கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொள்ளுமேட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் நள்ளிரவில் கடைத்தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசைக் கடைகள் எரிந்து சாம்பலானது.பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும் வகையில் கொள்ளுமேடு கிளை தமுமுகவினரால் பொதுமக்களிடம் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வியாபாரிகளான ஷேக் கிற்கு ரூ. 8500 , அப்துல்லாவிற்கு ரூ.7000 ,யூனுஸ் க்கு ரூ. 5000 , பக்கிர்சவுக்கு ரூ.3500 , ஒபி,உபைது,பாபு,அன்வர்,ஜகரியா,ஆகியோருக்கு தலா ரூ.1000 , ராஜாவுக்கு ரூ.1075 ம் வழங்கப்பட்டது. இந்நிதியை கடந்த 15 / 04 /2010 வியாழக்கிழமை ஜமாத்தார்கள் பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளுமேடு தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் வழங்கினார்கள்.
நன்றி: கொள்ளுமேடு ஜாகீர் ஹுசைன், (துபை)