துபாய் சர்வதேச விமான நிலைய கண்காட்சி அரங்கில் Dubai Peace என்ற தலைப்பில் அமைதி வழியில் உலகை ஒருங்கிணைப்பது எனும் கருப்பொருளோடு கடந்த மார்ச் 18,19,20 ஆகிய தேதிகளில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு கண்காட்சி நடைபெற்றது. நிகழ்சிகள் 18 ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது.
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களான டாக்டர் ஜாகிர் நாயிக், யூசுப் எஸ்டிஸ், அப்துல் ரஹீம் கிரீன், ஹுசைன் யி, யாசிர் காதி,M.M. அக்பர் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்சியின் முத்தாய்ப்பாக 19 ந் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா மற்றும் தொழுகையை புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாமும் கதீபுமான ஷேய்க் அப்துல் ரஹ்மான் அல் சுதைசி நடத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகங்களின் துணை அதிபரும் , பிரதமரும் , துபாய் ஆட்சியாளருமான ஷேய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் இந்தியாவின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் உரையுடன் மூன்றாம் நாள் சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதோர் ஏராளமானோர் இஸ்லாத்தை தழுவினர் என்பது குறிப்பிடத் தக்கது.