அல்- அய்ன் மண்டல தமுமுக சார்பில் இந்த ஆண்டின் இரண்டாவது இரத்த தான முகாம் 17/12/2010 வெள்ளியன்று மாலை அல்- அய்ன் டவுன் சென்டரில் அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாஸீன் நூருல்லாஹ் அமீரக தமுமுக துணை செயலாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
அல்- அய்ன் மண்டல தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்வில் அல்- அய்ன் மண்டல இரத்த வங்கிக்காக நடமாடும் இரத்த சேகரிப்பு பேருந்து (mobile blood bank) கொண்டு வரப்பட்டு இரத்தம் சேகரிக்கப் பட்டது.
அதிக அளவில் இரத்த தானம் செய்ய சகோதரர்கள் பெருமளவில் ஆர்வத்துடன் குழுமினர். மருத்துவரின் பரிசோதனையின் பேரில் 60 நபர்கள் மாத்திரமே தானம் வழங்க முடிந்தது.
இம்முகாமுக்காக என்.சி.இ.கேம்ப்,கத்தாரா,ஜிம்மி,கிளின்கோ மற்றும் மஸியாத் கிளைகளிலிருந்தும் அல்- அய்னின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சகோதரர்கள் திரண்டு வந்தனர்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..