புதன், 31 மார்ச், 2010

The Sealed nectar – memories of the prophet (pbuh)-Author- ISSAm DIAB
TAMIL - Author : MUfti A.Umar Sharif Kashimiமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்


கேள்வி : மார்க்க சம்பந்தமான கேள்விகள் எழுகின்ற போது சபையிலுள்ள
மக்கள், கருத்துக்கள் வெளியிடவும், மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா)
வழங்கவும் முற்பட்டு விடுகின்றனர். இவ்வாறு முற்படுவோர் பெரும்பாலும்
மார்க்க ஞானம் அற்றவர்களாகவே உள்ளனர். இச்செயல் அல்லாஹ் ரசூலுக்கு
பொருத்தமானதா? இதைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

ஃபத்வா: மார்க்க அறிவில்லாதோர் மார்க்கம் பற்றிப் பேசுவது
தடைசெய்யப்பட்டதாகும், அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

'வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும்,
பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும் எது பற்றி அல்லாஹ் எந்த
ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும்
நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என்
இரட்சகன் தடை செய்துள்ளான் என (முஹம்மதே!) கூறுவீராக!' (அல்குர்ஆன்
அல்அஃராப்:33)

எனவே அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதிலிருந்து
தவிர்ந்து கொண்டு பேணுதலாக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும்
கடமையாகும். எனெனில் கருத்துச் சொல்வதற்கு இடம்பாடான உலக விவகாரங்களுடன்
தொடர்பான விஷயம் அல்ல இது.

திங்கள், 29 மார்ச், 2010

உறவை சேர்த்து வாழ்வது என்றால் என்ன?

நம்மோடு யார் கொஞ்சி குலாவுகிரார்களோ அவர்களோடு உறவாக இருப்பதா? இல்லை.
இதோ! நபி[ஸல்] கூறும் உறவின் இலக்கணம் பாரீர்;
உக்பா இப்னு ஆமிர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது எனவினவ, அதற்கு நபி[ஸல்]அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லீம் 4640.
மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1. செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் ஆமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்ந்தால் நல்லாருக்குமே என்பான்!
நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி பாரீர்!
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணிவாழட்டும்.நூல்;புஹாரி,எண் 5985
நம்முடைய உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசுகளை பாரீர்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார். பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" எனக் கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 1466
உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கத்தை அடைய முடியும்;
ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து, 'சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள் என வினவ, அதற்கு நபியவர்கள்,*அல்லாஹ்வை வனங்கு.*அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே!*தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு.*உறவினரை சேர்த்து வாழ்வீராக!என்று கூறினார்கள்.
இம்மையிலேயே தண்டனைதர தகுதியான பாவம்!
இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும்,
நபியவர்கள் கூறினார்கள்;
மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான்.
நூல்;அபூதாவூத்
சொர்க்கத்தின் திறவுகோல் உறவு;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
நூல்;புஹாரி,எண் 5984
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது 'உறவு' பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!With Best Regards,
Reyas Ahamad.

Heriot Watt University,Academic City,Dubai.Tel : 04-3616989/99 Email: R.Ahamad@hw.ac.uk Web: www.hw.ac.uk/dubai

வியாழன், 25 மார்ச், 2010

ஈமானுக்கு மரியாதை

இறைப்பிரியன்
இந்த உலகத்தில் உள்ள மனித சமுதாயம் ஒவ்வொன்றும் ஒரு வித உணர்வுகளை மதிக்கும் வண்ணம் தங்கள் குலத்திற்கோ, கோத்திரத்திற்கோ, நாகரீகத்திற்கோ மரியாதை செலுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் எந்த விஷயத்தில் யாருக்கு ஏன் எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்பதை சிந்தித்துணர கடமைப்பட்டிருக்கிறோம். பக்தியே கதி என அதிலேயே முக்தி அடையச்சொல்லி இஸ்லாம் கூறவில்லை. அதே சமயம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இறை நம்பிக்கை இரண்டற கலந்து விட்டால் நம்முடைய பாவக் கொடூரங்கள், குற்றச் சிந்தனையிலிருந்து விடுபட ஏதுவாய் அமையும். நம்முடையது என்று கூறிக்கொள்ள இந்த உலகத்தில் நிரந்தரமானது நாம் இருக்கும் வரை நம் உயிர் மட்டுமே. அப்படி நம்முடனேயே நமக்கே நமக்கான உயிர் கூட அது பிரியும்போது நம்மிடம் சொல்லிப்போவதில்லை. அது நமக்கே தெரியாமல் போய்விடுகிறது. இந்த வாழ்வாதாரத்தின் ஜீவ நாடியாக கருதப்படும் உயிர்நாடியை நமக்குத்தந்த இறைவன் மீது நாம் வைத்திருக்க வேண்டிய நம்பிக்கையே ஈமான் என்பதை இறையடிமைகளாய் திகழ வேண்டிய முஸ்லிம்கள் விளங்க வேண்டும். விளங்காதவர்களுக்கு விளக்கவும் வேண்டும். இது நமது கடமையுங்கூட. இறை நம்பிக்கை மனிதனிடத்தில் அறவே நீங்கிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தானின் மாய வலைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம்! தாராளம்!! நம்மை அவன் வலையில் வீழ்த்த பெரும் யுக்தியெல்லாம் வகுப்பதில்லல. மாறாக ஒரு மனிதனிடம் சோம்பேறித்தனம் இருக்கிறதென்றால் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறான். அதன் மூலம் இறைவனை சிந்திப்பதற்கு அவன் அவசரம் காட்டாமல் ஆக்கி விடுகிறான். ஒருவனிடம் ஆணவம் இருக்கிறதென்றால் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நாமெல்லாம் ஏன் தொழுதுகிட்டு என்ற நினைப்பை அவனுக்கு ஊட்டுகின்றான். அதே போல் ஒருவன் கஞ்சனாக இருக்கிறானென்றால் அவனை இறை வழியான நல்வழியில் அவனது பணம் செலவழியா வண்ணம் பார்த்துக் கொள்கிறான். ஆகவே ஷைத்தான் ஒரு நிராயுதபாணி; நம்முடைய குறைகளை நிறைகளாக்குவதில் வல்லவன். இன்றைய சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகள் இல்லாமலில்லை. பிரச்னைகளே இல்லாவிட்டாலும் அந்த வாழ்க்கையில் திருப்பு முனைகள் ஏற்படுவது சாத்தியமில்லை. அதே போல் நம் ஒவ்வொருவருக்கும் சுகம் துக்கம் இரண்டும் உண்டு. அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். வெற்றியாயினும் தோல்வியாயினும் அது இறைவன் புறத்திலிருந்தே வந்ததாக கருத வேண்டும். வெற்றி வந்தால் அது தன்னால் வந்ததென்றும், தோல்வி வந்தால் அது இறைவனால் வந்தது என்று கருதினால் அதுதான் மமதை. இறைவனுடைய உதவியை நாட வேண்டிய நாம் அந்த உதவியை எப்படி நாட வேண்டும் என்று இறைவன் அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். பொறுமையோடும் தொழுகையோடும் என்னிடம் உதவி தேடுங்கள் என்று. இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பொறுமையோடும், தொழுகையோடும் தான் அவனது உதவி கிடைக்கும். அந்த தொழுகை பொறுமையுடையதாக இருக்க வேண்டும். ஓதும் திக்ருகள் பொறுமையுடையதாக இருக்க வேண்டும். ஏதோ வந்தோம் நாமும் தொழுதோம் திக்ரு துஆ ஓத அவகாசமில்லை. பரபரப்பான சூழ்நிலையில் வெளியேறினோம். இதுவல்ல உள்ளச்சம். முறையான உள்ளச்சத்தை எனக்கு தந்தருள்வாயாக என்பதை முதற்கண் பிரார்த்தனையாக நமது துஆ அமையப்பட வேண்டும். பிறகு கல்வி வீடு மனைவி மக்கள் பொருளாதாரம் என்று சகல வித பிரார்த்தனைகளையும் அடுக்கடுக்காக அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே போகலாம். இவ்வளவையும் கேட்டால் நம்மை பேராசைக்காரன் என்று இறைவன் எண்ணிக்கொள்ள மாட்டான்; மனித குணமே அப்படி நினைக்கும். இறைவனது அருள் அளவிற்கரியது. அந்த ஒப்பில்லா இறைவனின் அன்பை என்னென்பது? ஒரு தாய் தான் பெற்ற குழந்தைமீது எவ்வளவு அன்பை பொழிகிறாள். அந்த தாயன்பை வார்த்தையால் வடிக்க முடியுமா? இதைவிட இறைவனின் அன்பு அளவிட முடியாதது. தன்னுடைய தூதர்களிடம் காட்டிய அன்பு ஒரு விதம் என்றால், மானிடர்களிடம் காட்டும அன்பு ஒருவிதம். இறைவனே இல்லை என்று சொல்லுகிறவனுக்கு கூடல்லவா அவனது அருட்கொட எல்லையில்லாமல் விரிந்துள்ளது. இறைவனே இல்லை என்பவன் மண்ணைத் தின்ற சரித்திரம் கிடையாது. மண்ணோ நெருப்போ தான் அவனைத் தின்கிறது. ஆனால் முஸ்லிம்களாய் இருந்து கொண்டு எனக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பது போலல்லவா பலரது நிலை உள்ளது. தொழுகைக்கான அழைப்பு பள்ளிவாசலில் பாங்கு ஒலிக்கிறது. வெற்றியின் பக்கம் வாருங்கள் என்றும், பஜ்ர் தொழுகையின் போது சொல்லப்படுகின்ற தூக்கத்தைவிட தொழுகையே மேலானது என்றால் யாரும் திருப்பி தொழுகையை விட தூக்கமே மேலானது என்றோ, வெற்றி தொழுகையினால் இல்லை, நாங்கள் வரமாட்டோம் என்று வாயால் பதில் சொல்வதில்லை. அதே சமயம் நமது செயலால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். என்னே நமது ஈமான்? ஈமானுக்கு நாம் செலுத்தும் மரியாதை? சிந்திக்க வேண்டாமா? நபி அவர்கள் தினமும் 70 முறை பாவமன்னிப்பு கேட்பவர்களாக இருந்தாந்தார்கள். இறைவன் நபி அவர்களின் முன்பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டதாக கூறிய பின்னரும் அவர்களூடைய நடைமுறையில் மாற்றமில்லை. காரணம் வினவப்பட்டபோது இறைவனுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்ற பதில்தான் நபி அவர்களிடமிருந்து வந்தது. அவர்களுடைய உள்ளச்சம் எங்கே, நம்முடைய உள்ளச்சம் எங்கே? நான் என்ன பாவம் செய்தேன் தொழுவதற்கு? இதுவல்லவா இன்றைய முஸ்லிம்களின் சவடாலாக உள்ளது. மேலும் தொழுகிறவன் என்னத்த வாரி இறைச்சிட்டான்? என்னத்த சாதிச்சுட்டான்? என வாய் சவடால் நீள்கிறது. சிந்திக்க பல பூகம்பங்களும் சுனாமிகளும் போதவில்லையா? அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லையா? சிந்திக்க மறுக்கிறதா உள்ளம்? நபி கற்றுக்கொடுத்த பிரார்த்தனையில் ஒன்று யா அல்லாஹ் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ எவ்வளவு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறாயோ அதுபோல் எனக்கும் என் பாவங்களுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக. இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதில் தான் என்ன ஒரு பாங்கு, என்ன ஒரு பணிவு. நம்மிடம் பணிவு இருக்கிறதா? பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்குமளவிற்கு தான் நம்முடைய ஈமான் உள்ளது. ஆம் சில பொருட்கள் இருக்கின்றன. அரிசி, பருப்பு, உப்பு, புளி போன்றவற்றை கிலோ என்ன விலை என்று விசாரிப்போம். விறகு எடை என்ன விலை என்று விசாரிப்போம் ஆனால் தங்கம் வெள்ளி போன்ற ஆபரனங்களை கிராம் என்ன விலை என்று விசாரிப்போம். காரணம் அதை கிராம் கணக்கில்தான் வாங்கப் போகிறோம். ஆனால் நாம் தங்கம் அளவிற்கு ஈமானை மதித்தால்கூட பரவாயில்லை. ஆனால் தங்கத்திற்கு மாற்றமாக கவரிங்கை மாட்டிக்கொண்டு அலைவதுபோல் இறைவனுக்கு மாற்றாக அவனுக்கு மட்டுமே சொந்தமான வணக்க வழிபாடுகளை இறையடியார்கள் என கருதப்படும் தர்காக்களில் அடக்கப்பட்டிருக்கும் மஹான்களுக்கும் பங்கிட்டு தந்தால் அது கவரிங்கை தங்கம் என்று பொய் சொல்வது போல் தான் என்பதை சிந்திக்க வேண்டும். கவிரிங்கை அடகு கடையில் வைக்க இயலாதது போல் இணை வைத்து விட்டு ஈமானைப் பெற இயலாது என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஆகவே சகோதரர்களே தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை தவறு என்று எண்ணி வருந்துவதோடு அதற்காக உளப்பூர்வமாக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடி மீண்டும் அத்தவறுகளை ஈமானிய விஷயத்திலாவது செய்யாமல் இருக்க முயற்சி செய்து பயன் பெறுவோமாக. இதோ நம் இறைவன் கூறுகிறான்,
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 4:110,௧௧௧
நன்றி: http://www.readislam.net/imaan.htm மற்றும் சகோதரர் மதுக்கூர் அப்துர் ரசாக் (துபை)

அதிராம்பட்டினத்தை கலவர பூமியாக்க சங் கும்பல் முயற்சி! இந்து, முஸ்லிம் ஒற்றுமையால் முறியடிப்பு


அதிராம்பட்டினத்தை கலவர பூமியாக்க சங் கும்பல் முயற்சி! இந்து, முஸ்லிம் ஒற்றுமையால் முறியடிப்பு!தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டி னம் மதவெறி கும்பலின் இலக்காக மாறி வருகிறது. குறிப்பாக பா.ஜ.க. வின் மாநில இளைஞர் அணி தலைவர் கருப்பு (எ) முருகானந்தம் முத்துப்பேட்டையை போல அதிராம் பட்டினத்தையும் பதட்ட பகுதியாக மாற்ற தீய முயற்சிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் அதிரையில் உள்ள ஏ.ஜே.பள்ளிவாசலில் சுற்று சுவரை விஷமிகள் இடித்து விட, பட்டுக் கோட்டை ஆர்.டி.ஒ.விடம் அதிரை மக்கள் புகார் மனு கொடுத்ததன் பேரில், அவர் முறையாக விசாரித்து, அது பள்ளிவாசலுக்கு சொந்தமான சுவர் என தீர்ப்பளித்தார், பள்ளி சுவரை மீண்டும் மார்ச் 10 அன்று கட்டியபோது, இரவோடு இரவாக அதை விஷமிகள் இடித்து விட்டனர்.அதிகாரிகளின் உத்தரவை இழிவுப்படுத்தி, பள்ளிவாசல் சுவரை இடித்த கும்பலை கைது செய்யக்கோரி, குற்றவாளிகளை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்ச கோரியும், மத நல்லிணக்கம் காக்கப்பட கோரியும் அதிரை அனைத்து ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதிரை உலமாக்கள் சபை சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டமும் கடையடைப்பும் 16&03&2010 அன்று நடைபெற்றது. சுமார் 4000 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜே.ஜியாவுதீன் மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர் அதிரை சாகுல், உலமாக்கள் சார்பில் ஏ.எல். ஹாரூன் ஆலிம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அனைத்து தரப்பு மக்களும் கடையடைப்பு செய்தார்கள். திரளான இந்து சகோதரர்களும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தந்தது மதவெறியர்களுக்கு மரண அடியாக அமைந்தது. மேலும் நாம் ஆதரவு கேட்காமலே கட்டிடத் தொழிலாளர்களும், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்தார்கள். இதை பொறுக்காத பாஸிச கும்பல் இரண்டு மீனவ தெருக்களுக்கிடையே உள்ள சிறு வாய்க்கால் தகராறை மத மோதலாக மாற்றும் வண்ணம் போட்டி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி எச்.ராஜா மற்றும் கருப்பு என்கிற முருகானந்தம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த சுற்றுவட்டார கிராமமக்கள் மற்றும் அதிரை மீனவ கிராம மக்கள் ஆகியோரிடம் தவறான கருத்தை பரப்பினர். அதன் மூலம் மதக்கலவரத்தை தூண்ட முயன் றார்கள். பாவம் அதிலும் தோல்வி. அதற்கும் இந்து சகோதரர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.மேலும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கலவரம் உருவாக்க முயல்வதாக, த.மு.மு.க&வின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் எம்.தமீம்அன்சாரி முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகள் அகி யோருக்கு தகவல் கொடுத்து அந்த ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க கூடாது என்றார்கள். அதுபோல ஜித்தாவில் உள்ள கிசீஞிகி (அதிரை இளைஞர் நலச்சங்கம்) துபாய் வாழ் அதிரை சகோதரர்கள் அங்குள்ள இந்திய துணை தூதரகம், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் மெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களால் ஆன பங்களிப்பை செய்தார்கள். அதுபோல சகோதர இயக்கங்களும் இந்து நண்பர்களும் ஓரணியில் நின்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடைபெற இருந்த மதக்கலவரத்தை எதிர்த்ததால் காவல்துறை அனுமதியை ரத்து செய்தது. மிகப்பெரிய அளவில் கலவரம் விளைவித்து அதன் மூலம் மாய்ந்து போன தங்களது காவி சிந்தனையை பரப்பலாம் என்ற பாஸிஸ்ட்டுகளுக்கு இந்து சகோதரர்களே ஆதரவு தராதது மரண அடியே.

திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை என்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்டின் நீதிபதியை எதிர்த்து நியாயவான்களே ஆர்ப்பரியுங்கள் !!!திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

நாம் வாழும் இந்தியாவில்
திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை (எனும் விபச்சார சிந்தனை)
சினிமா ஆபாசங்கள் மக்களின் பொழுதுபோக்கு (எனும் அசிங்கமான சிந்தனை)
ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி (எனும் மிருக சிந்தனை)
மது நாட்டின் வருமானம் (எனும் மனிதாபிமானமற்ற சிந்தனை)
வட்டி என்பது இந்திய வங்கியின் முதுகெலும்பு (எனும் பணம்பறிக்கும் சிந்தனை)

நியாயவான்களே... சரித்திரத்தை மாற்றுங்கள் அல்லது நீங்கள் சரித்திரத்திலிருந்து (இறைவனால்) மாற்றப்படுவீர்கள்

செவ்வாய், 23 மார்ச், 2010

இஸ்லாத்தை தழுவிய Daniel Streich

ALHAMDULILLAH.............
சுவிட்சர்லாந் நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரானபிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல்தலைவர்............ டானியல் ஸ்ட்ரீக் – DanielStreich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் தடை செய்ய முழு காரணமாக இருந்தசுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாகசெய்திகள் வெளி வந்தன எனிலும் அதுபற்றிய மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தமையால் அந்த செய்தியை நாம் உடனடியாக தரவில்லை ஆனால் இப்போது .அவர்நேரடியாக சுவிட்சர்லாந் அரச தொலை காட்சியில் தோன்றி தான் இஸ்லாத்தைஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islamoffers me logical answers to important life questions, which, in theend, I never found in Christianity,”- நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும்காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாகஇஸ்லாம் தர்கா ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -இவரை பற்றி சுவிட்சர்லாந் அரச தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was atrue SVPer and Christian. He read the Bible and regularly went tochurch. Now Daniel Streich, military instructor and community councilmember, reads the Qur’an, prays five times a day and goes to a mosque!இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்குசெல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவகற்கைக்கான விரிவுரையாளர் , சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போதுமஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல்குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறதுஇவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்யவேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளைமுன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்குநாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன்இணைந்து இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்தகட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றதுசுவிட்சர்லாந் நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாகசுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது ஆனால் சுவிட்சர்லாந்தின்2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 311000 என்று கூறுகின்றது இங்கு 100 கும்அதிகமான் மஸ்ஜிதுகள் இருகின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம்மினாராகளை கொண்டுள்ளது .நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம்இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது.தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிகஉயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக்தெரிவித்துள்ளார் .சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்பவாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாகவாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான்இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாகஇருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமைஅற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு( Thanx - MOUTIK HUDDA ).watch this link please.......... http://www.youtube.com/watch?v=33k5ubaosZs

கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
-- ~~~TMMKGULF வளைகுடா தமுமுக : வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.

கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!
வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!!
தடுத்து நிறுத்த முன் வருமா தமிழக அரசு!!!

நீதியின் குரல்
நன்றி: ஜூவி
நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி விபரீதத்தால், கடந்த வாரம் பள்ளிப்பாளையம் ஏரியாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்!
பள்ளிப்பாளையம் பகுதியில் தறி ஓட்டும் தொழிலாளர்கள் அதிகம். ஏழ்மையில் இருக்கும் இவர்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்குவது சகஜம். அப்படிப் பணம் வாங்கிய ஒரு பெண்மணி தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் போக... அவரது வயதுக்கு வந்த மகளையே வட்டிக்கு பதிலாகத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள்! அந்தப் பெண்ணை சீரழித்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு காசு பார்த்தும் இருக்கிறார்கள். சினிமா வில்லத்தனத்தையே ஜுஜுபி ஆக்கும் இந்தக் கொடூரர்களைத் தட்டிக் கேட்கப் போய்த்தான் பரிதாபமாகக் கொலையானார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தோழரான வேலுச்சாமி.
தட்டிக் கேட்க ஆளில்லாமல் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி விசாரிக்கப் புறப்பட்டபோது தலை சுற்றியது. முன்பு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதற்கு எதிராகப் போட்ட சட்டம் சுத்தமாக செத்துப் போய்விட்டதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
அரசியல் செல்வாக்கில் ஈரோடு..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தைச் சேர்ந்த கிரிகோரி என்பவர், ''விவசாயிகளுக்கு விதைப்புல தொடங்கி அறுவடை வரைக்கும் காசு நீட்டுறது கந்து வட்டிப் பேர்வழிங்க தான். இங்கே 'மைக்ரோ'ல ஆரம்பிச்சு 'மேக்ரோ' வரைக்கும் வட்டி பிசினஸ் சக்கைப்போடு போடுது. நாள் வட்டி, வார வட்டின்னு பல டைப். இதுல ஒரு தவணை கட்டத் தவறினாலே, வட்டி குட்டி போடும். விவசாயிகளுக்கு நிலத்தின் பேர்ல கந்து வட்டிக்கு பணம் தந்து, கட்டமுடியாம அபகரிச்சு பல நூறு ஏக்கருக்கு அதிபதியா மாறிய ஆசாமிகள் இங்கே ஏராளம். நிலத்தை பறிகொடுத்த விவசாயி, அதே நபர்கிட்ட அதே நிலத்தை குத்தகைக்கு எடுத்து உழைக்கிற கொடுமையும் நடந்துகிட்டிருக்குது. இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எக்கச்சக்கமா இருக்கிறதால எதுவும் பண்ண முடியல...'' என்றார்.
அபராத வட்டி.. செடி வேர் அடி..!
கடம்பூர், தாளவாடி போன்ற மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதற்கென்றே கோவை, நீலகிரியைச் சேர்ந்த ஒரு டீம் இருக்கிறது. சந்தை கூடும் நாட்களில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்த சந்தையன்று வட்டியை வசூலிக்க வருவார்கள். இரண்டு மூன்று தவணைகள் வட்டி தவறினால், அபராத வட்டி போடுவதுடன், கடன் வாங்கியவரின் முதுகில் காட்டுச் செடி வேரினால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனங்களும் நடக்கிறதாம்!
ராத்திரி நேரம்... நடு வீட்டில்...
சேலம் மார்க்கெட் ஏரியா கந்து வட்டி கொடூரங்கள் ரொம்ப கொடுமை..! ''காலையில 1,000 ரூவா கொடுப்பாங்க. சாயந்திரம் வீட்டுக்குப் போறப்ப 1,100 ரூவாயா திருப்பிக் கொடுக்கணும். ஒருநாள் லேட்டானாலும் அந்த 100 ரூவாய்க்கும் சேர்த்து வட்டி போட்டுருவாங்க. 1,000 ரூவா கடன் வாங்கியிருந்தா... மாசம் 3,000 ரூவா வட்டி மட்டுமே கட்டியாகணும். கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா, கடன் கொடுத்த ஆளு பொழுது சாய்ஞ்சா கடைக்காரரோட வீட்டுக்குப்போய் நடு வீட்டுல சேரைப்போட்டு உட்கார்ந்துக்குவாரு. ராத்திரி 11 மணி வரைக்கும் உட்கார்ந்து இருந்துட்டு, கிளம்பி வந்துடுவாரு. கடைக்காரரு வீட்டுக்கு வர்றதுக்கே 10 மணியாகும். அப்படி இருக்கும்போது தெனமும் ஒரு ஆம்பளை வீட்டுக்கு வந்துட்டுப் போறதை பார்த்தா அக்கம்பக்கத்துல என்ன நினைப்பாங்க, சொல்லுங்க? இப்படி டார்ச்சர் செஞ்சு வசூலிக்கறது சகஜம்!'' என்றார் மார்க்கெட் கடைக்காரர் ஒருவர்.
''சேலம் மாநகராட்சியில வேலை பார்க்குற துப்புரவு தொழிலாளர்களை மட்டுமே குறிவச்சு ஒரு கும்பல் செயல்படுது. வட்டிக்குப் பணம் கொடுத்துட்டு, அவங்களோட ஏ.டி.எம். கார்டை வாங்கிக்குவாங்க. ஒவ்வொரு மாசமும் சம்பளம் போட்டதும் வட்டிப் பணத்தை எடுத்துக்கிட்டு அக்கவுன்ட்ல மிச்சம் பணம் இருந்தா... அதை சம்பந்தப்பட்டவங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க. கார்டு அவங்க கையிலதான்!'' என்றார் ஒரு மாநகராட்சி ஊழியர்.
கொள்ளை போகும் பொருட்கள்..!
கேரளா, குஜராத், உ.பி., என்று மற்ற மாநிலத்த வரும், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டினரும்கூட வாழும் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை இன்னும் அதிகம். ''தெரு முனையில நின்னுகிட்டு பணம் கொடுக்கிற கந்து வட்டிக்காரனுங்க எண்ணிக்கைதான் இங்கே அதிகம். எந்த டாக்குமென்ட்டும், ஆதாரமும் இல்லாம பணம் தர்றதால இவர்களை கடவுளா நினைக் குறாங்க பாவப்பட்ட மக்கள். பனியன் பிசினஸ்ல பணப்பட்டுவாடா ஒழுங்கா நடக்காம எங்கேயாச்சும் சிக்கிடுச்சுன்னா... நிலையை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கித்தான் ஆகணும்... வட்டியும், அசலும் தவறுனா வீட்டுக்கு வந்து டி.வி., பைக்குன்னு கண்ல பட்டதை தூக்கிட்டுப் போயிருவாங்க...'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த மணி.
தொடர்கதையாகும் கொடுமைகள்..!
கந்து வட்டி கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் தமயந்தி, ''ராசிபுரத்துல ஒரு கும்பல் வட்டிக்கு பணம் கொடுத்துட்டு கட்ட முடியாதவங்க வீட்டுக்கு போய் உட்கார்ந்துக்குவாங்க. மது பானங்களை கொண்டுவந்து வீட்டுலேயே வெச்சு குடிக்கிறது... வீட்டுல இருக்குற பொண்ணுங்களை தரக்குறைவா பேசுறதுன்னு நடக்குற அநியாயங்கள் எல்லாம் உச்சகட்டக் கொடுமை. இதனால, ராசிபுரத்துல தற்கொலை வரைக்கும் போய், காப்பாத்தப்பட்டவங்க பலர் இருக்காங்க. பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகள்ல, விசைத்தறி ஓட்டும் குடும்பங்கள் நிறைய. அங்கெல்லாம் திருப்பிக் கட்ட முடியாதவங்க வீட்டுப் பொம்பளைங்களை பாலியல்ரீதியா துன்புறுத்தும் கொடுமைகளை இன்னும் தடுத்து நிறுத்தவே முடியல. கந்து வட்டி கொடூரர்களுக்கு போலீஸ்காரங்களே பக்கத்துணையா நிற்குறாங்க. ஏன்னா, அவங்களுக்கு மாசம் தவறாம மாமூல் கொடுத்துடுறாங்க...'' என்று வேதனைப்பட்டார்.
கொடுமைகள் குறைஞ்சிருக்காம்..!
''மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசிடமிருந்து தாராளமான நிதி உதவி கிடைப்பதால், கந்து வட்டி கொடுமைகள் இங்கே மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது!''- என்று தான் கலந்துகொள்ளும் விழாக்களில் சொல்லி பெருமைப்படும்நாமக்கல் தொகுதி எம்.பி-யும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சருமான காந்திசெல்வனை தொடர்பு கொண்டோம். ''நான் பர்சனலா இந்த விவகாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சு விசாரிச்சுட்டுத்தான் பேசுறேனே தவிர, மேடை அலங்காரத்துக்காக எதையும் பேசல. பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு ஏரியாக்கள்ல ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்த கந்து வட்டி பிசினஸ், இப்போ ஒடுங்கி இருக்குது. இதுக்கு முக்கியக் காரணம்... கடந்த நாலஞ்சு வருஷங்கள்ல தமிழக அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வெகுவான நிதிஉதவி வழங்கி ஊக்குவிச்சு இருப்பதுதான்...'' என்றார் அவர்!
விஷச் செடி... மூலிகைச் செடி..!
மேற்கு மண்டல ஐ.ஜி-யான சிவனாண் டியிடம் பேசினோம். ''சமீபத்துலதான் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கேன். இதில் ஈடுபட்டிருக்கிற கிரிமினல்களை கூடிய சீக்கிரமே ஒழிச்சுக் கட்டுவேன். அதோடு, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களையும் இங்கே செயல்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையாவது நல்ல கல்வியோடு நிமிரும்போது, கந்துவட்டி போன்ற ஆபத்தான வலையில் விழாமல் இருப்பார்கள். அதோடு, நல்ல தொரு வேலையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தை இன்னல்கள் இல்லாமல் காப்பாற்றுவார்கள். ஒரு விஷச் செடி யைப் பிடுங்குகிற அதேசமயம், ஒரு நல்ல மூலிகைச் செடியை வைக்கிற மாதிரி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வசதியுள்ளவர்கள் தாராளமாக முன்வரவேண்டும்'' என்று தொலைநோக்கோடு பேசினார் ஐ.ஜி.
அனைத்துக்கும் மேலாக, 'இரக்கமற்ற கந்து வட்டிக் கும்பல்களுக்கு அடைக் கலம் தரக்கூடாது என்று' அரசியல் கட்சித் தலைவர்கள் ஆணை போடுவது முக்கியம்! ஒளிய இடம் இல்லாவிட்டால் விஷப் பாம்புகளை அடித்துப் போடுவது காவல் துறைக்குப் பெரிய வேலையாக இருக்காது!
நன்றி: ஜூவி
-- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ஷக்தி
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
-- ~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.

திங்கள், 22 மார்ச், 2010

துபையில் நடந்த இஸ்லாமிய மாநாடு...
துபாய் சர்வதேச விமான நிலைய கண்காட்சி அரங்கில் Dubai Peace என்ற தலைப்பில் அமைதி வழியில் உலகை ஒருங்கிணைப்பது எனும் கருப்பொருளோடு கடந்த மார்ச் 18,19,20 ஆகிய தேதிகளில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு கண்காட்சி நடைபெற்றது. நிகழ்சிகள் 18 ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது.


சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களான டாக்டர் ஜாகிர் நாயிக், யூசுப் எஸ்டிஸ், அப்துல் ரஹீம் கிரீன், ஹுசைன் யி, யாசிர் காதி,M.M. அக்பர் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.


நிகழ்சியின் முத்தாய்ப்பாக 19 ந் தேதி வெள்ளிக்கிழமை ஜும்குத்பா மற்றும் தொழுகையை புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாமும் கதீபுமான ஷேய்க் அப்துல் ரஹ்மான் அல் சுதைசி நடத்தினார்.


ஐக்கிய அரபு அமீரகங்களின் துணை அதிபரும் , பிரதமரும் , துபாய் ஆட்சியாளருமான ஷேய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் இந்தியாவின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் உரையுடன் மூன்றாம் நாள் சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதோர் ஏராளமானோர் இஸ்லாத்தை தழுவினர் என்பது குறிப்பிடத் தக்கது.

புதன், 17 மார்ச், 2010

மாணவர்களை சீரழிக்கும் ஆபாச போஸ்டர்கள்

ராமநாதபுரம் : பள்ளி குழந்தைகளை சீரழிக்கும் ஆபாச போஸ்டர்கள் பொதுஇடத்தில் ஒட்டப்பட்டுவது, மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரத்தில் விதிமுறை மீறும் செயல்களுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் பொதுஇடங்களில் ஒட்டப்படும் ஆபாச போஸ்டர்களின் தொல்லை குறைந்தபாடில்லை. கலெக்டர் மூலம் பல்வேறு எச்சரிக்கைவிடப்பட்டும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.
குறிப்பாக பள்ளி, கோயில் பகுதிகளில் இந்த கலாசாரம் அதிகமாக உள்ளன. குழந் தைகள் , பெண்கள் கூடும் இது போன்ற இடத்தில் ஆபாச போஸ்டர்கள் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ராமநாதபுரம், பரமக்குடியில் ஆபாச போஸ்டர் கள் பிரவேசம் அதிகமாகவே உள்ளன. "இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்ற, எச்சரிக்கையையும் மீறி, இச்செயல் தொடர காரணம் என்ன? அதிகாரிகள் முறையாக கண்காணித்திருந்தால் இது தொடர்ந்திருக்காது. ஆபாச படங்களை ஒளிபரப்புவதே தவறு, அதையும் வெட்ட வெளிச்சமாக போஸ்டர்கள் ஒட்டுவது இங்கு மட்டுமே சாத்தியம். தொடரும் இந்த அத்துமீறல் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறினால், பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கலக்கும் அபாயம் ஏற்படலாம். மாணவ, மாணவிகளை குறிவைத்து சீர்கெடுத்து வரும் இந்த ஆபாச போஸ்டர் கலாசாரத்தை களையெடுக்க, மாவட்ட கலெக்டரும் முன்வர வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் தியேட்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Thanks: www.dinamalar.com

'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'

செய்தி வெளியீடு thatstamil.com

'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள் ..

வாஷிங்டன்: ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம் சமுதாயத்தினர் மீதான பாரபட்சமான, துவேஷப் போக்கு அதிகரித்து வருவதாக அமெரிக்க மனித உரிமைத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மனித உரிமைத் துறை வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் குறித்து துவேஷப் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. முஸ்லீம்களிடம் பாகுபாடு காட்டுவதும், வெறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வதும் ஐரோப்பியர்களிடையே அதிகரித்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் மசூதிகள் அல்லது பள்ளிவாசல்கள் போன்றவற்றைக் கட்ட சுவிட்சர்லாந்து அரசு தடை விதித்தது இதையே காட்டுவதாக உள்ளது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, ஆலந்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. தொப்பி அணிவதையும் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்த செயல்கள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. மத சுதந்திரத்தையும், மனித உரிமையையும் தடுக்கும் செயல்கள் இவை.
ஆலந்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் முஸ்லீம்கள் உள்ளனர். ஆனால் இங்கு அவர்களுக்கு சுதந்திரம் பெரிய அளவில் இல்லை. முஸ்லீம்கள் மீதான துவேஷம் அதிகரிக்க அங்குள்ள வலது சாரி அரசியல்வாதிகள்தான் முக்கியக் காரணம்.
முஸ்லீம்களுக்கு எதிராக அங்கு பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை என்றாலும் கூட சிறு சிறு சம்பவங்கள் நடந்தபடிதான் உள்ளன. கேலி செய்வது, வேண்டுமென்று வம்புக்கு இழுப்பது, தகாத வார்த்தைகளால் விமர்சிப்பது போன்றவற்றில் ஆலந்து நாட்டினர் ஈடுபடுகின்றனர்.
மனித உரிமை மீறல்கள்...
மனித உரிமை மீறல்களைப் பொறுத்தவரை சீனா, பெலாரஸ், கியூபா, மியான்மர், வட கொரியா, ஜிம்பாப்வே, சூடான், சிரியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் அவை பெருமளவில் உள்ளன. ஈரானில் இது அதிகமாகவே உள்ளது.
உய்கூர் முஸ்லீம்களுக்கு எதிராக சீன அரசு மிகப் பெரிய அளவில் அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதேபோல திபெத்தியர்களிடமும் அவர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இன்டர்நெட்டையும் கூட சீன அரசு கடுமையாக முடக்கி வருகிறது. செய்திகளை அறிவதில் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை அது போட்டு வருகிறது.
அப்பாவி மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு...
கடந்த 2009ம் ஆண்டில் பல நாடுகளில் ஏற்பட்ட மோதல்களில் அப்பாவிகள் பெருமளவில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான் ஆகிய நாடுகளில்தான் பெருமளவிலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் அப்பாவிகளின் உயிர்களுக்கு சற்றும் உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது. அங்கு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், சித்திரவதைகள், படுகொலைகள், காணாமல் போவது ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
நன்றி :thatstamil.com

திங்கள், 15 மார்ச், 2010

அஹமது தீதாத்
அஹமது தீதாத்

இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்
பிறப்பு - ஜுலை 1, 1918
பிறந்த ஊர் - குஜராத், (இந்தியா)
1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்
இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார். இவர் தென்ஆப்ரிக்கா சென்ற சிலகாலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவர் கடுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்தி 6-ஆம் வகுப்பிலேயே மிகச் சிறந்து ஆங்கிலப்புலமை மற்றும் பள்ளியில் நற்பெயர் பெற்றார்! (அல்ஹம்துலில்லாஹ்). இவர் தனது 16 வது வயதில் வேலை செய்ய துவங்கினார்.
1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் “இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார் இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!
1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை
சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள ”அவோலன்-சினிமா” என்ற ஹாலில் துவங்கியது. முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா? மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே! இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சில காலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்). இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பது, ஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.
இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் – 1956-1986
இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர் தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தை பிளவுபடுத்தவில்லை) இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்). இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!
1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் ”அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.
இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்! இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்! இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!
இவரது சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995
1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!
1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ”ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.
1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு ”கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!
இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!
இவர் இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகளின் பட்டியல் இதோ! (அல்ஹம்துலில்லாஹ்!)
சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)
ஐக்கிய ராஜாங்கம் எனப்படும் – இங்கிலாந்து (பலமுறை 1985 முதல் 1988 வரை)
பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்-ஐ சந்தித்தார்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும் கவுரவித்தார்
சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)
US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டு, ராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் அரிஜோனா மாகாணம், US)
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் 3 இஸ்லாமிய சொற்பொழிவுகள்)
மறுபடியும் US அமெரிக்க, கனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் கனடா)
ஆஸ்திரேலியா – (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயனம், இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)
1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட சோகமான வாழ்க்கை
மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர் ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்! இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள ”கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனை”க்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது! (மேலும் தகவலறிய http://www.ahmed-deedat.co.za/ கிளிக் it)

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காக பாடுபட்டுச்சென்றார்! இவரது பாணியில் நாமும் நமது வாழ்க்கைப்பயணத்தை துவக்குவோம்! பிரிந்துகிடக்கும் நம் ஜமாஆத் மக்களிடம் இணைப்பை ஏற்படுத்துவோம் மரணம் வரை முஸ்லிம் என்று சொல்வோம்!
சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்
நமது இந்த அன்புச் சகோதரருக்காக இரு சொட்டு கண்ணீர்விட்டு மண்ணரையில் சுவன நித்திரை கிடைக்க நமது ரப்புல் ஆலமீனிடம் பிரார்த்தியுங்கள்! இதுதான் நாம் இவருக்கு இவர் செய்த அறும்பணிக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு உதவியாகும்! (நபி வழியின் முறையை அறிந்து துவா செய்யலாம்!)
ஒரு இணையதளத்தில் படித்த ஹதீஸ் இதோ கீழே
ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—
சதக்கத்துல் ஜாரியா
பலன் தரும் கல்வி
பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான)பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.
இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.
Thanks to: Dubai Abdul Razak (madukkoor)

ஞாயிறு, 14 மார்ச், 2010

கிரிக்கெட் என்னும் மாய வலை : உரத்த சிந்தனை
கிரிக்கெட் என்னும் மாய வலை : உரத்த சிந்தனை

இந்தியாவில் உள்ளது போன்ற கிரிக்கெட் மோகம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. கிரிக்கெட் மட்டைகளோடு திரியும் சிறுவர்களை, நாடு முழுவதும் காணலாம். சிறிய காலியிடம் இருந்தால் கூட அங்கு நான்கு பேர், குச்சியை நட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிறுவனும், தான் சச்சினாக வேண்டும் என்று கனவு கொண்டிருக்கிறான்.
ஆனால், நிஜத்தில் அதற்கான வாய்ப்பு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது, மிகப் பெரிய கேள்விக்குறி. தேசிய அணியில் அதிகபட்சம் 15 பேர் தான் இடம்பிடிக்க முடியும். சரி, மாநில அணியிலாவது வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினாலும், அதில் பெரிய இடத்து பிள்ளைகள் மற்றும் கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டப்பட்டவர்கள் தான், எளிதாக நுழைய முடிகிறது.
நிலைமை இப்படி இருந்தும், தங்களது குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற பெற்றோர், அவர்களுக்குத் தேவையான கிரிக்கெட் சாதனங்களை பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கித் தருகின்றனர். அதுமட்டுமா, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பயிற்சி அளிப்பதாகக் கூறி, பள்ளிகளில் பணம் கறக்கும் நிலைமையும் உள்ளது. குறிப்பாக, கோடைக்கால பயிற்சி முகாம் எனக் கூறி, சிறுவர்களிடம் ஆயிரக்கணக்கில் பறித்து விடுகின்றனர். ஆனால், உருப்படியான பயிற்சி எதையும் அளிப்பதாகத் தகவல் இல்லை. மக்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி, இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிகளை குவித்து வருகிறது. போதாத குறைக்கு, ஆடு, மாடுகள் போல கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். உதாரணமாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சென்னையைத் தவிர சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கான மைதானம் ஏதும் இல்லை. உலகக் கோப்பைக்காக, சென்னையை ஒட்டி மிகப் பிரமாண்டமான மைதானம் கட்ட, தமிழக அரசிடம் இருந்து நிலம் வாங்கிய கிரிக்கெட் வாரியம், அதை கட்டும் திட்டத்தை கைவிட்டது.
கிரிக்கெட் வருமானத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக, ஐ.பி.எல்., என்ற அமைப்பு துவக்கப்பட்டு, பல ஆயிரம் கோடிகளை குவித்து வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், கடந்த 12ம் தேதி துவங்கி, 45 நாட்கள் நடக்க உள்ளன. இந்த காலகட்டம், மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடக்கும் சமயம். இரவு 12 மணி வரை, மாணவர்களை "டிவி' முன் உட்கார வைத்து ஐ.பி.எல்., சம்பாதிப்பதால், மாணவர்களது படிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமா? ஐ.பி.எல்., அமைப்பில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம், அடுத்த ஆண்டு 90க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுமாம். இந்த அணியை வாங்க, குறைந்தபட்ச கேட்புத் தொகை 1,100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், ஏலம் கேட்டு அணியை வாங்க வேண்டும். ஓர் அணிக்கு 1,100 கோடி ரூபாய் என்றால், மொத்தமுள்ள 10 அணிகள் மூலம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் இந்த ஐ.பி.எல்.,? இந்த சம்பாத்தியத்தின் மூலம் மக்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு கிடைத்தது ஒன்றுமில்லை. கிரிக்கெட் போட்டிகளைக் கூட, "டிவி'யில் இலவசமாக பார்க்க முடியாது. கட்டணச் சேனல்கள் மூலம் ஒளிபரப்பப்படுவதால், ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு, "டிவி' சேனலுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.
தென்மாநிலங்களை சுனாமி தாக்கியபோது, கிரிக்கெட் வாரியம் முன்வந்து ஒரு பைசாவாவது செலவிட்டதா? அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல், பூகம்பம் தாக்கியபோதெல்லாம் இந்த கிரிக்கெட் ஹீரோக்களும், வாரியமும் எங்கு இருந்தனர் என்பதே தெரியாது. தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் இங்கு ஓடோடி வந்து, மக்களோடு மக்களாக தங்கியிருந்து, வீடு கட்டித் தர உதவினார். அதே நேரத்தில், இங்குள்ள ஹீரோக்களும், கிரிக்கெட் மூலம் கோடிகளை சம்பாதித்த ஹீரோக்களும் எட்டிப் பார்க்கவில்லை. இந்தியாவில், "டிவி' மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதிகள் வருவதற்கு முன், அதாவது, 30 ஆண்டுகளுக்கு முன், மேல்தட்டு பிரமுகர்களின் விளையாட்டாகவே கிரிக்கெட் இருந்தது. "டிவி' நேரடி ஒளிபரப்புடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தலைதூக்கியதும், மற்ற விளையாட்டுகளை நம் மக்கள் மறந்தே போய்விட்டனர். ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான். போட்டி துவங்கும் முன், இடைவேளை மற்றும் போட்டி முடிந்த பின் என, மூன்று சமயங்களில் மட்டுமே விளம்பரங்கள் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட்டில் ஓவர் முடிந்ததும், விக்கெட் விழுந்ததும், பந்து பவுண்டரி தாண்டும்போது, என, நிமிடத்துக்கு நிமிடம் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானமோ, பல கோடி ரூபாய்.
இப்போதுள்ள கிரிக்கெட் வாரியம், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொண்டு, தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறது. வாரியத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான். மாநில மற்றும் தேசிய அளவில் கிரிக்கெட் வாரியத்துக்கான உறுப்பினர், தலைவர் தேர்தலின்போது நடக்கும் அடாவடிகள், வாய் பிளக்க வைப்பவை. கை மாறும் கோடிகள், ஆள் பிடிக்கும் குதிரை பேரங்கள், கோர்ட் படியேறும் கூத்துக்கள் என, அத்தனையும் தடாலடி தான். இப்படி பதவியைப் பிடிக்கும் நபர்கள் யாரும், கிரிக்கெட் வாரியம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது, கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிகளை, நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு செலவழிக்கலாம் அல்லது ரசிகர் பயனடையும் வகையில், அவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்தல், இலவச பயிற்சிகள், இலவசமாக போட்டிகளை, "டிவி'யில் பார்க்கும் வசதி போன்றவற்றை வழங்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகள் தான். வீரர்கள், வாரியம் என, இவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரியைப் போட்டுத் தாளிக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு வரி விலக்கு அளித்து, சாமானிய மக்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டுகின்றன.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பெராரி கார், பரிசுப் பொருளாய் கிடைத்தது. வெளிநாட்டு காரை நேரடியாக இறக்குமதி செய்யும்போது, 100 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அவர் கட்ட வேண்டிய வரி, ஒரு கோடி ரூபாய். புண்ணியவான் என்ன செய்தார் தெரியுமா? காரே ஓசி; அதற்கான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுதிக் கேட்டு, வாங்கியும் விட்டார். இப்படி வழங்கப்பட்ட கோடிகள், அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நாட்டிலேயே அதிகமான வரியை கிரிக்கெட் வாரியத்துக்கு விதிக்க வேண்டும். அதன் மூலம் வசூலாகும் தொகையை, ஏழை மக்களுக்குப் பயன்படுத்தாவிட்டாலும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காவது பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, கிரிக்கெட்டைப் பயன்படுத்தி, ஏதோ ஒரு சில தனி நபர்கள் பண முதலைகளாவதை அனுமதிப்பது, மக்களை முட்டாளாக்கும் செயல்.
- பா.பாஸ்கர்பாபு, பத்திரிகையாளர்


பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்


பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்

புதன், 10 மார்ச், 2010

உலக மகளிர் தினமும் மகளிருக்கான ஒதுக்கீட்டில் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பும்

உலக மகளிர் தினமும் மகளிருக்கான ஒதுக்கீட்டில் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பும்!முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்

இன்று (8.3.2010) அகிலம் முழுவதும் உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே! 1857ஆம் ஆண்டு இந்திய முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்தபோது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெண் தொழிலாளர்களுக்கான குறைந்த ஊதியத்தினை எதிர்த்து முதல்குரல் எழுப்பி, காவல் துறையினரின் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ரத்தம் சிந்திய தினம் இன்று.ஆனால் அந்த உரிமை, கலப்பின இஸ்லாமிய வம்சாவழியில் வந்த பராக் உபாமா ஜனாதிபதியான பின்புதான் 2009ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக ஆண்களுக்கு சமமான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட்டது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலுல்லாஹ்வின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் சம உரிமை பெற்று, ஆண்களுக்குப் பெண்கள் ஆடையாகவும், பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும் வாழ்க்கையில் திகழ வேண்டிய நெறி முறைகளை அல்லாஹ் குர்ஆனிலே ஆணித்தரமாக எடுத்துச் சொல்லிவிட்டான்.

1996ஆம் ஆண்டு முதன்முதலில் தேவகௌடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கான ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, மசோதாவில் முஸ்லிம்கள் மற்றுமுள்ள பிற்பட்டோருக்கு ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்பு 1998, 1999, 2002, 2003, 2008 ஆகிய ஆண்டுகளிலும் அதே மசோதா கொண்டு வரப்பட்டு அதே காரணத்திற்காக நிறைவேற்றப்படவில்லை. கடந்த நாடாளுமற்றத் தேர்தலில், யு.பி.ஏ மத்தியில் அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்ததால் ப.ஜ.க துணையோடு எப்படியாவது மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.


மகளிர் ஒதுக்கீடு மசோதா அரசியல் சட்டப் பிரிவு 81இன்படி கொண்டு வரப்படுகிறது. அந்தச் சட்டப்பிரிவு என்ன சொல்கிறது? நாடாளுமன்றத்தில் மக்களவையிலும் மாநிலத்தில் சட்டசபையிலும் மகளிர் ஒதுக்கீடு அரசியல் சட்டப்பிரிவு 15(3)இன்படி கொண்டு வரலாம். ஆனால் நாடாளுமன்ற ராஜ்ய சபாவிலோ, மாநில மேல்சபையிலோ ஒதுக்கீடு கொண்டு வர முடியாது. சரி, மகளிர் மசோதாவிற்கு என்ன அவசரம் என்று கேட்கலாம். அரசியல் சட்டம் இயற்றப்பெற்ற பிறகு 1952 முதல் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு 4.4 விழுக்காடுதான். 1977ஆம் ஆண்டு மக்களவைக்கு நடந்த தேர்தலில் பெண்களின் பங்கேற்பு வெறும் 3.5 விழுக்காடுதான். 2004ஆம் நடந்த மக்களவைக்கு நடந்த தேர்தலில்தான் பெண்களின் பங்கேற்பு மொத்தம் உள்ள 543 இடங்களில் 10 சதவீதத்தினை எட்டியது. 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்கள் 59 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இதில் என்ன வேடிக்கையென்றால் 59 பெண் எம்.பிக்களில் 36 பெண்கள் மந்திரிகள், மற்றும் அரசியல் தலைவர்கள் வீட்டுப் பெண்கள் ஆவர். ஆகவேதான் யு.பி.ஏ.விலுள்ள தலைவர்களும் பி.ஜே.பியில் உள்ள தலைவர்களும் பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுத்தால் வாழ்க்கையின் மேல்தட்டில் இருக்கும் பெண்களும் மெஜாரிட்டியாக உள்ள இந்து மதப்பெண்களும் பலன் பெற முடியுமென என எண்ணி முண்டியடித்துக் கொண்டு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றி விடத் துடிக்கின்றன.


மகளிர் ஒதுக்கீடு தேவைதான்; அதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. ஆனால் சமுதாயத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் தலித் மக்களைவிட முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளார்கள் என்று நீதிபதி சச்சார் அறிவித்த பின்பும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலன் கருதி அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கைப்படி 27 சதவீத ஒதுக்கீடு கல்வியிலும், வேலையிலும் அவர்களுக்கு சலுகை கொடுத்த பின்பும் முஸ்லிம் மகளிர்க்கும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் உள் ஒதுக்கீடு மகளிர் மசோதாவில் இல்லை என்பதால் இந்தச் சமூகங்களின் மகளிரை ஏமாற்றும் மசோதாவாக இப்போது முன்வைக்கப்படும் மசோதாவைக் கருத வேண்டியுள்ளது. முன்னாள் மண்டல் கமிஷ நாயகர் வி.பி. சிங் நம்மிடையேயில்லை. அவர் இருந்திருந்தால் நிச்சயமாக முஸ்லிம் பெண்களுக்கும் பிற்பட்ட சமுதாயத்திற்கும் குரல் கொடுத்திருப்பார். ஆனால் அவர் சார்பாக சமஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஜே.டி.(யு) கட்சித் தலைவர் சரத் யாதவும், முன்னாள் பிரதமர் தேவகௌவுடாவும் உள் ஒதுக்கீடுக்காகப் போராடுகிறார்கள். "எங்கள் எம்.பி. பதவி போனாலும் பரவாயில்லை; நாங்கள் உள் ஒதுக்கீடு பெறாமல் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்" என உறுதியுடன் உள்ளனர். ஆனால் முன்னாள் மண்டல் கமிஷன் நாயகரான வி.பி.சிங்கிற்கு சங்கடமான நேரத்தில் ஆதரவு கொடுத்த சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், "இப்போது பெண்கள் ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம். பின்பு முஸ்லிம்களுக்கும், பிற்பட்டோருக்கும் உள் ஒதுக்கீடு பற்றி யோசிப்போம்" எனக் கூறுகிறார்கள். ‘பார்க்கலாம்’, ‘யோசிக்கலாம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அல்லர் முஸ்லிம்களும் பிற்பட்ட மக்களும்.


ஆந்திர மாநிலத்தினைச்சார்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.பி. உவைஸி மசோதாவை எதிர்க்கிறார். மகளிர் மசோதாவில் முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் எனக் குரல் கொடுக்கிறார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இரண்டு எம்.பிக்களும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி எம்.பியும் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா?


1952 தேர்தலுக்கு முன்பு மாகாண-பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 15 விழுக்காடு பெற்றிருந்தனர். ஆனால் இன்று 543 எம்.பிக்கள் கொண்ட மக்களவையில் வெறும் 30 முஸ்லிம் எம்.பிக்கள்தாம் உள்ளனர். அது 5.5. விழுக்காடுதானே. அதில் பெண்கள் இருவர் உள்ளனர். அவர்களில் பி.எஸ்.பியினைச் சார்ந்த தபஸ்ஸும் பேகமும், காங்கிரஸைச்சார்ந்த மௌசம் நூரும் ஆவர். 543 எம்.பிக்கள் கொண்ட மக்களவையில 5..5 விழுக்காடுதான் முஸ்லிம் எம்.பிக்கள் இடம் பெற்றிருக்கின்ற நிலையில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் மூன்று விழுக்காடு எம்.பிக்கள்கூட அடுத்த மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகமே!


ராஜீவ் பிரதமராக இருந்தபோது ‘பஞ்சாயத்து ராஜ்’ என்ற பஞ்சாயத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு கொண்டு வந்தார். அதன் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பஞ்சாயத்துகளிலும், நகரசபையிலும் முஸ்லிம் பெண்கள் தலைவர்களாக வந்தனர். ஆனால் மாநகராட்சிகளான சென்னையிலும் கோவையிலும் பெண்கள் மாநகராட்சிகளான திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றிலும் முஸ்லிம் பெண்கள் மேயராக வரமுடியுமா? அரசியல் கட்சித் தலைவர்களும் மெஜாரிட்டி ஜாதிப் பெண்களைத்தான் அந்தப்பதவிக்கு போட்டிபோடத் தேர்ந்தெடுப்பர். அதுதான் மேற்குறிப்பிட்ட மாநகரங்களில் நடப்பில் உள்ளது என்பது கண்கூடாகத் தெரியும்போது, பிற்பட்ட மைனாரிட்டி சமூகத்தினைச் சார்ந்த பெண்கள் அந்த 33 விழுக்காடு ஒதுக்கீடில் போட்டிப் போட்டு வெற்றிபெற முடியுமா? நிச்சயமாக முடியாது.


உதாரணத்திற்கு 1962ஆம் ஆண்டு எங்களூர் இளையாங்குடியினை உள்ளடக்கிய மானாமதுரை சட்டமன்றத் தேர்தலுக்கு எங்களூரைச் சார்ந்த அமீன் நைனார் ஹவுத் அவர்களைக் காங்கிரஸ் கட்சி, தன் வேட்பாளராக நிறுத்தியிருந்தது. தேவர் இனத்தினரும் சுதந்திராக் கட்சியைச் சார்ந்தவருமான சீமைச்சாமியினை அந்தக்கட்சி நிறுத்தியிருந்தது. முஸ்லிம்களும், தலித் யாதவ மக்களும் அமீன் நைனார் ஹவுத் அவர்களுக்கு ஓட்டுப் போட்டிருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் அமீன் நைனார் ஹவுத் தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்பு இளையாங்குடி தனித்தொகுதியாக 1967ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்வரை முஸ்லிம் அல்லாதவர்கள்தாம் அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏக்களாக இருந்து உள்ளனர். இவ்வளவிற்கும் அந்த எம். எல். ஏக்கள், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இளையாங்குடியினையோ அல்லது ஆர்.எஸ்.மங்களத்தையோ சார்ந்தவர்களல்லர். அதேபோன்றுதான் கீழக்கரை கடலாடித் தொகுதியிலிருந்தபோது எந்த முஸ்லிமும் எம்..எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. முஸ்லிம் ஆண்களுக்கே முஸ்லிம் சார்ந்த ஊர்களில் எம்.எல்.ஏ கனவு எட்டாக்கனியாக இருக்கும்போது முஸ்லிம் பெண்கள் நிலையைச் சற்றே யோசித்துப் பாருங்கள்; பரிதாபமாகத் தெரியவில்லையா?


தமிழக்தில் 234 எம்.எல்.ஏக்கள் உள்ள சட்டமன்றத்தில் 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீனத் சர்புதீன் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன் பின்பு அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏவாக பதர் செய்யது 2006 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் இதைவிட மோசம். 34 பெண் எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட முஸ்லிம் பெண்ணல்ல. ஆகவே முஸ்லிம் பெண்கள் அத்திப்பூத்தது போன்றுதான் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழக சட்டமன்றத்திலே முஸ்லிம் பெண்கள் இடம்பெற்ற இடைவெளி 15 ஆண்டுகள் ஆனது என்றால் நாடாளுமன்றத்தில் இடம்பிடிக்க, குதிரைக்குக் கொம்பு முளைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அதுவும் இந்த இட ஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்குப் பின்பு காலாவதியாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நியாயமான திருத்தங்கள் ஏதுமின்றி, மசோதா நிறைவேறிவிட்டாலும் ‘பார்க்கலாம்’, ‘யோசிக்கலாம்’ போன்ற வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு நமது அரசியல்வாதிகளுக்கு 15 ஆண்டுகளை ஓட்டுவதில் சிரமம் ஏதுமிருக்காது.


நமது பிரதமர் 7.3.2010 ஒரு மகளிர் நிகழ்ச்சியில் டெல்லியில் பேசும்போது, "நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாலினபாகுபாடு எதிரொலிக்கிறது. பொருளாதார வளர்ச்சியினால் ஆண்களில் 51 சதவீதம் பயனடைந்துள்ளனர்; ஆனால் பெண்கள் 25.7 சதவீதம்தான் பயனடைந்துள்ளனர் என்ற புள்ளி விபரத்தினையும் சொல்லியிருக்கிறார். அந்த 25.7 சதவீதப் பெண்களில் எத்தனை சதவீதம் முஸ்லிம் பெண்களென்றால் ஒருகையின் விரல்களுக்குள் எண்ணக்கூடியதாகவே இருக்கும். பொருளாதாரத்திலே மொத்தப் பெண்களும் பின்தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லும்போது நீதிபதி சச்சார் சொன்னதுபோல, அரசியலில் இன்று முஸ்லிம் பெண்கள் படுபாதாளத்தில் உள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை. அதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழக, ஆந்திர சட்டமன்ற, மக்களவை முஸ்லிம் பெண்கள் பங்கேற்பினை உதாரணமாக வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.


ஒருவேளை எதிர்ப்புக்களிடையே மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம் பெண்களினை அரசியல் விழிப்புணர்வு ஊட்டத் தயாராக வேண்டாமா? அவர்களுக்குப் பொதுக்கல்வியுடன் அரசியல் கல்வியும் பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் புகட்ட வேண்டும். அவையாவன எனப்பார்க்கலாம்:


மக்களவை-சட்டமன்றங்களில் உறுப்பினர் ஆவதற்கு என்னன்ன தகுதிகள் வேண்டும்?

சட்டமன்ற-மக்களவை அமைப்புமுறை எவ்வாறு இருக்கிறது?

நமது நாட்டின் பிரதமர், மாநில முதல்வர், மத்திய-மாநில அமைச்சர்கள், சபாநாயகர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவர்களது பொறுப்புகள் யாவை? அவர்களின் ஊதியம் எவ்வளவு?.

மக்கள் பிரதிநித்துவச் சட்டம் சொல்வது என்ன?.

அரசியலைமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டிகள் சம்மந்தப்பட்ட முக்கிய பிரிவுகள் யாவை?

வேட்புமனு தாக்கல் செய்வது எவ்வாறு?. அதற்குத் தேவையானவை யாவை? பத்திரங்கள்-உறுதிமொழிகள்.

வாக்காளர் பட்டியலில் எவ்வாறு பெயர்களைச் சேர்ப்பது?.

வார்டு-பூத் வாரியாக எப்படிப் பிரித்தமைத்து ஆதரவு தேடுவது?.

மக்களவை-சட்டமன்றத் தேர்தல் செலவு வரம்புகள் யாவை?, தேர்தல் முடிந்ததும் செலவினங்களை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டிய முறை.

தேர்தல் விதிமுறைகள் யாவை?.

மேற்கூறியவை சில அறிவுரைதாம். அனுபவத்தில் தெரிந்து கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது. அவற்றை அனுபவங்கள் மூலமாகத் தெரிந்து கொள்வதற்கு நமது சமுதாயப் பெண்கள் அரசியலில் பங்காற்றத் துணிய வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் பெண்கள் நாட்டின் கண்களாக மட்டுமல்லாது, சமூதாயத்தினை நிலை நிறுத்தும் தூண்களாகவும் மாறமுடியும் என் சொந்தங்களே!

முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R)

Thanks to: http//www.sathyamargam.com
Special Thanks to: Madukoor Abdul Razak (Dubai)

செவ்வாய், 9 மார்ச், 2010

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 1200 பேர் கைது

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 1200 பேர் கைது

மறியல் போராட்டம்தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.அதேபோல் கட லூர் மாவட்டம் சிதம்பரம் லால் கான் தெரு டாஸ்மாக் கடை அருகில் மனித நேய மக்கள் கட்சியினர் டாஸ்மாக் கடை களை மூட வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத் தினர்.போராட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட பொரு ளாளர் அமீர்பாஷா தலைமை தாங்கினார்.மனித நேய மக்கள் கட்சி நகர பொருளாளர் ஜமால் உசேன் பேசினார்.நகர செய லாளர் அல்தாப் உசேன் வர வேற்று பேசினார்.போராட்டத்தில் ஜாகீர் உசேன், லியாகத் அலி, அப்துல் ரகீம், ஹபீபூர் ரகு மான், ஹசன் அலி, முகமது ஷரீப், நாசர், இம்ரான்கான், நகர தலைவர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கைதுபோராட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், மாவட்ட துணை செய லாளர் மன்சூர், மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் மகபூப் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.போராட் டத்தில் 250 பேர் கலந்து கொண்டு மறியல் செய்தனர்.தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் அவர்களை கைது செய்தனர்.கைது செய் யப்பட்டவர்கள் மாலை யில் விடுதலை செய்யப் பட் டனர்.அதேபோல் காட்டுமன்னார் கோவிலில் மனிதநேய மக்கள் கட்சியினர் டாஸ் மாக்கடைகளை மூட வேண்டும் என்று சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக்கடை முன்பு மறியல் செய் தனர்.போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மெகராஜுதீன் தலைமை தாங்கினார்.த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் அராபத், மருத்துவர்அணி அமீன், லால்பேட்டை நகர செயலாளர் அïப், பாஷா, ஆசிக் உள்பட 900 பேர் கலந்து கொண்டு மறியல் செய்தனர்.அவர்களை காட்டுமன்னார் கோவில் போலீசார் கைது செய்தனர்.

Thanks to: .dailythanthi.com

ஞாயிறு, 7 மார்ச், 2010

வட சென்னையில் நடைபெற்ற மதுக்கடை மறியல் (புகைப்படங்கள்)ம.ம.க மதுக்கடை மறியல்


மதுக்கடை மறியல் போர் :- பத்திரிக்கையாளர் சந்திப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் ஸமது, பொருளாளர் ஹாருன் ரஷீத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் ஸமது, பொருளாளர் ஹாருன் ரஷீத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டதாவது:ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் தாய்வீடாக திகழும் நமது நாட்டில் குடியும், போதையும், மாபெரும் கேடுகளை உருவாக்கி விட்டிருக்கிறது. மக்களிடம் அரசியல் விழிப்புணர்வும், மறுமலர்ச்சி சிந்தனைகளும் பரவிவிடக் கூடாது என்பதாலேயே ஆளும் சக்திகள் இதுபோன்ற சீரழிவுகளுக்கு துணையாக இருக்கின்றன. மக்களின் போராட்ட எண்ணங்களை மழுங்கடிக்க செய்திட குடியும், போதை கலாச்சாரங்களும் நீடிப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.காந்தி தேசம் என்று புகழப்படும் நமது நாட்டில் காந்தியடிகளால் வெறுக்கப்பட்ட மதுக் கலாச்சாரம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் விழிப்புணர்ச்சி புகட்டப்பட்ட தமிழகத்தில், அவர் விரும்பிய பூரண மதுவிலக்கு ஏனோ கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் சீர்திருத்த கருத்துகளை முழங்கிய ஐயா பெரியார் அவர்கள் போதையூட்டும் கள்ளுக்கடைகளுக்கு எதிராக போராடினார். தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களையெல்லாம் வெட்டி சாய்த்தார். ஆனால், இன்றைய தமிழகத்தின் நிலை என்ன? ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடக்கிறது.


அரசாங்கமே சாராயக் கடைகளை நடத்தி மக்களை வழி கெடுக்கும் போக்கு கேவலமானது. ஒரு பக்கம் எங்கள் அரசு, முற்போக்கு அரசு என முழங்குகிறார்கள். சமூக சீர்த்திருத்தமே எமது லட்சியம் என பிரச்சாரம் செய்கிறார்கள்.மறுபுறம், சமூக சீரழிவுக்கு காரணமான மதுக்கடை வியாபாரத்தை நியாயப்படுத்துகிறார்கள். அரசுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானத்தை தரும் டாஸ்மாக் கடைகளை மூடினால், அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும் என எதிர் கேள்வியெழுப்புகிறார்கள்.காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் மட்டுமில்லாமல் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிஜோராமில் இன்றும் பூரண மதுவிலக்கு அமல் இருக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாமலேயே இந்த நான்கு மாநில அரசுகளும் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளன.இது தமிழ்நாட்டுக்கு ஏன் சாத்தியமாகாது? வாகன தயாரிப்பு நிறுவனங்களும், கணினி மென் பொருள் தொழில்களும், மின்னணு தொழிற்சாலைகளும், ஜவுளி ஆலைகளும் நாளும் பெருகும் தமிழ் நாட்டில், மாற்று வருமானத்திற்கு வழி இருக்கிறது. ஆனால், அரசு அதை சிந்திக்க மறுக்கிறது அல்லது தவிர்க்கிறது!தந்தையைக் கொன்ற மகன், மனைவியைக் கொன்ற கணவன், பிள்ளைகளைக் கொன்ற அப்பன் என நெஞ்சு நடுங்கும் செய்திகள் நித்தமும் வளர்வதற்கு, மது தான் காரணம் என்று அரசு அறியாமலா இருக்கிறது. வாகன விபத்துக்கள் பெருகுவதற்கு, டாஸ்மாக்குகள் பெருகியது தான் காரணம் என அரசுக்குத் தெரியாதா?பனைமர ஓலைகளிலேயே, கள்ளுண்ணாமையை எழுதிய,வள்ளுவரின் நெறியைப் போற்றி,நுங்கம்பாக்கத்தில் கோட்டம்அமைத்த கலைஞர் குறள் நெறியைப் போற்றுவது உண்மையென்றால் மதுக் கடைகளை இழுத்து மூட முன்வர வேண்டும்.ஆனால் இதற்கு மாற்றமாக புதிய மது உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி வழங்குவதுடன் நடப்பு ஆண்டில் மது விற்பனை 15 ஆயிரம் கோடியை தாண்டும் என்று மார்தட்டிக் கொள்வதற்கு உண்மையான காரணம் என்ன? டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் இலவச திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். இலவச தொலைக்காட்சிகள் உள்ளிட்ட கவர்ச்சி திட்டங்களுக்கு வாரி வழங்குவது டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானம் தான்!


ஆக, கவர்ச்சி அரசியலுக்காக குடிமக்களின் வாழ்வு கெடுவதைப் பற்றி ஆள்பவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே தான் மனிதநேயத்தையும், சேவை அரசியலையும் முன்னிறுத்தி அரசியல் பணியாற்றும் மனிதநேய மக்கள் கட்சி இது குறித்து மாபெரும் அறவழிப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. எதிர்வரும் மார்ச் 7, 2010 ஞாயிறு அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மதுக்கடை மறியல் போர் மிகுந்த எழுச்சியோடு நடைபெறவிருக்கிறது. போதையில் தடுமாறும் கணவனின் நிலைகண்டு கலங்கும் தாய்மார்களின் கண்ணீர் போக்க, அதைக் கண்டு கதறும் பிள்ளைகளின் துயரம் போக்க, மகன்களின் மது பழக்கத்தை கண்டு பதறும் பெற்றோர்களின் வாட்டம் போக்க... பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு திரண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.தமிழ்நாடு முஸ்லி­ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா திருச்சியில் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அ­லி, வடசென்னை மாவட்டம் புரசைவாக்கத்திலும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தென் சென்னை மாவட்டம் திருவல்­க்கேணியிலும், மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாருன் ரசீத் காஞ்சி மாவட்டம் பல்லாவரத்திலும் தலைமை தாங்குகிறார்கள்.
நன்றி:தமுமுக இணையதளம்.