செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆசை!


மஸ்ஜிதுந் நபவீயில் கலீபா உமர் (ரலி)
ஒரு முறை அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீயில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது தம் தோழர்களில் சிலரை நோக்கி ‘உங்கள் ஆசை என்ன?’ என்று கேட்டார்கள்.

ஒருவர் : உஹது மலை அளவு தங்கம் கிடைத்தால் நான் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்குவேன் என்றார்.

இரண்டாமவர்: மதீனா நகரம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு ஒட்டகைகள் கிடைத்தால் அவற்றை அறுத்து உணவு வழங்குவேன் என்றார்.

மூன்றாமவர்: மதீனா நகரம் முழுவதும் எனக்கு அடிமைகள் இருந்து அவர்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடி விடுதலை வழங்குவேன் என்றார்.
இவ்வாறு அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளை வெளியிட்டார்கள். கடைசியாக கலீபாவின் முறை வந்தது.

அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் ஆசை என்னவென்று கூறுங்களேன் என இருந்தவர்கள் கேட்டார்கள். அதற்கு கலீபா அவர்கள்.. எனது ஆசை:

‘இந்த மாண்பார் பள்ளிவாசல் முழுவதும் அபூபக்கர்(ரலி) அவர்கள் போன்ற உத்தமர்களால் நிறைந்து வழிய வேண்டும்.’ என்றார்கள்.

அவர்கள் ஆசைப்பட்டவாறே, உண்மையான இறைபக்தர்களால் வழிந்தோடக் கண்டார்கள். அவர்களே தங்களின் ஈமானிய வலிமையால் புதிய வரலாற்றைப் படைத்தவர்கள்.

அந்த உத்தமர்களைக் குறித்து சூரத்துஸ்ஸுமரில் வரும் வசனம் நம் சிந்தனைக்குரியதாகும்.
நல்லடியார்களுக்கு நற்செய்தி
(நபியே!) நீர் நம்முடைய அந்த நல்லடியார்களுக்கு நற்செய்தியைக் கூறுவீராக.:

அவர்கள் (நம்முடைய) வசனங்களை செவியுற்று, அவற்றிலுள்ள நல்லவைகளைப் பின்பற்றியும் வந்தனர். நிச்சயமாக அல்லாஹ் நேரான பாதையில் செலுத்தியது இத்தகையோரைத்தான். இவர்கள் தாம் (உண்மையில்) அறிவுடையோருமாவார்கள். அல்குர்ஆன்: (39:18)

சரி இப்பொழுது உங்களின் ஆசையை சொல்லுகள் !!!


By Dr. Ahmad Baqavi Ph.D.
Reference By: http://albaqavi.com/
Thanks: http://www.facebook.com/CuddaloreMuslimFriends

திங்கள், 6 பிப்ரவரி, 2012

மதச்சார்பின்மை (SECULARISM)

இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் கொள்கைப் பிரச்சினைகளுள் மதச்சார்பற்ற சிந்தனையும் ஒன்றாக இன்று தாக்கம் செலுத்துகின்றது.இஸ்லாமிய இளைஞர்களை கொள்கையிலிருந்து கடத்திச் சென்று,கொள்கையற்ற கோமாளிகளாக மாற்றுகின்ற சதினாஷ நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் கிராமங்களிலும் இடம்பெறும் இவ்வேளையில் - அது பற்றி நாம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

அறிவியலும் தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியுற்று மனித வாழ்வில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.அவை பகுத்தறிவுக்குக் சிந்தனைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

அதனால்,மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து பகுத்தறிவினைநாடி எழுந்துள்ள அறிவியல்,விஞ்ஞான தொழில்நுட்ப யுகம் தோன்றி ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் ஏற்பட்டு விட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுலதை இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது. இதன் விளைவாக மதச்சார்பின்மை (SECULARISM) என்ற சிந்தந்ததை ஆதிகளவில் பிரச்சாரப்படுத்தி,இளைஞர்களை அதிகளவில் கவர்வதொடு,இறை நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள மதங்களை கொச்சைபடுத்துவதும் ஒழுக்கப் பெறுமானங்கள்,வணக்க வழிபாடுகள்,எள்ளி நகையாக்கப்பட்டு,உயர் ஒழுக்க விழிமியங்கள் மலினப்படுத்தப்படுகின்ர காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

ஆனால் அறிவுபூர்வமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டு,காலத்தை வென்று,வளர்ச்சி அடைந்து வரும் இஸ்லாத்தையும்,சிறுமைத்தனமான சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போன சிலர் பத்தோடு பதினொன்றாக விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.நமது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் நஞ்சை விதைக்கின்றனர்.எனவே நாம் இந்த சதிவலையிலிருந்து மீள இது பற்றி தெளிவு அவசியமாகின்றது.
இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக வைக்கப்படுகிறது.எனினும் பல வளர்ச்சி கண்டதாக இருமாந்திருக்கும் நாடுகளில் கூட இந்த சிந்தனை நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபமான இந்தக்காலப்பிரிவில்அந்நாடுகளில் ஒரு கணிஷமனவர்களும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இளைஞர்கள் சிலரும் இச்சிந்தனைக்கு உட்பட்டு இதை பிரபலப்படுத்தியும் முக்கியம் கொடுத்துப் பேசியும் வருகின்றனர்.

இன்று ஷிர்க்,பிதுஅத்,மூடநம்பிக்கை போன்றவைகளைவிட மதச்சார்பின்மைச் சிந்தனை முஸ்லிம் வீடுகளில் கிராமங்களில் பாடசாலைகளில் பல்கலைக்களகங்களில் ஆகிய அனைத்திலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனவே மதச்சார்பின்மை கருத்தியலின் தோற்றம்,காரணம்,அதுபற்றி சமூக உளவியல் சார்ந்தோரின் கருத்து போன்றவை கீழ்வரும் பந்திகளில் ஆராயப்படுகிறது.

அன்று படாடோபத்தில் திளைத்திருந்த கிருஸ்தவ உலகம் ''பூமி சுழல்கிறது'' என்பது பைபிளுக்கு விரோதமானது.பூமி தட்டைப்போல் விரிக்கப்பட்டிருப்பதாக பைபிள் கூறுகிறது.''ஏசு நாதர் பிறந்த பூமி சூரியனை சுற்றுவதா? இல்லவே இல்லை.அப்படி சொல்பவர்களின் நாக்கை வெட்டி விடுவோம்'' என விஞ்ஞானிகளை மிரட்டி,சிறையில் அடைத்து,எரித்து,தூக்கில் இட்டு அவர்களின் குரலை ஒடுக்கியது அக்கால திருச்சபை.

இப்படியான காலப்பகுதியில் தான் தொலைநோக்கியின் முன்னோடியான கலிலியோ கலிலி (1564-1642) ''பூமி சூரியனை சுற்றுகிறது'' என்றார்.இது எங்கள் வேதத்துக்கு முரணானதென்று 69 வயது தளர்ந்த கலிலியோவை படாதுபாடுபடுத்தினர்.இவ்வாறன கொடூர புத்தி கொண்ட கொடியவர்கள் இஸ்லாத்தை நாகூசாமல் விமர்சனம் செய்யவும் துணிந்துள்ளனர் என்பதே ஆச்சரியமிக்க விசயமாக உள்ளது. 
15,16,17 ஆம் நூற்றாண்டுளில் அறிவியலை அடக்கி தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பா அறிவியல்,பண்பாடு,நாகரீகத் துறைகளில் பின்னடைந்து இருட்டில் மூழ்கியது.

ஐரோப்பா இத்தகைய இருளில் மூழ்கியிருந்த வேலையில் தான் முஸ்லிம்கள் ஸ்பெயினிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.ஐரோப்பிய மன்னர்கள் கையெழுத்துப் பழகும் போது நம் முஸ்லிம் விஞ்ஞானிகள் குர்துபா (Cordoba) பல்கலைக்கழகத்தில் உலகத்தை உருண்டை வடிவில் வைத்து பாடம் நடத்திகொண்டிருண்டார்கள்.அன்று அவர்கள் ஐரோப்பியாவில் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

''கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதிமூன்றாம் வரை இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களே உலகில் கலாச்சாரத்திலும்,நாகரீகத்திலும் ஒளியை ஏற்றி நின்றனர்.''என பேராசிரியர் P.K.Hitti குறிப்பிடுகிறார்.

''மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவை பெற்றுக்கொள்ள எண்ணியபோதும் புராதன சிந்தனையோடு தன் உறவை புதுப்பித்துக்கொள்ள எண்ணிய போதும் அது முதலில் அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது.''பேராசிரியர் GOERGE SARTON - HISTORY OF SCIENCE.

இதுபற்றி தெளிவட்ட்றோரும் ஆழமான அறிவற்றவர்களும் புனிதமான இஸ்லாத்தை விரும்பாதொரும் முஸ்லிம் உம்மத்துக்குள் இருந்து கொண்டே மதச்சார்பின்மையை முன்வைக்கின்றமை வேதனை மிகு விசயமாகும்

காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய கலாச்சார்ப் பன்பாடுகள் முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் விதைக்கப்பட்டன.முஸ்லிம்களில் ஒரு சாரார் அபிவிருத்திக்கு ஒரே வலி மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என நினைக்கலாயினர்.ஆனால் இவர்கள் பின்பட்ட்ரும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கணிசமானோர் இப்போக்கை மறுக்கின்றனர்.அங்குள்ள பல உளவியலாளர்கள் ''மனித குலத்தின் மாண்புக்கு மதமே சிறந்த வழி'' என்று தற்போது இஸ்லாத்துக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.
நாம் மேலே வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து எடுத்துக் காட்டிய ஐரோப்பிய உலகினதும் இஸ்லாமிய உலகினதும் நிலை,மதச்சார்பின்மை தோன்றுவதற்கு காரணம் ஐரோப்பாவில் நடந்த சில துயரமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டோம்.உலகின் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மதம் அறிவியலுக்கு தடையாக ஐரோப்பா தவிர வேறு எங்கும் இடம்பெறவில்லை.ஐரோப்பாவில் நிகழ்ந்த இந்த வரலாறு இன்று உலகின் பல பாகத்திற்கும் பரப்பப்பட்டு,எமது முஸ்லிம் சமூகத்திலும் பரவி நம் முஸ்லிம் புத்திஜீவிகளிடத்திலும் திணிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையைஇருட்டடிப்புச்செய்கிறது. 

''உலகில் உள்ள அனைத்தும் பகுத்தறிவுக்குட்பட்டதே! இயற்கையின்யதார்த்தத்தில் மனித வாழ்வை விளக்கவும் முடியும் என்ற விசயத்தில்மனிதன் உறுதியாக நம்பிக்கை கொள்கிறான்.இதனடிப்படையில் மறுமைவாழ்வு என்று ஒன்று இல்லை என்பதோடு,மறு உலக வாழ்விலிருந்தோஅல்லது இறைவன் மீதான நம்பிக்கையிளிருந்தோ பெறப்பட்ட எல்லாகருத்தியலையும் தவிர்த்தல் என்ற வகையில் உலக வாழ்வின் மனிதஇனத்தின் சுயனலனைக்குறித்த வகையில் மட்டுமே ஒழுக்கம் அடிப்படையாகஅமையவேண்டும்''என்பதே மதச்சார்பற்ற சிந்தனையின் கருப்பொருளாகும்.
உண்மையில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒரு மதத்தையோஇனத்தையோ பிரநிதிதுவப்படுத்துவதில்லை என்ற நிலை மட்டுமல்ல.நாம்முன்னர் குறிப்பிட்டது போல் ஆன்மா,கடவுள்,மறுமை வாழ்வு அனைத்தையும்மறுத்துரைக்கும் சடவாத சிந்தனைப் போக்கையே அது குறித்து நிற்கிறது இதுஉலக வாழ்வில் எல்லையட்ட்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும்தோற்றுவித்துள்ளது.இதனால் மேற்கத்தைய உலகம் மனஅமைதியின்மையால் வாடுகிறது.அங்கே பெரும் எண்ணிக்கையானோர்நரம்புத்தளர்ச்சிக்கும் மனநோய்க்கும் ஆளாகியுள்ளனர்.மதச்சார்பின்மை என்றமுட்டாள் கோட்பாடு இன்று மனித வாழ்வுக்கு பொருளையும் கருத்தையும்குறிக்கோளையும் இலட்ச்சியத்தையும் வழங்க முடியாமல்தோற்றுவிட்டது.எனவே வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மேதகுநாட்டவர்கள் ஆறுதலையும் நிம்மதியையும் தேடி இஸ்லாமிய மடியை நாடிஅடைக்கலம் புகும்போது நம்மவர்கள் அந்தக் குப்பையில் போய் விழுவதும்வீழ்ந்திருப்பதும் தான் ஆச்சரியமாக உள்ளது. 

கிருஸ்தவ பாதிரிமார்களின் கடும் போக்கு நிலை காரணமாகவே மனிதன் மதத்தை வெறுத்தான்.இதனால் அவனின் இறை நம்பிக்கையும் விசுவாசமும் ஆட்டம் கண்டது.கிருஸ்தவ மதப்பிடியிளிருந்து விடுப்படும்பொருட்டு மனிதன் அனைத்து மதகொள்கையையும் தூக்கி எறிந்துவிட்டு தனிப்பாதையில்(மதச்சார்பின்மை) தனது பயணத்தை தொடர்ந்தான்.இந்தப்பாதையில் அவன் மகத்தான வெற்றி கண்டான்.எனினும்ஆத்மீக ஒளியற்ற இவ்வளர்ச்சியினால் அவன் அவனது வாழ்வை இருட்டிலே கழிக்கிறான்.அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்ச்சிக்கும் எதிராககிருஸ்தவ திருச்சபையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார்களும் நடந்துகொண்டதால் மதத்துக் எதிரான சிந்தனைப்போக்கு ஆரம்பமானது.
கிருஸ்தவ போதனை போன்று மனித வாழ்விற்குரிய தெளிவானவரையறுத்த பகுத்தறிவுபூர்வமான அறிவியலை புறக்கணிக்காத சட்டங்களும் கொள்கைகளும் பல மதங்களில் கனப்படாமையே மதச்சார்பின்மை வளர காரணமாக அமைந்தது.இச்சிந்தனையின் கருத்தாடலில் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தையும் அதே மனப்பதிவோடு மேலோட்டமாக விமர்சிக்கின்றனர்.இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் எந்த உடுருவலும் இடம்பெற முடியாது.அது தெய்வ வழிகாட்டல்.அதன் பாதுகாப்பு இறைவன் அவன் வசம் வைத்துள்ளான்.இங்கு மனித கையாடலோ நினைத்தவுடன் பெரும்பான்மை பலத்துடன் மாற்றுவதற்கோ இடமில்லை.எனினும் அது சில விசயங்களில் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையுடன் பகுத்தரிவுபூர்வமாக காணப்படுகிறது. 

மனிதன் வெறும் சடப்பொருலன்று,அவனின் புரத்தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டிருப்பது போல் அவனது ஆத்மாவின் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

இதனைப் புறக்கணித்துவிட்டு எழுந்த சிந்தனையால் இன்று நிலைத்துநிற்க முடியாது போய்விட்டது.
அடிப்படையில் மனிதுள்ளத்தில் இறைவன் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.இறைவனைப்பற்றிய ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்று வரலாற்றில் காணவே முடியாது.இதற்கு புறம்பான(மதச்சார்பின்மை) கொள்கையுடையவர்கள் தற்போது இதற்கே மீண்டுள்ளனர்.எங்கு இந்த மதச்சார்பின்மை துளிர்விட்டு வளர்சியுற்றதோ அங்கேயே அது சாத்தியப்படாது என்று புரிந்து கொண்டு இன,மத,கலாச்சார பாரம்பரியங்களுக்கு மெல்ல மெல்ல மனித இனம் நகர்கிறது.எனவே இந்த மதச்சார்பின்மை என்ற எண்ணக்கரு தோல்வி கண்டு வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

இக்கருத்தியல் உலகில் சமாதானம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த தவறிவிட்டது.மேலை நாடுகளின் மேலாதிக்க உணர்வு,கருப்பு வெள்ளையன் என்ற நிறவெறி,பிறரை ஒழித்துக்கட்டும் வக்கிர புத்தி பலமற்றவனின் மீது அதிகார வெறியாட்டம் போன்றன மிகக்கொடுரமான நோய்களாகும்.
உலகில் சமாதனம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த ஒரு வெற்றிகரமான வழி உள்ளது அது தான் இஸ்லாம்.பதினான்கு நூற்றாண்டுகள் தாண்டியும் அது எதுவித மாற்றமும் இன்றி அப்படியே உயிரோட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.அந்த நெறியின் பால் முழு மனித சமூகமும் மீள வேண்டும்.அப்போதுதான் உண்மையான சமாதனம் சகவாழ்வு சமத்துவம் ஏற்படும்.

இஸ்லாம் காட்டிய உண்மைப்பாதையில் மனித இனம் செழித்து வளர்ந்து கிழக்கேயும் மேற்கையும் ஓர் உயிர்துடிப்புமிக்க ஆன்மீகநெறி அறிவியக்கம் செயல்படதுவங்கியுள்ளது.தீய சக்திகாளாலும் வக்கிர உணர்வாலும் கட்டவிழ்த்துவிட்ட பொய்மைகலாலும் அதன் முன்னேற்றத்தை தடுத்துநிறுத்த முடியாது.இனியும் முடியாது.

அதே வேளை,இஸ்லாமிய சிந்தனையில் கொள்கையில் வார்த்தேடுக்கப்பட்டவர்கள்,ஷிர்க்கில் மூழ்கி தர்காக்களில் தஞ்சமடைவதால்,இதுதான் இஸ்லாமிய பாரம்பரியம் என்று நினைகிறார்கள்.சில முஸ்லிம்களின் நடவடிக்கை இஸ்லாம் ஆகிவிடாது.இஸ்லாம் என்பது குரானும் சுன்னாவுமாகும். இதுவரை அதில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை அதற்கான அவசியமும் இல்லை.இஸ்லாமே ஈருலக வெற்றிக்கும் விமொசனத்திகும் ஒரே வழி.வேறு எந்த நம்பிக்கைகளுக்கும் மனிதனை இருளிலிருந்து விடுவிக்க முடியாது.

நன்றி: அபுல் அமீன். பேஸ் புக் வழியாக.....

ஞாயிறு, 10 ஜூலை, 2011

தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்


கடந்த 03.07.2011 ஞாயிறு மாலை தம்மாம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள பேரா.அ.மார்க்ஸ் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.


வாரம் சவுதிக்கு வருகை தந்த அ.மார்க்ஸ் கடந்த வெள்ளி (01.07.2011) அன்று தலைநகர் ரியாத் மாநகரில் உரையாற்றியிருந்தார்.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தம்மாம் கருத்தரங்கில் பேரா.அ.மார்க்ஸ் 'தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்' எனும் தலைப்பில் சுமார் ஒன்னரை மணி நேரம் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்.

'தமிழ் சமூகம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் ஒரே சமூகமாக எக்காலத்திலும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. எனவே தமிழ் சமூகம் என்பதை விட தமிழ் சமூகங்கள் எனக் குறிப்பிடுவதே சிறந்தது. ஆனால் பன்மைத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மற்றவர்களோடு இணைந்து வாழ்வது தான் அடிப்படை அரசியல்.

உதாரணமாக, தமிழகத்தின் முன்னாள் ஆளுனர் திரு.ராம் மனோகர் ராவ் ஐபிஎஸ், ஒருமுறை தமிழகத்தில் ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது, 'அருமையான கலைநயமுள்ள பள்ளியைக் கட்டிய நீங்கள் ஏன் நபி (ஸல்) அவர்களின் படத்தை ஏன் மாட்டவில்லை' என்று கேள்வி எழுப்பினாராம். உயர் அதிகாரத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி சமூகத்தின் பிற சமய கோட்பாடுகளை புரிந்து வைத்துள்ளதில் உள்ள குறைபாடு தான் இது.

நபியாகவே இருந்தாலும் உருவ வழிபாடு கிடையாது என்பதில் உறுதியானவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படையை புரிந்து கொண்டிருந்தால் ராம் மனோகர் ராவ் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்.

எனவே தான் காந்தியடிகள் செக்யூலரிஸம் கொள்கையை அரசியல் கொள்கையாக மாற்றி அமைக்க பெரும்பாடுபட்டார். அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு எனும் கொள்கையை உறுதியாக நம்பினார். இதனால் தான் இந்துத்துவ பயங்கரவாதிகள் காந்தியை கொலை செய்ய ஏழு முறை முயற்சித்தனர்.

முதல் சுதந்திர போராட்டமான கிலாஃத் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தவர் காந்தி. அதேபோல் தமிழகத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு போராட்டத்தில் பங்கு கொண்டவர் காந்தியடிகள். இதன் காரணத்தால், காஞ்சி மட அன்றய பீடாதிபதி மகா பெரியவாள் என மரியாதையாக அழைக்கப்பட்ட சங்கராச்சாரியாரின் ஆரிய தர்மம் எனும் பத்திரிக்கையில் கடுமையாக சாடி எழுதப்பட்டார். பிற சமூகங்களைப் பொறுத்தவரை TOLERANCE ஓ COMPROMISE ஓ தேவையில்லை. ACCEPTENCE தான் தேவை என்பதை ஆணித்தரமாக காந்தி வலியுறுத்தி வந்தார். அதன் காரணமாகவே கொல்லப்பட்டார்.

எனவே முதலில் எந்த சமூகமும் பன்மை சமூகம் தான் என்பதனையும், அவற்றை அவரவர் நம்பிக்கைப்படி உள் வாங்கி அங்கீகரித்து அனைவருக்கும் ஒரே நீதி என்ற இலக்கை நோக்கி பயணிப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

தமிழ் சமூகம் பண்டைய காலந்தொட்டே பல சமூகங்களாக பிரிந்து வாழ்ந்துள்ளது என்பது வரலாறு. செந்தமிழ், கொடுந்தமிழ், இழிசனர் தமிழ், சமண தமிழ், சைவத் தமிழ் என பல சமூகங்களாக வாழ்ந்துள்ளனர்.

இன்றும் கூட சமூக காரணங்களால் மட்டுமல்ல, மாறாக அரசியல் காரணங்களால் கூட தமிழ் கமூகம் பல்வேறு கூறுகளாகவே பிரிந்துள்ளது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்று சமச்சீர் கல்வி படும்பாடு. கடந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட காரணத்தால் இன்றய அரசால் சமச்சீர் கல்வி உதாசீனப்படுத்தப்படுகிறது.
நான்கு ஆண்டு கால ஆய்வின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இன்று அற்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனையானது. அவசியம் என அரசு கருதினால் சில மாற்றங்களோடு அல்லது சில நீக்கங்களோடு உடனே அமுல்படுத்த முனைய வேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்ட பின் பாடத்திட்டத்தில் சில அம்சங்கள் நீக்கப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் உண்டு.
உதாரணமாக நண்பர் கவிஞர் இன்குலாப், ராஜராஜ சோழன் காலத்தில் நடைமுறையில் இருந்த பெண்ணடிமைத் தனத்தை - தாசித்தனத்தை சாடி எழுதிய கவிதை நீக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அதுபோல் இப்பொழுதும் நாங்கள் அளித்த வரைவு பாடத்திட்டத்தில் கடந்த கலைஞர் அரசு செய்த இடைச்சொருகல்களை நீக்கி அமுல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

அரசியல் ரீதியான தமிழ் சமூக பிளவு என்றால், சமூக ரீதியான பிளவுகளுக்கு சிறந்த உதாரணம் இரட்டை குவளை நிலை, காலணி அணிய அனுமதி மறுப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். சில இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள தடையையும் கூட இவ்வகையில் சேர்க்கலாம்.

பாண்டிச்சேரியில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற ஒரு தடை சமீபத்தில் தமுமுகவின் தீவிர முயற்சிக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக முன்னேற்றத்திற்கான வழிகளாக நான் குறிப்பிடுவது இத்தகைய வேறுபாடுகள் களைப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்கள் அணு உலை அமைப்பது தான் நமது முன்னேற்றத்திற்கான பாதை என வலியுறுத்தி வருகின்றனர்.

அணு உலை விபத்திற்கு பின் அனேக நாடுகள் அணு உலையை மூடிவிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஏனெனில் அணு உலையின் பயன்பாடு ஏறத்தாழ 25 வருடங்கள் தான். ஆனால் அணு கழிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்து சுமார் 30,000 வருடங்களாகும். எனவே அபுல்கலாம் குறிப்பிடுவது போல் மேலிருந்து கீழாக வளர்ச்சியோ முன்னேற்றமோ அடைய முடியாது. மாறாக நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் குறிப்பிடுவது போல் வளர்ச்சியோ, முன்னேற்றமோ கீழ் மட்டத்திலிருந்து அமைய வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும். அதனை நோக்கியே நாம் பயணப்பட வேண்டும்.

அதாவது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் கமிட்டியில் இடம் பெற்ற அபூஸாலிஹ் குறிப்பிடுவது போல் சமூகங்களிடையேயான சம வாய்ப்புகள் உருவாக வேண்டும். அதுவே பன்மைத்துவ குறியீடாக அமையும்.

இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றிய பேரா. அ. மார்க்ஸ் இறுதியாக அங்கு கூடியிருந்த பெரும்பாலான முஸ்லிம்களுக்கான சிறப்பு கவன ஈர்ப்பு உரையாக சில நிமிடங்கள் பேசினார்.

ராஜேந்திர சச்சாரின் அறிக்கையின்படி முஸ்லிம் இயக்கங்கள் இதுவரை முயற்சிக்காத ஆனால் உடனே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. இவற்றை தனித்தனியாக குறிப்பிட்டு ஒற்றுமையாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டும்.

முதலாவதாக, சமூகங்களுக்கான சம வாய்ப்பு. இதன்படி முஸ்லிம்களுக்கு மாத்திரம் தனியாக 10 சதவிகித இட ஒதுக்கீடு அனைத்து அம்சங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சச்சார் அறிக்கை வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, சட்டமன்ற, பாராளுமன்ற அவைகளிலே இட ஒதுக்கீடு பெறத் தாமதமானாலும், அந்தந்த மாநில அதிகாரத்திலுள்ள நகரசபை, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பெற குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற இட ஒதுக்கீடு ஆந்திர மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது அறிந்ததே.

அடுத்ததாக சிறைக் கொட்டடிகளில் வாடி வரும் முஸ்லிம் கைதிகள் எதிர்வரும் ஜுலை 15 அண்ணா நினைவு நாளில் விடுதலை செய்யப்பட அரசை வலியுறுத்த வேண்டும்.
சச்சார் கமிட்டியின் பரிந்துரைப்படி தேர்வு குழுக்களில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற அரசை நிர்பந்திக்க வேண்டும்.

இந்தியாவிற்கு ஏற்பட்ட களங்கமான பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் அரசு உடனடியாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்தபடி மஸ்ஜித் கட்டித்தர கோரி வலியுறுத்த வேண்டும். அயோத்தியிலுள்ள இந்து தீவிரவாதியான சுவாமி ராம் விலாஸ் வேதாந்தியின் மிரட்டலுக்கு பயந்து இடிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டாமல் காலம் தாழ்த்துவதை கைவிட்டு, உடனடியாக பள்ளி கட்டி தந்து சமூக நீதியை பாதுகாக்க அரசை நிர்பந்திக்க வேண்டும்.

முக்கியமாக, பல காலமாக வரைவு நிலையிலுள்ள 'இனக்கலவர தடுப்பு சட்ட மசோதா' வை (COMMUNAL RIOTS PREVENTION ACT) உடனடியாக நிறைவேற்றுவதுடன் சாட்சிகளுக்கான பாதுகாப்பையும், உயிர் உத்திரவாதத்தையும் தர அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.

சுமார் ஒன்னரை மணி நேர மேற்கண்ட உரைக்குப் பின் சபையோரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சகோ.கபீர், அப்துல் சத்தார் மற்றும் சிவக்குமார் செம்மையாக செய்திருந்தனர்.

சிறப்புச் செய்தியாளர்.





--