ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார். மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார்.
ஹசாரேயின் கருத்துக்கள் மோடி அரசின் கொடூரத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக இருந்தது. இருப்பினும் இனப்படு கொலை தவிர்த்து மோடியின் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெறுவதாக ஒரு குருட்டு கருத்தோட்டம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்தது.
2002ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை நிகழ்வுகளுக்கும் மோடிக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்க முடியாது என பல ஊடகங்களும் மோடியை வளர்ச்சிக்கான அரசியல் வாதியாக வர்ணித்தன. காந்தியடிகள் பிறந்த மாநிலம் ஆதலால் அங்கு பூரண மது விலக்கு என்றுமே நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதைக்கூட மோடியின் சாதனையாக டமாரம் அடிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது, மோடிக்கு முன்பாக ஆட்சி செய்தவர்கள் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் அதைக்கூட மோடியால் செயல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் அன்னாஹசாரே வெளியிட்ட கருத்துக்கள் மாயை களை உடைத்து உண்மைகளை வெளிப்படுத்தியது. குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாக கூறப்படுவது ஒரு மாயை என்றும் மாநிலத்தில் பாலைவிட அதிகமாக மதுபானங் கள் தான் ஆறாக ஓடுகின்றன என்றும் கூறி பரபரப்பு தீயை பற்றவைத்திருக்கிறார்.
லஞ்ச ஊழலுக்கு எதிராக பாடுபட்டுவரும் அன்னாஹசாரே கடந்த மாதம் மோடி அரசை நல்லாட்சி என்று பாராட்டினார். பின்னர் அது தவறு என்று உணர்ந்து கொண்டதாக கூறி தனது மோடி ஆதரவு கருத்துக் களை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஹபீபா பாலன்