செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோர் ஏப். 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்


சென்னை: ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோர் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஆண்டில் 25 ஆயிரம் பேருக்கு கூடுதலாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஹஜ் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கப்படமாட்டாது.ஹஜ் பயணக் குழுவில் வரும் யாத்திரீகர்கள் இனி அரசு மருத்துவர்களின் மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு மாநிலத்தின் ஹஜ் பயணம் தொடர்பாக பயிற்சி முகாம் நடத்தப்படும்.
இதில் குடிநீர் தட்டுப்பாடு, இட சிக்கனம், மெக்காவின் பயண வழித்தெளிவு, ஹஜ் சடங்குகள், உடைமைப் பாதுகாப்பு, பயணிகளின் உடல் நலக்குறைபாடு, யாத்திரீகர்களுக்கு வழிகாட்டுதல் குறித்து பயணிகளுக்கு விளக்கி கூறப்படும் என்றார் அவர்