வியாழன், 25 மார்ச், 2010

அதிராம்பட்டினத்தை கலவர பூமியாக்க சங் கும்பல் முயற்சி! இந்து, முஸ்லிம் ஒற்றுமையால் முறியடிப்பு


அதிராம்பட்டினத்தை கலவர பூமியாக்க சங் கும்பல் முயற்சி! இந்து, முஸ்லிம் ஒற்றுமையால் முறியடிப்பு!தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டி னம் மதவெறி கும்பலின் இலக்காக மாறி வருகிறது. குறிப்பாக பா.ஜ.க. வின் மாநில இளைஞர் அணி தலைவர் கருப்பு (எ) முருகானந்தம் முத்துப்பேட்டையை போல அதிராம் பட்டினத்தையும் பதட்ட பகுதியாக மாற்ற தீய முயற்சிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் அதிரையில் உள்ள ஏ.ஜே.பள்ளிவாசலில் சுற்று சுவரை விஷமிகள் இடித்து விட, பட்டுக் கோட்டை ஆர்.டி.ஒ.விடம் அதிரை மக்கள் புகார் மனு கொடுத்ததன் பேரில், அவர் முறையாக விசாரித்து, அது பள்ளிவாசலுக்கு சொந்தமான சுவர் என தீர்ப்பளித்தார், பள்ளி சுவரை மீண்டும் மார்ச் 10 அன்று கட்டியபோது, இரவோடு இரவாக அதை விஷமிகள் இடித்து விட்டனர்.அதிகாரிகளின் உத்தரவை இழிவுப்படுத்தி, பள்ளிவாசல் சுவரை இடித்த கும்பலை கைது செய்யக்கோரி, குற்றவாளிகளை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்ச கோரியும், மத நல்லிணக்கம் காக்கப்பட கோரியும் அதிரை அனைத்து ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதிரை உலமாக்கள் சபை சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டமும் கடையடைப்பும் 16&03&2010 அன்று நடைபெற்றது. சுமார் 4000 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜே.ஜியாவுதீன் மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர் அதிரை சாகுல், உலமாக்கள் சார்பில் ஏ.எல். ஹாரூன் ஆலிம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அனைத்து தரப்பு மக்களும் கடையடைப்பு செய்தார்கள். திரளான இந்து சகோதரர்களும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தந்தது மதவெறியர்களுக்கு மரண அடியாக அமைந்தது. மேலும் நாம் ஆதரவு கேட்காமலே கட்டிடத் தொழிலாளர்களும், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்தார்கள். இதை பொறுக்காத பாஸிச கும்பல் இரண்டு மீனவ தெருக்களுக்கிடையே உள்ள சிறு வாய்க்கால் தகராறை மத மோதலாக மாற்றும் வண்ணம் போட்டி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி எச்.ராஜா மற்றும் கருப்பு என்கிற முருகானந்தம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த சுற்றுவட்டார கிராமமக்கள் மற்றும் அதிரை மீனவ கிராம மக்கள் ஆகியோரிடம் தவறான கருத்தை பரப்பினர். அதன் மூலம் மதக்கலவரத்தை தூண்ட முயன் றார்கள். பாவம் அதிலும் தோல்வி. அதற்கும் இந்து சகோதரர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.மேலும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கலவரம் உருவாக்க முயல்வதாக, த.மு.மு.க&வின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் எம்.தமீம்அன்சாரி முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகள் அகி யோருக்கு தகவல் கொடுத்து அந்த ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க கூடாது என்றார்கள். அதுபோல ஜித்தாவில் உள்ள கிசீஞிகி (அதிரை இளைஞர் நலச்சங்கம்) துபாய் வாழ் அதிரை சகோதரர்கள் அங்குள்ள இந்திய துணை தூதரகம், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் மெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களால் ஆன பங்களிப்பை செய்தார்கள். அதுபோல சகோதர இயக்கங்களும் இந்து நண்பர்களும் ஓரணியில் நின்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடைபெற இருந்த மதக்கலவரத்தை எதிர்த்ததால் காவல்துறை அனுமதியை ரத்து செய்தது. மிகப்பெரிய அளவில் கலவரம் விளைவித்து அதன் மூலம் மாய்ந்து போன தங்களது காவி சிந்தனையை பரப்பலாம் என்ற பாஸிஸ்ட்டுகளுக்கு இந்து சகோதரர்களே ஆதரவு தராதது மரண அடியே.