப உறவைத் துண்டிப்பதன் வாயிலாக இறைநேசதத்திலிருந்துதுண்டிக்கப்பட்டவன் நரகம் புகுவது திண்ணம்.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (குடும்ப உறவை) துண்டிப்பவன் சுவனம்புகமாட்டான். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம்எனவே குடும்ப உறவை எவர் முறிக்கிறாரோ அவர் இறைவனுடனுள்ள உறவையேமுறித்தவராவார். இத்தகையவர் சுவர்க்கப் பேற்றுக்கே அருகதையற்றுப்போகிறார்.நம்முடைய சொந்த பந்தங்கள் நம்முடன் உறவை முறித்துக் கொண்டாலுங்கூட, நாம் அர்களுடன் உறவை முறித்து விடுதல் கூடாது. இதனை எடுத்துரைக்கும்விதமாக நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று அமைந்துள்ளது.ஒருவர் உறவு பாராட்டுகிறார் என்பதற்காகப் பிரதி உறவு பாராட்டுபவர் உறவைநேசித்தவர் ஆகார். மாறாக, தன்னுடன் உறவை முறித்துக் கொண்டவர்களுடனும்தான்உறவு பாராட்டி, அவர்களுடன் நன் முறையில் நடப்பவரே உறவை நேசித்தவராவார்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்: புகாரிஇதனை நமக்கு எடுத்துரைத்த நபி (ஸல்) அவர்களே இந்தத் திருமொழிக்கு முன்மாதிரியாக வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையார் அபூதாலிபைத் தவிர அந்தக்குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் நபிகளாருக்குப் பாதுகாப்புஅளித்திடவில்லை. அபூதாலிபின் குடும்பத்தினர் தனக்குப் பாதுகாப்புஅளிக்கவில்லை என்ற காரணத் துக்காக நபி(ஸல்) அவர்கள்அக்குடும்பத்தினருடனுள்ள உறவைத் துண்டித்து விட வில்லை. மாறாகஅக்குடும்பதாருடன் தானே வலியச் சென்று நல்லுறவை நிலை நிறுத்தினார்கள்.அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மனமுவந்து நிறை வேற்றினார்கள்.நபிகளாரின் இத்தகைய நன்னடத்தையை அம்ரு பின்ஆஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறுஅறிவிக்கின்றார்கள்.நபி(ஸல்) அவர்கள் இரகசியமாக அன்று; பகிரங்கமாகவே சொன்னதை நான் கேட்டேன்.எனது தந்தை (அபூதாலிப்) குடும்பத்தினர் எனது அவ்லியாவாக' (பாதுகாப்பாளாராக) இல்லை.நிச்சயமாக அல்லாஹ்வே நம்பிக்கை கொண்ட நல்லோரின் வலியாக' (பாதுகாவலனாக) இருக்கிறான்.ஆயினும் (அக்குடும்பத்தினராகிய) அவர்கள் எனது உறவினர்களே! நான்அவர்களுடன் நல்லுறவு பேணி அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைநிறைவேற்றுகின்றேன். நூல்: புகாரி.குடும்ப உறவுகளும் சொந்த பந்தங்களும் சிதைந்து சின்னா பின்னப்பட்டுப்போகாமலிருக்க வேண்டுமானால், இது மாதிரியான அழகிய நடை முறைகளை மேற்கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
With Dua.........உங்களின் மேலான துஆக்களுடன்Madukkur Thawheed Charitable Trustமதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை.
நன்றி: அப்துல் ரசாக் (துபாய்)